அத்தியாயம் 20
"உங்களுக்கு ஏன் இப்படி கோபம் வருது??? எதுக்காக இப்படி போட்டு அடிக்கறிங்க???"
அவளை பார்த்து முறைத்து ," எனக்கு சொந்தமான எதையும் யாரும் தொடுறது கூட எனக்கு பிடிக்காது" என அவளுடைய கண்ணை பார்த்து கூறினான்...
அதை கேட்டதும் அவள் அதிர அவனோ அவளை பார்த்து ,"லுக் நீ பஸ்ஸில் ஏறியதை பார்த்திட்டு தான் நான் பஸ்ஸில் ஏறினேன்... ஏறினதும் நல்லதா போச்சு" என தன்னுடைய கை முட்டியை முறுக்க
அவனுடைய உரிமையான பேச்சு அவளுக்கு பிடித்து இருந்தது.. அவனுள்ளே இருந்து வெளிப்பட்ட அந்த கோபம் பிடித்தது...
"என்ன முடிவு பண்ணி இருக்க அண்ட் இந்த சாரில ரொம்ப அழகா இருக்க பார்த்ததும் உன்னை தூக்கிட்டு போகணும்னு தோணுச்சு" என்று அவன் கூறினான்...
அதைக் கேட்டதும் அவளுக்கு மேலும் அதிர்ச்சி உண்டாக அவன் பேசிய விதத்திலும் அவன் அவளை ரசித்த விதத்திலும் அவளுக்கு நாணம் வர தலையை குனிந்து ,"நான் என்ன முடிவு செய்யணும்??" என்றாள்...
"நான் கேட்டது உன்னையும் என்னையும் பத்தி என்ன முடிவு செஞ்சிருக்க" என்றான்..
"அதைத்தான் நான் அன்னைக்கே உங்ககிட்ட சொல்லிட்டேனே"
"எனக்கு அந்த சப்ப கட்டான ஆன்சர் ஒன்னும் வேண்டாம் உனக்கு தோணுது சொல்லு உன் மனசுல நான் தான் இருக்கேன்னு எனக்கு நல்லா தெரியும் அப்புறம் ஏன் அதை ஒத்துக்க மாட்டேங்குற இதோ பார் உனக்கு நடந்த நிச்சயம் இதெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையே கிடையாது உனக்கு என்னை பிடிச்சிருக்கு எனக்கு உன்னை பிடிச்சிருக்கு வேற எதைப்பத்தியும் நீ யோசிக்க தேவையில்லை மத்தவங்கள பத்தி யோசிக்க ஆரம்பிச்சனா உன்னால உன்னோட வாழ்க்கையை வாழ முடியாது" என்று அவன் கூறினான்...
அதை கேட்ட அவளோ அவனை மேலும் அதிர்ச்சியோடு பார்க்க அதை பார்த்த அவனுக்கு அவள் எப்படியும் வீழ்ந்து விடுவாள் என தெரியும்...
அதனால் அவனோ ,"இப்போ சொல்லு ஒரே பதில் உனக்கு என்னை பிடிச்சு இருக்கா இல்லையா" என கூற அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை என்றாலும் அவள் மனம் அவள் பேச்சை கேட்கவில்லை...
தனக்காக உரிமை எடுத்துக் கொள்ளும் இவனை ரொம்ப பிடித்திருக்கிறது ஆனால் சொல்ல பயமாக இருக்க அவனோ விட்டால் இப்போதே அவளை தூக்கி கொண்டு போய் விடுவான் போல அந்த நிலையில் அவன் நின்று கொண்டிருந்தான்..
"எனக்கும் உங்களை பிடிச்சு இருக்கு ஆனால் என்னால என் அம்மா அப்பாவை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது அதனாலதான் அவங்க இஷ்டப்படி இந்த கல்யாணம் நடக்கட்டும்னு விட்டுட்டேன் அதனால தயவு செஞ்சு என்னை அப்படியே விட்டுடுங்க" என்று கூற
இந்த ஒரு வார்த்தை அவனுக்கு போதுமே அதனால் முதலில் சொன்ன அவளது வார்த்தையை மட்டும் எடுத்து கொண்டவன்," சோ உனக்கு என்னை பிடிச்சு இருக்கு ..எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு யாருக்காகவும் உன்னை விட்டு கொடுக்கக் கூடாதுன்னு தோணுது அதனாலதான் மறுபடியும் மறுபடியும் உன்னை தேடி வந்த நீ என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ற" என்றவன் அவளுடைய கையை பிடிக்க அவளோ அவளின் தவிப்பை கூற எண்ணி அவனிடம் இருந்து கையை விலக்கி கொண்டாள்...
