Share:
Notifications
Clear all

அத்தியாயம் 23

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

"பாட்டி உங்க சமையல் சூப்பரா இருக்கு" என சஞ்சனா மற்றும் சஞ்சய் கூற அதை கேட்டு சிரித்தபடியே அவர்களுக்கு ஊட்டி விட்டு கொண்டிருந்தார் ரேவதி...

"கண்ணா சீக்கிரம் சாப்பிடுங்கடா ஸ்கூலுக்கு போக டைம் ஆயிடுச்சு இன்னும் சாக்ஸ் ஷூ எதுவுமே போடல" என்று ரேவதி கூற ,"அதெல்லாம் பண்ணிக்கலாம் பாட்டி நீங்க சீக்கிரம் உங்களை ஊட்டி விடுங்க அப்புறம் நாங்க சாப்பிடாம போயிடுவோம்" என்று குழந்தைகள் கூற அவர்களின் பேச்சை கண்டு கொள்ளாத படி பேப்பர் படிக்கும் பாவணையில் கண்கள் முழுவதும் ஜெய மோகனுக்கு குழந்தைகள் மீது படிந்து இருந்தது...

மழலையின் பேச்சில் தன்னை மறந்து இருந்தார் அவர் கிட்டத்தட்ட ஒரு வார காலமாக அவர் மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பது போல அவரே உணர்ந்தார்...

அதற்கு காரணம் இக்குழந்தைகள் தான் என்பது அவரால் புரிந்து கொள்ள முடியாமல் இல்லை ஆனால் குழந்தைகளிடம் அவரால் கோபத்தை காட்ட முடியவில்லை என்றாலும் குழந்தைகள் மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்திக் கொள்ளவும் இல்லை...

ஆனால் குழந்தைகளோ அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை பாட்டி தாத்தா சித்தப்பா என்ன அனைவரிடமும் அவர்கள் பேசவில்லை என்றாலும் இவர்களாக போய் பேசுவார்கள்..

அதுவும் ஜெயமோகனுக்கு உரிமை எடுத்து குழந்தைகள் நீண்ட நாட்களாக பழகியது போல பேசுவது ரொம்ப பிடித்திருக்க, சஞ்சய் அங்கு தாத்தா பேப்பர் படித்து கொண்டு இருப்பதை பார்த்து,

"தாத்தா" என சஞ்சய் கூற என்ன என்பது போல பார்த்த ஜெயமோகன் கண்டுக்காமல் பேசாமல் இருக்க ,"சும்மா உக்காந்து பேப்பர் தானே படிச்சிட்டு இருக்கீங்க எங்க ஷூவை போட்டு விடுங்க எங்களுக்கு டைம் ஆச்சு பார்த்தா தெரியல" என்று சஞ்சய் கூற அதைக் கேட்ட ரேவதி சிரித்தார் சஞ்சய் கூறியதை கேட்டதும் ஜெயமோகனே அதிர்ந்து விட்டார்...

"கண்ணா பாட்டி போட்டு விடுறேன் டா தாத்தா தான் பேப்பர் படிக்கிறாங்க இல்ல" என்று ரேவதி கூற," பாட்டி நீங்க எங்களுக்கு ஊட்டி விடுற வேலையை பாருங்க தாத்தா போட்டு விடுவார், வாங்க தாத்தா சீக்கிரம்" என்று சஞ்சு கூற,

அவரோ ரேவதியை ஒரு பார்வை பார்க்க ,"குழந்தைகள் தானே அவங்களுக்கு என்ன தெரியும்" என ரேவதி மெல்லிய குரலில் கூற மெல்ல எழுந்து வந்து தன்னுடைய பேர குழந்தைகளுக்கு ஷூவை மாட்டி விட்டார்..

அதை பார்த்த ரேவதி அவருடைய குழந்தைகளுக்கு கூட இந்த வேலையெல்லாம் அவர் செய்திருக்க மாட்டார் ஆனால் பேர குழந்தைகளுக்கு இதையெல்லாம் செய்கிறாரே என அதிசயமாக பார்த்தார்...

