அத்தியாயம் 14
"ஜெகதீஷ் போன படம் மாதிரி இந்த படமும் பட்டையை கிளப்பணும் பட்டி தொட்டி எல்லாம் நம்ம படம்தான் நின்னு பேசணும் அந்த மாதிரி ஒரு படம் பண்ணி குடுங்க" என்று ப்ரொடியூசர் தயாளன் கூற
"சார் ஸ்கிரிப்ட் புக் படிச்சு பாருங்க இந்த கதை பிடிச்சிருந்தா நாம மேற்கொண்டு பேசுவோம்" என்று கூறி ராம் கொடுத்த ஸ்கிரிப்ட் புக்கை அவர் முன்னே நீட்டினான் ஜெகதீஷ்...
"என்ன ஸ்கிரிப்ட் நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ நான் எதுவும் கேட்க கேட்டேன் நீ அப்புறம் சத்ய தேவ் இந்த இரண்டு காம்போ தான் வேணும் நானும் கொஞ்சம் கல்லா கட்டிகிறேன்" என கூற அதை கேட்டு சிரித்த அவன் ,"அப்போ என்ன கதை என்று கூட கேட்க மாட்டீங்களா ???" என கேட்டான்..
"லுக் ஜெகதீஷ் எனக்கு கதை இல்ல நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணனும் அது ஹிட் ஆகணும் அது மட்டும் தான் விஷயம் இப்ப கூட உன்னை மீட்டிங்கு கூப்பிட்டது நான் எல்லாமே அரேஞ்ச் பண்ண ஆரம்பிச்சிட்டேன்னு சொல்லத்தான்" என்று கூறிக் கொண்டிருக்கும்போது தயாளனின் உதவியாளர்," சார் அந்த புரொடெக்ஷன் புட்டுக்கு சொல்லி இருந்தீங்களே அவங்க வந்து இருக்காங்க" என கூற
"வர சொல்லு" என கூறியவர் ,"பார்த்தியா புரோடக்ஷன் ஃபுட் வேற நான் அரேஞ்ச் பண்ண தொடங்கிட்டேன்" என கூற அவன் எதுவும் பேசவில்லை...
இனி நம் வேலை முடிந்து விட்டது என ராமிடம் கண் பார்வையாலே போலாம் என அவன் கூறும் முன் உள்ளே நுழைந்தாள் சுபத்ரா...
அங்கு அவளை காணவும் கண்ணில் தெரிந்த ஆச்சரியத்தை உள்ளடக்கி அங்கேயே அமர்ந்து விட்டான் ஜெகதீஷ்...
அவளை கண்டதும் தயாளன்," வா மா வா உன் பேர் என்ன???" என்க
"சுபத்ரா சார்" என்றாள் தயாளனின் பார்வை தாராளமாக அவள் மீது படிந்து மீண்டது...அதை ஜெகதீஷ் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்...
"நான் உங்க அப்பா காலத்துல இருந்து உங்க ஹோட்டல்ல சாப்பிட்டு இருக்கேன் இங்க பாத்தியா அடுத்த படம் மிஸ்டர் ஜெகதீஷ் அப்புறம் சத்யதேவ் சார் காம்போ அதுல நீங்க தான் சமைக்க போறீங்க உங்களுக்கு ஓகே தானே உங்களுக்கு ஓகே இல்லாமல் எங்க போயிட போகுது இவ்வளவு பெரிய ஆஃபர் கொடுத்து இருக்கேன் நீங்க வேண்டாம்னா சொல்ல போறீங்க???" என்று தயாளன் கேட்க,
அவளுக்கு ராம் மற்றும் ஜெகதீஷை பார்த்ததும் அதிர்ச்சி தான் அந்த அதிர்ச்சியை மறைக்க அவள் அரும்பாடு பட்டாள்.. அதைவிட இவர்களை புகழ்த்தி இவளை தாழ்த்தி இந்த ப்ரொடியூசர் பேசுவது போல அவளுக்கு தோன்றினாலும் இது போன்ற பல கஷ்டங்களை அவள் பார்த்து இருப்பதால் தன் வாயை அடக்கி கொண்டாள் மேலும் அவளுக்கு ஒரு சந்தேகம்,"இது கூட இவனுடைய வேலை தானா" என்று எண்ணி கோபம் அவளுக்கு வந்தது...
