Share:
Notifications
Clear all

அத்தியாயம் 17

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

" என்னம்மா ஜுஜூ மேலே போயிட்டானா" என்று ரேவதி கேட்க அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை...

"ஆமாம் அத்தை டைம் ஆச்சு நான் வீட்டுக்கு போறேன் அம்மா தேடுவாங்க" என்று ரேவதியின் முகம் பார்க்காமலேயே அங்கிருந்து அவள் கிளம்பினாள்... ரேவதியோ ,"கொஞ்சம் நேரம் இரு மா" என்க அவளோ அதை கேட்காமல் ஓடினாள்...

அவளுக்கு ஒரு நொடி கூட அங்கு நிற்க முடியவில்லை.. இப்பொழுதும் அவள் உதடு அவன் வசம் இருப்பது போல இருந்தது அவனது மூச்சுக்காற்று அவளை சுற்றிக் கொண்டே இருப்பது போல இருந்தது அவளுடைய தேகம் எங்கும் அவனுடைய வாசம் அவளை தாக்கியது...

முதல் முத்தம் இத்தனை அதிர்வலைகளை உண்டாக்குமா என்று கேட்டால் ஆமாம் என்று தான் சுபத்ரா கூறுவாள் அவளுக்கு அவனுடைய முத்தம் அவளை தாக்கியது... அவளின் உணர்வுகளை அவன் தட்டி எழுப்பி விட்டான்..

ஆனால் ராகவ் கூறுவது போல இவன் மிக மோசமானவன் தான் தம்பிக்கு பார்த்த பெண்ணை இப்படித்தான் நடத்துவார்களா என்று எண்ணினாள்...

தனக்கு நடந்ததை யாரிடம் கூற வேண்டும் என்று கூட தெரியவில்லை பெற்றவர்களிடம் கூறினால் அவர்கள் பிரச்சினை செய்வார்கள் ஆனால் ராகவ் அவன் ஏற்கனவே எச்சரித்து இருந்தானே அவனோடு பேசக்கூடாது என்று இவள் தானே அவன் எப்படி இருப்பான் அவனுடைய குரல் எப்படி இருக்கும் என்றெல்லாம் அவன் மீது அதீத தேடலை வைத்தவள் இவள் தானே தேடலின் முடிவால் இப்பொழுது அவள் கட்டிக் காப்பாற்றி வைத்திருந்த அவளின் உணர்வுகளையும் அவன் தட்டி எழுப்பி விட்டானே அதுவும் அவளுடைய முதல் முத்தத்தை அவளுடைய அனுமதி இல்லாமலேயே அவன் தட்டிப் பறித்துக் கொண்டானே!!

அந்த முத்தத்தின் தாக்கத்திலிருந்து அவளால் மீண்டெழவே முடியவில்லை.. ராகவ் அவளுக்கு பார்க்கப்பட்ட மாப்பிள்ளை தான் இருந்தாலும் ராகவ் அவளிடம் எல்லை மீறியது இல்லை ராகவ் அவளை எப்பொழுது பார்த்தாலும் அவளுக்கு அட்வைஸ் தான் செய்வானே ஒழிய வேறு எந்தவிதமான தரங்கெட்ட வேலையிலும் அவன் ஈடுபட்டது இல்லை ஆனால் இவனுடைய அண்ணனும் ராகவ்வின் நேர் எதிர் துருவமாக இருப்பான் என அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை...

அப்படி இருக்க என்ன தான் அவன் முத்தமிட்டு இருந்தாலும் அதில் அவளும் ஒரு நொடியே ஆனாலும் அவளும் கட்டுண்டு கிடந்தாள் என்பதை அவள் அறிவாள் அதை எண்ணிய அவளுக்கு கைகள் நடுக்கம் வந்தது...ராகவ்வுக்கு துரோகம் செய்தது போல இருந்தது..நடந்த விசயத்தை யாரிடமும் கூற பயந்து போய் அமைதியாக இருந்தாள்..

அவள் சென்றதும் மாடியில் இருந்து உடை மாற்றி வந்தவனை பார்த்த அவனுடைய தன் மகனை பார்த்து ,"இது என்ன டா கோலம் இப்படி இளைச்சு போய்ட்ட" என்க

"ஆறடி இரண்டு இன்ச் நீளம் வளர்ந்து இருக்கேன் இன்னும் எவ்ளோ வளரணும்னு சொல்றீங்க" என கேட்டான்...

