அத்தியாயம் 15
கிட்டதட்ட ஐந்து வருடங்களுக்கு முன்பு
தன்னுடைய நீண்ட நாள் நண்பனான ஜெய மோகனை தீடிரென சந்தித்த மகிழ்ச்சியில்,"இது தான் பொண்ணு" என தன் மகளை அறிமுகப்படுத்தினார் தர்மலிங்கம்...
"அடடே உனக்கு இவ்ளோ பெரிய பொண்ணு இருக்கா என்ன???" என ஆச்சரியமாக சுபத்ராவை பார்த்தார் ஜெயமோகன்...
"ஆமாம் டா என்ன இப்படி சொல்லிட்ட எனக்கு இருக்கிற ஒரே பொண்ணு என்னோட செல்ல பொண்ணு இவ தான்" என்க
அவளும் தன் அப்பாவின் தோளில் சாய்ந்தபடி நின்று கொண்டு இருந்தாள்..."உன் பொண்ணு ரொம்ப பெரிசா வளர்ந்துட்டா" என கூற தர்மலிங்கம் பெருமையாக சிரித்தார்...
"என்ன பண்றா உன் பொண்ணு"
" இந்த வருசத்தோட படிப்பு முடியுது இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு அதுக்கு பிறகு நல்ல வரன் பார்த்து கல்யாணம் பண்ணி கொடுக்கணும்" என்க
தன் தந்தையின் தோளில் சாய்ந்து இருந்த அவளோ தன் தந்தையைப் பார்த்து முறைக்க அவரோ மகளை பார்த்து சிரித்து கொண்டே தன் நண்பனிடம்," அவளுக்கு ஜாகத்தில் தோஷம் இருக்கு இப்போ பண்ணலன்னா ஏதோ நடக்க கூடாது எல்லாம் நடக்கும்னு ஜோசியக்காரன் வேற பயப்படுத்திட்டான்...அதுனால பார்க்கணும் கட்டி கொடுக்க மனசு இல்லனாலும் கட்டி கொடுத்து தானே ஆகணும் பெண் பிள்ளை ஆகிடுச்சே" என்று அவர் கூற அதை கேட்டு சிரித்த ஜெய மோகன்," அது எல்லாம் வாஸ்தவம் தான் நானும் என்னோட இரண்டாவது பையனுக்கு பொண்ணு பார்த்திட்டு இருக்கேன் டா" என தன்னுடைய பால்ய கால நண்பனை தீடிரென்று கோவிலில் பார்த்த சந்தோஷத்தில் தன் குடும்ப கதையை பேசி கொண்டிருந்தார் ஜெய மோகன்...
"ஆமாம் உன் மூத்த பையனுக்கு கல்யாணம் ஆகிடுச்சா??? அவன் என்ன பண்றான்..உன்னோட பிசினஸ் பார்த்துக்கிறானா" என கேட்டார் தர்ம லிங்கம்...
அதை கேட்டதும் அவருடைய முகம் இயல்பை தொலைத்து இறுகி போனது...
தன் நண்பனின் முகம் போன போக்கை பார்த்த தர்ம லிங்கம்," என்ன டா நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேன்னா??" என்க
"இல்லை டா நீ ஒன்னும் தப்பா கேட்கல எனக்கு தான் அவனை பத்தி சொல்ல ஒன்னும் இல்லை அதான் யோசிச்சேன்.." என்க
"அவன் யார் சொன்ன பேச்சும் கேட்காம இருக்கான் அவனை பத்தி பேச எதுவும் இல்லை சுருக்கமா சொல்லனும்னா வேலை வெட்டிக்கு போகாமல் படிக்க வைச்ச படிப்பை படிக்காமல் பாதியில் விட்டு குடும்ப தொழிலையும் பார்க்காமல் ஊதாரித்தனமாக சுத்திட்டு இருக்கான்" என்க
அதை கேட்ட தர்ம லிங்கம் இதற்கு மேல் என்ன சொல்வது என தெரியாமல் ,"சரி விடு இந்த காலத்து பசங்க அப்படி தான் போக போக சரி ஆகிடுவாங்க" என்றவர் ,"இரண்டாவது பையன் என்ன பண்றான்???" என கேட்க
"அவன் என்னோட துணிக்கடையை பார்த்துட்டு இருக்கான் ஃபேஷன் டெக்னாஜி படிச்சு இருக்கான் அவன் சொக்க தங்கம் என் பையனு சொல்றேன்னு நினைக்காத கடினமான உழைப்பாளி" என தன்னுடைய சிறிய மகனை பேச அவருக்கு ஆயிரம் வார்த்தைகள் இருந்தன..