அதோடு நிற்கவில்லை ,"தாத்தா நீங்க கார் ஓட்டுவீங்க தானே" என்று கேட்க ஜெயமோகனோ ஓட்டுவேன் ,"என்ன டிரைவர் வேலை பார்க்கணுமா??" என்று கேட்க ,"ஆமாம் அந்த ரெட் கலர் கார் இருக்குல அந்த கார்ல போலாம் எங்க ஸ்கூல்ல எல்லாம் தாத்தா பாட்டிங்க தான் வந்து என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் வருவாங்க நான் மட்டும் அம்மா கூட போயிட்டு இருந்தேன் எப்பவாச்சு தான் ராணி பாட்டி கொண்டு வந்து விடுவாங்க இனிமேல் இங்கதான் இருக்க போறோம் இனி நீங்களே எங்களை கொண்டு போய் விடுங்க பாட்டி நீங்களும் வாங்க சாயந்திரமும் நீங்க ரெண்டு பேருமே வரணும்" என்று சஞ்சய் மற்றும் சஞ்சனா கூற அதைக் கேட்டுக் கொண்டே மாடியில் இருந்து ராகவ் இறுகிய முகத்தோடு வந்தான்...

அவனுக்கு இங்கு நடக்கும் எதுவும் பிடிக்கவில்லை... எல்லாமே அவனுக்கு எரிச்சலாக இருந்தது... அவனை கண்டதும் சிரிப்பை அடக்கிய ரேவதி," வா பா வந்து சாப்பிடு" என்று கூற ,"எனக்கு எதுவும் வேண்டாம்" என்று கூறவும் ஜெயமோகன் மெல்ல எழுந்து தன் மகனை கண்டதும் சிரிப்பை அடக்கிய அவர்," சாப்பிட்டு போப்பா" என்று கூற தந்தையை ஒரு பார்வை பார்த்து," எனக்கு வேண்டாம் பா நீங்களும் இவங்க கூட சேருவீங்கன்னு நான் எதிர்பார்க்கல" என்று கூறிவிட்டு அவன் செல்ல ஜெயமோகனின் முகம் வாடியது...

அவன் சென்றதும் அதை கண்ட ரேவதி தன் கணவன் அருகே வந்து ,"அவனும் மாறுவாங்க நம்ம எல்லாரும் பழையபடி இருப்போம் நீங்க ஆசைப்பட்டதை விட ஒரு படி மேல போய் ஜெகதீஷ் இந்த அளவுக்கு வளரலையா அவனை தெரியாதவங்களே இல்லைன்னு சொல்லலாம்.. அந்த அளவுக்கு அவன் வளர்ந்து இருக்கான்.. நாம நெனச்சு பார்த்தோமா அவன் மேலே வந்து விட மாட்டானான்னு நீங்க எவ்வளவு நாள் ஏங்கி இருக்கீங்க உங்க ஆசையை விட அவன் நல்ல நிலைமைக்கு வரலையா???

இதோ அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு ரெண்டு குழந்தைகள் இருக்காங்க எப்படியோ என்னமோ தவறு பண்ணி எல்லாம் நடந்திருந்தாலும் அவங்க இப்போ நம்ம வீட்டுக்கு வந்து இருக்காங்க இதெல்லாம் நல்ல விஷயமாகத்தான் நானும் பார்க்கிறேன் கண்டிப்பா ராகவ் மனசு மாறுவான் நீங்க அத பத்தி கவலைப்படாதீங்க நீங்களும் இயல்பாக குழந்தைகள் கூட பழகுங்க பெரியவங்க பண்ணின தப்புக்கு குழந்தைகள் என்ன பாவம் பண்ணினாங்க??" என்று ரேவதி கூற அதை கேட்டு அவரும் தலையாட்டிக் கொண்டு தன்னுடைய கார் சாவியை எடுத்தார்...

"ஐ ஜாலி இன்னைக்கு தாத்தா பாட்டி கூட போறோம்" என்று குழந்தைகள் சிரிக்க அப்படியே அந்த சூழல் மாறியது...

ஆனால் சினிமா யூனிட்டில்தான் எல்லாமே தலைகீழாக இருந்தது...

ஆம் இந்த படத்துக்கு அதிதி பொருத்தமாக இருப்பார் என போட்டது தவறோ என்பது போல சதா அனைத்து நேரமும் ஜெகதீஷ் செல்லும் இடங்களில் எல்லாம் அதிதி இருந்தாள்...

அவளுடைய அம்மா கூட ,"ஹே அங்கே சத்ய தேவ் இருக்கான் அவன் கூட இரு பார்க்க அழகா இருக்கான் உங்க ஜோடி கூட நல்லா இருக்கு உன் கலருக்கு அவன் தான் மேட்ச் ஆவான்.. அந்த டைரக்டர் பின்னாடி போகாத அவன் எவ்ளோ பேட் வேர்ட் பேசுறான் எப்போ பாரு கோபமாகவே இருக்கான்" என நல்ல அம்மாவாக அட்வைஸ் செய்ய,

அதை கேட்ட அவளோ," நோ மம்மி எனக்கு இவனை தான் பிடிச்சு இருக்கு அவனோட ஸ்டைல்ல நான் ரொம்ப அட்மையர் ஆகறேன்... சத்யதேவ் அவரை நான் அப்படி நினைத்து பார்த்ததே இல்லை" என்க அதை கேட்டு கொண்டிருந்த சுபத்ராவுக்கு ஆத்திரம் வந்தது... இருவரின் ஹிந்தி உரையாடல் தீயை வைக்க என மனதுக்குள் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள் சுபத்ரா...

