Share:
Notifications
Clear all

அத்தியாயம் 19

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

தன் கால்களுக்கு இடையில் விழுந்த மோதிரத்தை கையால் எடுத்தவன் அவளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு அவள் அருகே வந்தான்... அவளை கண்டதும் அவளுக்கு அப்படியே வியர்த்தது...அவனுடைய வருகை ஜெயமோகன் மற்றும் ராகவ் இருவருக்கு மட்டும் பிடிக்கவில்லை என்றாலும் மற்றவர்களின் வாயை அடக்கியது என கூறலாம்...

மோதிரத்தை எடுத்தவன் நேராக அவளை பார்த்தவன் அப்படியே தன்னுடைய தம்பியை நக்கலாக பார்க்கவும் அவன் தவறவில்லை..ராகவ் முறைக்க அதை அவன் கண்டு கொள்ளவில்லை...

அவளிடம் நேராக சென்று அந்த மோதிரத்தை கொடுக்கும் போது அவளுடைய கரங்களில் இருந்த நடுக்கத்தை பார்த்தவன் அவளை மிக அருகே நின்று அவளின் கைகளை சபையினர் முன்னே பிடித்து அவளுடைய கைகளில் அந்த மோதிரத்தை வைத்தவன் அவளின் மென் விரல்களை இலேசாக வருடி ,"ஆல் த பெஸ்ட்" என்று கூறினான்..

அவனுடைய விழிகளில் எதை கண்டாலோ அவளுக்கு உயிரே இல்லை..அவனுடைய குரலை அவ்வளவு நெருக்கத்தில் கேட்ட அவளுக்கு கிலி உண்டானது...முட்டாள் என்று கூறுவார்களே அது தான் இவள்...அவன் ஒன்றும் அவனுடைய மனதை வெளிப்படுத்தவில்லை அவள் பின்னால் சுற்றவில்லை...இவளை பார்த்து உருகவில்லை இவளாக எல்லாம் கற்பனை செய்து இவளாக ஒரு முடிவு எடுத்துக் கொண்டு இவளாக இவன் வந்ததும் தனக்காக தான் வந்திருக்கிறான் என்றும் எண்ணி கொண்டாள்...

பிறகு அவன் ஓரமாக நல்லவன் போல நின்று கொள்ள அவளால் நிமிர்ந்து அவனைப் பார்க்க முடியவில்லை ஏதோ தவறு செய்பவள் போல அவள் நினைத்தாள்..

பிறகு அவளிடம் மோதிரம் அணிவிக்க சொல்ல அவளும் கைகள் நடுக்கத்தோடு ராகவின் விரல்களில் மோதிரத்தை அணிவித்தாள்...

அவளுக்கு நேர் எதிர் தான் நின்று கொண்டிருந்தான் ஜெகதீஷ் அதை கண்ட அவனின் விழிகளில் உணர்வுகள் தொலைந்து இருந்தன...அதை பார்த்த அவளின் விழிகள் கரித்தன...ஆனால் எதற்கும் பயன் இல்லாமல் போய் விட்டது...

நிச்சயம் ஒரு வழியாக முடிந்தது... நிச்சயம் முடிந்த கையோடு அவனும் சென்று விட்டான் அம்மாவுக்காக வந்து இருந்தான் வந்த உடனே சென்றும் விட்டான்...போகும் போது அவளை ஒரு பார்வை பார்க்கவும் அவன் தவறவில்லை...

பிறகு அவன் வரவில்லை கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக அவனை பார்க்கவே முடியவில்லை...அவளுக்கு தான் இருப்பு கொள்ளவில்லை...அவனை பார்க்க வேண்டும் சதா அவனுடைய நினைப்பு தான்...இடை இடையே இவள் தான் அவனுக்கு ஏதாவது ஃபார்வேர்ட் மெசேஜ் அனுப்பி கொண்டு இருந்தாள் ஆனால் அதற்கு எதற்கும் ரிப்ளை இல்லை...

தன்னை முதல்முறையாக தீண்டியவன் அவன் தான் அவனை விட்டுவிட்டு வேறு யாரையும் அவளால் அவள் அருகே விட இயலாது நிச்சயம் பெற முடிந்து விட்டது இனி கல்யாணத்துக்கு மூன்று மாதங்கள் தான் உள்ளன...

இனி என்ன செய்ய முடியும் அவளால் எப்படி ராகவோடு ஒரு வாழ்க்கை வாழ இயலும் என்றெல்லாம் யோசித்தாள் என்பதை விட அவளை யோசிக்க வைத்தான் என்று தான் கூற வேண்டும்...

