Share:
Notifications
Clear all

அத்தியாயம் 18

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

இங்கே இவன் வருவான் என அவள் எதிர்பார்க்கவில்லை அதிலும் அவனுடைய செய்கை அவளுக்கு அதிர்ச்சியை கொடுக்க அவனிடம் இருந்து அவள் விடுபட போராடியவளை அவனே தன் வேலை முடிந்ததும் மீண்டும் விட்டான்...

அவளுக்கு தடைப்பட்டு இருந்த மூச்சை மிக பெரிதாக இழுத்து விட்டாள்...அங்கு அவன் அவளுக்கு மீண்டும் தலை சுற்றியது..தனக்கு ஒரு மன மாற்றம் வேண்டும் என எண்ணி அவள் இங்கு வந்து இருக்க ஆனால் மனமே மாற கூடாது என்பது போல அவன் இங்கு வந்து அவளை மீண்டும் தீண்டி விட அவளோ அவனை விலக்கி மீண்டும் பெரிய மூச்சுக்களை எடுத்து விட்டவன்,"என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல???" என சற்றே கோபத்துடன் கேட்டாள்...

ஆனால் அவளின் சத்தம் அவனுக்கு மட்டும் தான் கேட்டது..வேறு யாருக்கும் கேட்கவில்லை...

ஆனால் அவளுக்கு தெளிவாக கேட்க, " உன்னை நினைச்சிட்டு இருக்கேன்னு சொல்ல மாட்டேன் ஆனால் நீ என்னை அட்மையர் பண்ற என்னமோ உன்கிட்ட எனக்கு ஒரு கனெக்சன் வந்து இருக்கு..இன்னிக்கு கொஞ்சம் சந்தோஷமா இருந்தேன் அதுக்காக படம் பார்க்க வந்தேன் .. இங்கே நீ என் பக்கத்துல இருக்க எனக்கு அன்னைக்கு உன்னை கிஸ் பண்ணது ஞாபகம் வந்திருச்சு அகைன் நான் கிஸ் பண்ணினேன் அவ்ளோ தான்" என அவன் கூற அவளின் முகமோ அதை கேட்டு முதலில் கோபத்தில் சிவந்து இப்போது வெட்கத்தில் சிவந்தது.. அதை எண்ணியவள் வேகமாக தன் உணர்வுகளை அடக்கினாள்...

ஏற்கனவே அவன் அவளை வெகுவாக பாதித்து இருந்தான் அதில் இந்த பேச்சும் கலந்து கொள்ள அவளுக்கு மீண்டும் மனம் தடுமாறியது...

"நான் யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சுமா நீங்க என்கிட்ட இப்படி நடந்துக்கறிங்க இது ரொம்ப தப்பு" என கூறினாள்...

"நீ யாரா இருந்தா எனக்கு என்ன??? எனக்கு உன்னை இப்போ பிடிச்சிருக்கு உன்னை கிஸ் பண்ணனும் தோணுச்சு நான் கிஸ் பண்ணினேன் அதை நீயும் ரசிச்சேன்னு எனக்கு நல்லா தெரியும்" என்று அவன் அவளையும் கூட்டு பிடிக்க அதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை அது உண்மைதான் என்றாலும் அவளால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை...

"என்ன நீங்க இப்படி ஒரு பொண்ணு கிட்ட தப்பா நடந்துகிட்டு என்னை சேர்த்து தப்பா சொல்றீங்க" என்று அவள் கூறினாள்

"நான் ஒன்னும் தப்பா சொல்லல எனக்கு பீல் ஆனதை சொன்னேன் பட் தட் வாஸ் அ பியூட்டிஃபுல் கிஸ்..அன்னைக்கு பண்ணினதும் தான்" என்க அவள் முகம் மேலும் சிவந்தது...அதை அவன் கவனித்தான்...

அவளின் அனுமதி இல்லாமலேயே அவளின் இதழ்களை களவாடியவனுக்கு அவளின் விரல் பிடிக்க ஒன்றும் அவளின் அனுமதி தேவையில்லை அவளின் கரங்களை தன் கரங்களுக்குள் பொதிந்தவன் அவளின் ஒவ்வொரு விரல்களையும் மெலிதாக வருடி கொடுத்துக் கொண்டே இருந்தான்...அதில் அவள் மனம் மேலும் கரைய துவங்கியது...