ஆம் காலையில் அவளுக்காக அவளுடைய தந்தையிடம் அவன் பேசியதும் இதோ இப்பொழுது இந்த ஆஃபர் கூட இவன் மூலமாக ஏன் வந்திருக்கக் கூடாது இவன் ஏன் தன்னை சுற்றி சுற்றி வருகிறான் என எண்ணி கடுப்பு ஆகி அவள் நின்று கொண்டிருந்தாள்...
ஆனால் உண்மையில் அவனுக்கு அவள் வருவது தெரியாது அப்படி இருக்க அவள் என்ன பேசப் போகிறாள் என்பதை அறிவதற்காக அவனும் அங்கேயே அமர்ந்து விட்டான்...
காலையிலேயே சரவணன் அழைத்து இப்படி ஒரு புரொடியூசர் ஆபீஸிலிருந்து அழைக்கிறார்கள் என்று கூறியதுமே பெரிய ஆர்டர் என எண்ணி அவள் வந்தாள்..
இது போன்ற பெரிய பெரிய ஆர்டர்கள் அவர்களின் ஹோட்டல் செய்து கொடுப்பதுண்டு அதுபோல அவளும் வந்திருக்க இங்கே இவனை சந்திப்போம் என அவள் எதிர்பார்க்கவில்லை அவனை பார்த்து லேசாக அவனுக்கு மட்டும் புரிவது போல அவனை முறைத்தாள் சுபத்ரா..
அவனோ அதை கண்டு கொள்ளாமல் அமர்ந்து இருக்க தயாளன் தான்," என்னம்மா பண்றீங்க தான போன தடவை வேறொரு ஹோட்டல் இருந்து வேறு படத்துக்கு புக் பண்ணி இருந்தோம் ஆனால் சாப்பாடு பெருசா நல்லா இல்ல அதனால தான் இந்த தடவை உங்க ஹோட்டலில் ஆர்டர் பண்றோம்" என்று அவர் கூறினார்..
அதை கேட்ட அவளோ ,"நீங்க எங்க ஹோட்டல் மேல வச்சிருக்கற நம்பிக்கைக்கு ரொம்ப நன்றி சார் அதுக்கு பாத்திரமா நாங்க நல்லா சமைச்சு கொடுப்போம்" என்க
"அப்போ ஓகே மா அங்க மேனேஜர் இருப்பாரு அக்ரிமெண்ட்ல கையெழுத்து போட்டுட்டு அட்வான்ஸ் வாங்கிட்டு போங்க அப்புறம் சத்யதேவ் அவருக்கு நல்ல கிராமத்து சமையல் தான் ரொம்ப பிடிக்கும் அதனால வீக்லி ரெண்டு மூணு தடவை கிராமத்து சமையல் சமைக்கிறோம் மத்தபடி மேனேஜர் கிட்ட மெனு முன்னாடி நாளே வாங்கிக்கோங்க அவங்க சொல்ற மெனு செஞ்சு கொடுத்துடுங்க..." என்க
"ஓகே சார்" என அவள் கூற ,"சரி மா நீங்க போங்க மேனேஜர் வெளியே இருப்பார் அவர்கிட்ட பேசிக்கோங்க" என அவளை அனுப்பி வைத்தார்...
அவளும் காலையில் அவளை படுத்தி எடுத்தற்கும் இதோ இந்த வேலை இவனுடைய வேலை தான் என கருதி அவனை முறைத்து கொண்டு அவள் சென்றாள்..
