அத்தியாயம் 2
டீவியில் அவனுடைய இன்டர்வியூவை காலையிலேயே பார்த்து கொண்டிருந்தாள் சுபத்ரா... 25 வயது பெண்ணவள் ...பார்க்க கோதுமை நிறத்தில் அழகாக இருப்பாள்...மென்மையான பட்டாம்பூச்சியாக இருந்தவள் காலம் அவளை அழுத்தகாரியாக ஆக்கி இருக்கிறது...ஆம் அவள் கண்ணில் ஜெகதீஷ் சிரித்து பேசுவதை பார்க்கும் போது ஆத்திரம் தான் வந்தது...
இவனால் எப்படி முடிகிறது இவ்வளவு இயல்பாக எதுவுமே நடக்காதது போல அவனுடைய வாழ்க்கையை பார்க்க அவனால் எப்படி முடிகிறது??? அவளைப் பொறுத்தவரை உலகத்திலேயே கேடுகெட்ட ஒருத்தன் என்றால் இந்த ஜெகதீஷ் தான் என்று அவள் உரக்க கூறுவாள்... அந்த அளவுக்கு அவளுடைய மனதையும் உடலையும் கெடுத்தவன் இவன் தான்...
ஆனால் இன்று எதுவுமே தெரியாதது போல இருக்கிறான் இந்தியாவே கொண்டாடும் ஒரு நபராக வளர்ந்து இருக்கிறான் இவளடக்கம் அவனை திட்ட வேண்டும் என்றால் அண்ணாந்து பார்த்து தான் திட்ட வேண்டும் போல அந்த அளவுக்கு அவன் உயரத்தில் வளர்ந்து நிற்கிறான்...
அவனுடைய வளர்ச்சி அவளுக்கு மிகைப்பை ஏற்படுத்தினாலும் அவனின் குணத்தை அறிந்த அவளுக்கு அவனை காரி உமிழ வேண்டும் என்று தான் தோன்றியது....
நேற்று அவன் கொடுத்த இன்டர்வியூ காலை வரை ரிப்பீட் மூடில் கேட்டுக்கொண்டு இருக்கிறாள்... அவனுடைய அங்க அசைவுகள் எல்லாம் ஒரு துளி விடாமல் பார்த்து விட்டாள்..முன்பு எப்படி இருந்தானோ அப்படியே இருக்கிறான்!!! ஒரு மாற்றமும் இல்லை...அவனுடைய உடலை பார்க்கும் போது சிக்ஸ் பேக் வைத்திருக்க வாய்ப்பு உண்டு என்பது வரை அலசி ஆராய்ந்து விட்டாள் சுபத்ரா!!!
ஏதோ ஒரு திசையில் எங்கு இருந்தாலும் தன்னை ஆட்டி வைப்பதில் அவன் வல்லவன் தான் என்பதை நொடிக்கு ஒரு தடவை அவள் உணர்ந்து கொண்டிருந்த சமயம் அவளுக்கே அவளை பிடிக்கவில்லை... அவன் தான் அவளை ஏமாற்றி இந்த நிலையில் ஆக்கிவிட்டு சென்று விட்டானே பிறகு அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதில் என்ன லாபம் என அவளுடைய மனசாட்சி அவளையே கேள்வி எழுப்பியது... இப்படியே அமர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தால் பைத்தியம் பிடித்து விடும் என கருதி அவளுடைய அறையில் இருந்து மெல்ல வெளியேறி தன் பிள்ளைகளை பார்க்க சென்றாள் சுபத்ரா...
"ஹே பட்டையை கிளப்பு..மீசையை முறுக்கு" என நேற்று திரைக்கு வந்து ஹிட்டான படத்தின் பாடல்களை முணுமுணுத்த படி இடுப்பில் துண்டை கட்டியபடி வந்து கொண்டு இருந்தான் சஞ்சய்...சுபத்ராவின் மைந்தன் வயதோ ஐந்து...அவனை குளிப்பாட்டிய அயர்வில் வந்து கட்டிலில் அமர்ந்தார் ராணி...
