அத்தியாயம் 21
அவன் அவளை வீட்டுக்கும் கொண்டு போய் விட்டான் அவளுடைய வீட்டு வாசலில் நிறுத்தியவன் அவளை விட்டு போகிறோம் என்றோ இல்லை அவளை பிரிய மனமில்லாமலா தெரியவில்லை அவளின் இதழ் கன்னம் என அவன் காணும் இடமெல்லாம் அவன் முத்தமிட்டான்...
அவளோ அவனை பார்க்க," நான் கண்டிப்பா வருவேன் தைரியமா போ " என கூறி அவளை அனுப்பி வைத்தான்...
அவளும் எப்போதும் போல வீட்டுக்கு சென்று விட யாருக்கும் எந்த விதமான சந்தேகமும் எழவில்லை...
அவள் மனமும் ஏனோ அமைதியாக இருந்தது...அவன் அணிவித்த செயினை அவன் அணிவித்த தாலியாக அவள் எண்ணினாள்...
அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...இப்படியே இரு மாதங்கள் போனதே தெரியவில்லை...அவன் பார்த்து கொள்வான் என்ற தைரியம் அவளுக்கு இருந்தது....
திருமணத்துக்கு ஒரு மாதம் தான் உள்ளது என்ற நிலையில் கல்யாண வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருந்தது...
அவள் எதையும் கண்டு கொள்ளவில்லை... அவன் வருவான் என்ற நம்பிக்கையில் அவள் இருந்தாள்...இடையே அவள் செய்யும் போது அவன் ஏதாவது அரிதாக ரிப்ளை செய்வான் அவனின் வேலைப்பளு அவனால் தொடர்ந்து அவளோடு பயணிக்க முடியவில்லை என்பது தான் உண்மை ஆனால் அவன் மீது வைத்திருந்த அவளின் அதீத நம்பிக்கையால் அவளும் காத்து இருந்தாள்...
ராகவ் எப்போது அழைத்தாலும் அவள் பாராமுகமாக இருந்தாள் அதிகமாக பேசுவதை குறைத்து கொண்டாள்...அது அவனுக்கு சரியாக விளங்கவில்லை...
ஒரு பக்கம் கல்யாண வேலைகள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்க கல்யாணத்திற்கு கல்யாண புடவை அவளுக்கு எடுக்க இன்று செல்ல வேண்டும் என்ற நிலையில் வீட்டில் வைத்து அவள் இருமுறை வாந்தி எடுத்தாள்...
அவளுக்கு தலையே தூக்க முடியவில்லை என்ன ஆகிவிட்டது என அவளுக்கு தெரியவில்லை ராணி ,"என்னடி இப்படியே படுத்து கிடக்கிற இன்னிக்கு நல்ல நாள் போய் புடவை எடுத்துட்டு வந்துடலாம் சம்பந்தி அம்மா இன்னிக்கு போகலான்னு சொல்லி இருக்காங்க.." என்க
"என்னனு தெரியலம்மா தலையே தூக்க முடியல வாந்தி வருது..." என கூற ,"கண்டத சாப்பிடாதன்னு சொன்னா கேக்குறியா எப்ப பாரு தின்னுகிட்டே இரு யாரு சாப்பாடுன்னு சொன்னா போதும் போய் சாப்பிட போகிறது ஏன்டி நம்ம ஹோட்டல்ல இல்லாததா??? ஒரு ஹோட்டல் வைத்து நடத்திட்டு இருக்கோம் ஆனா நீ சோத்துக்கு ஒவ்வொரு வீட்டுக்கா போயிடுற எங்களுக்கே அசிங்கமா இருக்குடி" என அவர் திட்ட துவங்கினார்...
