அத்தியாயம் 16
அவள் என்ன செய்வது என தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு நிற்க அவளால் அவனை நிமிர்ந்து பார்க்க கூட முடியாத சூழ்நிலை அப்படி இருக்க அவனும் ,"இப்படியே எவ்வளவு நேரம் தான் நின்னுட்டு இருக்க போற உன்னோட ஜூஜூ வேணும்னா வந்து வாங்கிட்டு போ" என்று கூற
"நான் வரமாட்டேன்" என்று அவள் கூறினாள்... அது அவனுக்கு எரிச்சலை கொடுத்தது...அவளுக்கோ தவிப்பாக இருந்தது...ஏனெனில் அவனுடைய பேச்சும் அவனுடைய பார்வையும் அவனுடைய உடையும் உடை எங்கே இருக்கிறது என எண்ணி இது எல்லாம் அவளுக்கு ஒரு தவிப்பை கொடுத்தது அது மட்டும் இன்றி ராகவ் கொடுத்த ட்ரெய்னிங் நன்றாகவே வேலை செய்தது..
அவனோ அவன் கையில் இருக்கும் சிகரட்டை இழுத்து விட்டபடி ,"ஏன்???" என்க
"உங்க கூட பேச கூடாது உங்களை பார்க்க கூடாது உங்க ரூம் கிட்ட கூட போக கூடாது அப்படின்னு சொல்லி இருக்காங்க "
அழகாக கண்ணை உருட்டி உருட்டி கூறும் இவளை அவன் ரசித்தாலும் அதை கூறிய அவனை அவன் ரசிக்கவில்லை... அவன் தான் கூறி இருக்க வேண்டும் என யூகித்தான்...அவனுடைய மனதில் இவள் அவனுடைய தோழியாக இருக்கலாம் என எண்ணினான்...
அதனால் சற்றே கடுப்போடு ,"யார் சொன்னா அந்த நாயா???" என்க
"நாய் இல்லை ராகவ்" அவள் கூற.
அவனோ,"ஓ அந்த நாய் இந்த அளவுக்கு பேசுமா??? என்கிட்ட நேரா சொல்ல பயந்துட்டு உன்கிட்ட எல்லாம் என்னை பத்தி பேசுறானா??? பின்னாடி பேசுற வேலையை அவன் விடவே மாட்டானா???" என நக்கலாக கேட்டான்.. ஏனெனில் தன்னை பார்த்தால் பயந்து நாலடி விலகி நிற்கும் தன்னுடைய தம்பி இவ்வளவு பேசுவானா என எண்ணினான்...
"என்னை பார்த்தா என்கிட்ட பேசினா என்ன ஆகுமாம்???" என அவன் புகையை உள்ளிழுத்து விட்டுக் கொண்டே கேட்டான்... ஏனெனில் அவளிடம் பேச்சு கொடுக்க அவனுக்கு பிடித்திருந்தது...அதை விட அவள் வாயிலிருந்து என்ன வார்த்தை வருகிறது என அறிந்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வந்தது...
"நீங்க கெட்டவங்களாம்.. உங்களுக்கு எல்லா கெட்ட பழக்கமும் இருக்காம்..நீங்க பொண்ணுங்க விசயத்துல ஒரு மாதிரியாம்...தினமும் ஒரு பொண்ணு உங்களுக்கு வேணுமாம்...பொண்ணுங்க கழுத்துல கீழே தான் உங்க பார்வையே போகுமாம்...குடும்ப மானத்தை வாங்க தான் நீங்க இந்த வீட்டில பிறந்து இருக்கீங்களாம்.. அதனால தயவு செஞ்சு என்னோட நாய்க்குட்டி தருகிறீர்களா " என்று அவள் கூற அதை கேட்டவனின் உள்ளம் கொதித்தாலும் இவனுக்கு ஒரு பாடம் கற்பித்தே ஆக வேண்டும் என கருதியவன் ,"ஓ இப்படி எல்லாம் இந்த நாய் சொல்லுச்சா" என அவளை போலவே கண்ணை உருட்டி கேட்டவன்,
அவள் யார் என்பதை மட்டும் கேட்க விட்டுவிட்டான் கேட்க வேண்டும் என அவனுக்கு தோன்றவும் இல்லை அது அவனுடைய வேலையும் இல்லை அவளைப் பார்த்ததும் அவனுக்கு பிடித்திருக்கிறது அவளோடு பேச்சு கொடுக்கிறான் அவ்வளவுதான் ஆனால் தன்னுடைய தம்பியின் மனதில் தனக்கு எந்த அளவுக்கு இடம் இருக்கிறது என இவளுடைய வார்த்தைகளில் இருந்து அவனுக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது..