"அம்மா நீங்க தலை வாரி விடுறீங்களா இல்லை பாட்டி கிட்ட வாரிக்கிட்டுமா??? " என சஞ்சு என்ற சஞ்சனா.. சஞ்சயின் இரட்டை அவள்...
"நானெல்லாம் வாரி விட மாட்டேன் பா நீ உன் அம்மாகிட்டேயே போ இவனை குளிப்பாட்டவே எனக்கு டயர்ட் ஆகிடுச்சு..இந்த பையன் படுத்தி எடுக்கிறான்" என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அமர்ந்து இருந்தார் ராணி...
"பாட்டி இதுக்கே இப்படி சலிச்சு கிட்ட எப்படி இன்னும் என்ன எல்லாம் இருக்கு எனக்கு யூனிபார்ம் போட்டு விடணும் என்னுடைய புக்ஸ் எல்லாம் பேக் பண்ணி வைக்கணும், நான் எழுதாத ஹோம் ஒர்க் உட்கார்ந்து நீங்க எழுதணும், என்ன சாப்பிட வைக்கணும், எனக்கு ஷூ மாட்டி தரணும் கடைசியாக என்னை ஸ்கூல்ல டிராப் பண்ணனும் இத்தனை வேலையும் உங்களுக்கு இருக்கு இதுக்கே இப்படி டயர்ட் ஆகிட்டு பேசிட்டு இருக்கீங்க" என ஐந்து வயதான சஞ்சய் கூற
அவனுடைய இரட்டை சஞ்சனாவோ கிலுக்கி சிரித்து ,"பாட்டி அப்படியே என்னோட வேலையும்" என்க ,"போங்கடா போக்கிரி பசங்களா" என கூறும் போதே கண்களை இலேசாக துடைத்தபடி குழந்தைகளின் அறைக்குள் நுழைந்தாள் சுபத்ரா....
அவள் முகம் கருகடுவென இருக்க ,"டேய் வா டா படுத்தாத பாட்டி பாவம்ல வந்து டிரஸ் போட்டுக்கோ டா என்னால முடியல டா" என ராணி கூற அவனோ துண்டை அவிழ்த்தபடி ஜெகதீஷ் இயக்கிய படத்தின் பாடலை பாடி ஆடி கொண்டு இருக்க அதை பார்த்த அவளுக்கு ,"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை டேய் எத்தனை தடவை சொல்றது இப்படி டான்ஸ் ஆடாதே என்று போய் டிரஸ் எடுத்து போடு போ" என்று கடுப்பாக கூறினாள்... இவன் ஒவ்வொரு தடவையும் துண்டோடு இப்படி நிற்கும் பொழுது எல்லாம் அவளுக்கு அவனுடைய ஞாபகம் வந்து போகும்... முதன் முறையாக அவன் தீண்டியது அவளுக்கு ஞாபகம் வரும்.... இப்போதும் ஞாபகத்துக்கு வந்தது...அது அவளுக்கு எரிச்சலை கொடுத்தது...
அதைக் கேட்ட சஞ்சய் ,"என்னம்மா காலையிலேயே கோபமா இருக்கீங்க" என்ன கேட்டுக்கொண்டு தன் பாட்டியிடம் ஓட ,"உன் வேலை என்னவோ அதை பாரு சஞ்சய் ஸ்கூலுக்கு போக டைம் ஆயிடுச்சு" என மேலும் கடுப்பாக அவள் பேச,
சஞ்சனாவின் தலையை வாரி கொடுத்துக் கொண்டிருந்தவள்," அம்மா இந்த வீக் சத்யதேவ் படத்துக்கு போகலாமா சூப்பரா இருக்குனு சொல்றாங்க" என சஞ்சனா கூற
"வேண்டாம் நாம பார்க் போகலாம்" என அவள் கூறினாள்...