"அம்மா சும்மா திட்டிட்டே இருக்காதீங்க பசிச்சா சாப்பிட தான் செய்வாங்க நம்ம ஹோட்டல்ல சாப்பாடு ரொம்ப கேவலமா இருக்கும் அங்கே யாராவது போய் சாப்பிடுவார்களா " என அவள் தன்னுடைய தாயை கிண்டல் செய்ய,
அவரோ ,"அடிச்சேன்னு வை சோறு போடுற இடத்தை குறையா சொல்ற நாங்க அவ்வளவு சுத்த பத்தமா தான் சமைக்கிறோம் இதுநாள் வரை யாரும் குறை சொன்னது கிடையாது ஆனால் கூட இருந்தே குழி பறிக்கிறது நீதாண்டி" என்றவர் ,"சரி சரி சீக்கிரம் ரெடி ஆகுற வழியை பாரு இன்னைக்கு போய் டிரஸ் எடுத்துட்டு வந்துடலாம்" என்று கூறினார்...
அவளோ சரி மா என கூறி மெல்ல எழ போனவள் அப்படியே தலைசுற்றி மயங்கி தன் தாயின் மடியிலேயே விழுந்தாள் பதறிய ராணி தன் கணவனை அழைத்து மருத்துவமனைக்கு அவளை தூக்கி கொண்டு விரைய அங்கு அவளுடைய பெற்றோர்கள் கேட்ட விஷயம் அவர்களின் தலையில் குண்டைத் தூக்கி போட்டது...
ஆம் உங்களுடைய மகள் கர்ப்பமாக இருக்கிறாள் என்ற குண்டைத் தூக்கி மருத்துவர்கள் போட அதைக்கேட்ட தர்மலிங்கம் மற்றும் ராணி அதிர்ந்தனர் அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத விஷயம் நடந்திருக்க அவர்களால் அந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியவில்லை அதிலும் மகள் மீது உயிரையே வைத்திருக்கும் தர்மலிங்கத்திற்கு இந்த அடி பேரடியாக இருந்தது..
எதுவுமே தெரியாமல் கண்களை முழித்த அவள் மருத்துவமனையில் இருப்பதை பார்த்து குழம்பி போய் தன் தாயைப் பார்த்து," என்னம்மா என்ன ஆச்சு" என எதார்த்தமாக கேட்க அவரோ அவளின் கன்னத்தில் பட்டென ஒரு அடி வைத்து சொல்லுடி சொல்லு," யார் காரணம் சொல்லு " என்று கேட்க அவரின் பதட்டமும் அங்கே இருக்கும் சூழலும் அவளுக்கு பதட்டத்தை கொடுக்க
"வாயை திறந்து சொல்லு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணத்தை வெச்சிக்கிட்டு உன் வயித்துல வளர குழந்தைக்கு அப்பன் யாருடி" என கேட்க அவளோ அதிர்ந்தாள்..
"என்ன முழிக்கிற நீ எடுத்தது பித்த வாந்தி இல்லை நீ கர்ப்பமா இருக்க அப்படித்தான் சொல்றாங்க உன்னை நல்லாத்தானடி வளர்த்தேன் உனக்கு என்ன குறை நாங்க வெச்சோம்.. எல்லாமே உன்னோட இஷ்டப்படி தானடி செஞ்சோம் இப்போ இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டு வந்திருக்கியேடி இனி நாங்க மாப்பிள்ளை வீட்ல எப்படி முழிப்போம்னு கொஞ்சமாவது யோசிச்சு பாத்தியா சொல்லுடி இதுக்கு காரணம் யாரு சொல்லு" என ராணி அங்கேயே கேட்க தர்மலிங்கம் தான்," ராணி வீட்டுக்கு போய் பேசிக்கலாம் இங்கே இருந்து அசிங்கப்பட நான் தயாராக இல்லை" என்று கூறி அவர் முன்னே சென்று விட்டார்..