அப்படியே பேசி பேசி ராகவ்வுக்கு சுபத்ராவை கல்யாணம் செய்து கொடுத்தால் என்ன என்பது அளவுக்கு பேச்சு நீண்டது...தர்ம லிங்கத்துக்கும் அந்த பேச்சு பிடித்து இருக்க அடுத்த வாரமே இரு குடும்பமும் ஒரு கோவிலில் வைத்து சந்தித்தனர்...
ராகவ் அவனுக்கு அவனுடைய அப்பா சொல்வதே வேத வாக்கு அப்படி இருக்க அவனுக்கு சுபத்ராவை பிடிக்காமல் போக வாய்ப்புகள் இல்லை.. அதே போல தான் அவளுக்கும் அவளுடைய பெற்றோர் கூறுவது தான் வேத வாக்கு அப்படி இருக்க அவளுக்கும் விருப்பம் ஆனது...
பிறகு இரு குடும்பத்துக்கும் இந்த சம்பந்தம் நிறைவை கொடுத்தது ஒரு நல்ல நாளில் நிச்சயதா்த்தம் வைத்து கொள்ளலாம் என முடிவு செய்து விட்டனர்...
சுபத்ராவுக்கு ராகவ்வை பிடித்து இருந்தது...ஆனால் என்ன அவன் எப்போதும் அவளுக்கு அட்வைஸ் மட்டுமே செய்வான் அவளுடைய கண்ணுக்கு அவன் கணவனாக போகிறான் என்பதை விட அவளுக்கு ஒரு நல்ல நண்பனாக தான் அவள் எண்ணினாள்... போக போக அவன் மீது கணவன் என்ற எண்ணமும் வரும் என அவள் எண்ணி கொண்டாள்...
"ஆமாம் உங்க அண்ணன் எங்கே??? நானும் உங்க வீட்டுக்கு பல தடவை வந்து இருக்கேன் ஆனா ஒரு தடவை கூட அவரை பார்த்ததே இல்லையே" என்க
"அவனை பத்தி எதுக்கு பேசுற அவன் ஒரு உதவாக்கரை எதுக்குமே உதவி இல்லாதவன் ...ஒரு பொறம்போக்கு லுக் அவனை பத்தி என்கிட்ட கேட்காத அவனை எனக்கு சுத்தமா பிடிக்காது...அவனுக்கு இன்னும் நமக்கு பேசின சம்பந்ததை பத்தி தெரியாது" என்க
"ஏன் தெரியாது"
"அவன் எங்கே இருக்கான்னு யாருக்கு தெரியும் எப்போ வருவான்னு கூட யாருக்கும் தெரியாது.. ஒருவேளை நம்ம விஷயத்துல அவனை நீ பார்த்தா இல்ல எப்பவாவது நம்ம வீட்டுக்கு நீ வரும்போது அவனை பார்த்தா அவன் கிட்ட நீ பேசவே கூடாது... என்னுடைய அண்ணன் அப்படிங்கறதுக்காக சொல்லல இருப்பதிலேயே மோசமானவன் அவன் புரியுதா" என்று எச்சரிக்கை செய்தான்... அவன் மனதில் இருக்கும் தன் அண்ணனுடான கசப்பை தன்னுடைய வருங்கால மனைவியிடமும் பகிர அவன் முனைந்தான்...
ஆனால் அவள் அந்த எச்சரிக்கையை மீறுவாள் என அவளுக்கு அந்த நேரம் தெரியாது அவன் கூறியதற்கு எல்லாம் மாங்கு மாங்கு என்று தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் சுபத்ரா...
ஒரு வழியாக சுபத்ராவின் படிப்பு முடிந்து விட்டது ரேவதிக்கு தான் சுபத்ராவை கண்டதுமே பிடித்து விட்டது... சதா எந்த நேரம் பார்த்தாலும் சுபத்ராவை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து விடுவார்...
பெண் பிள்ளை இல்லாத சோகத்தை இவளை வைத்து தீர்த்துக் கொள்ள ஏதாவது ஒரு உணவு செய்தால் போதும் அந்த நேரம் அவளை அழைத்து வந்து," ஒரு வாய் சாப்பிட்டு போ மா" என்று அழைத்து விடுவார்...