"அம்மா உங்க ஃபேவரிட் ஆக்டர் சத்யதேவ் தானே" என சஞ்சய் கூற அதை கேட்ட அவளோ ,"சத்யதேவ் எனக்கு பிடிச்ச ஆக்டர் தான் ஆனால் அந்த படம் எடுத்த டைரக்டரை எனக்கு சுத்தமா பிடிக்காது படமா எடுத்து வச்சிருக்கான் கிறுக்கு பையன் ஒரே வெட்டு, குத்து, ரத்தம் இதுதான் படம் முழுசும் இருக்கு வேற ஏதாவது இருக்கா??? கிட்ஸ்க்கு ஏத்த படம் கிடையாது சோ நீங்க கண்டிப்பா இந்த படத்தை பார்க்க போறது இல்லை" என்று ஆத்திரத்தோடு கூறினாள்...
அவள் கண்ணில் தெரியும் ஆத்திரத்திற்கான விடை ராணிக்கு மட்டுமே தெரியும் என்பதால் ராணி வாயே திறக்கவில்லை எங்கேயாவது வாயை திறக்க போய் காலையிலேயே அவள் வாயில் விழும் வார்த்தைகளை எல்லாம் கேட்க அவருக்கு விருப்பம் இல்லை அதனால் அவர் அமைதியாக இருந்து கொண்டார்...
"அம்மா பூமர் ஆண்டி மாதிரி பேசாதீங்க அம்மா... இப்பல்லாம் இந்த மாதிரி படம் தான் சூப்பரா இருக்கும்... அதுவும் ஜெகதீஷ் தான் அந்த சினிமாவோட டைரக்டர் அவரோட படம் எல்லாம் சூப்பரா இருக்கும்னு எங்க ஸ்கூல் பி.டி சார் சொன்னாரு தெரியுமா??? அவர் நேத்தே பாத்துட்டாராம் என்னோட பிரண்ட் நிதிஷ் இருக்கான்ல அவனும் நேத்து பார்க்க போறேன்னு சொன்னான்" என்று கூறவும் ஐந்து வயது மகன் பேசிய பேச்சை கேட்டதும் ஆத்திரம் வந்தது...
அவளை பூமர் ஆண்டி என்று அவளை கூறியதாளா இல்லை அவனுடைய படத்தை அவன் நன்றாக இருக்கிறது என்று கூறியதாலா எனத் தெரியவில்லை இல்லை அவன் வயதுக்கு மீறிய வார்த்தைகளை விட்டதால் தானா என தெரியவில்லை.. சற்றென்று தன் மகனருகே வேகமாக வந்தவள் ஓங்கி சப்பென்று அவனுடைய கன்னத்தில் அறைந்தாள்...பிஞ்சு கன்னம் அப்படியே இவள் அடிக்கவும் சிவந்து விட்டது...
குழந்தை சஞ்சயும் இதை எதிர்பார்க்கவில்லை... சஞ்சய் பொதுவாகவே வயதிற்கு மீறிய துடுக்குத்தனமும் குறும்பும் நிறைந்த சுற்றி பையன் தான் அதிகமாக பேசுவான்...அதிகமாக சேட்டை செய்வான்..கற்பூர புத்தி என்று கூறுவார்களே அதுபோல எதையாவது ஒன்றை பார்த்து விட்டால் போதும் அதேபோல அவன் முயற்சி செய்வான் சஞ்சனா அந்த வயதிற்கு ஏற்ப உள்ள குழந்தை இவன் அளவு குறும்பு இல்லை என்றாலும் சஞ்சயோடு சேர்ந்துவிட்டால் அவளுடைய குறும்பும் தனித்துவமாக வெளியே வரும்...