ஆம் என்றைக்கு அவள் ஜெகதீசுக்கு ஜூஸ் எடுத்துக்கொண்டு சென்றாலோ அன்றிலிருந்து அதிதி இவளை தான் எல்லா வேலையும் வாங்குகிறாள்..

அது சுபத்ராவுக்கு கடுப்பாக இருந்தது.. அவள் ஓனர் என்று தெரிந்தும் அவள் வேண்டுமென்று இவளிடமே அனைத்து வேலையும் வாங்க அவளும் இன்முகத்தோடு தான் முதலில் செய்து வந்தாள்...

ஆனால் போகப் போகத்தான் அவளுக்கு தெளிவாக புரிந்தது இவள் வேண்டும் என்று தன்னை வேலை வாங்குகிறார் என்று வேலை வாங்கினால் கூட பரவாயில்லை ஆனால் ஒரு வேலையாள் போல நடத்துவது தான் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... ஆனால் எதுவும் சொல்ல முடியாமல் அவள் இருந்தாள் ஏனெனில் கிடைத்திருக்கும் வாய்ப்பை மிக அருமையாக பயன்படுத்த வேண்டும் இதை வைத்து மேற்கொண்டு பல படங்கள் அவளுக்கு கிடைக்க வேண்டும் என்று ஒரு நிறுவனத்தை நடத்தும் நிறுவனராக சுபத்ரா நினைத்து அமைதி காத்தாள் .. இந்த யூனிட்டில் எந்த பிரச்சனையும் அவர்களால் வந்து விடக்கூடாது என்பதில் அவள் தெளிவாக இருந்தாள் அதனால் அவள் அமைதியாக இருந்தாள்

ஆம் அவள் அந்த ஹோட்டலில் உரிமையாளர் என தெரிந்திருந்தாலும்," டைரக்டருக்கு நீ தானே ஜூஸ் கொடுத்த இனிமேல் அதுக்கு மேடமுக்கும் ஜூஸ் கொடு" என்று அதிதியின் அம்மா ஆரம்பித்து வைக்க இப்போது அவள் முன்னேயே ஜெகதீஷை எப்படி வளைக்கலாம் என திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள் அதைக் கேட்டதிலிருந்து இவளுக்கு பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது என்னதான் அவள் அவனைப் பிடிக்கவில்லை என்று கூறினாலும் அவன் செய்தது மறக்கவில்லை என்று எல்லாம் கூறினாலும் அவளுடைய மனதில் அவன் தான் இருக்கிறான் அதை அவளால் மாற்ற இயலாது...

அப்படி இருக்க வெகு நேரமாக ஜூசை பிடித்துக் கொண்டு அவள் நிற்பதை பார்த்த ஜெகதீஷ் அங்கு வந்தான் அவன் வருவதை கண்டதும் ,"மம்மி பார்த்திங்களா அவன் என்னை தேடி வருகிறான் இந்த சான்சை நான் மிஸ் பண்ண விரும்பல" என்று ஹிந்தியில் அவள் கூற

இவளுக்கு ஹிந்தி தெரியாது என்றுதான் அம்மாவும் மகளும் ஹிந்தியில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் இவளுக்கு நன்றாக ஹிந்தி தெரியும் அப்படி இருக்க ,"உன்னோட பர்த்டே வருதுல்ல அப்போ பார்ட்டி இங்கே அரேஞ்ச் பண்ணிடலாம் ... அப்போ அவனை உன்னோட கைக்குள்ள வளைச்சிடு எத்தனை டைரக்டர் ப்ரொடியூசர் ஆக்டர் எல்லாரும் உன்னோட அழகுல மயங்கினவங்க தான் இவனெல்லாம் எம்மாத்திரம் நாலாவது படம் தானே டைரக்ட் பண்றான் அதெல்லாம் விழுந்திடுவான் ஏன்னா என் பொண்ணு தான் உலகத்திலேயே பேரழகி" என்று அதிதியின் அம்மா பெருமையாக கூற அதை கேட்ட மகள் சிரித்தாள்..