அவளோ இப்படி ஒரு ட்விஸ்ட்டை எதிர்பார்க்காத அவள் என்ன செய்வது என தெரியாமல் வேகமாக அவனுடைய எண்ணுக்கு தொடர்பு கொள்ள போன் எடுக்கப்படவில்லை இப்படி வெகு விரைவில் மாட்டிக் கொள்வோம் அவன் வரும்வரை பிடித்து நிற்கலாம் என எதிர்பார்த்து இருந்தவளுக்கு அடியாக இருக்க, ஜெகதீஷ் மீதுள்ள நம்பிக்கையில் வீட்டில் அவன் சொன்னது போல பேசலாம் என எதிர்பார்த்து அவர்களுடன் சென்றாள்...
வீட்டில் சென்றதும் ராணி கணவரின் பெல்ட் எடுத்து அடி வெளுத்து விட்டார்...அவளோ," அம்மா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை எனக்கு ராகவ் உடன் கல்யாணம் நடப்பதில் விருப்பம் இல்லை எனக்கு ராகவ் அண்ணன் ஜெகதீஷ் தான் பிடிச்சிருக்கு அவர்தான் இதுக்கு எல்லாம் காரணம்" என்று கூறியதும் தர்மலிங்கம் மற்றும் ராணி மேலும் அதிர ராணி அவருடைய கை நோகும் வரை அடித்தார்...
"பாவி இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டியே டி இனி எப்படி அவங்க முகத்தில் முழிப்பேன்" என அவர் கதற தர்ம லிங்கம் எதுவுமே பேச வில்லை இடி விழுந்தது போல அமர்ந்து இருந்தார்...
தன்னுடைய மகள் இப்படி ஒரு காரியத்தை செய்வாள் என அவர் எதிர்பார்க்கவில்லை அவருடைய முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது அவளோ அவளின் தந்தையின் முகத்தை பார்த்து அவர் அதிர்ச்சியை," பார்த்து அப்பா எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு நாங்க ரெண்டு பேரும் விரும்புகிறோம் தயவு செய்து எங்களை சேர்த்து வையுங்க உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாம தான் நான் இத்தனை நாள் தவிச்சிட்டு இருந்தேன்" என கூறினாள்...
அதை கேட்டு அவர் எதுவுமே சொல்லவில்லை.. "நீ சொன்ன அந்தப் பையன் வீட்டுக்கு அடங்காதவன் எந்த வேலைக்கும் போகாதவன் நாங்க பார்த்த மாப்பிள்ளைக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது அவன் அந்த வீட்ல பிறந்து இருந்தாலும் அந்த வீட்டு ஆளுங்க கூட அவனை மதிப்பது கிடையாது அவனை போய் எப்பிடி அவன் ஒரு பொறுக்கி ராகவ் பல தடவை சொல்லி நீ கேட்டதில்லையா???" என்க
"அம்மா அவர் அப்படி இல்லமா அவர் ரொம்ப நல்லவருமா... ராகவுக்கு அவரை பிடிக்காது மா அதுனால அப்படி சொல்றார்" என கூற,
"எதை வச்சு சொல்ற"
"அம்மா என்னை நல்லா பார்த்து பாருமா"
"அவன் சோத்துக்கு சிங்கி அடிச்சிட்டு இருக்கான் அவன் எப்படி உன்னை பார்த்துப்பான் சரி அவன பத்தி சொல்லு அவன் என்ன பண்றான் இப்போ எங்க இருக்கான் என்ன வேலை பண்றான் உனக்கு ஏதாவது ஒன்னு தெரியுமா என்ன படிச்சிருக்கான் என பல கேள்விகள் கேட்கப்பட அவளுக்கு எதற்கும் விடை தெரியவில்லை அவளை பொறுத்தவரை அவளை மட்டும் தான் தெரியும் அவனைப் பற்றிய எந்த விஷயமும் அவளுக்கு தெரியவில்லை..."