அவனுக்கு அவளை என்னவோ தெரியவில்லை பார்த்ததும் பிடித்து விட்டது...அவள் யார் என தெரியவேண்டாம் அவள் என்ன செய்கிறாள் என தெரியவும் வேண்டாம் ஆனால் அவனுக்கு அவளை பிடித்திருக்கிறது...

என்ன அவன் தன்னுடைய கைகளை வருடவும் தான் கரைகிறேன் இவன் பொல்லாத ராட்சசன் தான் என்று மனதுக்குள் எண்ணியவள் வேகமாக தன் கையை உருவி கொண்டவள் மனதில் ராகவ் வந்து ,"போக நீங்க செய்யறது ரொம்ப தப்பு இது ராகவ்வுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியுமா??" என்க

"அந்த நாய்க்கு தெரிஞ்சா எனக்கு என்ன" என்றான் அசால்ட்டாக

அவளோ ,"அப்போ உங்களுக்கு தப்பாவே தெரியலையா" என அவள் அதிர்ச்சியாக கேட்டாள்..

"இல்லையே" என அவன் கூலாக கூறினான்...

அவளோ அதிர,"இதோ பார் இரண்டு தடவை உன்னை நான் கிஸ் பண்ணி இருக்கேன் ரெண்டு தடவையும் உனக்கு பிடிச்ச மாதிரி தான் எனக்கு தோணுச்சு அப்படித்தான் எனக்கு ஒரு ஃபீலும் கிடைத்தது முதல் முறையே நீ என்னை எதிர்த்து இருந்தேனா இரண்டாவது தடவை உன் பக்கம் திரும்பி இருக்க மாட்டேன் ஆனால் நீ எதிர்க்கல உனக்கும் பிடிச்சு இருக்கு எனக்கு பிடிச்சு இருக்கு அப்புறம் என்ன???" என அவன் கூற அதை கேட்டவள் அதிர அவனோ கூலாக," லுக் உனக்கும் எனக்கும் பிடிச்சிருந்தா போதும் வேற யாருக்கும் நாம பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை புரியுதா" என்று அவன் கூறினான்..

இது என்ன லாஜிக் என புரியாமல் அவள் அந்த இருட்டில் திகைக்க,"நீ ரொம்ப கன்ஃபியூசா இருக்க வெளியில வா பேசலாம்" என்று அழைத்தான்...

அவளோ அவன் பேச்சிலும் செய்கையிலும் பயந்து," நான் வரமாட்டேன்" என்று கூற அவனும் எழுந்து நின்று தன் சட்டையை உதறியவன்," நீ வருவ எனக்கு தெரியும் சீக்கிரம் வா பிளாக் கலர் கார்ல வெயிட் பண்றேன்" என்று கூறிக்கொண்டு தியேட்டரை விட்டு வெளியே சென்று விட்டான்..

அவளுக்கோ என்ன செய்வது என தெரியவில்லை...இவன் தெரிந்து தான் செய்கிறானா இல்லை தெரியாமல் செய்கிறானா என புரியாமல் தடுமாறினாள் அவள்...

இவன்தான் கேடு கெட்டவன் இப்படி பேசுகிறான் என்றால் அவளுக்கு அறிவில்லையா இதைப் பற்றி அவனிடம் பேசியாக வேண்டும் இனி அவளிடம் அத்துமீற அனுமதிக்க கூடாது என்று எண்ணி தன்னருகே அமர்ந்திருக்கும் தன் தோழியிடம் ,"இதோ வருகிறேன்" என்று கூறிவிட்டு வெளியே சென்றாள்..

அவள் வருவாள் என காத்திருந்தவன் அவள் வரவும் நேராக அவனுடைய காருக்கு சென்றான்... அது அவனுடைய தாத்தாவின் கார் அதை அவன் தான் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறான் காருக்குள் ஏறி அமர்ந்தவன் அவளுக்காக காரின் முன்பக்க கதவை திறந்து விட முதலில் தயங்கிய அவள் அவனது விழிகளை பார்த்து என்ன எண்ணினாலோ வேகமாக காருக்குள் ஏறி அமர்ந்து கொண்டாள்...