அவனோ மனதுக்குள் ,"போடி போடி போ இது எல்லாம் எத்தனை தடவை இந்த மூஞ்சியை பார்க்கிறது" என எண்ணி கொண்டவன் அமைதியாக இருக்க, தயாளனின் பார்வையோ அவள் சென்ற பின்னும் அவள் பின்னாலேயே தொடர்ந்தது...
" சார் இந்த ஹோட்டல்ல புட் நல்லா இருக்கும் சாப்பிட்டு இருக்கீங்களா??" என தயாளன் ஜெகதீஷை பார்த்து கேட்க அவனோ மனதுக்குள் ,"ஹோட்டல்லயும் சாப்பிட்டு இருக்கேன் ஹோட்டல் ஓனரையும் சாப்பிட்டு இருக்கேன்" என எண்ணி இல்லை சார் சாப்பிட்டது இல்லை" என கூற,
ராம் அவனை ஒரு மாதிரியாக பார்க்க ,"ஏன் டா நீ சாப்பிட்டு இருக்கியா அங்கே புட் எப்படி இருக்கும்" என்று ஒன்றுமே தெரியாதது போல கேட்க அதை பார்த்த அவனோ உலகமகா நடிப்பு டா சாமி என எண்ணி வாயை மூடி கொண்டான்...
தயாளன் வேறு இயல்பாக ,"ஹோட்டல் மட்டும் இல்லை சார் பொண்ணும் ரொம்ப அழகா இருக்கு அதனால தான் ஷெட்யூல்க்கு அந்த பொண்ண நேரடியா வர சொல்லிட்டேன் நாம அப்பப்ப யூஸ் பண்ணிக்கலாம் இல்ல வேலை கொடுக்குறோம்னு சொல்லிட்டா எல்லாரும் வந்துடுவாங்க இப்ப எல்லாம் சினிமா ஹீரோயின்களை விட இவங்க கூட டைம் ஸ்பென்ட் பண்றது தான் நமக்கு சேஃப் பிரச்சனை இருக்காது பாருங்க" என்று மட்டும் தான் அவர் சிரித்தபடி கூறினார்..
அதுவரை பொறுமையாக இருந்த அவனுடைய மனநிலை மாறியது... கட்டிய மனைவியை அல்லவா இவர் படுக்க அழைக்க இருக்கிறா... இந்த ஐந்து வருட சினிமா உலகம் இவனுக்கு பல விஷயங்களை கற்று கொடுத்து இருக்கிறது.. அதில் இந்த அட்ஜஸ்ட்மெண்ட்டும் உள்ளடக்கம் அப்படி இருக்க அது வரை பொறுமையாக இருந்தவன் மனநிலையில் சற்றே விரிசல் வர," டேய் ராம் வெளியே யாரும் வராமல் பார்த்துக்கோ சார் கிட்ட ஒரு விசயம் பேசணும்" என்றான்...
ராமுக்கு தெளிவாக புரிந்து விட்டது என்ன பேசப் போகிறான் என்று ,"சரிடா பார்த்து பேசு" என்று மட்டும் கூறிவிட்டு வெளியே சென்று நின்று கொண்டான் ,"இன்று ப்ரொடியூசர் நிலைமை அதோகதி தான் இந்த படம் இனி நடக்காது" என்று முடிவு கட்டி விட்டான்...
அதற்குள் ஜெகதீஷ் அவனுடைய போனை எடுத்து அவளுடைய எண்ணுக்கு," வெளியே வெயிட் பண்ணு எனக்கு உன்கிட்ட பேசணும் "என மெசேஜ் அனுப்பி விட்டு ,"என்ன சார் சொன்னீங்க" என்று அவன் தன்னுடைய சட்டை கையை லேசாக மடக்கிவிட்டபடி கேட்டான்...
