அத்தியாயம் 22
சென்னையை அடுத்த புறநகர் பகுதியில் செட் போடப்பட்டு இருந்தது...கிட்டதட்ட ஆயிரம் பேர் குழுமி இருந்தனர்... சத்யதேவ் செட்டுக்கு வந்து இருந்தான்..அந்த இடமே பரபரப்பாக காட்சி அளித்து கொண்டு இருந்தது...
மக்கள் எல்லோரும் அவனை காணவே அங்கு கூடி இருக்க அவன் எதையும் கண்டு கொள்ளாமல் தன் வேலையில் மூழ்கி இருந்தான்...அவனிடம் டயலாக் பேப்பர் கொடுத்து ,"சார் நீங்க அதிதி மேடம் ஓடி வருவாங்க நீங்க அவங்கள ஹக் பண்றீங்க அப்படியே இரண்டு பேரும் ரொமான்டிக்கா பாத்துக்குறிங்க உங்களை அதிதி மேடம் கிஸ் பண்ணுவாங்க...அப்புறம் இந்த டயலாக் பேசுவீங்க இது தான் இப்போ எடுக்க போற ஷாட்" என கூற அவன் கூறியதைக் கேட்டு உள்வாங்கிய சத்யதேவ் அவன் கையில் இருக்கும் டயலாக் பேப்பரை பார்த்துக்கொண்டு இருந்தான்...
அதன் பிறகு ஜெகதீஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் இருவரும் லென்ஸ் எப்படி வைக்கலாம் ஷாட் எப்படி வைக்கலாம் என டிஸ்கஸ் செய்து கொண்டு இருந்தனர்...
அந்த நேரம் பார்த்து அதிதி தயார் ஆகி வர அவருடைய அம்மா அதிதியை யாராவது தூக்கிக் கொண்டு போய் விடுவார்களோ என பாடிகார்ட் போல அவள் பின்னாலேயே வந்து கொண்டு இருந்தார்...
"பேபி ஜுஸ் குடி அப்போ தான் ஸ்கின் க்ளோவா இருக்கும்" என தன்னுடைய 33 வயது உள்ள தன் மகளுக்கு அறிவுரை கூறி வர அவரோ தன்னுடைய அழகில் பெரும் சிரத்தை எடுத்து கொள்ளும் நடிகை தான் அதிதி... தன்னுடைய 18 வயதில் நடிக்க வந்தவள் 30 வயதில் மார்க்கெட் இழந்து பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாள்..
உண்மையில் மார்க்கெட் போன நடிகை தான் அதிதி ஆனால் ஜெகதீஷ் தன்னுடைய படத்தில் சத்யதேவின் நாயகியாக போட அவளுடைய மார்க்கெட் மேல் உயர்ந்து விட்டது... மேலும் கைவசம் ஆறு படங்கள் வேறு புக் ஆகி இருந்தது...இன்னும் இரண்டு வருடம் இதை வைத்தே அவள் ஓட்டி விடுவாள்...
அப்படி இருக்க தனக்கு வாய்ப்பு கொடுத்த ஜெகதீஷ் மீது அதிதிக்கு ஒரு கண்...அந்த நன்றிக்கு தன்னையே கொடுக்க தயார் ஆகி விட்டாள் அதிதி...ஆம் ஜெகதீஷ் மீது அவருக்கு ஒரு கண்..அவன் எப்போது அவரை இந்த படத்தில் இணைத்தானோ அப்போது இருந்து அவனை தான் அதிதியின் கண்கள் தேட இப்போதும் தேடியது..
அவன் ஒளிப்பதிவாளர் உடன் இருப்பதை பார்த்த அதிதி நேராக அவனிடம் சென்று அவனிடம் என்ன பேசுவது என தெரியாமல்," ஜெகதீஷ் இந்த டிரஸ் ஓகே தானே" என கேட்க அவனோ இலேசாக திரும்பி பார்த்து ,"ஓகே மேடம்" என்க
"மேடமா உன்கிட்ட எவ்வளவு தடவை சொல்றது அதிதின்னு கூப்பிடு" என்க
அவனோ அவளிடம் கொஞ்சிக் கொண்டிருக்க எல்லாம் அவனுக்கு சமயம் இல்லை சினிமா என துவங்கிவிட்டால் நேரம் காலம் பார்க்காமல் அவன் ஓட துவங்கி விடுவான் எதைப் பற்றியும் அவன் யோசிக்க மாட்டான் யார் எதிரே வந்தாலும் கண்டுகொள்ள மாட்டான் அப்படி இருக்க அதோ தூரத்தில் அவனுடைய கட்டிய மனைவி தான் இந்த யூனிட் முழுவதற்கும் சமைத்து போட்டுக் கொண்டு இருக்கிறாள்...