தன் மனைவி வேலைக்காரி போல நிற்பதை பார்த்த அவனுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை அவள் ஒருவேளை செய்கிறாள் அதற்கு அவன் மரியாதை கொடுக்கிறான் ஆனால் இப்படி வேலையாள் போல சேவகம் செய்வது போல அவள் நிற்பது அவனுக்கு பிடிக்கவில்லை அந்த நிறுவனத்தை நடத்தும் முதலாளி போல அவள் நடந்தால் தான் என்ன என்பதுதான் அவனுக்கு கேள்வி ...

என்ன இருந்தாலும் அவனால் அதை பொறுத்து கொள்ள முடியாமல் போக நேராக அதிதி அருகே போடப்பட்டிருந்த இருக்கை அருகே வந்து அமர்ந்தவன் ,"என்ன அதிதி டயலாக் படிச்சிட்டீங்களா அடுத்தது உங்க ஷாட் தான் சாரோட ஷாட் முடிஞ்சது" என்று கூற

"பேபி படிச்சாச்சு" என்று அதிதியின் அம்மா கூற அதை கேட்ட அவன் குட் என கூறி,"என்ன ஜூஸ் குடிச்சிட்டு மிஸ்ஸஸ் சுபத்ரா நின்னுட்டு இருக்காங்க" என கேட்க

அப்போதுதான் கவனிப்பது போல ,"நான் தான் ஜூஸ் கொண்டு வரச் சொல்லி இருந்தேன்" என்று கூற அதைக் கேட்டு அவனும்," என்ன அதிதி அவங்க ஒரு ஹோட்டல் ஓனர் அவங்க கிட்ட போய் ஜூஸ் கொண்டு வர சொல்லலாமா எவ்வளவு பசங்க இருக்காங்க அவங்க கிட்ட கேளுங்க அவங்க எல்லாமே செஞ்சு கொடுப்பாங்க ...என்ன மம்மி ஜி புரியுதா அவங்க படா ஹோட்டல் வாலா ஹே அவங்க கிட்ட இந்த வேலையெல்லாம் வச்சுக்காதீங்க" என்று அதிதியின் அம்மாவிடம் அவருடைய அம்மா பேசுவது போலவே அவன் பேசினான்... அந்த பேச்சு லேசான எச்சரிக்கையும் அடங்கி இருந்தது...

அதைக் கேட்டதும் அம்மா மகள் இருவரின் முகமும் ஈயாடவில்லை இருவருக்கும் பெரிதாக அவன் பேசியது பிடிக்கவில்லை என்றாலும்," அதிதி வேகமாக சாரி சுபத்ரா நீங்க யாருன்னு எனக்கு தெரியல ஸ்டாப் என்று நினைத்துவிட்டேன்" என்க அவளோ பதிலுக்கு எதுவும் பேசாமல் இருக்க ,"எதுக்கு கைல பிடிச்சுட்டு இருக்க இங்க வச்சுட்டு போ.. இனி யாராவது ஏதாவது சொன்னால் வேலை ஆளை அனுப்பு" என்று அவன் கூறவும் அவளோ அவனை பார்த்து முறைத்துக் கொண்டு ஜூஸை வைத்துவிட்டு சென்றாள்...

"இப்போ எதுக்கு இவ என்ன பார்த்து முறைக்கிறா இவளுக்கு நல்லதே செய்யக்கூடாது" என்று அவன் உள்ளுக்குள் நினைத்தாலும் அமைதியாக இருக்க சுபத்ரா ஒரு அடி எடுத்து வைத்திருப்பாள் அதற்குள் அதிதி ,"நெக்ஸ்ட் வீக் என்னோட பர்த்டே வருது இங்கே பார்ட்டி பண்ணலாம்னு இருக்கேன் கண்டிப்பா நீங்க வரணும் நீங்க தான் ஸ்பெஷல் கெஸ்ட்" என்று அவள் கூற அதைக் கேட்டு அவனும் எதார்த்தமாக ,"பார்ட்டி தானே வந்துடுறேன்" என்று அவன் கூறவும் சட்டென்று சுபத்ரா திரும்பி அவனை பார்த்தாள்..

அதைப் பார்த்து அவனோ என்ன இவ பார்க்கிறா என எண்ணினாலும் அவள் முறைப்பதை பார்த்து அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை அவளோ மனதுக்குள் ,"பார்ட்டிக்கா போற மவனே நீ முடிஞ்ச" என கருவி கொண்டாள் சுபத்ரா...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top