ராணி எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பதால் அவளுக்கு அவளின் மாமியார் ஆக வர இருக்கும் ரேவதி மீது ஒரு பிடித்தம் வந்தது அதனால் அவளும் சதா எந்த நேரம் பார்க்காமல் ஜெயமோகனின் வீட்டிற்கு வந்து விடுவாள் ஜெயமோகனுக்கும் அவள் வருவது மிகவும் விருப்பமான விஷயமாக மாறிவிட்டது...
நல்ல வேளையாக அவளுடைய படிப்பும் முடிந்து விட்டது.. இவள் இந்த வீட்டு ஆட்களோடு பழகி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்டது இன்று வரை அவள் அந்த வீட்டில் எல்லா அறைக்கு சென்று இருந்தாலும் அந்த ஒரு அறைக்கு மட்டும் செல்வது இல்லை..
இன்னும் அவர்களுக்கு நிச்சயம் செய்யவில்லை அடுத்த மாதம் தான் நிச்சயம் செய்யலாம் என பெரியவர்கள் முடிவு செய்திருந்தார்கள் அவளுடைய படிப்பு முடியட்டும் என்றுதான் காத்து இருந்தார்கள்..
அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் இவர்களின் மூத்த மகனை அவள் கண்டது கூட இல்லை பார்க்கும் வாய்ப்பு அமையவும் இல்லை ராகவ்விடம் கேட்டால் அவனோ ஏதாவது அண்ணனை பற்றி குறை கூற துவங்கி விடுவான் அதனால் அவள் வாயே திறப்பதில்லை...
அப்படி ஒரு நாள் அவள் அங்கு வந்து இருந்தாள் அவள் வளர்க்கும் ஜூ ஜூவுடன் அது அவளுடைய செல்ல நாய் அவள் எங்கு சென்றாலும் அந்த நாய் குட்டியுடன் தான் செல்வாள் அப்படி இருக்க எப்போதும் போல ரேவதி ,"பிரியாணி செய்து இருக்கிறேன் வா இன்னிக்கு ஸ்பெஷலா நிறைய ஃபுட்டு செஞ்சிருக்கேன் வா வந்து சாப்பிட்டு போ மா" என்று அழைத்திருந்தார்...அவள் அதற்காக வந்து இருந்தாள் என்ன ஸ்பெஷல் என்று அவளும் கேட்க மறந்து விட்டாள்...
தர்மலிங்கமும் ராணியும் ஹோட்டல் பிசினஸில் இருப்பதால் அவர்களுக்கு இவளை கவனித்துக் கொள்ள முடியாத நிலை மேலும் ரேவதி வீட்டிற்கு செல்வது என்றால் கல்யாணம் செய்து அங்குதானே வாழப் போகிறாள் என தைரியமாக அனுப்பி வைத்து விடுவார்கள் அதனால் அவர்களும் அனுப்பி வைத்து விட ரேவதி வீட்டிற்கு செல்வதென்றால் அங்கு தடையே இருக்காது அவளும் தைரியமாக வந்து விடுவாள்...
எப்போதும் போல வீட்டிற்கு வந்தவள் ரேவதியை தேடி சமையல்கட்டுக்கு தன் நாயை தூக்கிக்கொண்டு சென்று விட்டாள்..
"ஏய் சுபி தங்கம் வந்துட்டியா???" என்று கூற ,"என்ன அத்தை இன்னைக்கு ரொம்ப தடபுடல் விருந்து சமைச்சு இருக்கீங்க" என்று கேட்கவும் அவரோ சமையல் கட்டில் இருந்து எட்டி யாராவது வருகிறார்களா என வெளியே பார்த்தவர் பிறகு மெல்லிய குரலில் ,"ஜெகதீஷ் வந்திருக்கான் அதனாலதான் அவனுக்கு பிடிச்ச புட்டா செஞ்சிருக்கேன்" என்று கூறினார்..
அதை கேட்டதும் அவளுக்கோ ஒரே படபடப்பு அவனை பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆசை எழுந்தது... இதனால் வரை அவன் முகம் எப்படி இருக்கும் என்று கூட அவள் பார்த்ததில்லை அவளுக்கு அவனைக் காண வேண்டும் என்ற அவா இருந்தது... போட்டோவில் மட்டும் தான் பார்த்து இருக்கிறாள் அவனுடைய குரல் எப்படி இருக்கும் என்று கூட அவளுக்கு தெரியாது..