அவளை கூட கண்டு கொள்ளாமல் வேலையில் தான் அவன் கண்ணும் கருத்துமாக இருக்க அவள் வந்து பேச்சு கொடுக்கவும்," சரி அதிதி...டயலாக் பேப்பர் ராம்கிட்ட வாங்கிக்கோங்க அடுத்த ஷாட்டுக்கு ரெடி ஆகிடுங்க" என்று ரத்தின சுருக்கமாக கூறியவன் திரும்பி நின்று ஒளிப்பதிவாளர் உடன் பேச துவங்கி விட்டான்...
அதிதிக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் அவன் அருகே நிற்பது அவளுக்கு பிடித்து இருக்க அவள் நின்ற இடத்தில் அவளுக்கு சேர் போட்டு குடை பிடிக்க ஆட்களும் நின்று கொண்டு இருக்க ,"ராம் இங்கே வா..பேபிக்கு டயலாக் பேப்பர் கொண்டு வா" என அதிதியின் அம்மா அவனை அழைத்தார்...
"இதுக்கு வேற வேலையே இல்ல முதல்ல ஜெகதீஷை சொல்லணும் இந்த அம்மாவை செட்டில் இருந்து வெளியே அனுப்பினால் தான் படம் எடுக்க முடியும்" என்று புலம்பி கொண்டு வந்த ராம் அவள் கையில் டயலாக் பேப்பர் கொடுத்து விட்டு," சொல்லுங்க மம்மி ஜி" என்று கூற ,"ராம் அதிதி பேபிக்கு ஜூஸ் கொண்டு வர சொல்லு" என்று பாதி இந்தியிலும் பாதி தமிழிலும் கொஞ்சி கொண்டு அவர் கூற," சரி மம்மி ஜி சொல்றேன்" என்று அவனும் கூறிவிட்டு அவனுடைய அசிஸ்டன்ட்டிடம் கூறிவிட்டு சென்றான்...
"ராம் ராம் உன்னோட அசிஸ்டன்ட் கிட்ட சொல்லாத நீயே செய் அவன் கிட்ட ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வர சொன்னா அவன் ஆப்பிள் ஜூஸ் கொண்டு வரான் அது பேபிக்கு பிடிக்காது" என்று ஹிந்தியில் கூற அதைக் கேட்ட ராம் மனதுக்குள் ,"இது என்னடா எழவா போச்சு" என்று எண்ணினாலும் ,"சரி மம்மி ஜி" என்று கூறியவன் நேராக சமைக்கும் இடத்திற்கு சென்றான்..
அங்கு எல்லாம் சரியாக நடக்கிறதா என பார்த்துக் கொண்டிருந்த சுபத்ரா அருகே சென்ற அவன் ,"அதிதி மேடமுக்கு ஒரு ஆரஞ்சு ஜூஸ் வேணும்" என்று கூற அவளோ அவனை பார்த்து முறைத்தாள்...