அவனுக்கு அந்த வீட்டில் அவனுடைய அம்மாவை மட்டும் தான் ரொம்ப பிடிக்கும்...அவர் மட்டும் தான் அவனை தூய்மையாக நேசிப்பவர்..

அப்படி இருக்க அவன் சிரித்து பேசுவதை பார்த்து ரேவதியின் கண்கள் நிறைந்து ,"தம்பி ஏதாவது வேலைக்கு போகலாம்ல நீ மட்டும் வேலைக்கு போ அப்பா உன்கிட்ட பழையபடி பேசிடுவார்" என அவர் எப்போதும் துவங்குவது போல துவங்க அதை கேட்க அவனுக்கு மனமில்லை...

"அவர் என்கிட்ட பேசுறதுக்காக எல்லாம் என்னால வேலைக்கு போக முடியாது மா" என அவன் கூற அவரோ அவன் முகம் கடுமையாக மாறுவதை பார்த்து ,"சரி சரி நீ சாப்பிடு..உனக்கு பிடிச்சத எல்லாம் செஞ்சு இருக்கேன்" என கூற அவனோ அம்மாவை வருத்தப்பட வைக்க கூடாது என கருதி சாப்பிட அமர்ந்தான்...

அவரோ அவர் ஆசையாக சமைத்த உணவை பரிமாற துவங்க அவனுடைய பார்வையோ அவளை தேடியது...அம்மாவிடம் அவள் எங்கே என கேட்க வேண்டும் என நினைத்தான்...

அவள் எங்கேயும் காணாமல் போக அவன் இதழ்களோ மெல்லிய புன்னகை உதிர்த்து தன்னுடைய அம்மா பரிமாறிய உணவை ஒரு வாய் வைத்து இருப்பான் அந்த சமயம் பார்த்து ஜெயமோகன் மதிய உணவை உண்ண வீட்டிற்கு வந்தார்...

அந்த நேரத்தில் அவர் வருவதை கவனிக்காத ரேவதி தன் மூத்த மகனிடம்," ஜெகதீஷ் ராகவ்வுக்கு ஒரு பெண் பார்த்து இருக்கு அடுத்த மாசம் நிச்சயம் வைக்கலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கோம்" என கூற அதை கேட்டதும் அவனோ தன் தாயை ஒரு பார்வை பார்த்தவன் ,"முடிவு பண்ணி இருக்கீங்களா" என கேட்டான்..

ஆமாம் என கூற உணவிலிருந்து கையை எடுத்தவன் தன்னுடைய அம்மாவை பார்த்து," முடிவு பண்ணி இருக்கீங்கன்னா என்கிட்ட ஏன் சொல்றீங்க அதுதான் குடும்பமா ஒரு முடிவு எடுத்துட்டீங்களே அப்புறம் என்ன கல்யாணம் முடிஞ்சிடுச்சா இல்ல கல்யாணம் இனிமேல் தான் பண்ண போறீங்களா???" என கேட்டான்...

அதை கேட்டதும் அவரோ அவசரமா ,"அது தான் உன்கிட்ட..." என என்ன சொல்வது என தெரியாமல் பொய் கூறவும் முடியாமல் தடுமாறி ரேவதி முழிக்க அதை பார்த்த அவனும் ,"பொய் சொல்ல ட்ரை பண்ணாதீங்கம்மா நீங்க கூட என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல அவங்களுக்கு தான் நான் வேண்டாதவனா போயிட்டேனா உங்களுக்கும் அப்படி ஆகி விட்டேனா" என்று அவன் கேட்டான் அவன் வார்த்தைகள் இருந்த வலியை கேட்ட ரேவதி வருத்தப்பட அதை கேட்டு கொண்டே உள்ளே வந்த ஜெய மோகன் ,"அவ்வளவுதான் உன்னோட தரம் இந்த வீட்ல இருக்குன்னு அர்த்தம் உன்கிட்ட சொல்ற அளவுக்கு நீ இந்த வீட்ல முக்கியமானவன் இல்லை என்று அர்த்தம்" என்று ஜெயமோகன் அவர் பங்குக்கு ஆரம்பித்தார்...