அவளோ முழிக்க ,"என்னடி வாழ்க்கையை அவன் கிட்ட தொலைச்சிட்டு வந்து இருக்க அவனை பத்தி எதுவுமே தெரியாம முழிச்சிட்டு இருக்க" என ராணி கேட்க இதற்கு மேல் பேசி பிரயோஜனம் இல்லை என தர்மலிங்கம் நேராக தன் நண்பன் ஜெயமோகனை அழைத்தார் அவரோ," என்னப்பா துணி எடுக்கலாமா" என ஆரம்பிக்க ,"இந்த கல்யாணம் நடக்காது எங்களுக்கு இதில் விருப்பமில்லை கல்யாணத்தை நிறுத்தறோம்" என கூற
"என்ன ஆச்சு" என கேட்க அதற்குள் போனை வாங்கிய ராணி," அதை உங்கள் மூத்த பையன் கிட்ட கேளுங்க என்னோட பொண்ண ஏமாத்தி அசிங்கப்படுத்தி இருக்கான் எனக்கு சொல்லவே வாய் கூசுது எங்க வாயால எதையும் சொல்ல நாங்க விரும்பல அவனை வர சொல்லுங்க" என கூற
"என்ன மா சொல்றீங்க" என ஜெய மோகன் கேட்க ,"அதை உங்க மூத்த பையன் கிட்ட கேளுங்க ஆனா அவன் நினைக்கிற எதுவுமே நடக்காதுன்னு சொல்லிடுங்க என்னோட பொண்ணை வெட்டி போட்டாலும் போடுவேன் ஒழிய நாங்க அவன்கிட்ட மட்டும் எங்க பொண்ணை கொடுத்து விட மாட்டோம் சரியான பொறுக்கிய பெத்து வச்சிருக்கீங்க முதுகுல குத்திட்டாங்க உங்க மகன்கள் பிரச்சனைக்கு என்னோட பொண்ணு தான் கிடைச்சாளா" என கூறி போனை வைத்து விட்டார்...
இங்கு இவனோ ப்ரொடியூசரிடம் தெளிவாக தன்னுடைய ஸ்கிரிப்ட்டை கொடுத்தான்... அந்த இடத்தில் அவன் புதிதாக எடுக்க இருக்கும் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் அதில் நடிக்க இருக்கும் நடிகர் மேலும் சில டெக்னீசியன்கள் என பலரும் அவனது கதையையும் ஸ்கிரிப்ட் புக்கையும் படித்தனர் ஏற்கனவே தயாரிப்பாளருக்கு பிடித்ததனால் தான் அவர் இவன் மேல் உள்ள நம்பிக்கையில் இந்த முயற்சி எடுத்திருந்தார் அவரது முயற்சிக்கு அவன் தகுந்த பாத்திரமாக நல்ல கதையை சிறப்பாக செயல்படுத்தி அவர்கள் முன்னால் காண்பித்து அவர்களின் விருப்பத்தையும் பெற்று விட்டான்...
அனைவருக்கும் இந்த படம் எடுப்பதில் விருப்பமே...அது ஓகே ஆகி இன்னும் இரண்டு மாதத்தில் திரைப்படம் எடுக்கலாம் என அந்த குழுவில் தீர்மானம் செய்யப்பட்டது...அது அவனுக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது...
"நாங்களா அனௌன்ஸ் பண்ற வரைக்கும் யார்கிட்டயும் இத பத்தி பேசிக்காதீங்க" என்று தயாரிப்பாளர் கூறிவிட்டு தான் அவனை அனுப்பி வைக்க வாழ்க்கையில் முதல்முறையாக அவன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அவர் கூறிய வார்த்தையை கேட்டு சரி என்று கூறிவிட்டு வந்தான் அவன் வாழ்க்கையில் அவனுக்கு கிடைத்திருக்கும் முதல் படி அதை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என நினைத்திருந்தான்..
அதற்குள் அவனுடைய வீட்டிலும் சரி அவளுடைய வீட்டிலும் சரி விஷயம் பூதாகரமாக வெடித்து சிதறி விட்டது...