அவனுக்கு இவள் எதுக்கு தன்னை பார்த்து முறைக்கிறாள் என விளங்கவில்லை ...அவளோ ,"அவன் என்ன அதிதி கிட்ட ரொம்ப கொஞ்சிட்டு இருக்கான் செட்டில் எப்பவுமே இப்படித்தானா பொண்ணுங்க கிட்ட எல்லாம் ஓவரா வழிஞ்சுட்டு இருப்பானா???" என்று ராமிடம் அவள் கேட்க,
ராமோ இது வேறயா என தலையை சொரிஞ்சு ,"அவன் அப்படியெல்லாம் இல்ல சுபத்ரா அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு தான் இருப்பான்" என்க
" அதுதான் நான் பார்க்கிறேன் அங்க பாரு எப்படி அவகிட்ட பல்லக்காட்டி சிரிச்சிட்டு இருக்கான்னு" என்றவள் "ஓவரா தான் அவன் போறான் நான் சொன்னேன்னு சொல்லு வேலையை மட்டும் பார்க்க சொல்லு" என்று அவள் எச்சரிக்கை செய்ய ராம் தலையை பிடித்தபடி ,'எப்பவும் நைட்டு தான் கோட்டர் அடிப்பேன் இப்பவே இவ்வளவு ரெண்டு பேரும் சேர்ந்து என்னை சரக்கடிக்க வைத்து விடுவாளுக போல' என புலம்பி கொண்டே,
ஜெகதீஷ் அருகே சென்று," டேய் உன் பொண்டாட்டி நீ அதிதி கிட்ட பேசுறத பார்த்து கடுப்பா இருக்கா டா உங்க விளையாட்டுக்கு நான் வரல இந்த படம் எடுத்த மாதிரி தான் டா" என அவனுடைய காதுக்குள் புலம்ப அவனோ திரும்பி அவளை ஒரு பார்வை பார்க்க,
அவளோ மஞ்சள் நிற குர்தா அணிந்து கொண்டு அவனை மட்டும் தான் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருக்க அதை கண்ட அவன் ,"எனக்கு ஒரு ஜுஸ் அவளை கொண்டு வர சொல்லு" என்று கூறி கேரவனுக்குள் சென்றான்...
"டேய் நான் அசோசியேட் டைரக்டர் டா என்னை போய் இப்படி டீ பாய் மாதிரி அங்க போய் ஜூஸ் சொல்லு இங்க போய் ஜூஸ் சொல்லுன்னு சொல்றீங்க" என்று புலம்பிய அவன் இனி அங்க போனா அவ வாயில் இருக்கும் மொத்தத்தையும் நான் கேக்கணும் என்று கூறி அவருடைய அசிஸ்டனிடம் விஷயத்தை கூறிவிட்டு அவன் எஸ்கேப் ஆகி விட்டான்...
அந்த அசிஸ்டண்டும் ஓடி சென்று அவளிடமே," மேடம் ஒரு ஜூஸ் டைரக்டர் சார் கேட்டாங்க சார் கேரவன்ல இருக்காங்க யாரையாவது கொண்டு போய் கொடுக்க சொல்லுங்க" என்று கூறிவிட்டு சென்று விட்டான்...
அதை கேட்ட அவள்,"உனக்கு ஜுஸ் கேட்குதா இரு கொண்டு வரேன்" என அவள் திரும்பவதற்குள் புதிதாக வேலைக்கு சேர்ந்து இருந்த மலர் மற்றும் கயல் இருவரும் இதை கேட்டு விட மலர் வேகமாக ஜுஸ் போட்டதும் கயல் சுபத்ராவிடம் ,"அக்கா நான் போய் ஜெகதீஸ் சாருக்கு ஜூஸ் கொண்டு போய் கொடுத்துட்டு வரவா அப்படியே சாரை கிட்ட பார்த்த மாதிரி இருக்கும்" என்க
அதைக் கேட்டு அவளுக்கு தலையே வலித்தது எங்கு சென்றாலும் அனைவரும் அவனையே பார்ப்பது போல இருக்க அது அவளுக்கு தொல்லையாக இருந்தது...
இப்பொழுது இந்த பெண் வேறு நேற்று தான் வேலைக்கு வந்தாள்... அதற்குள் இன்று அவன் பின்னால் செல்ல நிற்கிறாள் என்பதை அறிந்த சுபத்ரா கயலை பார்த்து முறைத்து," மதியம் ஆகப்போகுது போய் சமைக்கிற வேலையை பாரு உன் கூட தானே வந்தா மலர் எவ்வளவு அமைதியா இருக்கா நீ மட்டும் ஏன் இவ்வளவு பேசுற நானே போய் ஜூஸ் கொடுத்துக்குறேன் சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கணும் கிராமத்து சமையல் தான் சத்யதேவ் சாருக்கு ரொம்ப பிடிக்கும் அதனால பக்காவா பண்ணிடுங்க புரியுதா ஏதாவது குறை என்று சொன்னாங்க அவ்வளவுதான் யாரும் இந்த படம் முடியிற வரைக்கும் நம்ம சாப்பாடு சரியில்லை என்று சொல்லக்கூடாது யார் வந்து கேட்டாலும் வயிறார குடுங்க எந்த குறையும் இருக்கக் கூடாது" என்று கூறியவள் கயலின் கையில் இருந்த ஜூசை வாங்கிக் கொண்டு வெடுக்கென்று சென்றாள்...