அதைக் கேட்டு அவனும் அப்படியே உணவு தட்டில் இருந்து எழுந்தவன் ,"ஏன் அப்படி என்ன குறைஞ்சு போயிட்டேன் உங்க இரண்டாவது பையன் மாதிரி நீங்க இத்தனை மணிக்கு தான் தூங்கணும்னு சொன்னா அத்தனை மணிக்கு நான் தூங்க மாட்டேன் தான் மத்தபடி இந்த வீட்ல ஒரு ஆள் தானே நான்" என்று அவன் கேட்டான்..

"என்னடா இந்த வீட்ல ஒரு ஆளு??? அப்படி என்னடா பண்ணி கிழிச்சிட்ட படிக்க வச்சேன் படிச்சியா இல்ல ஒரு வேலைக்கு போக சொன்னேன் போனியா இல்ல இல்ல நம்ம கடையை பார்த்துக்க சொன்னேன் பாத்துக்கிட்டியா இல்ல இல்ல ஒன்னுக்குமே உதவியா இல்லாத நீ என்கிட்ட பேச வந்துட்டியா" என கேட்டார்...

அதைக் கேட்டதுமே அவனுக்கு ஆத்திரம் வந்தது ,"என்னங்க சும்மா இருங்களேன் அவனே இப்பதான் ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கான் ஒரு வாய் அவனை சாப்பிட விடுங்க" என்று ரேவதி கூற

"நீ இப்படி கொட்டிட்டே இரு வீட்ல இருந்து யாருக்கும் தெரியாமல் காசை எடுத்து கொடு அவன் வேலைக்கு போகாம வெட்டியா என் காசுல கொட்டிட்டு செலவு பண்ணிட்டு இருக்கட்டும் என்ன???" என தன் மனதில் நீண்ட நாட்களாக இவனை பார்த்து கேட்க வேண்டிய கேள்வியை ஜெயமோகன் கேட்டுவிட்டார்...

அதை கேட்டதும் அவனுடைய தன்மானம் சீண்டப்பட்டது அதற்கு மேல் அவனுக்கு பொறுமை இல்லை..."இதோ பாருங்க எப்போ உங்க கூட நான் பேசாம இருக்க ஆரம்பிச்சேனோ அப்ப இருந்து பத்து பைசா உங்க சம்பாத்தியத்தில் நான் வாழல இதோ நான் போட்டு இருக்க பேண்ட்ல இருந்து நான் போட்டு இருக்க சட்டை வர என்னோட காசு நான் உழைச்சி சம்பாதிச்ச காசு தான் என்ன உழைச்சேன்னு உங்க கிட்ட எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது அப்புறம் இதோ ஒரு வாய் சாப்பிட்டேனே அந்த சாப்பாட்டுக்கும் நான் போகும்போது இதோ உங்க பொண்டாட்டி கிட்ட காசு கொடுத்துட்டு தான் போவேன் இல்லையான்னு கேளுங்க" என்று கூற ரேவதி தலையில் அடித்துக் கொண்டு ,"டேய் நீயாவது கம்முனு இருடா ஏன்டா இப்படி பேசற" என்று கூறினார்

"அவர் பேசும்போது வேடிக்கை பார்த்துட்டு தான் இருந்த நான் பேசும்போது வேடிக்கை பார்த்துட்டு இரு" என்று கூறியவன்," இங்கு யாரும் உட்கார்ந்து தண்டச்சோறு தின்னுட்டு இருக்கல" என்று கூறினான்...

அது ஜெயமோகனை தூண்டி விட ,"இவ்வளவு தன்மானம் பேசுறவன் அப்புறம் ஏன்டா என் வீட்டுக்குள்ள வந்து இருக்க வெளியே போ" என்று கூற

அதைக் கேட்ட ரேவதி," என்னங்க அவன் நம்ம பையன்" என்று கூறவும் ,"அவன் எப்போ என்னை எதிர்த்து பேச ஆரம்பிச்சிட்டானோ அப்போ இருந்து அவன் என் பையனும் உள்ள நான் அவனுடைய அப்பாவும் இல்லை" என்று அவர் கூறினார்...அவரும் விடவில்லை...