ஆரம்பத்தில் எல்லாம் ராகவ் ஏதாவது அட்வைஸ் செய்தால் அதை கேட்டு கொண்டு தலையை ஆட்டி வந்தவளுக்கு இப்பொழுதெல்லாம் அவன் ஏதாவது பேசினாலே எரிச்சல் வர துவங்கியது...

அவனை அறவே வெறுக்க தோன்றியது.. அவன் ஒன்றும் செய்யவில்லை ஆனால் தனக்கு இடைஞ்சலாக அவன் இருக்கிறான் என அவள் நினைக்க துவங்கி விட்டாள்...

இன்னும் திருமணத்துக்கு மூன்று மாதங்கள் இருந்தது அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினாள்...அவனை பார்க்க வேண்டும் என்று அவளுக்கு இருந்தது...ஒரு முறையாவது தன் மனதை அவனிடம் வெளிப்படுத்த வேண்டும் என இருந்தது...ஆனால் அவளுக்கு தயக்கமாக இருந்தது...

என்ன செய்வது என அவள் யோசித்து கொண்டிருக்கும் வேளையில் தான் சரி கோவிலுக்கு செல்லலாம் என எண்ணி கோவிலுக்கு கிளம்பினாள்...

வீட்டில் அவளுடைய அம்மா மற்றும் அப்பா இருவரும் ஒரு கல்யாணத்திற்கு சென்றிருந்தார்கள் இரவு தான் வீட்டுக்கு வருவார்கள்... அவள் மட்டும் தான் வீட்டில் இருக்க கோவிலுக்கு செல்ல வேண்டும் என தோன்றவும் நேராக பஸ் பிடித்து சென்று விட்டாள்...கோவிலுக்கு செல்லும் போது புடவை உடுத்தி பார்ப்போம் என கருதி அவளுக்கு பிடித்த ஒரு கருப்பு நிற புடவை அணிந்து தலையை இலேசாக கோதி கிளிப் அணிந்து இருந்தாள்...கழுத்தில் சிறு செயின் காதில் பெரிய ஜிமிக்கி மற்றும் நெற்றியில் சிறிய ஒரு பொட்டு வைத்திருந்தாள்.. பார்க்கவே அவள் அழகாக இருந்தாள்...ரோட்டில் வருவோர் போவோர் கூட அவளை திரும்பி பார்ப்பது போல அவளுக்கு இருந்தது...

கோவிலுக்கு சென்றவள் நன்றாக மனம் உருக சாமியை வேண்டியவள் மனம் ஒரு நிலை இல்லாமல் தடுமாறியது...அவளுக்கு என்ன முடிவு எடுக்க வேண்டும் என தெரியவில்லை...அவள் செய்வது சரியா, தவறா என தெரியாமல் தான் இங்கு வந்தாள் ...

இங்கும் அவளுக்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை...மாறாக ஒன்று அவள் விருப்பமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் அவளுடைய பெற்றோர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் இறுதியில் அவருடைய பெற்றோர்கள் சந்தோஷமாக இருக்கட்டும் என எண்ணிக்கொண்டு அவள் திரும்ப வீட்டுக்கு செல்ல கோவிலுக்கு அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தாள்... அவளுக்கு அவன் வேண்டும் ஆனால் எப்படி இனி முடியும் என அவளுக்கு தெரியாது அதனால் அவளுடைய ஆசைகளை அவள் புதைத்து கொண்டாள்...ஆனாலும் ஆழ் மனதில் இருக்கும் அவன் தொல்லை செய்வதை அவளால் தடுக்க முடியவில்லை...

அந்த நேரம் பார்த்து மிகுந்த சந்தோசத்துடன் இருந்தான் ஜெகதீஷ்... ஒரு ப்ரொடியூஸ் இருக்கு கதை சொல்லி இருந்தான் அவருக்கு அவன் கூறிய கதை பிடித்திருந்தது...

அவனின் மூன்று மாத உழைப்பு கனவு அது இவ்வளவு எளிதாக கிடைக்கும் என அவன் நினைக்கவில்லை...

எளிதாக ஒன்றும் கிடைத்து விடவில்லை அவனுடைய ஒவ்வொரு குறும்படத்தையும் பார்த்த அந்த புரொடியூசர் அவனை அழைத்து ஒரு கதை கூற சொல்ல அவனும் கூறி விட்டான்...