அவனும் அவளைப் பார்த்து மெல்லிய புன்னகை உதிர்த்து ,"நான் தான் நீ வருவேன்னு சொன்னேன்ல" என்று கூற அவளோ அவளை பார்த்து ,"இதோ பாருங்க நீங்க கெட்டவங்களாக இருக்கலாம் நீங்க வரைமுறை இல்லாமல் பழகலாம் ஆனால் என்னால் அப்படி எல்லாம் இருக்க முடியாது இனிமேல என்கிட்ட கூட நீங்க வரக்கூடாது வந்தா அவ்ளோ தான் சொல்லிட்டேன்" என்று கோபமா கூற அதைக் கேட்டு அவனும்," வந்தா என்ன தப்பு??" என கேட்டான்...

அவளோ மறுபடியுமா என கருதி ,"அது தப்பு ராகவ்வுக்கு மட்டும் விசயம் தெரிஞ்சது அவ்ளோ தான்" என்க

அவனோ இவள் என்ன சொல்கிறாள் என புரியாமல் ,"ஏன் உன்னோட தலையை சீவிடுவானா???" என அவனும் கேட்டான்.. அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை காதலிக்கும் அளவுக்கு அவன் செல்ல மாட்டான் என நன்றாக தெரியும் ஏனெனில் அவனுடைய அப்பாவின் வளர்ப்பு அப்படி தோழியாக இருக்கத்தான் வாய்ப்பு அவளிடம் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது இதுதான் அவனுடைய கேள்வியாக இருந்தது எதுக்காக ராகவ் மேல இவ்வளவு பயம் வைக்கணும் அந்த அளவுக்கு அவன் ஒன்னும் பெரிய அப்பாடக்கரெல்லாம் இல்லை என்பதுதான் ஜெகதீஷின் கேள்வியாக இருக்க

அவளோ அவளைப் பார்த்து," நான் ராகவ்வை கல்யாணம் பண்ணிக்க போறேன் இன்னும் இரண்டு வாரத்தில் எங்களுக்கு நிச்சயம்" என்று அவள் கூறினாள்..

அதைக் கேட்டு அவன் அதிர்வான் என அவள் நினைத்தாள் ஆனால் அவனும் ஒரே ஒரு நொடி அவனது விழிகளில் சிறிய மாற்றம் தென்பட்டது..அவன் ஏதோ யோசித்தான் இதெல்லாம் ஒரு நொடிக்குள்ளே நடந்து கொண்டிருந்தது..

அதை கேட்டதும் என்ன எண்ணினானோ அவளை பார்த்து சிரித்தான்... பிறகு அவன் அவளை பார்த்து ,"அது தான் இன்னும் நிச்சயம் நடக்கலையே ரெண்டு வாரம் இருக்கு உனக்கு யோசிக்க ஒரு சான்ஸ் தரேன் அவன் தான் உனக்கு வேணுமா???" என்று கேட்டானே ஒரு கேள்வி அதை கேட்டதும் அவள் மேலும் அதிரத்தான் செய்தாள்...

"வாட் என்ன பேச்சு பேசறீங்க???" என்க

அவனோ அவளுடைய கோபத்தை எல்லாம் கண்டுகொள்ளாமல்,"சீ உனக்கு அவனை பிடிச்சு இருக்கா???" என அதி முக்கியமான கேள்வியை கேட்டான்...

"எங்க வீட்ல எல்லோர்க்கும் பிடிச்சு இருக்கு"

"நான் கேட்டது உன்னை" என்றான்...

"எனக்கும் பிடிக்கும்" என அவள் இழுக்க

அதை கேட்டதும் அவன் அவளை பார்த்து சிரித்து,"அப்போ உனக்கு அவனை கட்டிக்க விருப்பமில்லை அப்படித்தானே...."