அவளோ அவனுடைய கேரவனுக்குள் சென்றவள் அவனை பார்த்து முறைக்க அவனோ," என்ன என்னமோ சொன்னியாம் ராம் கிட்ட நான் என்ன பொண்ணுங்ககிட்டயே பேச கூடாதாம் பார்க்க கூடாதாம்" என கேட்டு கொண்டே அவள் கையில் இருக்கும் ஜூசை வாங்கி கீழே வைத்தவன் தன் கையில் இருக்கும் சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்..
அதை பார்த்தவள் அவனை முறைத்து," ஆமாம் சொன்னேன்...இப்படி தான் பொண்ணுங்க கிட்ட வழிஞ்சு பேசிட்டு இருப்பியா??? எப்போ பார்த்தாலும் அந்த ஹீரோயின் உன் பின்னாடியே சுத்திட்டு இருக்கா என்ன விசயம் ??? என்னை மாதிரி எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை கெடுத்து இருக்க எனக்கு தாலி யாருக்கும் தெரியாமல் கட்டிட்ட.. அன்னிக்கு யார்க்கும் தெரியாமல் என் கூட இருந்து பிள்ளையை கொடுத்துட்ட இது எல்லாம் உனக்கு கைவந்த கலையாச்சே பொண்ணுங்களை ஏமாற்றுவது எல்லாம் உனக்கு கைவந்த கலை தானே அடுத்தது யாரு இந்த அதிதியா??? " என்று கேட்டாள் சுபத்ரா...
அவனோ தனது ஒரு கையால் தனது தலையை கோதிவிட்டுக் கொண்டு இடுப்பில் கையை வைத்துக் கொண்டவன் மறு கையால் சிகரெட் பப்ஃபை இழுத்து விட்டுக்கொண்டு அவள் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தான் அவள் ஆத்திரம் நோக கத்தி பேச அதுவரை அவனுடைய கண்கள் அவளை அங்குலம் அங்குலமாக தலை முதல் கால் வரை அளவெடுத்துக் கொண்டிருந்தது அவ்வளவு ஆக்ரோஷமாக பேசும் பொழுது அவளின் வதனங்கள் மேலும் கீழும் இறங்க அவனின் உணர்வுகள் கட்டுப்பாடு இன்றி தறிகட்டு ஓட துவங்கியது...
அவனோ அவளை பார்த்து கொண்டே," பேசி முடிச்சிட்டியா" என்க அவளோ தன் மூச்சை இழுத்து விட்டு அவன் கேட்ட விதத்தில் ஆத்திரப்பட்டு ,"உன்கிட்ட போய் இதையெல்லாம் சொல்றேன் பாரு என்னை சொல்லணும் உனக்கு தான் எந்த விஷயத்துக்கும் ரியாக்ட் பண்ணவே தெரியாதச்சே என்னோட மனசு உன்னால தான் புரிஞ்சு கொள்ளவே முடியாதாச்சே... நான் எதிர்பார்க்கிறது என்ன என்னுடைய தேவைகள் என்னன்னு உன்னால தான் புரிஞ்சுக்கவே முடியாது உன் பின்னாடி சுத்துனேன் பாரு என்னை சொல்லணும்..." என அவள் கூறி கொண்டு இருக்கும் போதே அவளின் இடையை பிடித்து தன்னருகே இழுத்தவன் எப்போதும் போல தன் சிகரட்டில் ஒரு பப்பை இழுத்து விட்டவன் அப்படியே அவளது உதட்டில் தன் இதழ்களை பொருத்தி விட்டான்...
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளை முத்தமிடுகிறான் இப்பொழுதும் அவன் அனுமதி கேட்கவில்லை.. அவனுக்கு தோன்றியது அவளிடம் அத்துமீறுகிறான் அது அவனுக்கு தவறாக தெரியவில்லை கிட்டத்தட்ட ஒரு நிமிடம் அவன் அவளுடைய இதழ்களில் வசித்து இருப்பான் அவனது கைகள் அவளுடைய இடையை தாண்டி அவளின் தேகங்களில் வருட துவங்க அவனுடைய கரங்களில் ஆக்கிரமப்பில் சிக்கிக் கொண்டவள் அவனிடமிருந்து விலகிக் கொள்ள முடியாமல் தவித்தாள்...
