அத்தியாயம் 24
"சார் சொன்ன நேரத்துக்கு பணத்தை கொடுத்துவிடுவேனா கொடுத்துடுவேன் என்னை நம்புங்க" என்று ராகவ் சப்ளையரிடம் பேசிக்கொண்டு இருந்தான் இல்லையில்லை கெஞ்சி கொண்டு தான் இருந்தான்... ஆனால் அவர் நம்புவதாக இல்லை...
"தம்பி தொழில்ல வாக்கு ரொம்ப முக்கியம் தம்பி.. சொன்ன சொல் மாறக்கூடாது இதுவே உங்க அப்பான்னா நேர்மையா இருப்பாரு அவர் இன்னைக்கு பணம் தருகிறேன் என்றால் சொன்ன சமயத்துக்கு இரண்டு மணி நேரம் முன்னாவது பணத்தை கொடுத்து விடுவார் நாணயஸ்தன்...
அவருக்கு மகனா பொறந்துட்டு நீங்க இப்படி பண்ணலாமா எவ்வளவு பணம் பெண்டிங் இருக்கு.. கேட்டா இதோ தரேன் அதோ தரேன்னு சொல்றீங்க அப்பா கிட்ட போய் பேசுறேன்னு சொன்னா அதுக்கும் விட மாட்டேங்கறீங்க" என்று சலித்து கொண்டு சப்ளையர் கூற
"சார் இப்போ கொஞ்சம் தொழில நஷ்டம் சார் அப்பா கிட்ட பேசி பிரயோஜனம் இல்ல நான்தான் இந்த தொழிலை பார்த்துக்கிறேன் அப்பாவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது அதனால எதுவாக இருந்தாலும் என்கிட்ட பேசுங்க அப்பா வரைக்கும் கொண்டு போக வேண்டாம்" என்று கூறினான் ராகவ்.... அவனுக்கு இவர் எங்கேயாவது தன்னுடைய அப்பாவிடம் இந்த விஷயத்தை கொண்டு சென்று விடுவாரோ என்ற பதட்டம் இருந்தது அப்படி கொண்டு சென்றால் தன்னுடைய பெயர் மேலும் களங்கம் ஆகிவிடும் என்ற பதட்டமும் அவனுக்கு வந்தது..
ஜெகதீஷ் வீட்டை விட்டு சென்றது முதல் ராகவ் தன் தந்தையிடம்," அப்பா என்னுடைய வாழ்க்கையும் போச்சு மானமும் போச்சு, எல்லாமே போச்சு அவன் சொன்ன வார்த்தை நான் உங்க பின்னாடி நிக்கிறேன் அது தான் அவன் என்னை அசிங்கப்படுத்த காரணம்... நான் பேசாம ஏதாவது வேலைக்கு போய்டுறேன்.. நீங்களே தொழிலை எடுத்து நடத்துங்க" என்று கூற,
அதை கேட்ட ஜெயமோகன் தான் ,"என்ன தம்பி உனக்கு வேணும் நான் இந்த தொல்லை தரேன் நீ எடுத்து நடத்து இனி நான் இதுல தலையிட மாட்டேன் கஷ்டமோ நஷ்டமோ நீ இந்த தொழிலில் இறங்கி வேலை செய் அவ என்ன சொல்றது வீட்டுக் அடங்காதவன் சொன்னதை எல்லாம் நெனச்சிட்டு நீ இருக்கியா??
அவன் கிடக்கிறான் என் மானத்தையே வாங்கிட்டு போனவன் என்னோட மகனும் இல்லை நான் உனக்கு அப்பாவும் இல்லை நீதான் என்னுடைய மகன் எனக்கு அப்புறம் நம்ம தொழிலை எடுத்து நடத்த போறதும் நீதான் இப்ப என்ன உனக்கு??? தனியா நிக்கணும் அவ்ளோ தானே??? நான் இப்பவே விலகுறேன் நீ எடுத்து நடத்து இது உன்னோட தொழில் நான் எதிலும் தலையிட மாட்டேன் புரியுதா" என்று கூறியவர் கடந்த ஐந்து வருடங்களாக வீட்டில் தான் இருக்கிறார்..