"இல்ல அப்படி எல்லாம் இல்ல" என அவள் பதட்டத்தோடு கூற,

" அது தான் உன் முகமே சொல்லுதே...எனக்கு உன் மேல ஒரு ஈர்ப்பு இருக்கு அது ஏன்னு விளக்க எல்லாம் என்னால முடியாது... நான் ஒன்னும் பர்பெக்ட் எல்லாம் இல்ல...அவன் சொன்ன மாதிரி கொஞ்சம் மோசமானவன் தான்...எப்போ உன்னை கிஸ் பண்ணினேனோ அப்போ இருந்து என்னோட தலைக்குள்ள நீ மட்டும் தான் ஓடிட்டு இருக்க... வேற எதுவும் நுழைய மாட்டேங்குது...உனக்கும் அப்படி இருக்குன்னு எனக்கு தெரியும்... இன்பாக்ட் நீ சொல்லித்தான் அவனை நீ கல்யாணம் பண்ணிக்க போறேன்னு எனக்கு தெரியும்.. நீதான் அவனுக்கு பார்த்திருக்க பொண்ணுன்னு எனக்கு தெரியாது... ஆனால் அதெல்லாம் என்னோட பிரச்சனை கிடையாது.. எனக்கு உன்னை பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கரதுக்கு முன்னாடி கூட உன்னை தூக்கிடுவேன் அது வேற விஷயம்... எனக்கு உன்னை பிடிச்சிருக்கு உனக்கும் என்னை பிடிக்கும் என்று எனக்கு நல்லா தெரியும் என நீ யோசிச்சுக்கோ உனக்கு அவன் வேணுமா வேண்டாமான்னு" என்றான்...

அவன் பேச்சை கேட்டு அவள் அதிர்ந்தாள்... அவனுக்கு விஷயம் தெரியவில்லை அத்துமீறி விட்டான் அதைக் கூட ஏற்றுக் கொள்வாள் ஆனால் கல்யாணமே வேண்டுமா என கேட்கிறான் ஒருவேளை அவன் தன்னை காதலிக்கிறானோ என்னைப்போல அவனுக்கும் சலனம் இருக்கிறதோ!! என யோசித்தாள்...

அதை கண்ட அவனோ ," ரொம்ப எல்லாம் யோசிக்காதே எனக்கு உன்மேல ஒரு கனெக்ஷன் மைல்டா இருக்கு அது எனக்கு பிடிச்சிருக்கு அது உங்க கிட்ட சொல்றேன் உனக்கு பிடிச்சிருந்தா சொல்லு இல்லனா இப்படியே விட்டு விடலாம் என்ன இருந்தாலும் உன்னோட முடிவை என்னோட நம்பருக்கு கால் பண்ணி சொல்லு இதுதான் என்னோட நம்பர்" என்று கூறியவன் தன் வேலை முடிந்தது என்பது போல மெல்ல அவள் அருகே வந்தவன் அவளுடைய நெற்றியில் மீண்டும் இதழ்களை பதித்து விட்டு அவள் முகம் நோக்கி குனிய அவளோ மேலும் பதட்டம் அடைய அவனோ மெலிதாக சிரித்தபடி அவளை விட்டான் பிறகு அவ்விடம் விட்டு சென்றான்...

ஏதேதோ பேசி அவன் குழப்பி விட்டு விட்டான் ஆனால் அவளோ அவனுடைய வார்த்தைகளில் அவள் வீழ்ந்தாள்... அப்போ அவளை அவன் காதலிக்கிறானா என எண்ணினாள்...எப்போதும் நல்லதை விட தீயது வேகத்தில் நம்மிடையே வந்து சேர்ந்து விடுமாம் அது ஏதாவது விசயம் ஆனாலும் சரி இல்லை ஏதாவது வன்மம் ஆனாலும் சரி எதிர்மறை எண்ணங்களுக்கு அதீத வீச்சு உண்டு. வேகத்தில் பரவி நம் மூளையை தாக்கி விடும் அது போல அவனும் அவளுள் வேகமாக பரவி இருந்தான்...

அவளுக்கு என்ன செய்வது என தெரியவில்லை..வீட்டுக்கு சென்றும் குழம்பிய மனநிலையில் தான் அவள் இருந்தாள்..

அவளுக்கு அவளுடைய பெற்றோர்களை வருத்தப்பட வைக்க முடியாது அதனால் அவள் அவன் கொடுத்த அவனுடைய நம்பருக்கு அழைத்தாள்..

தயக்கத்தோடு தான் அவள் அழைக்க அவனை போனை எடுத்ததும் ,"சொல்லு" என்றான்...

"நான் தான்" என்க

"ம்ம் புரியுது சொல்லு" என அழுத்தமாக அவன் கூற,

"எனக்கு அப்பா அம்மா தான் முக்கியம் அவங்கள மீறி என்னால எதுவும் செய்ய முடியாது அவங்க ஆசைதான் என்னோட ஆசையும் அதனால நான் ராகவ்வைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்..." என்றாள்...

