அத்தியாயம் 13
"நான் ஜெகதீஷ் பேசுறேன்...பொதுவா எல்லார்கிட்டயும் நான் ஒன்னு சொல்லிக்கிறேன் என்னோட பொண்டாட்டி அண்ட் பசங்களுக்கு இந்த வீட்ல இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்காம் அதனால அவங்க அங்க தான் இருப்பாங்க" என்று அவன் கூற
அதைக் கேட்ட ராகவ் மற்றும் ஜெயமோகன் கொந்தளித்தார்," யார் வீட்ல யார் தங்குறது மரியாதை கெட்டிடும்" என்று ராகவ் கூற
"டேய் விளக்கெண்ண நேர்ல பார்த்தேன் வை அவ்வளவுதான் உன்னோட சிண்டு முடியுற வேலையெல்லாம் உன்னோட அப்பா கிட்ட வச்சுக்கோ என்கிட்ட வேண்டாம் ஓகே நான் ஒன்னும் நீ காசு போட்டு கட்டின வீட்ல என் பொண்டாட்டி என் பிள்ளைகளை உட்கார வைக்கலையே தாத்தா சொத்து தானே அப்புறம் என்ன???" என்று ஜெகதீஷ் கேட்டான்..
அதைக் கேட்டதும் சுர்ரென்று கோபம் ஜெயமோகனுக்கு வர ,"என் பிள்ளை இல்லைன்னு சொல்லிட்டு இருக்கேன் அப்புறம் எப்படி வந்தாங்க தாத்தா" என கேட்க
"நீங்க சொல்லலாம் நான் உங்க புள்ள இல்லைன்னு ஆனா நான் உங்க புள்ள தானே ஊருக்கே தெரியும் நீங்க என்ன வேணா சொல்லிட்டு போங்க அது தாத்தா வீடு தானே என் பொண்டாட்டியும் பிள்ளையும் அங்க தான் இருப்பாங்க அவங்க இப்படி ரோட்ல பிச்சைக்காரங்க மாதிரி நின்னுட்டு இருக்குறது எனக்கு தான் அசிங்கம் அதனால் கொஞ்சம் விலகிக்கோங்க அவங்க உள்ளே போகட்டும்" என்று கூற ஜெயமோகன் கொலைகாண்டு ஆகிவிட்டார்...
"அதெல்லாம் முடியாது நான் யாரையும் உள்ளே விட மாட்டேன்" என்று ஜெயமோகன் கடுப்பாக கூறினார்
"சரி நானும் கோர்ட்டு கேஸ்ன்னு போய் பாத்துக்குறேன் அதுவரைக்கும் அவ அங்க தான் இருப்பா ஏய் நீ போய் இருடி யார் என்ன சொல்றாங்கன்னு பார்த்துரலாம்.. இத்தனை நாள் இவர்களை சும்மா விட்டதே தப்பா போச்சு" என்று அவன் கூற அவளுக்கு தலை காய்ந்தது...
"இவன் கூட சண்டை கட்ட நான் இங்க வந்து உட்கார்ந்தா இவன் என்ன என்னையவே இங்கு உட்கார சொல்றான்" என அவள் யோசித்தாள்... "இவன் கண்டிப்பா இதெல்லாம் வேணும்னு தான் பண்றான் அவரே ஆல்ரெடி முறைச்சுட்டு இருக்காரு இதுல சும்மா ஏத்தி வேற விட்டுட்டான் இனி என்ன பண்ண போறாரோ" என அவள் எண்ணினாள்... தேவையில்லாமல் இங்கே வந்துட்டோம் என்றும் கூட அவள் நினைத்தாள்...
"அம்மா எவ்வளவு நேரம் தான் இங்கே நிற்கிறது பாட்டி உள்ள போலாமா???" என சஞ்சனா கேட்க ரேவதி பாவமாக குழந்தைகளை பார்த்து தன் கணவரையும் பார்த்தார்...