தன்னுடைய தம்பி போல தன்னுடைய அப்பா கூறிய படிப்பை படித்து அப்பா சொன்ன வார்த்தைகளைப் பிடித்து நடைப்பழகி அப்பாவின் தொழிலை பின்பற்றி அப்பா வளர்த்தி வைத்திருந்த இடத்தில் கோலோச்சி அமர அவன் ஒன்றும் ராகவ் ஜெயமோகன் இல்லை அவன் ஜெகதீஷ் ஜெயமோகன்...
ஜெகதீசுக்கு என்று ஒரு சில வழிமுறைகள் உண்டு அவனால் தந்தை சொல்லை கேட்டு நடக்க முடியாது தந்தை இப்படித்தான் நடக்க வேண்டும் என கோடு போட்டால் அந்த கோட்டின் மீது நடக்க முடியாது அது மட்டும் இன்றி தந்தை தந்தையின் ஆசை கனவுகளை அவன் மீது அதாவது அவர் பெற்ற பிள்ளைகள் மீது திணித்து அதில் வாழ வேண்டும் என அவர் கூறுவதை அவனால் ஏற்க இயலாது..
இதுதான் அவனுக்கும் அவனுடைய தந்தைக்குமான பிரச்சனை அப்படி இருக்க என்று அவன் படிப்பை பாதியில் விட்டுவிட்டு ஜெயமோகனை எதிர்த்து பேசினானோ அன்றே ஜெயமோகன் அவனுடனான பேச்சையும் உறவையும் முடித்துக்கொண்டார்...
அதைப்பற்றி அவனுக்கு கவலை இல்லை அவனும் ஒரு காலத்தில் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என எண்ணிக் கொண்டுதான் இருந்தான்... ஆனால் அந்த புழுக்கத்தில் அவனால் வாழ முடியவில்லை அவருடைய எண்ணங்களும் அவனுடைய தந்தையின் எண்ணங்களும் வேறுவேறாக இருந்தன...
அவனால் அவனுடைய கனவுகளை தந்தையின் வார்த்தைகளுக்குள் அடக்கி விட முடியாது அதனாலேயே தந்தையை எதிர்க்க துவங்கினான்..
அது அவருக்கு பிடிக்கவில்லை அதனால் அவன் உதவாக்கரை ஆகிப்போனான்... வீட்டிற்கு அடங்காத பிள்ளை ஆகிப் போனான் அதைப்பற்றி அவனுக்கு கவலை இல்லை அவனுக்கு அவன் என்ன நினைக்கிறானோ அதுவாக ஆக வேண்டும் அவன் என்ன நினைக்கிறானோ அதுபோல வாழ வேண்டும் அப்படி இருக்க அவனுக்கும் இந்த வீட்டுக்குமான பந்தம் எப்போது முடிந்து விட்டது...
அவனாக ஆசைப்பட்டால் வீட்டிற்கு வருவான் வந்து ஒன்றிரண்டு நாட்கள் தங்கி விட்டு செல்வான் அவனாக அந்த வீட்டின் எந்த விஷயங்களிலும் தலையிட்டு கொள்ள மாட்டான்..அவனிடமும் யாரும் அவன் என்ன செய்கிறான் என கேட்க கூடாது...
வீட்டிலிருந்தெல்லாம் ஒரு பைசா அவன் வாங்குவதில்லை அவனுடைய அப்பாவிடம் எப்பொழுது பேச்சை முடித்துக் கொண்டானோ அப்போது அவன் வீட்டிலிருந்து பணம் வாங்குவதை நிறுத்தி கொண்டான் அவன் என்ன செய்து சம்பாதிக்கிறான் என அவனுக்கு மட்டும் தான் தெரியும் யாருக்கும் தெரியாது.. ஆனால் இன்றளவும் ஒரு நிரந்தர சம்பளம் என அவனுக்கு கிடையாது அது மட்டும் ஊர்ஜிதம்...
முதலில் எல்லாம் தந்தையை எதிர்த்து பேசாதவன் நாளாக நாளாக அவர் தொடர்ந்து அவனை அவமதிக்க செய்யும் வேலைகளில் அவரை எதிர்த்து பேசவும் துவங்கி விட்டான் அதற்கு முக்கிய காரணம் ராகவ் தான்..