"என்னாச்சு" என்றான்.... அவனால் அவளிடேயே ரொம்ப எல்லாம் கெஞ்சி கொண்டு இருக்க முடியாது ரொம்ப ஓவராக அவள் செய்தால் தூக்கிக்கொண்டு போய்விடுவான் அந்த அர்த்தத்தில் தான் அவன் நின்று கொண்டிருந்தான்... இது கூட அவனுக்கு எரிச்சலாக தான் இருந்தது ஆனால் இவளை அவனுக்கு பிடித்திருக்கிறது இவள் ராகவ்வுக்கு கிடைக்கக் கூடாது என்ற ஒரு நல்ல எண்ணத்தில் தான் இப்போது நின்று கொண்டிருக்கிறான்..
அவளோ ,"இல்லை எனக்கு ராகவ் கூட நிச்சயம் ஆயிடுச்சு" என்று பழைய டைப் ரிக்கார்டர் போல அதையே கூறிக் கொண்டிருக்க அவனுக்கு கடுப்பாகியது... அவனோ ,"இதையே நீ எத்தனை தடவை சொல்ல போற சரி உன்னை விட்டு கொடுக்க கூடாதுன்னு சொல்லி தேடி வந்தேன் உனக்கு அப்படி ஒரு கனெக்ஷன் என்கூட இல்லைன்னு சொல்லும் போது உன்னை கம்பெல் பண்றதில் அர்த்தமில்லை. நான் தான் தேவையில்லாம ஏதேதோ யோசிச்சிட்டேன் போல சரி உன்னோட இஷ்டம் இனி நான் தேடி வருவேன்னு எதிர்பார்க்காத ...இன்னைக்கு எனக்கு கொஞ்சம் சந்தோஷமான நாள் யார்கிட்ட பகிர்ந்து கொள்வதுன்னு தெரியாமல் இருந்தேன் உன்னை பார்த்ததும் ஏனோ கூட இருக்கணும்னு தோணுச்சு...உனக்கு தான் என் வீட்டை பத்தி தெரியும் ...யாருக்கும் என்னை வேண்டாம் கடைசியில் உனக்கும் என்னை வேண்டாம் போல... இனி பேசுறதில் அர்த்தம் இல்லை" என்று அவன் மனதில் இருக்கும் அவள் மீதான நேசத்தையும் அவள் மடிய மாட்டேன் என்கிறாலே என்ற கடுப்பிலும் அவன் கூறிவிட்டு அவன் செல்ல போக அவளுக்கு மேலும் வலித்தது.. அவனுடைய கடைசி வார்த்தைகளில் அந்த முட்டாள் பெண் விழுந்தாள்...
அவனது கையை பிடித்துக் கொண்டாள்...அதை அவன் பயன்படுத்தி கொண்டான் அவன் என்ன என்பது போல திரும்பி பார்க்க ,"எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு நீ என்ன பண்றேன்னு கூட எனக்கு தெரியாது ஆனால் என்னன்னு தெரியல நீ என்ன ரொம்ப அட்ராக்ட் பண்ற நியாயமா பாத்தா உன் மேல எனக்கு கோபம் வந்து இருக்கணும் ஆனா வரல ஏன்னு தெரியல உன்ன விட்டுக் கொடுக்க முடியல ஆனால் நான் பண்றது தப்புன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியுது" என கூற
அவனோ அவள் மடிந்து விட்டாள் என்பதில் உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் ,"ஏய் ஸ்டாப் இட் கெழவி மாதிரி பேசிட்டு இருக்க கொஞ்சமாவது இந்த காலத்துல இருக்கிற மாதிரி யோசி உனக்கு என்ன பிடிச்சிருக்கா இல்லையா??" என்க
அவன் கேட்ட விதத்தில் ,"பிடிச்சிருக்கு ...உன்னை தான் பிடிச்சிருக்கு ஏன் எனக்கும் சொல்ல தெரியல" என்க
"அப்போ கிளம்பு" என்றான்...