அந்த சந்தோஷத்தை யாரிடம் பகிர்ந்து கொள்வது யாரிடம் கூறுவது என தெரியாமல் திக்கு முக்காடி அவன் அந்த நேரத்தில் அந்த வழியாக காரில் வந்தவன் அவள் தனியாக இருப்பதை பார்த்து விட அவளை கண்டதும் அவனுக்கு மிகவும் சந்தோஷம் மேலும் அவளோடு பேச வேண்டும் என கருதி செல்ல அதற்குள் அவள் வந்த பஸ்ஸில் ஏறிவிட்டாள்.. பஸ் மிகவும் கூட்டமாக இருந்தது அதைக்கூட கவனிக்காமல் அவள் சென்று விட்டாள்...

அவனோ காரை நிறுத்தி விட்டு பஸ்சில் ஏறி கொள்ள இப்போது எப்படி அவளிடம் செல்வது இந்த கூட்டத்தில் என யோசித்தவன் நேராக ஒவ்வொரு நபரையும் தாண்டி அவள் பின்னால் இருவர் நிற்க நான்காவதாக நின்று கொண்டான்...

அவன் இப்போது ஒரு சில குறும்படங்கள் நண்பர்களோடு சேர்ந்து எடுத்துக் கொண்டு இருக்கிறான் யாரிடமும் சொல்லவில்லை... அதில் வரும் வருமானத்தை வைத்து தான் அவன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்...அந்த வேலை அவனுக்கு பிடித்து இருக்கிறது...இதில் ப்ரடியூசருக்கு கதையும் கூறி இருக்க அது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்க இவளை இந்த நேரத்தில் கண்டதும் அதை விட சந்தோசத்தை கொடுத்தது...

இவ்வளவு நாட்கள் அவன் தேடிய தேடலுக்கு விடையாக இன்றைய நாள் அவனுக்கு பிடித்திருக்கிறது ஆனால் யாரிடமும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.... அவனாக அவனது பெயரை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது தம்பட்டம் அடித்துக் கொள்ளக் கூடாது என எண்ணி இருக்கிறானோ என்னவோ????

பின்னால் இருந்து அவளை பார்த்தான் அவன் உடலே குளுமையாக இருப்பது போல இருந்தது... புடவை அணிந்து இருப்பதை பார்த்தவன் கண்கள் அவளின் உடலை விட்டு அகல மறுத்தன...தவறான உரிமையான பார்வை தான் அவள் மீது படிந்தது... அவளை ஒரு போதும் விட்டு கொடுக்க கூடாது என எண்ணினான்...

அவளை அவனுக்கு பிடிக்கும் அதை முறையாக அவனுக்கு வெளிப்படுத்த தெரியவில்லை...எல்லாமே சரி தான் ஆனால் அவள் அவனுடைய தம்பிக்கு பார்த்த பெண் நிச்சயம் வேறு முடிந்து விட்டதே அதனால் என்ன இப்போது விட்டால் அவன் நினைத்தது எதுவுமே நடக்காது...ஆம் அவளை அவனுக்கு பிடித்தாலும் அவனை மட்டம் தட்டும் அவனுடைய தம்பியை பிடிக்காது...

அவனை பொறுத்தவரை அவன் தான் அனைத்துக்கும் காரணம் அவனுக்கு ஒரு அடி கூட கொடுக்கவில்லை என்றால் எப்படி அதுக்கு அவனுக்கு கிடைத்த பலியாடு தான் இவள் என்றும் எண்ணி இருக்கிறான் ...இவளை வைத்து தான் அவனுடைய தம்பிக்கு ஒரு செருப்படி கொடுக்க போகிறான் அது வேறு விசயம்...

அவளை அவனுக்கு பிடித்து இருப்பது உண்மை தான் ஆனால் இவளை வைத்து அவன் விளையாட இருப்பதும் கடினமான உண்மை தான்...

ஏனெனில் மிக சரியாக ஜெகதீஷ் முதல்முறையாக அவளை முத்தமிட்ட அன்று அவள் சென்றதும் ஜெகதீஷ் உணவருந்தும் போது ஜெயமோகனுடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருந்தான் ...வீட்டு வாசலில் தந்தையை வீட்டில் விட வந்து இருந்த ராகவை சந்தித்தான்..

அவனோ இவனை பார்த்து முறைக்க தந்தையிடம் பேசி விட்டு வந்த கோபத்தில் ஜெகதீஷ் இருந்தான்...அவன் பேசாமல் தன் போக்கில் வெளியே செல்ல தான் எண்ணி இருந்தான்...