ராகவ் சிறுவயதில் இருக்கும் பொழுது தன்னுடைய அண்ணன் எப்பொழுதும் அவனை விளையாடும்போதும் சரி ஏதாவது டிவி பார்க்கும் போதும் சரி ஜெகதீஷ் அவனை அடித்துக்கொண்டே இருப்பான்...
அப்படி துவங்கிய வெறுப்பு ராகவ்வின் மனதுக்குள் வெறுப்பு விருட்சமாகியது.. அதற்கு காரணம் ஒவ்வொரு முறையும் தன்னுடைய தந்தை ஜெகதீஷை திட்டும் போதெல்லாம் அதற்கு பலியாடு ஆக மாறுவது என்னவோ ராகவ்வாக இருக்க, ராகவ்வும் மிக நல்லவன் என்று கூறுவதற்கில்லை..
இவன் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு எல்லாம் தன் தந்தையிடம் போய் எல்லாம் ஒப்புவித்து தன்னுடைய சிறு வயது முதலே அண்ணனை திட்டுவாங்க வைத்துக்கொண்டு இருக்கும் ஒரு நல்ல மகான் தான் ராகவ்..
அப்படி இருக்க இவன் அவனை அடிக்க அவன் தன் தந்தையிடம் ஜெகதீஷ் பற்றி போட்டுக் கொடுக்க என அமோகமாக ஆரம்பித்த இவர்களின் வெறுப்பு நாளாக ராகவ்வுக்கு தன் தந்தையிடம் நல்ல பெயர் வாங்கி அந்தப் பெயரை வைத்து தன்னுடைய தந்தை அண்ணனை மட்டம் தட்டுவது பிடித்து இருந்தது... அதனாலேயே தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என அவர் என்ன வார்த்தை கூறினாலும் திறன் பட அதேயே செய்து வந்தான்...
அப்படி அப்பா கூறிய படிப்பை படித்தான்... அப்பா கூறிய வேலையில் இறங்கினான் அதாவது அவர்களின் குடும்பத் தொழிலான ஜவுளிக்கடையை பார்த்துக் கொண்டான்... இப்படி ஜெயமோகனின் வாரிசாக ராகவ் மாறவும் இங்கே ஜெகதீஷ் தனக்கு என்ன வேண்டும் தான் என்ன செய்யப் போகிறோம் தனக்கு என்ன பிடித்து இருக்கிறது என தெரியாமல் என்ன கனவுகளுக்குள் செல்ல போகிறோம் என புரியாமல் இரண்டும் கெட்டான் நிலைமையாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிற்கு வேண்டாதவனாக குடும்பத்துக்கு ஆகாதவனாக மாறினான்..
ஜெயமோகனுக்கும் தன் மகனுக்கு என்ன வேண்டும் என கேட்க தோன்றவில்லை அவனுக்கும் தனக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாக தன் தந்தையிடம் சொல்ல தோன்ற வில்லை...அதனாலயே தந்தை மகனுக்கும் இடையே விரிசல் வந்து விட்டது...
அந்த விரிசல் இப்போது எதுவரை நீண்டு இருக்கிறது என்றால் மூத்த மகன் இருந்து இரண்டாவது மகனுக்கு அவர் திருமணம் செய்வதை காட்டிலும் மூத்த மகனுக்கு இப்படி ஒரு காரியம் நடக்கிறது என்று கூட சொல்லாமல் இருக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறது...
அதை விட இதோ இவள் யாரென்று கூட அவனுக்கு தெரியாது அவள் வாயில் இப்படி ஒரு வார்த்தை வரும் அளவுக்கு தான் தன்னை மதிக்கிறார்கள் என எண்ணினான்...
இதனால் தான் அவன் தன் குணத்தை இப்படி மாற்றி கொண்டான் தனக்கு என்ன தோன்றுகிறதோ அது போல நடக்க துவங்கி விட்டான்...இதனால் எல்லாம் அவன் நல்லவன் என்ற முத்திரையில் அவன் வர மாட்டான் என்றாலும் அவன் அப்படி ஒன்றும் கெட்டவனும் இல்லை...மேலும் தந்தையின் புறகணிப்பால் பல நல்ல பழக்கங்களை பழகியும் வைத்து இருக்கிறான்...அதை திறன்பட செயலாற்றவும் செய்வான்...