அவன் எங்கே அழைக்கிறான் என தெரியவில்லை ஆட்டோ பிடித்து அவளை அழைத்து சென்றவன் நேராக அவன் கார் இருக்கும் திசைக்கு சென்று அங்கிருந்து காரில் அவளை ஏற்றி சென்றான்..
அவளோ பயத்தில் இருக்க," எதுக்காக இப்படி பயப்படுற என்று எனக்கு தெரியல.. உனக்கு பிடிச்ச வாழ்க்கை வாழறது இல்ல என்ன தப்பு இப்ப என்ன நடந்து போச்சு நிச்சயம் தானே நடந்திருக்கு வேற ஒன்னும் நடக்கலையே உன்னோட வீட்டில் போய் சொல்லு எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை அவ்வளவுதான் சிம்பிள் இதுக்கு போய் ஏன் ஓவர் ரியாக்ட் பண்ணனும்??" என்றான்..
அவள் பதில் ஏதும் கூறவில்லை ஆனால் அவனுடன் இருக்கும் பொழுது ஒரு விதமான தைரியத்தை அவள் உணர்ந்தாள் பேசுவதற்கெல்லாம் நன்றாக இருக்கிறது ஆனால் செயல்முறை இதெல்லாம் வருமா என தெரியவில்லை ஆனால் அவனுடன் இருக்கும் ஒவ்வொரு மணித்துளிகளையும் அவள் ரசித்தாள்...
அவன் எங்கு அழைத்து செல்கிறான் என தெரியாது ஆனால் அவனுடன் நெடு தூரம் காரில் வந்து விட்டாள் அது மட்டும் தெரியும்...
அவளின் குழம்பிய மனநிலையை அவன் தெளிவாக உபயோகப்படுத்தி கொள்ள நினைக்கிறான்...
கிட்டதட்ட கார் சிட்டியை கடந்து விட்டது...ஒரு கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத இடம் எங்கு பார்த்தாலும் பசுமையாக இருந்தது...இப்படி ஒரு இடம் இருக்கிறதா என ஆச்சரியப்படும் அளவுக்கு அந்த இடம் வெகு அழகாக இருந்தது..
அது ஒரு அந்தி மாலை நேரம் அவன் அந்த இடத்தை அடையவே மாலை ஆகி இருந்தது...வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது...அவளுக்கு ஏன் இவ்வளவு தூரம் அழைத்து வந்து இருக்கிறான் என தெரியாது...
அவன் மனம் முழுவதும் தன் தம்பிக்கு இவளை தாரை வார்க்க கூடாது என்று மட்டுமே இருந்தது...அவளை பிடித்து இருக்கிறது..இனி அவன் நினைப்பது போல அந்த படம் சரியாகிவிட்டால் பிஸி ஆகி விடுவான் பின் அவனால் எதை பற்றியும் யோசிக்க முடியாது...அதற்குள் இவளை மடக்க வேண்டும் அவ்வளவுதான் அவனுடைய நல்ல எண்ணமாக இருந்தது...
அவளை விட கூடாது என்ற எண்ணமும் இருக்கிறது அது வேறு விசயம்...அவள் மீது உள்ள அதீத ஈர்ப்பின் தாக்கத்தில் அவளுடன் ஒரு பயணம் செல்ல அவளை அழைத்து வந்து இருக்கிறான்...அவ்வளவே...!
மேலும் அவனுக்கும் அந்த ப்ரொடியூசரிடம் கதை சொல்லி வந்த பிறகு ஏனோ தெரியவில்லை ஒரு நேர்மறையான எண்ணங்கள் தான் மனதுக்குள் ஓடிக் கொண்டு இருந்தன கூடவே இவளும் வேறு என்ன வேண்டும் அவனுக்கு????