அப்படி இருக்க ராகவ் இவனை கண்டதும் சும்மா இருக்காமல் சீண்டுவது போல," என்ன ஓசி சோறு சாப்பிட வந்துட்டியா வெட்கம் இல்லாம எப்படி டா மாசம் மாசம் வந்துடுற???" என கேட்டான்..

அதைக் கேட்டதும் சுர்ரென்று கோபம் அவனுக்கு வந்தது.. இப்போது தான் அவனுடைய அப்பா அதை சொல்லி சண்டை போட்டார் இப்போது இவன்.. இவனுக்கு என்ன என்னை பார்த்தால் எப்படி இருக்கிறது என எண்ணி ரோடு என்று கூட பார்க்காமல் அவனின் சட்டையை பிடிக்க ராகவ்வுக்கு கோபம் வர," என்னோட சட்டையை விடுடா இல்ல இப்பவே அப்பாவை கூப்பிடுவேன்" என்று கூற

" கூப்பிடு டா அவரை என்ன பயம் காட்டிட்டு இருக்கியா?? வெண்ணை எனக்கு யார்கிட்டேயும் பயம் இல்லை.." என்க

"என்ன ரோஷம் எல்லாம் பொத்துக்கிட்டு வருது உண்மையை தானே சொல்றேன்" என மேலும் சீண்டி விட

"இதோ பாரு நான் ஒன்னும் உன்னை மாதிரி கிடையாது.. அப்பா காசுல உட்கார்ந்து அப்பா காசுல தின்னுட்டு இருக்கிறது நீதான் நான் கிடையாது..நீ தான் அவர் பின்னாடி ஒளிஞ்சு நின்னுட்டு இருக்க நான் இல்லை" என்றான் ஜெகதீஷ்...

அதை கேட்டதும் ராகவ் முகம் மாறி போக அதை பார்த்து நக்கலாக சிரித்த ஜெகதீஷ் ,"என்ன ரொம்ப ஷாக்கா இருக்க?? என்ன சொல்றியே நீ தான் ஓசி சோறு சாப்பிட்டுட்டு இருக்க அப்பாவோட பிசினஸ் பாத்துக்குறேன் அப்படிங்கற பேர்ல இதோ இந்த டிரஸுக்கும், இந்த காருக்கும், திங்கிற சோத்துக்கும் விலை போனது நீதான் நான் கிடையாது.. சொந்தமா மூளை வேணும்டா யோசிக்க உன்னை மாதிரி யோசிக்காம வாழற முட்டாள் நான் கிடையாது எனக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் செய்வேன் அப்படித்தான் வாழ்வேன் உன்ன மாதிரி அடிமை வாழ்க்கை எல்லாம் என்னால வாழ முடியாது" என்று ஜெகதீஷ் கூறினான்..

அதை கேட்டதும் ராகவ் பொங்கி எழுந்து விட்டான்...தன் அண்ணனை பார்த்து நக்கலாக,"நீ என்ன வேணா சொல்லிக்கோ ஆனா உனக்கு இருக்கிற மரியாதைக்கும் எனக்கு இருக்கிற மரியாதைக்கும் வித்தியாசம் இருக்கு வீட்ல மூத்தவன் நீ இருக்கும் போது எனக்கு கல்யாணம் முடிவு பண்றாங்கன்னா அதுக்கு என்ன அர்த்தம் நீ வேண்டாதவன் வேண்டாத உதவாக்கரைன்னு அர்த்தம் .. நானும் நீ கொஞ்சம் அசிங்கப்படட்டும் தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்... ஏன் எனக்கு பொண்டாட்டியா வரப்போற அவ கிட்ட கூட உன்னுடைய வரலாறை தெளிவாக சொல்லி வச்சிருக்கேன் யாரும் உன்கிட்ட சிம்பத்தில இருக்க மாட்டாங்க யாருக்கும் உன்னை பிடிக்க கூடாது... பிடிக்கவும் நான் விட மாட்டேன்..ஏன்னா எனக்கு உன்னை பிடிக்காது" என்க உடனே ஜெகதீசுக்கு சுபத்ரா சற்று முன் அவனிடம் கூறியது நினைவு வந்து போனது...