அதனால் தனக்கு நேரே தன்னை பற்றி குற்றம் கூறிய அவளை அப்படியே விட அவனுக்கு மனம் இல்லை... தன் கையில் உள்ள சிகரெட்டை பிடித்தபடி அவள் அருகே நெருங்கி வந்தவன் அவன் கையில் உள்ள கடைசி பப்பை இழுத்து விட்டவன் அவளின் முகம் நோக்கி குனிந்து அவளின் இதழோடு தன் இதழை பதித்தான்...நொடி பொழுதில் அதை செய்து விட்டான் முத்தம் இட வேண்டும் என்றே தான் இதை செய்தான்...
அவள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவன் செயலால் அவளின் கை கால்கள் நடுங்கத் துவங்க இவனது செய்கையில் அதிர்ந்த அவளோ அவனது உடையை இறுக்கமாக பிடித்து விலக்க பார்க்க அவன் முத்தமிட்ட அடுத்த நொடியே அவன் விலகி நின்று கொண்டான்.. அவன் அவள் அருகே வந்தபோது அவனுடைய நாசி நிறைய சிகரெட் நெடியும் அது அவளுடைய நுரையீரலுக்குள்ளும் சென்றுவிட முதலில் இறுமி தன் தலையை அவன் செய்த செய்கையின் அதிர்ச்சி மாறாமல் தலையில் தட்டி கொள்ள,
அவனோ அதை கண்டு கொள்ளாதபடி அவளுடைய நாயை இறக்கி விட்டவன் ," இந்த வீட்டு நாய் கிட்ட போய் சொல்லு நான் உன்னுடைய கழுத்துக்கு கீழே பார்க்கலை. கழுத்துக்கு மேலே தான் பார்த்தேன் என்று சொல்லு...அப்படியே அதுக்கு சாட்சி நீ தான்னு சொல்லு" என்று கூறினான்...
அதைக் கேட்டு அவளோ அதிர அவனும் ,"இன்னும் ரெண்டு நிமிஷத்துல நீ இந்த ரூமை விட்டு வெளியே போகவில்லைன்னா நான் டிரஸ் மாத்திறதையும் நீ பார்க்க வேண்டி இருக்கும்" என்று கூலாக அவன் கூறினான்...
அவன் ஏதோ அவள் மீது அவனுக்கு தோன்றிய அந்த நொடி உணர்வை வெளிப்படுத்த முத்தமிட்டு விட்டான் அதைவிட முக்கியமான விஷயம் தன்னை குற்றம் சாற்றிய தன் தம்பியின் மூக்கை உடைக்க வேண்டும் அவன் சொல்வது சரிதான் என புரிய வைக்கத்தான் அப்படி செய்தான் இதை போல் இவள் அவனிடம் கூறுவான் இல்லையா அப்போது பார்த்துக் கொள்ளலாம் அவனை ஒரு கை பார்த்துவிட்டு தான் இந்த முறை செல்ல வேண்டும் என முடிவு செய்து தான் அவளை முத்தமிட்டான் ஆனால் அவள் பதறவும் அவன் லேசாக அதிரத்தான் செய்தான்...
அதைவிட அவளை முத்தமிட்டது அவனுக்கு பிடித்திருந்தது மேலும் அவளோடு மீண்டும் ஒரு முத்த உரையாடல் நடத்தத்தான் அவனுடைய உடல் கெஞ்சியது அதை தடுக்கத்தான் அவன் அவ்வாறு பேசினான் இனியும் அவள் இங்கு நின்று கொண்டு இருந்தால் வேறு ஏதாவது செய்தாலும் செய்து விடுவான் அப்படி இருக்கத்தான் அவளை விரட்ட வேண்டும் என்று கருதி அவன் வார்த்தைகளை விட்டான்...
அவனுடைய கோலத்தையும் அவன் சற்று முன் செய்த காரியத்தையும் ராகவ் கூறியது உண்மைதான் இவன் மகா மோசம் என எண்ணியவள் ,"இவ என்ன மனுஷனா இவன் என்ன மேக் பண்றதை எல்லாம் பண்ணிட்டு எப்படி இவனால எதுவுமே நடக்காத மாதிரி இருக்க முடியுது...நான் யார்ன்னு இவனுக்கு தெரிஞ்சும் இப்படி ஒரு காரியத்தை செய்து இருக்கிறான்" என எண்ணி உடனே அவ்விடத்தை விட்டு தலை தெறிக்க அவள் ஓட அவளின் செய்கையை எண்ணியும் அவளுடைய இதழை தீண்டியதை எண்ணி அவனுடைய இதழ்கள் இலேசாக விரிந்து," நாட் பேட் வெரி இன்ட்ரஸ்டிங்" என தன் நனைந்த முடியை கோதி விட்டபடி கூறி கொண்டான்...