அப்படி இருக்க, அவன் பேசவும் சுபத்ராவுக்கு கோபம் வந்துவிட்டது உடனே அடித்து விட இவள் கை பட்டதும் அந்த பிஞ்சு முகம் வீங்கி அவள் அடித்த வேகத்தில் அவன் அழ துவங்கி விட்டான்... சஞ்சனா முகம் தாய் செய்த காரியத்தால் முகத்தில் பயத்தோடு தன் பாட்டி அருகே ஓடிச் சென்று நின்று கொண்டாள்...
உடனே ராணி தான் பட்டென்று சஞ்சயை வாரி அணைத்து கொண்டவர் ,"உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு பச்ச பிள்ளையை போய் இப்படி அடிக்கிற???" என கேட்டார்...
"அவன் என்ன பேச்சு பேசினான்னு கேட்டீங்களா வயசு அஞ்சு வயசு தான் ஆகுது அதுக்குள்ள பூமர் ஆண்டின்னு சொல்றான் இவனுக்கு அந்த வார்த்தை கூட முழுசா வாயில சரியா வரல அதுக்குள்ள இந்த பேச்சு எப்படி கத்துக்கிட்டான்???" என்று கூறவும்
"நீ வாய மூடு நீ செய்யாதது ஒன்னும் உன்னோட பசங்க செய்திடல நீ எதுக்காக இப்போ கோபப்பட்டு அவனை அடிச்சேன்னு எனக்கு காரணம் தெரியும் என்னை பேச வைக்காத புரியுதா அவன் பேசிட்டானாம் இவ அடிச்சிட்டாளாம் இவனை கை வைக்கிற உரிமை எல்லாம் உனக்கு கிடையாது... பசங்க மேல கையை வெச்ச சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன் எல்லாம் பெத்தவங்க புத்தி தானே பசங்களுக்கு வரும்" என்று இடையே தன் மகளை அவர் காயவும் தன் அம்மா பேசிய பேச்சில் முணுக்கென்று அவளுக்கும் கண்ணீர் வந்தது... அம்மா தன்னைத்தான் குத்தி காட்டுகிறார் என அவளுக்கு தெளிவாக புரிந்தது இருந்தும் அவள் எதுவும் பேசவில்லை...
தன் தாய் அறியாமல் அதை மறைத்து வைத்து கொண்டவள்," நான் அதுக்காக ஒன்னும் அவனை அடிக்கல அவன் பேசினது மட்டும் சரியா??" என அவள் தன் அழுகையை மறைத்த படி அவளுடைய அம்மாவிடம் கேட்கவும் ,"அதுக்கு இப்படி தான் அடிப்பாங்களா அவன் குழந்தை பல வார்த்தைகளை நம்ம பேசும்போது தான் அவங்க கத்துப்பாங்க அவங்க காதுல கேட்கிறது தான் அவங்க வாயில வருது புரியுதா???" என கூறியவர் தன் பாட்டியை கட்டி கொண்டு அழுது கொண்டிருக்கும் சஞ்சய் முகத்தை தன் கைகளில் ஏந்தி அவன் முகத்தில் வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரை துடைத்த ராணி," கண்ணா இப்படி எல்லாம் அம்மாவை மரியாதை இல்லாமல் பேசக்கூடாது" என்று கூற ,
"சரவணன் அங்கிள் தான் இப்படி சொல்லுவாங்க அதை பார்த்து தான் பாட்டி நான் பேசினேன் என்று" கூறவும் சுபத்ராவை ஒரு பார்வை பார்த்த ராணி பார்த்தியா என்பது போல முறைக்க அவளோ வேறு எங்கோ பார்வையை மாற்றினாள்..
"சரி இனிமேல் அப்படி பேச கூடாது என்ன??? அம்மாவை எதிர்த்து பேச கூடாது" என்று கூற சரி பாட்டி என சஞ்சய் கூறினான்... பிறகு அவனை தயார்படுத்தி விட அவனோ தன் அம்மா சுபத்ராவை கண்டு கொள்ளவில்லை...அது அவளுக்கு ரணத்தை கொடுத்தது...