அதைக் கேட்டு சிரித்த ஜெகதீஷ் ,"டேய் நீ இவ்ளோ பெரிய முட்டாளாடா அவங்களுக்கு எல்லாம் பிடிச்சு எனக்கு என்னடா ஆகபோகுது நீ ஊருக்கே தம்பட்டம் அடிச்சுக்கோ நான் கெட்டவன்னு எனக்கு ஒன்னும் கவலை இல்லை உனக்கு கல்யாணம் முன்னாடியானாலும் சரி பின்னாடி ஆனாலும் சரி அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. நீ அப்பாவுக்கு நல்லவனா இருந்தாலும் சரி நல்ல புள்ளையா அப்பா சொல்றதை கேட்டு நடந்தாலும் சரி என்ன ஆனாலும் நான் உனக்கு அண்ணன் அது உன்னால மாற்ற முடியாது புரியுதா அதனால என்கிட்ட ஈகோவை கொஞ்சம் குறைச்சு காட்டு இல்ல உன்ன விட அதிகமா நான் காட்டிடுவேன்...என்னைக்குமே நீ என்னை பொறுத்தவரை ஒரு அடிமை தான்" என்று கூறியவன் மேலும் தன் தம்பியை பார்த்து,"உன்னோட மனசுக்குள்ள இவ்வளவு வஞ்சம் இருக்குன்னு எனக்கு இப்பதான் தெரியுது.. இதுவரைக்கும் நான் உனக்கு எந்த அடியும் கொடுத்ததில்ல ஒரு மரண அடி குடுத்துடறேன் கவலைப்படாதே கல்யாணம் தானே உனக்கு எப்படி நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்" என்று கூறி சென்றான்...

அப்போது கூட பேசிவிட்டு நடந்த சம்பவத்தை விட்டு விட்டான் தன் தம்பி மீது கோபம் இருந்தாலும் அந்த சம்பவத்தை விட்டு விட்டான் ஆனால் அவனுக்கு பார்த்திருக்கும் பெண் சுபத்ரா தான் என்று தெரிந்ததும் அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..

அவளின் பேச்சும் அவளின் பார்வையும் அவனுக்கு மட்டும் தான் என தோன்றியது.. எப்படி இருந்தாலும் இந்த கல்யாணம் நடக்கக்கூடாது என்பதில் தெள்ளத் தெளிவாக இருந்தான்...

அதனால் தான் அவள் தான் அந்த பெண் என தெரிந்த பின் அவளை நன்றாக குழப்பி விட்டு அவள் மனதில் சலனத்தை உருவாக்கினான் ஆனால் அவளோ பெற்றோர்களின் முடிவு தான் என்னுடைய இறுதி முடிவு என்று கூறிவிட அவனும் சரியென விட்டு விட்டான் மேற்கொண்டு அவளை வற்புறுத்தவில்லை என்ன தான் இருந்தாலும் அவள் வருவாள் என்ற நம்பிக்கை மட்டும் அவனுக்கு இருந்தது...

அதிலும் ராகவ் அருகே சுபத்ரா நிற்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அப்பொழுதுதான் கணக்கிட்டான் இந்த கல்யாணம் நடக்கவே கூடாது என்று இதோ அதற்காகத்தான் அவள் பின்னால் இப்பொழுது வந்திருக்கிறான்...

அவனை பொறுத்தவரை அவள் அவனுக்கானவள் அவனுடைய தம்பியே என்றாலும் இவளை அவனுக்காக விட்டுக் கொடுக்க ஜெகதீஸ் ஒன்றும் நல்லவன் கிடையாது... சினிமா தியேட்டரில் வைத்து இவள் தான் ராகவுக்கு பார்த்திருக்கும் பெண் என அறிந்தது முதல் அவளுடைய மனதை குழப்பி விட்டான்...

ஆனால் அதில் எந்தவிதமான நல்ல விஷயமும் அவனுக்கு நடக்கவில்லை என்பதை அறிந்து இனி அவளை விட்டு விடக் கூடாது என்று கருதி இப்போதும் தெளிவாக குழப்ப தான் வந்து இருக்கிறான் ஜெகதீஷ்...

பஸ்ஸில் அவளுக்கு பின்னால் அவளை ஒட்டிய படியே ஒரு குடிகாரன் அவளை உரசியபடி நின்று கொண்டிருந்தான்...அதை அவன் பார்த்தான்...அவனுக்கு கோபம் வந்தது.. "அவன் உரசிட்டு இருக்கான் இவ என்ன அப்படியே நிற்கிறா" என அவளை மனதுக்குள் திட்டினான்...