அவன் சுபத்ராவின் வாழ்க்கையை கெடுத்து விட்டான் என்ற விசயமே அவன் வேண்டும் என்று ராகவின் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறான் என்று ஜெய மோகன் மற்றும் ராகவ் எடுத்து கொள்ள ஜெகதீஷ் அவளுடைய அழைப்பை பார்த்து போனை எடுத்தவன் அவளுக்கு அழைக்க அவளோ போனை எடுக்கவில்லை பிறகு அவனின் அம்மாவின் தொடர் அழைப்பை பார்த்ததும் என்னமோ சரி இல்லை என அவனுக்கு தோன்றியது...
அவனுடைய அம்மாவை அழைக்க அவரோ போனை எடுத்ததுமே ,"என்னடா பண்ணி வச்சிருக்க குடும்ப மானத்தையே இப்படி வாங்கிட்டியே தம்பி அவனுக்கு பார்த்த பொண்ணு கூட என்னடா பண்ணி இருக்க??? அவளோட அப்பா கல்யாணத்தை நிறுத்திட்டாரு என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்குறாரு" என்று அவர் கேட்டதும் தான் அவனுக்கு விஷயமே புரிந்தது எல்லாம் தெரிந்து விட்டது என பிறகு அவனுக்கு மறைக்க எதுவும் இல்லையே ,"அது தான் உங்களுக்கே தெரிஞ்சிருச்சு அப்புறம் என்ன??? நானும் இதையே தான் சொல்றேன் இந்த கல்யாணம் நடக்காது" என்று கூறினான்...
"நீ சீக்கிரம் வீட்டுக்கு வா இங்க பெரிய பிரச்சனை ஆயிடுச்சு" என்று அவர் பதட்டத்தோடு கூறி போனை வைக்க அவனுக்கு அந்த நொடி அவள் எந்த நிலையில் இருப்பாள் என்ற எண்ணம் தான் வந்தது அதனால் வேகமாக தனக்கு கிடைக்கும் கேப்பில் அவளை சென்று பார்த்து இந்தப் பிரச்சினையை தீர்த்து விட வேண்டும் என்று கருதி அவன் அங்கு செல்ல அவன் சென்றான்...
அவனை கண்டதும் அவள் வீட்டாரும் சரி அவனுடைய வீட்டாரும் சரி கூடி இருக்க, அவனை கண்டதும் ராகவ் தான் முதலில் அவனுடைய சட்டையை பிடித்தான்...
"என்ன டா என்ன தைரியம் இருந்தால் எப்படி ஒரு காரியத்தை நீ செஞ்சிருப்ப" என சட்டையை பிடிக்க
"அப்படி என்ன பண்ணிட்டேன் அவளுக்கு என்னை பிடிச்சிருக்கு உன்னை பிடிக்கவில்லையாம்.. இப்போ உனக்கு பார்த்த பொண்ணுக்கு உன்னை பிடிக்கலையாம் என்னை தான் பிடிச்சிருக்காம் கேட்டியா நல்லா அடி செம்மையா இருக்கா டா என்னோட தும்பி அன்னைக்கே சொன்னேன் என்னிடம் விளையாடாதே என்று நீதான் பெருசா பேசின இப்போ என்ன ஆச்சுன்னு பார்த்தியா"என நக்கலாக கூற
அதை கேட்ட ராகவ் ,"அப்பா பார்த்தீர்களா நான் சொன்னேன் இல்ல என்னை அசிங்கப்படுத்தத்தான் அவன் இப்படி செஞ்சி இருக்கான்னு சொன்னேன்ல" என்று கூற அது யாருக்கு வலித்ததோ இல்லையோ சுபத்ராவுக்கு அந்த சொல் வலித்தது... அதற்குள் ஜெய மோகன் அவனின் சட்டையை பிடித்தார் அது அவனுக்கு கோபம் வந்தது...