இலேசாக மழை தூறுவது போல இருந்தது...எங்கே போறோம் என தெரியாமல் இவனோடு பயணம் செய்கிறோம் என கருதி," எங்கே போறோம்" என்க
"தெரியல இப்போதைக்கு எனக்கு உன் கூட ஒரு டிரைவ் போகணும்னு தோணுச்சு போறோம்" என்க
"மழை வர மாதிரி இருக்கு" என்றாள் இலேசான பதட்டத்தோடு
"வரட்டும்" என்க
"எனக்கு வீட்டுக்கு போகணும் லேட் ஆச்சு" என்க
"ஏன் என்னை பார்த்தா பயமா"
"இல்லை" என்றவள் ,"ஏசி ஆஃப் பண்றீங்களா கொஞ்சம் குளிரா இருக்கு "என்று தன் புடவை தலைப்பை எடுத்து அவளை போர்த்திக் கொள்ள அவனுடைய பார்வை அவளின் அங்கங்களில் அத்து மீற துவங்கியது...
அவளின் அந்த கருப்பு நிற புடவையில் தெரியும் எலுமிச்சை நிற இடை அவனை சுண்டி இழுக்க அய்யய்யோ இவகிட்ட பேசத்தானே கூட்டிட்டு வந்தேன்.. இவ வேற இப்படி மார்க்கமா இருக்காளே என் கை வேற சொன்ன பேச்சு கேட்காதே இப்போ என்ன பண்ண போற போறேன் என மனதுக்குள் எண்ணினான்...
அவளோ அவனின் உணர்வுகளை பற்றி தெரியாமல் என்ன என்பது போல பார்க்க அவனோ,
"அப்புறம் என்ன???" என அவளை மேலும் கீழும் பார்த்து அவருடைய நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டு கேட்டான்... அவள் அருகே இருப்பது அவனுக்கு மூச்சு முட்டியது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்ற நிலையில் தான் அவனுடைய பார்வை அவள் மீது படிந்தது...
"அம்மா அப்பா வந்துடுவாங்க என்னை தேடுவாங்க" என்றாள் மழை வருவதை பார்த்து அவனோ அவளை ஒரு பார்வை பார்த்தான்.. அதற்கு மேல் அவனுக்கு எதை பற்றியும் கவலை இல்லை...
அவனோ காரை ஒரு மரத்தின் இடையே நிறுத்தினான்... அதற்குள் மழை கொட்டியது.. அவள் முகம் பீதியில் உறைந்து இருந்தது...
"என்ன பயம் உனக்கு???" என அவளிடம் பேச்சு கொடுத்தான்...
"தெரியல என்னமோ நான் செய்யறது தப்பு மாதிரி இருக்கு" என்க
"எனக்கு அப்படி ஒன்னும் தோணல உனக்கு பிடிச்ச பையன் கூட ஒரு டிரைவ் வந்து இருக்க அவ்ளோ தானே??? இதுக்கு போய் ஏன் இத்தனை டென்ஷன்" என்று அவன் கேட்டான்.. ஆனால் அவன் என்னதான் கேள்வி கேட்டாலும் அவளுடைய இருதயம் படபடத்துக் கொண்டு இருந்தது...
மழையோ பேய் மாரியாக பெய்ய துவங்கியது... "இல்ல எனக்கும் உங்க தம்பிக்கும் நிச்சயம் ஆயிடுச்சு" என அவள் மீண்டும் ஆரம்பிக்க
"அதுக்கு என்ன இப்போ அதுக்கு முன்னாடியே எனக்கு உன்னை பிடிச்சு போச்சு... உனக்கு தான் அவனை பிடிக்கலையே அப்புறம் என்ன???" என்றான் அவன்
"ஊர்ல என்ன பேசுவாங்க" என்க
"என்ன பேசினா எனக்கு என்ன வாய் இருக்கிறவன் பேசுவான் நீயும் பேசு சீ எனக்கு நீ வேணும் அவ்ளோ தான் உனக்கு அப்படி தோணலையா??" என்றான் அவன் நிலைமை அவனுக்கு தானே தெரியும்!!!