ராகவுக்கும் இதுதான் வேண்டும் தனியாக நின்று காட்ட வேண்டும் என்றுதான் அவனும் எண்ணினான்... அதனால் தந்தையிடம் நயமாக பேசி காரியத்தையும் சாதித்து கொண்டான்..
ஆனால் தந்தைக்கு பின்னால் இருக்கும் பொழுது அமிர்தமாக இருந்த தொழில் தந்தை வெளியே வந்ததும் கசக்க ஆரம்பித்தது வரவு, செலவு என அனைத்திலும் குளறுபடிகள் உண்டாகின..
ஆரம்பத்தில் இது எல்லாம் உள்ளது தான் என்று கருதி அதற்கு இதற்கு கடன்.. தந்தையின் எதுவும் காதுக்கு செல்லக்கூடாது அனைத்தையும் திரண்பட செய்ய வேண்டும்...முக்கியமாக அண்ணன் முகத்தில் கரியை பூச வேண்டும் என எண்ணியே தொழில் செய்தவனின் தொழில் கொஞ்சம் சரிய துவங்கியது என்னவோ உண்மைதான்...
ஆனால் ஜெயமோகன் அவர் தன் மகனுக்கு கொடுத்த வாக்குப்படி அவர் எதிலும் தலையிட்டு கொள்ளவில்லை இவனும் தொழில் என்றால் இப்படித்தானே இருக்கும் படிப்படியாக அனைத்தையும் கற்றுக் கொள்ளலாம் என்று கருதி கடனை வாங்கி தள்ளி விட்டான்...
இப்போது கையரும் நிலையில் இருக்கிறான் ராகவ்.. அவனே என்ன செய்வது என்று தெரியாமல் தான் இருக்கிறான்..அதில் மீண்டும் தன்னுடைய அண்ணன் குடும்பம் வீட்டிற்கு வர அதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.. இன்னும் அவனின் சட்டை காலரை தான் கடன் கொடுத்தவர்கள் பிடிக்கவில்லை அந்த நிலையில் அவன் இருக்கிறான்...
அப்படி இருக்க இப்போது அவனுக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் சப்ளையர் நேரடியாகவே வந்துவிட அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை...
இந்த விஷயம் அப்பாவுக்கு தெரிந்தால் அவ்வளவுதான் என எண்ணியவனுக்கு தலையை பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு ஆத்திரம் வந்தது...
ஆனாலும் தன்னால் ஏற்பட்ட இந்த இழப்பை எப்படி சரி கட்டுவது என தெரியாமல் அவன் முழித்து எப்படியோ அவரை சமாளித்து பேசி அனுப்பி விட்டான்...
அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை தொழிலை மேற்கொண்டு எப்படி கொண்டு போவது என தெரியவில்லை...தன் அண்ணனை விட ஒரு படி மேலே வளர்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணத்திலும் தன்னை குறை கூறிய அவனிடத்தில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியமும் அவனுக்கு இருந்தாலும் போதிய அனுபவமும் இந்த துறையில் இல்லாத காரணத்தினாலும் தொழிலில் போதிய அக்கரையும் இல்லாததாலும் அவனால் மேலே வர முடியவில்லை...
கடன் மேல் கடன் வாங்கி கடனாளி ஆகி விட்டான்... அவ்வளவு தான்... ஒரு வேளை ஜெகதீஷ் சொல்லுவது போல அவனுக்கு தான் விவரம் பத்தலையோ??? என எண்ணுவான்...உண்மையில் ஜெகதீஷோடு போட்டி போட வேண்டும் என்றெண்ணி மாட்டி கொண்டான் அவ்வளவு தான்...தந்தைக்கு தெரியாமல் காத்து வருகிறான்...
அதே டென்ஷனில் இரவு கடையை சற்று நேரமாக அடைத்து விட்டு வீட்டுக்கு வந்தான் ராகவ்... அந்த சமயம் குழந்தைகள் வீட்டுக்குள் விளையாடி கொண்டிருந்தனர்..