அதைக் கேட்டு அவனும் ,"இந்த வீட்டை விட்டு வெளியே போக சொல்ல உங்களுக்கு உரிமை கிடையாது இது தாத்தாவோட வீடு தாத்தா சொத்து பேரனுக்கு தான் உரிமை இருக்கு அதனால எனக்கு இந்த வீட்ல முழு உரிமை இருக்கு நான் எப்ப வேணாலும் வருவேன் எப்ப வேணாலும் போவேன் புரியுதா" என்று கூறினான்...

கூறியவன் அதோடு நிற்கவில்லை அந்த இடத்தை விட்டு அப்படியே வெளியே சென்று விட்டான்..."கொழுப்பு கொழுப்பு உடம்பு முழுக்க கொழுப்பு இவனை நான் தான் பெத்தேன்னான்னு சந்தேகமா இருக்கு" என்று ஜெய மோகன் அவன் பேசி விட்டு சென்றதை கேட்டு கொதிக்க, ரேவதி மகனுக்காக ஆசை ஆசையாய் சமைத்து வைத்த உணவை ஒரு வாய் கூட அவன் அருந்தாமல் சென்று விட்டானே இவரும் அவனிடம் சண்டை போட்டு அனுப்பி வைத்து விட்டாரே என்று எண்ணி மனம் நொந்தார்...

அவனோ வீட்டில் இப்படி ஒரு நல்ல காரியம் நடக்க இருக்கிறது அதை கூட தன்னிடம் மறைத்து விட்டார்கள் என எண்ணினாலும் யார் பெண் என கேட்கவும் இல்லை அது அவனுக்கு தேவையும் இல்லை மரியாதை இல்லாத வீட்டில் இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன??? அவனுடைய அம்மாவுக்காக தான். சென்று கொண்டிருந்தான் இனி அதுவும் தேவை இல்லை என்று அவனுக்கு தோன்றியது...

இப்படியே நாட்கள் செல்ல இன்னும் இரண்டு வாரத்தில் நிச்சயம் என்ற நிலைக்கு பெரியவர்கள் வந்து விட்டார்கள் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்க துவங்கி விட்டனர்...

இங்கு அவளுக்கு தான் மனதில் ரயில் அங்கும் இங்குமாக ஓடி கொண்டிருந்தது...ஒரு நிலையில் அவள் இல்லை என்ன செய்வது என தெரியவில்லை... இந்த திருமணம் வேண்டுமா வேண்டாமா என்று கூட யோசித்து விட்டாள்..இதுவரை அவள் யோசிக்கவில்லை ஆனால் அவன் அவளை தீண்டியது முதல் அவளுக்கு அந்த யோசனையாகவே இருந்தது. ஒரே குழப்பமாக இருந்தாள்...

அந்த தருணத்தில் தான் அவளுடைய நண்பர்கள் எல்லாம் சேர்ந்து சத்யதேவின் புதிய படம் ரிலீஸ் ஆகி இருக்க அந்தப் திரைப்படத்தை பார்க்க செல்லலாம் என முடிவு செய்தனர்..

இவளிடமும் கேட்க இவளோ படத்தை பார்க்க சென்றலாவது மனம் மாறுபடுமா என பார்க்கலாம் என்று எண்ணினால் மாறுபடாது என அவளுக்கு தெரிந்தாலும் சத்யதேவ் என்றால் அவளுக்கு கொள்ளை பிரியம்.. அதனாலேயே சத்யதேவியின் படத்திற்கு சென்றாள்..

ஆனால் ஏன் தான் சென்றோம் என நினைக்கும் அளவுக்கு அவளின் வாழ்க்கையில் மீண்டும் ஜெகதீஷ் வந்தான்...

சத்யதேவ் படம் பார்க்க அவனும் சென்று இருக்க அவளும் அந்த நேரத்தில் சென்று இருந்தாள்...அவள் செய்த பாவமா இல்லை புண்ணியமா என தெரியவில்லை கார்னர் சீட்டில் அவன் அமர்ந்து இருக்க அவனுக்கு அருகே உள்ள சீட்டில் அவள் அமர்ந்து இருந்தாள்..அவள் இன்னும் அவனை பார்க்கவில்லை...