அவனுடைய அம்மா அடித்ததில் அவள் மீது கோபமாக சுற்றி கொண்டிருந்தான் சஞ்சய்... மூக்கின் மீது கோபம் அதுவும் அவனை போல என எண்ணி கொண்டாள்... அவனும் இப்படித்தான் அவளை பின்னாலேயே அழகிய வைத்தான் இதோ மகனும் இப்படித்தான் பின்னாலேயே அலைய வைக்கிறான் என எண்ணி கொண்டே அவள் அவனுக்கு ஏதாவது செய்ய போனால் கூட கையை தட்டி விட்டு கொண்டிருந்தான் சஞ்சய்..
அது அவளுக்கு வருத்தத்தை கொடுக்க காரில் ஏறி போகும் போது கூட முகத்தை தூக்கி வைத்து கொள்ள சஞ்சனா தான் வள வள என பேசி கொண்டே வர ஸ்கூல் வரவும் காரில் இருந்து அவன் இறங்க சஞ்சனா எப்போதும் போல தன் அம்மாவிற்கு முத்தம் கொடுக்க ஆனால் சஞ்சய் கண்டு கொள்ளவில்லை...
அப்போதும் முகத்தை தூக்கி வைத்து கொண்டு இருந்தான்..." சஞ்சய் எதுக்கு இப்படி இருக்க அம்மாவுக்கு கிஸ் பண்ணு நாம போகலாம் " என்று அவள் விரட்ட ,"நான் எல்லாம் கிஸ் பண்ண மாட்டேன் சஞ்சு என்னைத்தான் அடிச்சாங்கல்ல" என்று சஞ்சய் கூறவும்," நீ பேசுனது தப்பு தானே பேட் வேர்ட் பேசின அதுக்குத்தானே அம்மா அடிச்சா" என்று கூற ,
"நான் பேட் வேர்ட் பேசல பாட்டி சொன்னது மாதிரி நான் காதுல கேட்க வேர்ட் தான் பேசினேன் எனக்கு எப்படி தெரியும் அது பேட் வேர்ட் என்று சொல்லித் தந்தா தெரியும் சொல்லித் தராமல் அடிச்சா எப்படி தெரியும்???" என சஞ்சய் கேட்டான்..
நியாயமான கேள்விதான் இதற்கு பதில் அவள் தானே கூற வேண்டும் அவளுக்கு அவனுடைய தெளிவான பேச்சு பிடித்திருந்தது... இந்த வயதிற்கு மீதமான பேச்சு அவன் முறைத்துக் கொண்டு பேசுவதை பார்க்கும் போது அவனை நினைக்காமல் இருக்க முடியவில்லை அப்படியே உரித்து வைத்திருக்கிறான்...
மகள் கூட கொஞ்சம் அவனது ஜாடை தான் என அவளுக்கு பலமுறை தோன்றியிருக்கிறது அவனை நினைக்காத நாளில்லை அவனை நினைக்கவே கூடாது என்று அவள் நினைக்காத நாளும் இல்லை ஆனால் நடக்காத காரியம் கண்ணுக்கு மணியாக ஒன்றுக்கு இரண்டு குழந்தைகள் தினமும் அவனை ஞாபகப்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றன.. அவர்கள் பாவம் அவளை தொல்லை செய்வதில்லை என்றாலும் அவளாக ஏதாவது அவன் சார்ந்த விஷயங்களை கேட்கும் பொழுது அவளை அறியாமல் கோபம் கொள்கிறாள் அவ்வளவுதான்..