சஞ்சனா பால் போட அதை சஞ்சய் அடித்து கொண்டிருந்தான்..."சஞ்சு பால் போடு" என கூற அவள் பந்து வீச அது மிக சரியாக கோபமே உருவாக வந்து கொண்டிருந்த ராகவ் மீது வந்து பட்டது.... அது மிகச் சரியாக அவனுடைய கண்ணில் படவும் அவனுக்கு வலி உயிர் போனது...
அவன் சட்டென்று உள்ளே வரவும் பந்து பட அவனுக்கு எரிச்சல் அதிகம் ஆகியது... அவன் அலற அதை கண்ட குழந்தைகள்,"ஐயோ உங்க மேல பால் பட்டுடுச்சா சாரி சித்தப்பா" என சஞ்சய் கூறும் முன் சஞ்சயை ராகவ் ஓங்கி அடித்து இருந்தான்..
சிறு குழந்தை சுருண்டு கீழே விழ," எதுக்கு அவனை அடிக்கிறீங்க அவன் தெரியாம தானே பால் அடிச்சான்" என்று சஞ்சனா தன் அண்ணனுக்கு துணையாக பேச போக அவளையும் ஓங்கி அடித்தான்...
"அடிச்சதும் இல்லாம எதிர்த்தா பேசுற??? வீட்டுக்குள்ள தான பால் விளையாடுவீங்களா??? வேற விளையாட இடமே கிடைக்கலையா??? உங்களை எல்லாம் வீட்டுக்குள்ள விட்டதே தப்பா போச்சு... இது வீடா இல்ல குப்பை மேடா என்ன பண்ணி வச்சிருக்கீங்க??? உங்கள இங்கே தள்ளிட்டு உங்கள பெத்ததுங்க எங்க போயிடுச்சுங்க... அவ்வளவு ரோஷம் இருந்தா உன்னோட அப்பா வீட்டுக்கு போங்க இங்க வந்து எதுக்கு எங்க உயிரை வாங்குறீங்க இது என்ன டேக் கேரா குழந்தைகள பார்த்துக்குறது???" என அவன் சிறு குழந்தை என்று கூட பாராமல் கோபமாக பேச சஞ்சனா அவன் அடித்த அடியிலேயே அவன் மேல் பயம் வந்து வேகமாக ஓடி ஒளிந்து கொள்ள,
சத்தம் கேட்டு அடுக்களையில் இருந்து ஓடி வந்த ரேவதி அதிர யாரிடமோ ஃபோன் பேசி கொண்டிருந்த ஜெய மோகனும் சத்தம் கேட்டு வர குழந்தைகள் அழ அதை கண்ட பெரியவர்கள் அதிர்ந்தனர்...
முதலில் ஜெய மோகன் குழந்தைகள் துடித்து அழுவதை பார்த்து பதறி," ராகவ் அவங்க குழந்தைகள் என்ன காரியம் பண்ணி இருக்க????" என சஞ்சயை வாரி எடுக்க அதற்குள் ரேவதி சஞ்சனாவை தூக்கி கொண்டார்..
"அப்பா என்ன காரியம் பண்ணி இருக்காங்க பாருங்க அறுந்த வாலுங்க வரவங்க போறவங்க முகத்தில் தான் பால் எரியறதா??? வீட்டுக்குள்ள தான் விளையாடுவாங்களா அது என்ன இங்கே கொண்டுவந்து தள்ளிட்டு இவங்கள பெத்தவங்க விட்டுட்டு போய்ட்டாங்க இவங்க பண்ற அழும்ப..
யாரு பார்த்துக்குறது யாரு சகிக்கிறது என்ன பண்ணி வச்சிருக்காங்கன்னு பாருங்க என்னால கண்ணையே திறக்க முடியவில்லை" என காலையில் நடந்த பிரச்சனையில் அவனுக்கு இருக்கும் கோபத்தை குழந்தைகள் மீது காட்ட பெரியவர்களோ இவர்களின் பெற்றோர்களின் மீது உள்ள கோபத்தை குழந்தைகளிடம் காட்டி விட்டான் என்று நினைத்து ராகவ் மீது கோபம் கொண்டனர்...