சத்ய தேவ் படம் என்றால் சொல்லவே வேண்டாம் அந்த இடமே மிகவும் நெருப்பாக இருக்கும் அவருடைய ரசிகர்களின் ஆரவாரத்தில் திரைப்படம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்..

அப்படி இருக்க அவளோ சத்யதேவின் தீவிர ரசிகை .. அவரை நேரில் பார்ப்பது போல ஃபுல் மேக்கப்பில் அவள் வந்து இருந்தாள்..

திரைப்படம் ஒளிக்கவும் அங்கு ஆரவாரம் செய்ய ஜெகதீஷ் மட்டும் தன்னருகே நின்று குதித்து கொண்டிருக்கும் அந்த பெண்ணை பார்த்தான்...

அவனுடைய இதழ்கள் விரிந்தன...அந்த இருட்டிலும் அவள் தான் என புரிந்து கொண்டான்...அவனுடைய அருகில் தான் நின்று கொண்டிருக்கிறாள் அவன் கைகள் அவளை தீண்டும் தொலைவில் தான் அவள் இருக்கிறாள்...அதுவும் அவள்,"தலைவா என்னோட ட்ரெஸ் எப்படி இருக்கு உங்களுக்காக தான் சூப்பரா நான் வந்து இருக்கேன் தலைவா" என அவரின் பெயர் திரையில் ஒளிக்க அவளோ காட்டு கத்து கத்தி கொண்டிருக்க அவனோ மனதுக்குள்,"பார்க்க உம்மாஞ்சி மாதிரி இருந்துட்டு இந்த கத்து கத்துற.. அந்த நாய்க்கு இப்படி ஒரு பிரண்டா" என்று எண்ணியவன் இதழ்கள் மேலும் விரிய அவன் பார்வை முழுவதும் அவள் மீது விழுந்தது....

அவன் முன்னே அந்த இருட்டில் அவளும் அவளுடைய நண்பர்களும் சற்றும் அமராமல் கத்தி கொண்டே இருக்க திரைக்கு வந்த பலரும் அப்படித்தான் திரைப்படத்தை பார்த்துக்கொண்டு இருந்தனர் என்றாலும் தன் முன்னே அவள் குதிக்க அவனுடைய பார்வை மேலும் கீழுமாக அவளுடைய தேகத்தில் படிந்தன அந்த இருட்டிலும் அவன் மனதை அவள் கொள்ளை கொண்டாள்..

ஏதோ ஒரு டிஸ்டபன்ஸ் அவள் அவனை ஆக்கிக் கொண்டிருந்தாள்... அவனால் முழுமையாக படத்தில் தன் கவனத்தை பதிக்க முடியவில்லை...அவள் இருக்கும் நேரம் அவனால் அவளை தவிர வேறு எதையும் பார்க்க முடியாதபடி அவள் தொல்லை செய்ய இன்னும் அவள் அவனை கவனிக்கவில்லை என்றாலும் அவன் தான் வந்ததில் கவனித்து கொண்டு இருந்தானே???

அவளின் எழில் அவனை ஈர்க்க இதற்கு மேல் பொறுமை இல்லை என கருதிய அவன் சுற்றுப்புறம் ஒன்றும் அவன் பார்க்கவில்லை அவளின் கையை பிடித்து இழுக்க அவன் இழுத்த விசையில் அவள் அவளுடைய இருக்கையில் விழ யார் என்று அவள் பார்த்த நொடி அங்கு அவனை காணவும் அவளின் கண்கள் அதிர்ச்சியோடு விரிய அவள் சற்றும் யோசிக்காதபடி அவளின் கையை விடாமல் தன்னை நோக்கி இழுத்தவன் மீது அவள் விழ நொடி பொழுதும் யோசிக்காமல் அவளின் இதழ்களை அவன் வசம் ஆக்கினான்...

அவள் அதிர என்ன நடக்கிறது என விளங்கும் முன் அவன் வசத்தில் அவளுடைய இதழ்கள் இருக்க அவனிடம் இருந்து அவள் விலக முற்பட அவனோ விடாமல் மீண்டும் மீண்டும் அவளின் இதழ்களை ருசித்தான் ஜெகதீஷ்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top