குழந்தைகளின் பேச்சை கேட்ட அவனும் ,"சஞ்சு, சஞ்சய் நீங்க நேரா போய் மாடில போய் லெப்ட்ல மூன்றாவது ரூம் அப்பாவோட ரூம் அங்க போய் ரெஸ்ட் எடுங்க பச்சை குழந்தைகள் ரோட்ல நின்னுட்டு இருக்காங்க அப்போ கூட வைராக்கியத்தை பிடித்து வைத்துவிட்டு குடும்பம் மானம் போகுதுன்னு கவலைப்படாம பேசிக்கிட்டு இருக்காங்க நீங்க போங்க உங்களை யார் தடா பண்றாங்கன்னு நான் பார்க்கிறேன்??? இவங்கதான் குடும்ப மானத்தை காப்பாத்திட்டு இருக்குறவங்களா???" என்றான்...
"சரி அப்பா. நீங்க எப்போ வருவீங்க???" என குழந்தைகள் கேட்க
"அப்பா நாளைக்கு உங்களை பார்க்க வரேன்" என கூற அதை கேட்டு அவளோ திகைத்தாள்...இங்கே இவன் வர மாட்டான் என்று சொல்லி தானே நான் இங்கே வந்தேன்...அப்போ இவனும் இங்கே வருவானா என எண்ணியவள் திகைக்க அதை கேட்டு ஜெயமோகன் மற்றும் ராகவ் கூட திகைத்து பார்த்தார்கள்...
"அப்பா இங்க தாத்தா முறைச்சு முறைச்சு பார்க்கிறார்" என்று சஞ்சய் கூற
"அவர் அப்படித்தான் பார்ப்பார்.. அவருக்கு கண்ணுல வியாதி இருக்கு… நீ கண்டுக்காத உனக்கு என்ன வேணுமோ பண்ணு என்ன சாப்பிட தோணுமோ பாட்டி கிட்ட கேளு செஞ்சு கொடுப்பாங்க" என்க
உடனே ரேவதிக்கு பெருமை தாங்கவில்லை உள்ளுக்குள் மகிழ ஓரக்கண்ணால் ஜெயமோகன் அதை பார்த்து விட்டார் உடனே வெளியே வந்த சிரிப்பை உள்ளடக்கிக் கொண்டார் ரேவதி..
"அப்பா யாரையும் உள்ளே விடாதீங்க" என ராகவ்
"நீ தைரியமா உள்ளே போ டி உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க அந்த அரை டிக்கட் பேசுறதை எல்லாம் நீ பெரிசா எடுத்துக்காத என் தாத்தாக்கு ஒரு பேர் இருக்கு அதை எடுத்துக்க மாட்டார் நான் நினைக்கிறேன்... சும்மாதான் குடும்பமானம் குடும்பமானம் என்று பேசிட்டு இருப்பாரா இதெல்லாம் அவருக்கு அசிங்கமா தெரியலையா???" என கூற
அதற்குள் அக்கம் பக்கம் என கூட்டம் கூடி விட ஜெயமோகன் ரேவதியை பார்த்து ,"என் மானத்தை வாங்கவே உன்னோட பையன் இதையெல்லாம் பண்றானா???" என உள்ளடக்கிய கோபத்தோடு கேட்க
"எனக்கு எதுவும் தெரியாதுங்க" என பேரப்பிள்ளைகளை அணைத்தபடி அவர் கூற ,"அப்புறம் எப்படி பசங்க உன்னை கட்டி பிடிச்சிட்டு இருக்காங்க" என்க ரேவதியோ அதைக் கேட்டு அதிர்ந்தார்...