அப்படி இருக்க அவன் கீழே வருவானா என எதிர் பார்த்து கொண்டே இருந்தாள்...ஒரு முறை ரேவதி அவருடைய ஃபோனில் தன்னுடைய மூத்த மகனை காட்டி இருக்கிறார்...அவன் அவளை இதுவரை பார்த்தது இல்லை...அப்படி இருக்க அவன் வந்து இருக்கிறான் என்பதை அறிந்தது முதல் அவளுக்கு அவனை பார்க்க வேண்டும் என அவனது அறையை மேலே எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தாள்...
அனைவரும் உண்ணும் போது கூட அவன் வரவில்லை..அவன் வந்து இருக்கிறான் என்றதுமே ராகவ் மிகவும் இறுகிய முகத்தோடு இருந்தான்...ஜெகதீஷ் என்னவோ அவனுடைய அறையில் தான் இருக்கிறான் என்றும் கூட என்னவோ இவன் அவன் வந்து சண்டை போட்டது போல இறுகி போய் இருந்தான்...
அப்படி இருக்க அவளை அங்கு கண்டவன் கோபத்தோடு,"இதோ பார் நான் சொன்னேன்ல அவன் வந்து இருக்கான் அவன் கூட நீ பேசுறத பார்த்தேன் அவ்ளோ தான் புரியுதா" என கூறினான்...அவன் தன் அண்ணனுடன் பேச மாட்டான் அதனால் அவளும் பேச கூடாது என கூற அவளும் சரி என தலையாட்டினாள்..அது என்னவோ அவளுக்கு ராகவ்விடம் பிடிக்கவில்லை என்றாலும் அமைதியாக இருந்தாள்...யாருடன் பேச வேண்டும் யாருடன் பேச கூடாது என்பதை அவள் தானே முடிவு செய்ய வேண்டும் இதில் கூட இவனுடைய பேச்சை கேட்க வேண்டுமா என எண்ணினாள்...
அவனும் மதிய உணவை உண்டு விட்டு நேராக துணிக்கடைக்கு சென்று விட்டான்...அப்படி இருக்க சாப்பிடும் போதாவது வருவாங்கன்னு பார்த்தேன் அப்ப கூட அவங்க வரலையே என எண்ணி கொண்டே அவள் அமர்ந்து இருக்க , அவளுடைய மனதை அவள் கையில் உள்ள அவளின் ஜூ ஜூ கேட்டு விட்டதோ என்னவோ அவளின் ஜூ ஜூ அவள் கையில் இருந்து துள்ளி குதித்து ஓடியது... ரேவதியும் அவளும் மட்டும் தான் வீட்டில் இருக்க அவரோ யாரோ ஒருவருடன் ஃபோனில் பேசி கொண்டு இருக்க நாய் ஓடவும் அதன் பின்னே அவள் ஓடுவதை பார்த்து சிரித்த படியே ஃபோனில் கதை அளந்து கொண்டிருந்தார்...
"ஏய் ஜூ ஜூ அங்க போகாத" என கூறிக் கொண்டே சுபத்ரா அவள் வளர்க்கும் நாயின் பின்னால் ஓடினாள்... அந்த நாயோ அங்கும் இங்கும் என எல்லா பக்கமும் அவளை ஓட வைக்க அவளும் அதன் பின்னாலேயே ஓடினாள்.. அது ஒரு வழியாக மாடியில் செல்லும் படிக்கட்டில் ஏற அவளுக்கு திக் என்று ஆனது," ஏய் அங்க போகாத நில்லு" என அவள் பதறிக்கொண்டு நாயின் பின்னாலேயே போனாள்...
அந்த நாயோ அவளின் சொல் பேச்சு கேட்காமல் ஒரு அறைக்குள் நுழைந்து கொள்ள," ஐயோ அங்க போகாத" என அவள் கத்திக் கொண்டே வர அந்த நாயோ சமத்தாக அந்த அறைக்குள் நுழைந்து கொண்டது...
"அய்யய்யோ இது அவனோட ரூம் ஆச்சே இப்ப என்ன பண்றது" என கூறிக்கொண்டவள் சத்தத்தை காணோம் போய் மெல்ல ஜுஜூவை கூட்டிட்டு வந்துடுவோம் என்று எண்ணி திறந்திருந்த அந்த அறைக்குள் நுழைந்தாள்...
அங்கு அவள் கண்ட காட்சி அவளை அதிர்ச்சி அடைய வைத்தது...ஆம் அவள் இடுப்பில் டவல் மட்டும் காட்டு கொண்டு ஜெகதீஷ் நின்று கொண்டிருக்க, அவனை பார்த்ததும் அவள் அதிர்ந்தாள்..