"என்ன சொன்னேன் ஜெகதீஷ் "
"இல்ல இப்ப போன பொண்ணை என்னமோ சொன்னிங்களே???" என்க
"அதுவா ஒரு டே அவ கூட இருக்கணும்னு தோணுச்சுன்னு சொன்னேன்... செம்மையா இருக்கா" என அவர் வர்ணிக்க
"அதுக்கு உன் உடம்புல உயிர் இருக்கணும்" என அவன் கூற
அதை கேட்ட அவரோ அதிர்ந்து ,"என்ன ஜெகதீஷ் என்ன மரியாதை இல்லாம பேசுறீங்க???"
"என் பொண்டாட்டி கூட படுக்கணும்னு சொன்ன உனக்கு எதுக்கு நான் மரியாதை கொடுக்கணும்" என அவன் கூற
அவரோ அதைக்கேட்டு மேலும் அதிர்ந்து ,"என்ன அவங்க உங்க பொண்டாட்டியா" என வார்த்தைகளை ஒவ்வொன்றாக கோர்த்து கூற
"ஆமாம் என் பொண்டாட்டி தான்...ஆள் பார்க்க எப்படி இருக்கா" என்று அவன் கேட்டான் அவருக்கோ முகம் எல்லாம் வியர்க்க துவங்கி விட்டது
"எனக்கு நிஜமாலுமே தெரியாது உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா உங்கள பத்தி எதுவுமே தெரியாது அதனால தெரியாம சொல்லிட்டேன் நீங்க முன்னாடியே சொல்லி இருக்கலாமே" என்று அவர் இதனால் அவன் சினிமாவை வேண்டாம் என நிறுத்தி விடுவானோ என்று பதட்டத்தில் பேச
"அதெல்லாம் இருக்கட்டும் அவ பார்க்க எப்படி இருக்கா" என கேட்க
நல்லா இருக்காங்க குடும்ப பொண்ணு மாதிரி இருக்காங்க"
"அப்படித்தானே இருக்கா இனி உரச ரெடியா இருக்குற பொண்ணுங்க கிட்ட உங்க வேலைய காட்டுங்க அவ என் பொண்டாட்டி என்னோட ரெண்டு பசங்களுக்கு அம்மா அவ கிட்ட வேலைய காட்டுனீங்க டைரக்டர் ஜெகதீஷை தான் உங்களுக்கு தெரியும் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன்னு நீங்க யாரும் பார்த்ததில்லை பார்க்க ஆசைப்பட்டுடாதீங்க" என கூறி அவன் எழ
அவரோ அவனுடனே எழுந்து ஜெகதீஷ் ," என்னை தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க உங்கள பத்தி எதுவுமே தெரியாது இல்லையா அதனால தான் இப்படி ஆயிடுச்சு" என்று தன் தவறை ஒப்புக்கொள்ள அவனும் ,"உங்களுக்கு தெரியாதுங்க அதனாலதான் பொறுமையா பேசினேன்.... சார் எனக்கு பொறுமை எல்லாம் ரொம்ப கம்மி இப்ப கூட அவ புருஷனா உங்களை தூக்கி போட்டு மிதிக்கணும்னு தோணுது ஆனா நாம அடுத்த படத்தை கண்டினியூ பண்ண போறோம் அப்படிங்கறதனால அமைதியா போறேன்" என்று அவன் எச்சரிக்கை செய்துவிட்டு செல்ல அவரோ அவனுடைய பின்னாலேயே வந்து ,"அப்ப இந்த படம் கண்டின்யூ ஆகுது தானே???" என கூற
அவனோ ,"அதுனால தான் என்கிட்ட அடி வாங்காமல் தப்பிச்சு இருக்கீங்க" என்று கூறியவன் ,"உங்க பொண்ணு வயசு இருக்கா அவளை போய் இந்தப் படம் முடியற வரைக்கும் உங்கள நான் எங்கேயும் பார்க்க கூடாது உங்கள பார்த்தேன் படத்தை அதோட மறந்துடுங்க" என்று எச்சரிக்கையுடன் கூறிவிட்டு அவன் வெளியே சென்று விட்டான்...