"இதோ பாருங்க அம்மாவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என் பொண்டாட்டிக்கு தான் அவளோட புகுந்த வீட்ல வாழனும்னு ரொம்ப ஆசை அவ ஆசை நிறைவேற்றுவது என்னோட ஆசை...அதுனால என் பொண்டாட்டியை பத்திரமா பார்த்துக்கோங்க" என கூற ரேவதி ,"போன்ல யாரு நம்ம ஜெகதீஷா " என பக்கத்து வீட்டு பாட்டி இழுத்துக் கொண்டு கேட்க அது வேறு ஜெயமோகனுக்கு அசிங்கமாக இருக்க இவள் உள்ளே நுழையாமல் ராம் போக மாட்டான் என கருதி," அவங்களை உள்ளே விடு. எல்லாம் என்னோட தலையெழுத்து தலை முழுகின கேசெல்லாம் திரும்ப எந்திரிச்சு வந்து என் தலையில ஏறி உட்கார பாக்குதுங்க இதோ பார் ரேவதி என்னோட பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு சீக்கிரம் வந்து அவனை இவர்களை அழைச்சிட்டு போக சொல்லு இப்போதைக்கு இங்கே இருக்கட்டும்" என கூறினார் ஜெய மோகன்...
அதை கேட்டதும் தான் தாமதம்," உள்ளே டா கண்ணா " என வாஞ்சையாக அவளையும், குழந்தைகளையும் உள்ளே அழைத்து செல்ல வீட்டுக்குள் செல்லும் போதே வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் அங்கு இருந்த பைக்கை பார்த்ததும்," பாட்டி இது யாரோட பைக் " என கேட்க," அது தாத்தாவோட பைக்" என்று அவர் கூறவும் ,"அப்போ இந்த பைக் என்னோடது தானே" என்று சஞ்சய் கேட்க
உடனே ரேவதி ஜெயமோகனை திரும்பி பார்த்தார் ஜெயமோகனும் பின்னாடியே வந்து கொண்டிருக்க," இல்லடா கண்ணா இது தாத்தாவோடது" என்று கூற," இல்லை தாத்தாவோட சொத்து பேரனுக்கு தானே அப்படித்தானே அப்பா சொன்னாரு இப்ப தாத்தாவோட இந்த பைக் எனக்கு தானே சொந்தம்" என கூற அதை கேட்டு ரேவதிக்கு சிரிப்பை அடக்க முடியாமல் போக ஜெயமோகன் முகம் கூட இலேசாக தளர்ந்து போனது...
அதற்குள் ,"ஹே கம்முனு இருங்க" என சுபத்ரா ஜெய மோகனின் முகத்தைப் பார்த்து குழந்தைகளை அடக்க,"உள்ளே விட்டதே பெருசு இதில் இது வேறயா" என எண்ணி அவள் குழந்தைகளை அடக்க பார்க்க," பரவால்ல மா சின்ன குழந்தைங்க தானே" என ரேவதி கூறினார்
அதற்குள் சஞ்சனா ,"பாட்டி அவன் பாருங்க பைக் எடுத்துகிட்டான் அப்ப இந்த கார் யாருது இந்த காரை நான் எடுத்துக்கவா??" என பாவமாக கேட்க
"சரி டா உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோ இங்கே இருக்கிறது எல்லாமே உங்களுக்கு தான்" என பாசமாக கூறினார் ரேவதி...
அதைக் கேட்ட ஜெய மோகன் ,"முளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ள சொத்தை பத்தி பேசுறாங்க எல்லாம் அவனோட பேச்சு தான் காரணம்" என்று வாய்க்குள் முனகிக்கொண்டே சென்றார்,
ரேவதிக்கு மனதில் உள்ள பாரம் எல்லாம் போனது போல இருந்தது...எப்போதும் அவர் மனதில் இருந்த மகனின் பிரிவு ஏக்கம் போய் இப்போது இக்குழந்தைகள் முகத்தை பார்க்கவும் அவர் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தார்...
ராகவ் தான் சொல்ல சொல்ல கேட்காமல் தந்தை இக்காரியத்தை செய்த கோபத்தில் அவனது அறைக்குள் சென்று நுழைந்து கொண்டான்...