அவன் கூறிய காரணத்தை கேட்ட ஜெயமோகன் ,"என்ன இருந்தாலும் நீ குழந்தைகளை கை வைத்திருக்க கூடாது அவங்களுக்கு என்ன தெரியும் வீடுன்னு இருந்தா விளையாட தான் செய்வாங்க அப்படியே பட்டு இருந்தாலும் பொறுமையா சொல்லி இருக்க வேண்டியதுதானே ரெண்டு குழந்தைகளும் அடிக்கிற உரிமை உனக்கு யார் கொடுத்தது" என்று கூற அவனோ ,"ஆமாம் இந்த வீட்டில் எல்லாமே தப்புதான் நான் பேசுற எல்லாமே தப்புதான் இப்போ காசு பணம் வந்ததும் மூத்த மகனும் மூத்த மகனின் குடும்பமும் தான் உங்களுக்கு முக்கியமா போயிடுச்சு நான் வேண்டாதவன் ஆகிட்டேன் இல்லையா அவன் சம்பாதிக்க துவங்கினதும் அவன் செய்த தப்பு எல்லாம் மறந்து போயிடுச்சு அப்படித்தானே அப்பா" என்க
அதை அவர் என்ன வார்த்தை பேசுகிறான் என எண்ணி அதிர்ந்தார்...ஆனால் முதலில் குழந்தைகளை சமாதானம் செய்துவிட்டு பிறகு இவனிடம் பேசிக் கொள்ளலாம் என பொறுமை காத்த ஜெயமோகன் குழந்தைகளை சமாதானம் செய்ய அழும் குழந்தைகள் சமாதானம் ஆவது போல தெரியவில்லை..
"சஞ்சு தான் எனக்கு பயமா இருக்கு எங்க அம்மா கிட்ட போகணும் எனக்கு அப்பா கிட்ட பேசணும் நான் ராணி பாட்டி வீட்டுக்கு போறேன் இங்க இருந்தா சித்தப்பா அடிப்பாரு" என்று கூற துவங்க
சஞ்சய்யும் ,"தாத்தா உங்க போன் குடுங்க எனக்கு அம்மா கிட்ட பேசணும் எனக்கு இங்க இருக்க பிடிக்கல நாங்க இனி இங்க வர மாட்டோம்" என்று கூற ரேவதிக்கு குழந்தைகள் அழுவதை பார்த்து பயம் தொற்றியது...
ராகவ் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு அவன் சென்று விட்டான்..
குழந்தைகளை பெரியவர்கள் சமாதனம் செய்தும் அவர்கள் கேட்பது போல தெரியவில்லை அழுது கொண்டே இருந்தனர்..
அதே நேரம் சத்யதேவ் மற்றும் அதிதி இருவரும் ஒரு முத்த காட்சியில் நடித்து கொண்டிருந்தனர்...இருவரும் ஒரு முத்த காட்சியில் நடித்து கொண்டிருக்க சத்யதேவ் சிறப்பாக தன் காட்சியை செய்துவிட அதிதி தான் தடுமாறி இருக்க ஒரு டேக் ரெண்டு டேக் என நான்கு டெக் வரை பொறுமையாக இருந்த ஜெகதீஷ் அதற்கு மேல் பொறுமை காக்கவில்லை..
நேராக சென்று அவளின் அருகே நின்று அவளின் இடையை இலேசாக பிடித்து அவள் முகத்துக்கு அருகே செல்ல இங்கு இதை தூரத்தில் இருந்து சூட்டிங் எடுப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவளின் கண்களில் தெளிவாக ஜெகதீஷ் அவளின் இடையே பிடித்து அவளின் முகத்துக்கு அருகே குனிந்து ,"இப்படி எக்ஸ்பிரஷன் குடுங்க அதிதி சார் எத்தன தடவ செய்வார்.. இந்த எக்ஸ்பிரஷன் லாக் பண்ணிடுங்க ஓகே" என கூறி கொண்டிருக்க அதை பார்த்த இவளுக்கு மேலும் உடம்பெல்லாம் எரிய துவங்கி விட்டது...