அவனது கோபத்தை பார்த்த அவளோ ,"இதையே நீங்க எத்தனை தடவை தான் கேட்பீங்க நானே கில்டியா ஃபீல் பண்ணிட்டு இருக்கேன் நான் சாமிகிட்ட பூ போட்ட எல்லாம் கேட்டு பார்த்தேன் தெரியுமா அதுக்கு தான் இன்னிக்கு நான் கோவிலுக்கு போனேன்" என்க
அதைக் கேட்ட அவனும் தலையில் கை வைத்து அடித்து தன் மூச்சை இழுத்து விட்டவன் கண்ணாடி வழியாக வெளியே பார்த்து விட்டு அவளை ஒரு பார்வை பார்த்து ,"சாமி என்ன சொல்லுச்சு" என்க
" எனக்கு உங்களுக்கும் தான் பொருத்தம் என்று சொல்லுச்சு" என்று அவள் கூற அதைக் கேட்டு அவனும் ,"அதுதான் உன் சாமியே சொல்லிடுச்சு இல்ல அப்புறம் என்ன" என்றவன் அவளது விரல்களை பிடித்தான். அதில் அவன் அணிவித்த மோதிரம் இருக்க அதை மெல்ல கழட்டி அவள் அதிரும் முன்னே காரின் டாஸ் போர்டில் போட்டான்...
"இது எனக்கு ரொம்ப டிஸ்டர்ப் பண்ணது இப்ப சொல்லு நீ ஃப்ரீயா இருக்க இந்த மோதிரம் தான் உன்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுச்சு" என அவன் கூற
அதை கேட்ட அவளோ அதிர்ந்து," என்ன காரியம் பண்றீங்க" என கேட்கும் போதே அவனோ அவள் இடையை பிடித்து தன்னருகே இழுத்தவன் தன்னுடைய ஒரு கையால் அவளின் இடையை பிடித்து தூக்கியவன் அடுத்த நொடி அவளை அவனின் மடியில் அமர வைத்தான்...அவ்வளவு தான் அவனுடைய பொறுமை...
அவளோ அதிர அவனோ அவளின் செவிக்கு அருகே குனிந்து," வெளியே மழை உள்ளே நீயும் நானும் இந்த செகண்ட்டை நான் மிஸ் பண்ண விரும்பல.. நான் உன்னை பார்த்ததுல இருந்து இப்ப வரைக்கும் என்னை நான் கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன் இனி சத்தியமா என்னால முடியாது" என்றான்..
"இது தப்பு நமக்கு கல்யாணம் கூட ஆகலை" என அவள் கூற
"ஒரு தாலி தான் உன்னையும் என்னையும் இணைக்க போகுதா ஒரு கயிறு தான் நம்ம உறவை பலப்படுத்தும் அப்படின்னு நீ நெனைக்கறியா???" என கூறிக்கொண்டே அவளின் கழுத்து மடலை அவன் ருசி பார்த்தான்...
அவனின் செய்கை திக் என்று இருந்தது.."இல்லைங்க இது தப்பு நான் வேணா இந்த கல்யாணம் பிடிக்கலைன்னு சொல்லிடுறேன் நீங்க தயவு செஞ்சு வீட்ல வந்து பேசுங்க நாம கல்யாணம் பண்ணிட்டு மத்ததெல்லாம் வச்சுக்கலாம்" என்று அவள் கூற அதை அவன் கேட்கும் மனநிலையில் இல்லை..
"சுபி" என்றான் ஹஸ்கி குரலில் அவளின் செவி முதல் உடல் வரை சிலிர்க்க என்னால முடியாது ,"சுபி எனக்கு நீ வேணும் ஐ நீட் யூ இப்போவே என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியல உன்கிட்ட அத்து மீறிட்டு தான் இருக்கேன் உன்னை பார்த்ததிலிருந்து இதை மட்டும் தான் நான் செய்கிறேன் இனியும் அதைத்தான் செய்யப் போறேன்" என்றான்...
அவனால் உண்மையில் அவளுடைய அருகாமையை ரசிக்காமல் இருக்க முடியவில்லை...அவனுடைய உணர்வுகள் எல்லாம் கொந்தளிக்க துவங்கியது...
அவன் கைகள் அத்து மீற அவனால் அவள் அணிந்து இருந்த கருப்பு நிற சேலை விலக அவள் அங்கங்கள் அவனுக்கு விருந்தாக அவன் அமர்ந்து இருந்த இருக்கையை அப்படியே பின்னால் சாய்த்தவன் நொடி பொழுதில் இருக்கையை படுக்கை ஆக்கினான் அவனின் கைகளின் ஜாலங்களை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை...