என்றைக்கு இவனை பார்த்தாலோ அன்றிலிருந்து தவிப்பது மட்டுமே இவள் முறையாகி போனது.. அவனிடமிருந்து எப்போதும் போல விடுபட முயல அவனே ஒரு நிமிடத்திற்கு பிறகு அவளை விட்டான்...
அவளோ அவனை எரிக்கும்படி பார்த்தவளை பார்த்து," மஞ்ச கலர் டாப்ல செம பிகரா இருக்க உன்னை பார்த்தா ரெண்டு குழந்தைக்கு அம்மானு சத்தியமா சொல்ல மாட்டாங்க எப்படி இப்பவும் அதே ஸ்ட்ரக்சர் மெயின்டெயின் பண்ற அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி என்னோட இந்த கைல பாதியில் தான் உன்னுடைய உடம்பு அடங்கி போகும்...
இப்பவும் அதே அளவுக்கு தான் இருக்க மேபி வெயிட் கூட போட்டு இருக்க மாட்டேன் நினைக்கிறேன் இன்னைக்கு டைம் ஆச்சு நாளைக்கு தூக்கி பாத்துட்டு சொல்றேன் வெயிட் இருக்கியா இல்லையான்னு என்ன??? அஞ்சு வருஷம் ஆச்சு இந்த லிப்ஸ் காஞ்சி போய் இப்பதான் அதுக்கு உரத்தை போட்டு இருக்கேன் இனி தண்ணீ ஊத்தி வளர்த்திடுவேன் இந்த ஒரு படமும் என் கூட தானே பார்த்துக்கலாம் உன்ன பார்த்துட்டு இருக்கிறதும் நன்றாகத்தான் இருக்கிறது... இனி நான் எப்போ ஜூஸ் கேட்டாலும் நீயே கொண்டு வந்து குடு" என்று அவன் சம்பந்தமே இல்லாமல் பேச அதைக் கேட்டு அவளோ வாயை பிளக்க," என்ன இன்னொரு கிஸ் வேணுமா" என்று கேட்டவன் உடனே வேகமாக அவளின் இதழ்களில் தன் இதழ்களை அவசரமாக பதித்தவன் ,"இன்னைக்கு சூட் முடியிற வரை என் கண்ணுல பட்டுடாத.. அப்புறம் எனக்கு மறுபடியும் ஜூஸ் குடிக்கணும்னு இருக்கும்" என கூறினான்... அதை கேட்டவள் முகம் நன்றாக சிவந்தது அவளோ அதை கோபம் என மனக்கணக்கிட்டுக் கொண்டாலும் அவளுக்கு நன்றாகவே தெரியும் அவன் பேசியதால் வந்த சிவப்பு என்று ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நின்றாள்...
அவள் தெளிவாக யோசித்தாள் அவன் பேசிய விதத்திலேயே அவனுடைய மனது அவளுக்கு புரிந்திருக்கும் ஆனால் அவன் மீது கோபத்தை வைத்துக் கொண்டு யோசிப்பவளுக்கு எப்படி அவனைப் புரிந்து கொள்ள இயலும் ஆம் அவன் தான் தெளிவாக கூறுகிறானே உன்னைத் தவிர யாரையும் இதுவரை தொடவில்லை என்று ஆனால் அதை சுற்றி வளைத்து அவன் கூற அவனுடைய பாஷையில் அவன் கூற அவளுக்கு அது விளங்காமல் போனது...
அவள் கேரவனில் இருந்து கீழே வருவதை அதிதி பார்த்து," யாரிவ" என தன்னுடைய அசிஸ்டன்டிடம் கேட்க," புரொடக்ஷன் ஃபுட் சப்ளை பண்ண வந்திருக்காங்க மேடம் இவங்க ஹோட்டல் தான் இந்த தடவை ஃபுட் ப்ரிப்பேர் பண்றாங்க இவங்க தான் சுபி ஹோட்டல் ஓனர் சுபத்ரா" என கூற அதை கேட்டவள் விழிகள் விரிந்தன....