சினிமா தான் நடிப்புதான் என அனைத்தும் அவளுக்கு தெரிந்தாலும் அவள் கணவன் அவள் முன்னால் வேறொருத்தியை தொடுவதை அவளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.. முதலிலேயே அந்த அதிதி கூறியது அவளுக்கு பிடிக்கவில்லை அதில் இதுவும் வேறு சேர்ந்து கொள்ள எல்லாம் சேர்ந்து ஜெகதீஷ் தலையில் தான் இறங்கியது...
உடனே தன் போனை எடுத்து," எனக்கு உன்கிட்ட பேசணும் ஷூட்டிங் முடியும் வரை நான் வெயிட் பண்றேன்" என அவள் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள்...
அதை அவன் இரவு தான் பார்த்தான் ஷூட்டிங் எல்லாம் முடிந்து பேக்கப் செய்த பிறகு தன் மொபைல் ஃபோனை எடுத்த அவனுக்கு அவளுடைய எண்ணில் இருந்து மெசேஜ் வரவும் நேராக கேரவனுக்குள் நுழையும் போதே," ராம் ஒரு காபி கொண்டு வர சொல்லு" என்று கூறினான்...
"கோட் வேர்ட் புரிஞ்சுது டா" என கூறி கொண்டே அவன் செல்ல ஜெகதீஷோ," மூடிட்டு போடா" என சிரித்தபடி சென்றான்...
ராம் வருகைக்காக காத்து இருந்த அவள் கையில் ஜுஸ் ரெடியாக இருக்க ,"டைரக்டர் சாருக்கு காபி வேணுமாம்" என்று அவன் எதுவுமே தெரியாதது போலகூற ,"அவன் இந்த ஜூஸ் குடிச்சா போதும் காபி வேணுமாம் காபி" என்று முணுமுணுத்துக் கொண்டு அவள் ஜூசை எடுத்துக் கொண்டு சென்றாள் ஏற்கனவே தயாராக அவள் எல்லாம் எடுத்து வைத்திருந்தாள் போல எல்லோரையும் அனுப்பி வைத்து விட்டு அவனிடம் பேச காத்து கொண்டிருந்தாள் சுபத்ரா...
ராம் வரவும் இது தான் சமயம் என அவள் ஜூஸ் டம்பளரை எடுத்துக்கொண்டு ஓட அங்கே கேரவன் வெளியே ஜெகதீஷின் அசிஸ்டன்ட் ,"கொடுங்க மேடம் நான் கொண்டு போய் கொடுக்கிறேன்" என்று கூற,
இப்போ என்ன சொல்வது என தெரியாமல் திரும்பி ராமை பார்க்க ராம் தான்,"பிரகாஷ் நீங்க நாளைக்கு என்னென்ன ஷாட் இருக்கு அப்படின்னு அசிஸ்டன்ட் டைரக்ட்ர்ஸ் கிட்ட நான் கேட்டேன் என்று சொல்லி லிஸ்ட் எடுத்துட்டு வாங்களேன்" என்று அனுப்பி வைக்க ,"சரிங்க சார்" என்று கூறி அவன் செல்லவும் ராமை பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு அவள் போனாள்...
"அவனவன் காதலுக்கு துணை போன பரவால்ல இங்க கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தை பெத்து இருக்கிறவங்களுக்கு எல்லாம் துணை போக வேண்டி இருக்கு என்ன எல்லாம் செய்ய வைக்கிறானுங்க" என்று புலம்பிக்கொண்டே அவன் சென்றான்...
ஆனால் அதிதிக்கு இந்த காட்சி அவ்வளவு உவப்பாக இல்லை ஆம் அவளும் இங்கு நடப்பதை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்...