அவன் விரல்களும் உடலும் அவள் மீது அத்து மீற அவளுக்கு உணர்வுகள் கொதித்து எழுந்து கொள்ள வயதின் தாக்கத்திலும் அவன் செய்யும் வேட்கையின் தாக்கத்திலும் அவள் கொஞ்சம் கொஞ்சமாக அவனோடு கலக்கத் துவங்க அவனும் கலந்து போனான்...
அவனால் அவளை துளியும் பிரியவே முடியவில்லை...
ஆனால் பெண்ணவளின் பயத்தை கண்டு அவளை பூவாய் நுகர்ந்தவன் அவளை தன்னவள் ஆக்கி கொண்டான்...இறுதியில் அவளுக்கு இதழ் முத்தம் கொடுத்து அவளை தன்னில் இருந்து பிரிக்கும் நேரம் மழையும் சோர்ந்து இருந்தது...
எல்லாம் முடிந்து விட்டது...இருவரின் ஆசையும் அங்கு தீர்ந்தது...எல்லாம் முடிந்த பின் அவன் சிறு மயக்கத்தில் இருக்க அவளோ அவளின் உடையை அணிந்தபடி அழ துவங்கி விட்டாள்...
"ஐயோ நான் தப்பு பண்ணிட்டேன்" என துவங்க அவனோ எரிச்சல் அடைய துவங்கினான்...
"எதுக்கு டி இப்போ கத்திட்டு இருக்க" என்றான் அவன்..
"நான் தப்பு பண்ணிட்டேன் நான் தப்பு பண்ணிட்டேன் கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி செஞ்சுருக்கவே கூடாது அதை விட நான் மோசமான விஷயத்தை பண்ணிட்டேன் தம்பி கூட நிச்சயம் பண்ணிட்டு அண்ணன் கூட செய்யக்கூடாததை செய்துவிட்டேன்.." என அழுதாள்..
அதை கண்ட அவனோ கடுப்பாகி,"இப்போ என்ன டி உன் பிரச்சனை??" என்க
"நீங்களும் நானும் கல்யாணம் பண்ணிக்கல அதுக்குள்ள" என அவள் தேம்பி அழ அவனோ அவள் முகத்தை பார்த்து கொண்டே அவனுடைய கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை அவிழ்த்து," என்னை விட ஒரு கயிறோ இல்லை செயினோதான் உன்னை சமாதானப்படுத்தும் அப்படின்னா இதோ இதை போடுறேன் இதை தாலிய நினைச்சுக்கோ மஞ்ச கலர்ல கயிறு இல்ல மஞ்ச கலர்ல இந்த செயின் தான் இருக்கு சாரி இது தங்க கலரா ரெண்டும் ஒன்னு தான்" என்று அவன் கூறினான்..
அதை கேட்ட பின்னும் அவனின் தீடிர் செய்கையால் அவளின் அழுகை நிற்க," இது முதலில் தெரிஞ்சிருந்தா இந்த செயினை போட்டுட்டு பாக்கி வேலையை பார்த்திருப்பேன்" என்று கூறினான்...
அதை கேட்டு அவள் சிரிக்க அவனோ," இதோ பார் உனக்கும் எனக்கும் பிடிச்சிருக்கு இது நமக்கான வாழ்க்கை இதில் எல்லோரோட கேள்விக்கும் பதிலுக்கும் பதில் அளித்து இருக்க முடியாது... புரியுதா???? " என்றான்...
அவளோ தலையாட்டவ்நாளைக்கு நான் வெளியூர் போறேன் அதுக்கு முன்னாடி உன்னை பார்க்க தான் வந்தேன்..அதுக்குள்ள என்ன என்னமோ நடந்து போச்சு..
சரி நான் விஷயத்துக்கு வரேன் இனி இந்த கல்யாணம் உனக்கு வேணாம்... நான் வெளியூர் போனா அடுத்த இரண்டு மாசம் கொஞ்சம் பிஸியா இருப்பேன் வந்து என்ன விசயம் அப்படின்னு சொல்றேன்...அதை கேட்டா நான் நினைச்சது நடந்தா நீ ரொம்ப சந்தோஷப்படுவ அதுவரைக்கும் காத்திரு" என்றான்...
அவளோ அவன் அருகே இருக்கும் தைரியத்தில் அனைத்துக்கும் தலையாட்டிக் கொண்டே இருந்தாள்...