ஏனெனில் இத்தனை நாட்கள் அதாவது விஷயம் அறிந்த நாள் முதல் ராணி புலம்ப தொடங்கி ராகவிடம் இந்த விஷயத்தை பற்றி பேசிய நாள் முதல் ராகவ் கூறியதை கேட்டு ராணி சுபத்ராவிடம் அவன் பழிவாங்கத்தான் உன்னை இப்படி நாசம் பண்ணி இருக்கான் அவன் நல்லவன் இல்லை என்று சொன்னேன்ல என்று கூறினார்...
ஆம் இந்த நொடி வரை அவள் கர்ப்பம் என அவர்கள் யாரிடமும் கூறவில்லை அவர்களுக்கு கூறவே அசிங்கமாக இருந்தது... இவனை நேரடியாக வைத்து தான் பேச வேண்டும் என எண்ணிக்கொண்டு இருந்தார்கள்... ஜெயமோகனுக்கும் சரி ராகவிற்கும் சரி அவளின் வாழ்க்கையில் இவன் விளையாடிவிட்டான் என்பது மட்டும்தான் தெரியும் வேறு எதுவும் தெரியாது இவனை வைத்து தான் பேச வேண்டும் என தர்மலிங்கம் அமைதியாக இருந்தார்...எல்லாமே ஒரே நாட்களில் நடந்து விட்டது என்று தான் கூற வேண்டும்...
அதைக் கேட்டு ஒருவேளை அப்படி இருக்குமோ என அவள் நம்பிக் கொண்டிருக்கும் சமயத்தில் அவன் நேரடியாக அவன் வாய் வழியாகவே," ஆமாம் டா உன்னை பழி வாங்கத்தான் அவ கூட இருந்தேன் போதுமா" என்ற ஒரு வார்த்தையை கோபத்தில் விட்டு விட்டான் அவன் என்னவோ கோபத்தில் தான் விட்டிருந்தான். ஆனால் அது அவளுடைய மனதில் ஆழமாக பதிந்து போனது...
அப்போதுதான் தர்மலிங்கம் வந்து அவனுடைய சட்டையை பிடித்து ,"உங்க குடும்ப பிரச்சனைக்கு என்னுடைய பொண்ணு தான் கிடைச்சாளா" என கேட்டார்...
அவனோ ,"அவளை எனக்கு பிடிச்சு இருக்கு அவளுக்கு என்னை பிடிச்சு இருக்கு வேற என்ன வேணும் உங்களுக்கு அவளுக்கு நான் இருக்கேன்" என்றான் அவன்
"அவ எனக்கு நிச்சயம் பண்ணின பொண்ணு டா பொறுக்கி" என்றான் ராகவ்
"டேய் வெண்ணை.. அவளுக்குத்தான் உன்னை பிடிக்கவில்லையே... அதுக்கு முன்னாடியே" என்றவன் நிறுத்தி அவளை பார்த்து "சொல்லவா" என்றான்... தர்மலிங்கம் முதல் ஜெயமோகன் வரை அனைவரும் அவனை சுற்றி வளைத்து விட்டனர் அதை கண்டு அவன் அதிரவெல்லாம் இல்லை... தவறை செய்திருந்தாலும் நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு நிற்காமல் எப்போதும் அஞ்சியதில்லை...
அவளோ அதிர அதை கண்டவன் ,"நீ ஏன் பயப்படுற நான் இருக்கேன் டி உன் கூட கடைசி வரைக்கும் நான் இருப்பேன்டி என்னைக்குமே நீ எனக்கு தான்.. யாருக்கும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்றவன் ,"என்ன தம்பி ரொம்ப அவமானமா இருந்தா உன் அப்பா பின்னாடி போய் நில்லு அவர் ஆதரவு கொடுப்பாரு" என ராகவ்வை பார்த்து கூறினான்...