அவரோ அவன் பேசிய பேச்சில் அதிர்ந்து அப்படியே அமர்ந்து விட்டார் தொழிலுக்கே மோசம் வந்துவிடும் போல இனி அந்த பெண் பக்கமே செல்ல கூடாது இப்போ அவளை வேண்டாம்னு சொன்னா கூட இவன் பிரச்சினை பண்ணுவானோ என்று நீ என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே அமர்ந்து விட்டார்..
வெளியே வந்தவனை பார்த்த ராம் ,"என்னடா இந்த படம் கிடையாதா அந்த ஆளை முடிச்சி கட்டிட்டியா???" என்று கேட்க
"இல்ல இல்ல சாருக்கு சின்ன ஒரு ஷாக் கொடுத்தேன் சார் மறந்துட்டாரு இனி அவ பக்கம் போக மாட்டார்" என்று கூற அதைக் கேட்டு சிரித்த ராம் ,"நான் கூட அவர் மூக்கு வாய ஒடச்சிருப்பேன்னு நினைச்சேன்" என்க
"உடைக்கிறது எல்லாம் பெரிய விஷயமே இல்லடா இப்ப கூட ஒடச்சிட்டு வந்துருவேன் சரி பாவம் போனா போகுதுனு விட்டுட்டேன்" என்றவன் கார் பார்கிங்கில் அவளுடைய காரை பார்த்தவன்," நீ ஒரு நிமிஷம் கார்ல வெயிட் பண்ணு அந்த வெண்ணை மவள ஒரு நாலு வார்த்தை கேட்டுட்டு வரேன்" என்றவன் நேராக அவளுடைய கார் பக்கம் சென்றவன் காருக்குள் ஏறி அமர்ந்து கொண்டான்...
அவனுடைய மெசேஜை பார்த்து தான் அவள் காத்திருக்க அவளுக்கும் அவனிடம் பேச வேண்டி இருந்தது.... அவன் அவளுடைய காருக்குள் ஏறியதும் அவளுக்கு மூச்சு அடைத்தது...முகம் சிவந்தது பழைய நினைவு வந்து அவளுடைய நெஞ்சை தாக்கியது...
அவனோ அதை பற்றி எல்லாம் யோசிக்காமல்," ஏண்டி வேற வேலையே இல்லையா மரியாதையா சொல்லிட்டேன் தேவை இல்லாம இந்த சினிமா பக்கம் எல்லாம் புரொடக்சன் புட் கொடுக்கிறேன்னு சொல்லி வந்துட்டு இருக்காத" என்றான்..
அவளோ மனதுக்குள் எப்படி பொய் சொல்றான் பார் இவனே பண்ணிட்டு என்னை சொல்றான் பார் என எண்ணி,"அதை நீ சொல்லாத நீ சொல்றத தான் நான் செய்யணுமா என்ன??? உங்களுக்கெல்லாம் பொண்ணுங்க மேல வரது பிடிக்காதா??? அது என்ன நீ என்னமோ நீ சொல்லித்தான் உங்க அப்பா என்னை வீட்டுக்குள் விட்ட மாதிரி ஆகிட்ட நானா தானே போனேன் என்னமோ நீயே அனுப்புன மாதிரி போன்ல பேசிட்டு இருக்க அவர் சும்மா நான் கேட்டிருந்தா கூட விட்டு இருப்பார் நீ பேசுனதுக்கு அப்புறம் தான் கடுப்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்" என அவள் கூற
அதை கேட்டவனோ ,"அவர் எந்த காலத்துல நல்லா மூஞ்சியை வைத்திருக்கிறார் மாமனாருக்கும், மருமகளுக்கும் ஒரே மூஞ்சி தான் இஞ்சி தின்ன மாதிரி மூஞ்சி" என்றவன் ,"நான் சொன்னதுனால தான் அவர் உள்ளேயே விட்டார் இல்லையென்றால் நீ போய் குழந்தைகளோட நின்னதும் வாம்மா மருமகளை சொல்லி ஆரத்தி எடுத்து உள்ளே விடுவாரு நினைச்சுட்டு இருக்கியா ஏன்டி போயும் போய் உனக்கு வேற ஐடியாவே கிடைக்கலையா அந்த ஆள் வீட்டில் போய் உட்கார்ந்துட்டா எல்லாம் சரியாகிவிடும் நினைச்சுட்டு இருக்கியா இவ்வளவு தான் உன் அறிவா???" என்று கூறி அவளது தலையிலேயே தட்டினான்...