அதன் பிறகு அவளுக்கு அவனுடைய அற இருக்கும் திசையை காட்டிய ரேவதி ,"போய் தயாராகிட்டு வா மா ஏதாவது உதவினா கேளு நான் பசங்களுக்கு பசிக்கும்ல சீக்கிரம் டிபன் பண்றேன்.. நீ வந்ததில்ல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் தான் உனக்குத்தான் மாமாவை பத்தி தெரியும் இல்ல போகப் போக எல்லாம் சரியாகிவிடும் அந்த கடவுள் என்னுடைய வேண்டுதலை கேட்டு விட்டார் போல நல்ல வேலை நீங்க வந்துட்டீங்க இனி அவனும் வந்துடுவான் எப்படியாவது பேசி மாமாவை சரி கட்டிடலாம்" என்று குதூகலமாக அவர் கூற , அவர் பேசியது பிடிக்கவில்லை என்றாலும்,"சரிங்க ஆன்ட்டி" என்க
"அத்தைன்னு சொல்லுமா" என்று கூற ,"சரிங்க அத்தை" என்று கூறி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவனுடைய அறைக்கு சென்றாள்...
அந்த அறைக்குள் நுழைந்ததுமே அவளுக்கு ஏதேதோ எண்ணங்கள் வந்தது முதன்முறையாக இந்த அறைக்குள் நுழைந்த நொடி அவளுக்கு ஞாபகத்திற்கு வந்து போனது உடம்பெல்லாம் சிலிர்ப்பது போல இருந்தது.. உடனே அந்த நாள் ஞாபகம் தான் அவளுக்கு வர நாடி நரம்பு எல்லாம் அவளுக்கு அவனுடைய வாசத்தை அவள் தேகம் உணர்வது போல உணர்ந்தாள் அதுவே அவளுக்கு ஒரு அவஸ்தையாக இருந்தது...
அவள் மறக்க வேண்டும் என எண்ணியது எல்லாம் அவளுக்கு நியாபகத்துக்கு வந்து போக அவனை பழி வாங்க அவள் இங்கு வந்தால் இந்த இடம் அவளுக்கு அவஸ்தையை தான் கொடுத்தது...
இங்கே இருந்தால் தனக்கு தான் தொல்லை என அவள் கருத அதற்குள் அவளுக்கு ஒரு ஃபோன் அதை எடுத்து அவள் பேசினாள்...மறுமுனையில் என்ன கூறப்பட்டது என தெரியவில்லை சரி நான் வரேன் என்றாள்..
அதற்குள் குழந்தைகள் அந்த அறையை சுற்றி பார்த்து," ஐ அப்பா ஃபோட்டோ" என கூறி ஜெகதீஷின் புகைப்படத்தின் அருகே சென்று நின்று கொண்டனர்...
அந்த படத்தை பார்த்தவள் முகம் பட்டென்று சிவந்தது அவனே அவளை பார்ப்பது போல அவளுக்கு தோன்ற வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள்...
கீழே வந்தவள் ரேவதியை தேடி சென்றாள்.. அவளுக்கு பழக்கம் இருக்கும் வீடு என்பதால் அவளுக்கு பெரிதாக எந்த மாற்றமும் தோன்றவில்லை எல்லா அறைகளும் அவளுக்கு தெரியும் அதனால் வேகமாக ரேவதி இருக்கும் இடத்துக்கு சென்றவள்," அத்தை எனக்கு ஹோட்டலுக்கு போகணும் பசங்க இங்கே இருக்கட்டுமா இல்லை அம்மா வீட்ல விடவா" என கேட்டாள்...
"இங்கேயே இருக்கட்டும் மா நாங்க தான் இருக்கோமே நாங்க பார்த்துகிறோம் அவங்க என்ன சாப்பிடுவாங்கன்னு மட்டும் சொல்லிட்டு போ மா" என்று கூற அவள் அவர்களுக்கு தேவையான உணவை கூறியவள் ,"அவங்க ஸ்கூலுக்கும் போகணும்" என்று கூற ,"சரிமா நான் கொண்டு போய் டிராப் பண்ணிட்டு வரேன் இங்கதான் உனக்கு ரெண்டு கார் நிக்குதே "என்றார்..