சஞ்சய் கூறுவது போல அவன் கேட்ட வார்த்தையை தானே பேசினான் அவனுக்கு தவறான வார்த்தை என எப்படி தெரியும் தன் தவறை உணர்ந்து கொண்ட அவளோ மானசீகமாக தலையில் கொட்டிக் கொண்டு அவன் முன்னே அவனது உயரத்திற்கு குனிந்து அவனை அணைத்து கொண்டவள் ,"சாரி தங்கம் அம்மாவுக்கு ஏதோ ஒரு டென்ஷன்ல அப்படி அடிச்சிட்டேன் அடிச்சி இருக்க கூடாது தப்புதான் நான் சொல்லிக் கொடுத்திருக்கணும் அதை நீ சொல்லித்தந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் இனி நான் என்னை கவனமா பார்த்துக்கிறேன் ஓகே இனி அடிக்க மாட்டேன்" என்று கூறவும் அவ்வளவு அருகே அவனுடைய தாயின் முகத்தைப் பார்த்ததும் சஞ்சயின் மனம் இளகி தன் தாயை அணைத்துக் கொண்டு தன் இதழ்களை அழகாக பதிக்க அவள் மனம் பாகாக உருகியது..
அவர்களுடைய பள்ளியில் இன்னும் இரு நாட்களில் பள்ளி ஆண்டு விழா நடக்க இருப்பதற்கான தோரணங்கள் மாலைகள் எல்லாம் தயார் செய்து கொண்டிருக்க அதிலிருந்து ஒரு தோரணத்தை வேகமாக பறித்து கொண்டு வந்த சஞ்சய் தன் தாயின் கையில் கொடுத்து இந்தாங்க ,"இது என்னோட கிப்ட் வச்சுக்கோங்க அழாதீங்க ஹாப்பியா இருங்க... இனி நாம பிரண்ட்ஸா இருக்கலாம்" என்று கூற
"நீ மட்டும் தான் அம்மாவுக்கு குடுப்பியா நானும் கொடுக்கிறேன்" என்று கூறி வேகமாக ஓடிய சஞ்சனா அங்கு இருந்த ஒரு கலர் பேப்பரை எடுத்துக்கொண்டு ஓடி வந்து தன் அம்மாவின் கைகளில் கொடுத்தாள் ,"இது என்னோட கிப்ட்... ஆல்வேஸ் பி வித் மீ மம்மி" என்க
இருவரின் அன்பிலும் மூழ்கியவள் பிள்ளைகளை பத்திரமாக ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு காரில் ஏறியவள் தேவையில்லாமல் அவனை நினைத்து எதற்கு குழந்தைகளை அடிக்கணும் இனி அவனுடைய நினைப்பே ஆகாது என்று எண்ணிக் கொண்டே தூரமாக இன்று ரிலீஸ் ஆன படத்தின் நாயகன் சத்யதேவ் அவனின் படத்திற்கு அருகே கீழாக அவனின் புகைப்படத்தை பார்க்க அவளையும் அறியாமல் அவளுடைய பார்வை அந்த படத்தில் படிந்து மீண்டது...
"இப்பொழுது தானே அவனை நினைக்க கூடாதுன்னு நினைச்சோம்...அதுக்குள்ள இப்படியா இனி அவன் படம் ரிலீஸ் ஆகுதுன்னு தெரிஞ்சாலே இந்த நாட்டை விட்டு எங்கேயாவது போயிடனும் அப்பத்தான் அவன் தொல்லை இல்லாமல் இருக்கும்" என எண்ணி கொண்டாள்...
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.. அவரவர் அவரவர் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்... ஆனால் இன்னும் இரு தினங்களில் இருவரும் சந்தித்து கொள்ளும்போது இருவரின் மனநிலையும் எப்படி இருக்கும்???? அதை விட தனக்கு இப்படி குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதே அறியாத அவனுக்கு எப்படி இருக்கும்??? தனிப்பட்ட தன் விஷயத்தை எதையும் பிறரிடம் இருந்து மறைத்து வைப்பவன் இவர்களை என்ன செய்வான்???.....