அவன் குளித்து விட்டு தான் வந்து இருக்கிறான் என்பதை பறை சாற்றும் விதமாக அவனின் தலை நனைந்து இருக்க அவனின் உடலிலும் ஆங்காங்கே நீர் குமிழிகள் இருக்க தனது சிக்ஸ் பேக்கின் படிக்கட்டுளோடு அவன் நின்று கொண்டிருக்க அவனுடைய கையில் அவளின் நாயை கண்டதும் அவளுக்கு தூக்கி வாரி போட்டது... இப்படியா அவனை காண வேண்டும் முதன் முறையாக இருவரின் சந்திப்பும் இப்படியா அமைய வேண்டும் என எண்ணினாள்..
அவனை பல நாட்களுக்கு பிறகு பார்க்கிறாள்... இந்த வீட்டில் அவள் வரத் தொடங்கி மூன்று மாத காலம் ஆகிவிட்டது அவனை இதனால் வரை பார்த்ததே இல்லை இப்பொழுது தான் பார்க்கிறாள்.... இப்போது தான் அவனை முதன் முறையாக பார்க்கிறாள்.. அப்போதும் கூட இவன் இந்த கோலத்தில் இருக்க வேண்டுமா என அவளுடைய மனம் எண்ணினாலும் அதே நொடி ராகவ் அவளிடம் கூறியது நினைவு வர உடனே அவனை கண்டதும் பயந்து," ஜூ ஜூ இங்கே வா போலாம்" என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் தலை குனிந்து அவள் கூற,
அதை பார்த்த அவனுக்கு இவள் யார் என்று தெரியவில்லை ஆனாலும் அவளை கண்டதும் அவளுடைய அழகு அவனை ஈர்த்தது... ஒற்றை கையில் ஜூ ஜூ அவனது கையை படுக்கையாக எண்ணி அந்த கையில் அவளுடைய நாய்க்குட்டி படுத்து இருக்க அதை வாகாக தூக்கிப் பிடித்தபடி அவன் அவள் அருகே வந்தான்...
அவன் என்னமோ எதார்த்தமாக தான் வந்தான்...ஆனால் அவளோ பட்டென்று வேகமாக நாலடி தள்ளி நிற்கவும் அவனுடைய நக்கல் பார்வையோடு நாயை ஒரு கையில் பிடித்தபடி அவளுக்கு அருகே இருக்கும் டேபிள் அருகே சென்றான்... தனது மற்றொரு கையால் சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான்..அவளை மேலும் கீழுமாக அளவிட்டான்... யாரிவள் என அவனுக்கு தெரியவில்லை ஆனாலும் அவளின் விலகல் அவனுடைய ஈகோவை தட்டி எழுப்பியது...
பின் அதை பற்ற வைத்தவன் அவளை பார்த்து நீ என கேட்டான்..
நான் ராகவ்வுக்கு பார்த்து இருக்கும் பெண் என வாய் திறந்து அவள் கூற எண்ணினாலும் ஆமாம் இவனுக்கு என்னை தெரியவே தெரியாது பொறுக்கி அவங்க வீட்ல யாரும் என்னை பத்தி சொல்லி இருக்க மாட்டாங்களா என்ன?? என்று மனதுக்குள் கூறியவாறு," ஜூஜூவை குடுங்க நான் போகணும்..." என்றாள்...
"யார் ஜூ ஜூ???" என்றான்...அவள் யார் என்று இன்னும் கூறவில்லை என்பதை அவன் குறித்து வைத்து கொண்டான் இனி அவன் கேட்க போவதும் இல்லை...அது வேறு விசயம்!!!
"உங்க கையில் இருக்கிற என்னோட நாய் பெயர் ஜூஜூ கொஞ்சம் ஜூ ஜூ வை தாங்க நான் போகணும் இங்கே உங்க கூட நிக்கிறதை பார்த்தா யாராவது தப்பா நினைப்பாங்க" என்று அவள் கொஞ்சி கூற, அதில் அவன் மனம் மேலும் அவள் பக்கம் சாய்ந்தது...அதை விட அவள் கூறிய கடைசி வார்த்தை அவனை மேலும் உசுப்பி விட்டது..
"ஓஹோ உன்கிட்ட வந்தா கூட்டிட்டு போ" என்க
அவனோ இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு நின்று கொண்டிருக்க இந்த நிலையில் எப்படி அவன் அருகே செல்வது என அவள் நின்ற இடத்தில் நின்றாள்...