ரேவதிக்கு தான் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை ஒரே சந்தோஷமாக இருந்தது பேரப்பிள்ளைகள் வேறு வீட்டிற்கு வந்து விட்டதால் மடமடவென வேலைகள் எல்லாம் செய்ய துவங்கினார்...
ஜெய மோகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை...குடும்ப மானம் மறுபடியும் காற்றில் பறக்க கூடாது என்ற எண்ணத்தில் அவளையும் குழந்தைகளையும் உள்ளே விட்டாலும் குழந்தைகளின் முகத்துக்காக உள்ளே விட்டாலும் நடந்த விசயங்களை மறக்க முடியாமல் அவர் தவித்தார்...
அவளோ ரேவதியிடம் விசயத்தை கூறி விட்டு நேராக ஜெய மோகனிடம் வந்தவள்," மாமா எனக்கு தெரியும் நான் உங்களை எல்லாம் வருத்தப்பட வச்சிருக்கேன்னு அதே அளவு வலியை நானும் அனுபவித்து இருக்கேன்னு நீங்களும் புரிஞ்சுக்கோங்க நீங்க எந்த அளவுக்கு அசிங்க பட்டிங்களோ அதே அளவு நான் செய்த தப்பால நானும் அனுபவச்சிருக்கேன் இப்ப கூட நான் இங்கே வந்தது உங்க மூத்த பையனை எதிர்க்க தான்..
ஒரு தாலி கட்டினா எல்லாம் முடிஞ்சது அப்படின்னு நினைச்சுட்டு இருக்கார் குழந்தைகளுக்காக தான் இந்த தாலியை கட்டி இருக்கார் வேற எதுக்காகவும் கிடையாது அவருடைய இந்த மனோபாவம் மாறனும்னு சொல்லித்தான் நான் இங்கே வந்திருக்கேன் உங்களுக்கே தெரியும் எனக்கு வீடு வாசல் இல்லாம கிடையாது இவ்வளவு நாள் கழிச்சு இங்கே ஏன் வந்திருக்கேன்னு கொஞ்சமாவது யோசிச்சு பாருங்க..
இப்போ ஜெகதீஷ் இருக்கிற நிலைமைக்கு நான் அவர் பின்னாடி போயிருக்க முடியும் எனக்கு அப்படி போக விருப்பம் இல்லை எனக்குன்னு ஒரு சுயமரியாதை இருக்கு ஒரு தடவை அதை இழந்துட்டேன் மறுபடியும் இழக்க நான் தயாராக இல்லை இதெல்லாம் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் மாமா நாங்க வந்தது உங்களை மறுபடியும் கஷ்டப்படுத்தவோ இல்ல யாரையும் வருத்தப்பட வைக்கவோ இல்லை... " என்று அவள் அவளுடைய பக்கத்தை கூற ஜெயமோகன் அதற்கு பதில் அளிக்கவில்லை என்றாலும் அவருடைய முகம் சற்று தெளிவடைந்தது...
"எனக்கு ஹோட்டலில் கொஞ்சம் வேலை இருக்கு ஒரு புது ஆர்டர் கிடைச்சிருக்கு அதனாலதான் டக்குனு போற மாதிரி இருக்கு கொஞ்சம் பசங்கள பார்த்து இருக்கீங்களா???" என்று அவள் தயங்கிக் கொண்டே கேட்டாள்..
அவள் தைரியமாக ஜெயமோகனிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ,"ரேவதி பின்னாலே வந்து நாங்க இருக்கோம் நாங்க பார்த்துக்கிறோம் நீ தைரியமாக போமா" என கணவன் பதில் அளிக்க மாட்டார்
என்று தெரிந்தும் அவர் கூற ,"சரிங்க அத்தை" என கூறி அங்கிருந்து சென்றாள் சுபத்ரா...