அவனோ ஓகே என்றவன் பட்டென போனை வைத்து விட்டான் அவளுக்கோ என்னவோ போல ஆகிவிட்டது...ஆனாலும் மனதுக்குள் ஒரு நெருடல் இருந்து கொண்டு தான் இருந்தது...

அதற்குள் இதோ அதோ என இன்று அவளுக்கு நிச்சயம் என்றாகி போக பெரியவர்கள் எல்லாம் கூடி இருக்க ராகவ் தன் தந்தையின் ஆசைப்படி நின்று கொண்டிருக்க ,"உங்க பெரிய பையன் வரலையா அவனுக்கு கல்யாணம் பண்ணாம சின்ன பையனுக்கு பண்றீங்க" என பல கேள்விகள் பலரால் தொடுக்கப்பட்டாலும் அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு ஜெயமோகன் நின்று கொண்டிருந்தார்...

ரேவதி மட்டும் வாசலையே பார்த்து கொண்டு இருந்தார்...அவர் இரண்டு நாட்களாக ஜெகதீஷை இந்த திருமண நிச்சயத்திற்கு வரச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தார் அவனும் முடியவே முடியாது என மறுத்துக் கொண்டு இருந்தான்...

அவன் இல்லாமல் ஒரு விசேஷம் நடக்கிறதே என அவர் எண்ணி கொண்டிருக்க அந்த வருத்தம் அவருடைய முகத்தில் தெரிந்தாலும் அதை ஜெயமோகன் உணர்ந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை அவருக்கு அவருடைய ஆசை மகனின் இந்த நாள் இனிமையாக நடந்து முடிக்க வேண்டும் அவ்வளவுதான்...

அப்படி இருக்க ராகவ் மற்றும் சுபத்ரா இருவரின் கையிலும் ஆளுக்கு ஒரு மோதிரத்தை கொடுத்து ஒரு பெரியவர் மோதிரத்தை மாற்றிக் கொள்ள சொன்னார்....

அப்போது தான் அவள் உள்ளே படபடப்பு வந்தது அவள் மனம் முழுவதும் அவன் மட்டும்தான் நிறைந்து இருந்தான்.. அவனை நினைக்காமல் அவளால் இருக்க முடியவில்லை அவளுக்கு இந்த நிகழ்ச்சி வேண்டாம் என்று இருந்தது...

எப்போது அவன் அவளை தீண்டினானோ அப்போதிருந்து அவன் தான் அவளுடைய மனதை ஆக்கிரமித்து இருந்தான்...

ஆனால் சொல்ல பயம் அவளுடைய அப்பா ஆசை ஆசையாக இத்திருமணம் நடக்க வேண்டும் என காத்திருக்கிறார் அப்படி இருக்க என்ன செய்வது என அவளுக்கு தெரியவில்லை அவள் மனதில் ஜெகதீஷ் தான் இருக்கிறான்... அவளாகவே நினைத்துக் கொண்டாள் அவன் தன்னை விரும்புகிறான் என்று!!!!

அன்று அவள் தன் எண்ணத்தை கூறியதில் இருந்து அவனும் அவளை அழைக்கவில்லை அவளும் அவனை அழைக்கவில்லை...இருந்தாலும் இவள் தான் குழம்பி இருந்தாள்...

அப்படி இருக்க ராகவ்விடம் போய் வாழ அவளால் இயலாத காரியம் அதனால் அவள் தடுமாறி கொண்டிருக்க அந்த நேரத்தில் ராகவ் தன் கையில் இருக்கும் மோதிரத்தை அவளுடைய கரங்களை பிடித்து அனுபவித்தான் அவளுக்கு உயிர் போனது போல இருந்தது...

"நீயும் மாப்பிள்ளைக்கு மோதிரத்தை போடு மா" என தர்ம லிங்கம் கூற அவளுடைய கைகளோ நடுங்கி கொண்டு இருக்க அவளுக்கு இருந்த மன குழப்பத்திலும் கைகளின் நடுக்கத்திலும் அவள் கையில் இருந்த மோதிரம் கீழே உருண்டோடி விழுந்தது... அந்த மோதிரம் நேராக போனது என்னவோ ஒருவனின் கால்களுக்கு அடியில் அங்கு ஜெகதீஷ் நின்று கொண்டிருந்தான்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top