அவளோ ,"என்னை தொடுற வேலை வச்சுக்காத" என்று கூற அவனோ ,"அப்படி தாண்டி தொடுவேன் எல்லாம் உன்னை கேட்டுட்ட பண்ணிட்டு இருக்க முடியும் .. இப்ப வேற லைசன்ஸ் வேற கிடைச்சிடுச்சு எப்ப வேணாலும் உன் மேல ட்ராவல் பண்ணிக்கலாம்" என்றவன்," பொண்ணுங்க மேல வரது பிடிக்காம எல்லாம் இல்ல பார்த்து கவனமா இரு இந்த இடத்தில் நிறைய அட்ஜஸ்ட் பண்ண வேண்டி இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் கேள்விப்பட்டிருக்கியா பார்த்து இரு ஏதோ சொல்ல வேண்டும் என்று தோணுச்சு சொன்னேன் அப்புறம் உன்னோட இஷ்டம்.. முன்னாடியெல்லாம் ஹீரோயினுக்கு தான் அட்ஜஸ்ட்மென்ட் என வார்த்தையை சொன்னாங்க இப்போ போற வர எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட்மென்ட் என வார்த்தையை சொல்றாங்க" என்றவன்," உன்னோட மாமனாரை கேட்டதா சொல்லு என்ன வரட்டா" என்றவன் காரில் இருந்து இறங்கி கொண்டான்...அவன் சென்றதும் தான் அவளுக்கு இழுத்து அவள் பிடித்து இருந்த மூச்சே சரி வர விட்டாள்...
இவனை மறுபடியும் பார்த்தது முதல் அவள் மனம் முழுவதும் இவனிடம் தான் இருக்கிறது..அதற்கு முன்னும் அவனை நினைக்காத நாளில்லை என்றாலும் அப்படி இவன் அவளிடம் உருகியும் நின்றது இல்லை ஆனால் அவள் இருந்து இருக்கிறாள் இப்போதும் இருக்கிறாள் ஐந்து வருடமாகியும் அவன் மீது ஒவ்வொரு நாளும் அவன் செய்த செயல்களை எண்ணி அவனை அவள் மனதுக்குள் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாலும் அவன் அருகே வந்தால் அவளால் ஒன்றுமே செய்ய முடியாமல் போகிறது இதற்கெல்லாம் காரணமான அவனை முதன் முதலாக சந்தித்த பொழுதிற்கு அவள் சென்றாள்...மறக்க வேண்டும் என்ற பக்கத்தை மீண்டும் நினைவு கூற முயன்றாள்...அவளோடு ஐந்து நிமிடமே என்றாலும் அவன் காருக்குள் ஏறியதும் அவளுக்கு பல நினைவுகள் போட்டி போட்டு அவள் மனதை மீண்டும் மீண்டும் பழைய நினைவுகளுக்குள் கொண்டு செல்ல அவள் என்னதான் நினைக்கக் கூடாது என எண்ணினாலும் பழைய நினைவுகளுக்குள் அவள் சென்றாள்...