அவளோ திரும்பி பார்த்து அந்த குடிகாரனை முறைத்து சற்று முன் பக்கமாக நகர்ந்து நின்றவள் அவள் திரும்பும்போது பார்த்தது அவன் தானா என திரும்பி பார்த்தாள் அங்கு அவன் தான் தாடி மீசையோடு முடி வெட்டாமல் காட்டான் போல இருந்தான்...

அவள் மனம் மீண்டும் சஞ்சலம் ஆகியது..மீண்டும் ஒரு முறை பார்த்தான் ..."என்னை நெனைச்சு தான் இப்படி இருக்காரா" என மீண்டும் எண்ணினாள்...முட்டாள் பெண்...

ஆனால் அவனோ இவளை குழப்பி விட தான் வந்து இருக்கிறான் என அவளுக்கு தெரியாது இல்லையா???அவனுக்கு அவள் மீது சலனம் இருந்தாலும் தன்னுடைய தம்பிக்கு ஒரு அடியை சிறப்பாக கொடுக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் ஜெகதீஷின் மனம் அவளுக்கு தெரியாது இல்லையா???

அதற்குள் அந்த குடிகாரன் மீண்டும் அவள் பின்னால் நெருங்கி நின்று உரச போக அவளோ மீண்டும் நகர்ந்தாள்...அதை பார்த்துக் கொண்டிருந்த ஜெகதீஷ் வேகமாக அவனுடைய சட்டையை பிடித்தான்..

சட்டையை பிடிக்கவும் அந்த குடிகாரன் அதிர ,"என்ன உரசனுமா எங்க உரசு பார்ப்போம்" என்று ஓங்கி அந்த குடிகாரன் முகத்தில் ஒரு குத்து விட அவனுக்கு அடித்த போதை எல்லாம் தெளிய ஜெகதீஷ் அவளுடைய கையை பிடித்து ,"என்ன பார்க்க நல்லா இருக்காளா உரசி பாரு இன்னும் நல்லா இருக்கும் எங்க தில் இருந்தா உரசு பார்ப்போம்" என்று அவளுடைய கையைப் பிடித்து தன்னுடைய அருகே நிறுத்தியவன் குடிகாரனையும் அவளுக்கு எதிரே நிறுத்தினான்...

நிமிடத்துக்குள் நடந்த செய்கையை பார்த்து,"ஜெகதீஷ் என்ன பண்றீங்க எல்லாரும் பாக்குறாங்க" என்று அவளுக்கு அசிங்கமாக இருக்க அவனிடம் மெல்லிய குரலில் கூற அதை கேட்டு அவனும் அவளைப் பார்த்த முறைத்து ,"அப்போ அவன் உரசுவான் நீயும் நின்னு கொடுத்துட்டு இரு இழுத்து நாலு விடனும்னு தோணல அசிங்கமா இருக்காம் " என அவளை பார்த்து முறைக்க அதற்குள் பஸ்ஸில் உள்ள அனைவரும் கூட்டமாக ,"என்னாச்சு என்னாச்சு" என எட்டிப் பார்க்க துவங்கவும் அவளுக்கு ஒரு மாதிரியாக போனது...

அதற்குள் டிரைவர் வண்டியை நிறுத்த கண்டக்டர் போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என்று கூற ,"ஸ்டேஷன் எல்லாம் வேண்டாம் நானே இவனை பார்த்துக்கிறேன்" என்று கூறியவன் அவளைப் பார்த்து இறங்கு என கூறினான்...அவளோ மேலும் பதட்டம் அடைந்து விட்டாள் அவளுக்கு ரொம்ப பயமாக இருந்தது..

ஆனால் அவனுக்கு அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை..பிறகு அந்த குடிகாரனின் சட்டையை பிடித்து வந்த ஸ்டாப்பில் இறங்கிய ஜெகதீஷ் அவனைப் போட்டு அடித்தான்... இனி வாழ்க்கையில் அவன் பஸ்ஸிலேயே பயணம் செய்ய மாட்டான் அந்த அளவுக்கு அடி நொறுக்கி இருந்தான் அவள் எவ்வளவு தடுத்தும் அவன் கேட்கவில்லை கண்ணா பின்னா என அடித்து நொறுக்கி விட்டான்...

பிறகு அவள் தான் ஜெகதீஷின் கையைப் பிடித்து இழுத்து

கொண்டு வரவேண்டியதாகி போயிற்று....அவள் பிடித்த நேரம் பார்த்து அக்குடிக்காரன் தலை தெறிக்க ஓடி விட்டான்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top