அவனுடைய பேச்சை கேட்டதும் ,"அப்பா நான் சொன்னேன்ல பாத்தீங்களா என்னை அசிங்கப்படுத்த தான் இந்த வேலையை இவன் செய்திருக்கான்" என்று கூறவும் ஜெயமோகன் வந்து அவனை ஓங்கி அடிக்க வந்தார்... அதற்குள் கையை பிடித்த ஜெகதீஷ் ,"அடிக்கிற வேலையெல்லாம் வேண்டாம் உங்க மரியாதை நீங்களே எடுத்துக்காதீங்க" என்று கூறினான்...
அவன் ஏன் இப்படி இருக்கிறான் என அவனுக்குமே தெரியாது அவன் மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தாலும் அதை வெளிப்படுத்த அவனுக்கு தெரியவில்லை...
"இவ்வளவு பெரிய காரியத்தை செஞ்சிருக்க உன்னை அடிக்காமல் என்ன பண்ண சொல்ற" என்று ஜெயமோகன் கேட்கவும் ,"அதற்காக எனக்கு அவளை பிடிச்சிருக்கு அவளுக்கு என்னை பிடிச்சிருக்கு நாங்க ஒன்னா இருந்தோம் இதுல எனக்கு தப்பா தெரியல இதுல நீங்க யாரும் தலையிடறதில் அர்த்தம் இல்லை அப்புறம் மரியாதை இருக்காது" என்று அவன் கூறி கொண்டு இருக்கும் போதே தர்ம லிங்கம் நெஞ்சை பிடித்து கொண்டு சரிந்தார்...
பிறகு அவரை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவருடைய உயிர் பிரிய தன் செய்த செயலால் தான் அப்பா இறந்தார் என்றும் இவன் தன்னை உபயோகப்படுத்திக் கொண்டான் என்ற விஷயமும் அவளுடைய மனதில் ஆழ பதிந்து விட எல்லா காரியமும் முடிந்த பின் அவன் மீண்டும் வந்தான்... காரியம் முடியும் முடியும் அங்கு தான் இருந்தான்...அவனை யாரும் கண்டு கொள்ளவில்லை இருந்தாலும் அங்கு இருந்தான்...இறுக்கமாக இருந்தான் ஏன் இப்படி இருக்கிறான் என அவனுக்கு தெரியவில்லை...
எல்லாம் முடிந்த பின் அவளிடம்,"என்கூட வரியா" என கேட்டான் அவளோ இல்லை என கூறியவாறு ,"உன் முகத்தை பார்க்க கூட நான் விரும்பல இனி உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை இனி என வாழ்கையில் நீ நுழையாதே" என்று அவள் கூற,
ராணி கணவர் இறந்த அதிர்ச்சியில் இருந்தவருக்கு மகளை அவனிடம் கைபிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது ஏனெனில் மகளின் வாழ்க்கை இப்படி பாழாகி விடக்கூடாது அவன் தான் அப்படி அடித்து பேசுகிறானே இவளுக்கும் இதில் விருப்பம் தானே என கருதி இருவரையும் சேர்த்து வைக்க கருதி நடந்த உண்மையையும் அவளின் தற்போதைய நிலையையும் ஏதோ கூற வர அதை கண்ட அவளோ," அம்மா எதையாவது பேசினீங்க அவ்வளவுதான் என்னை உயிரோடு பார்க்க மாட்டீங்க" என்க அதை கேட்ட அவன் ஒரு நொடி நின்று அவளை ஆழ பார்த்தவன் ,"இது தான் உன் முடிவா" என்க அவளும் ஆமாம் என கூறி அவனை விட்டு பிரிந்தாள்...
அவனும்
என்ன நடந்தாலும் அவள் தன்னுடன் இருப்பாள் என நினைத்தவள் அவனை வேண்டாம் என கூறவும் அவனும் அவளை விட்டு சென்றான்...
