அத்தியாயம் 11
அவள் அம்மாவை பார்த்த அவளோ ,"இது எல்லாம் உன்னோட வேலை தானா???" என அதிர்ச்சி மாறாமல் கேட்டாள் சுபத்ரா...
ஆமாம் என்று தலையாட்டிய ராணி மகளின் கலங்கிய முகத்தை பார்த்தவருக்கு மிகவும் வருத்தம் ஆகியது... "எவ்வளவு நாள் தான் நீ இப்படியே இருப்ப உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா அதுக்காகத்தான் நான் இப்படி செய்ய வேண்டியதா ஆகிடுச்சு" என்று ராணி கூற
"அப்போ நீயும் எனக்கு உண்மையா இல்ல இல்ல என்னோட பீலிங்க்ஸ நீயும் இவனை மாதிரி உடைச்சிட்டில இந்த உலகத்திலேயே எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் நீ எனக்கு உண்மையா இல்ல இல்ல இவன் சொன்னா என்று சொல்லி எப்படிமா உன்னால முடிஞ்சது இப்படி நடிக்க" என்று கேட்கவும் அவரோ தலை குனிந்தார்...
அவன் கொடுத்த உத்வேகத்தில் மகளுக்கு ஒரு நல் வாழ்க்கை அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இதை செய்தார் மகள் வருத்தப் படுவாள் என தெரிந்து தான் செய்தார் ஆனால் தாயாக மகள் கலங்கி நிற்பதை பார்க்கும்போது அவருக்கு ஏனோ வருத்தமாக இருந்தது..
"நான் சொல்றதை கேளு சுபி" என கூற ,"வாயை மூடுமா இவ்வளவு நாள் நான் செஞ்சது தப்பு என்று சொல்லி நீ எவ்வளவோ பேசி இருப்ப நான் உன்னை எதிர்த்து பேசி இருக்கேனா நீ சொல்றதெல்லாம் கேட்டுட்டு தானே உன் கூட இருந்திருக்கேன் இப்போ நீ பண்ணினது எப்படி தெரியுமா இருக்கு என்னை அவன் கிட்ட என்னை கூட்டி கொடுத்தது மாதிரி இருக்கு எனக்கு இது சொல்லவே அசிங்கமா தான் இருக்கு ஆனா நீ அந்த வேலையைத்தான் பண்ணி இருக்க உன் கிட்ட இருந்து இத நான் எதிர்பார்க்கல" என்று அவள் கூறினாள்...
அவர்கள் காரசாரமாக பேச துவங்கும் முன்னே அதற்குள் ராம் அங்கு எஞ்சி இருந்த அனைவரையும் அழைத்து வெளியே சென்றான் குழந்தைகளை கூட அழைத்து வெளியே சென்று நின்று கொண்டான்...
அந்த அறையில் சுபத்ரா, ஜெகதீஷ் மற்றும் ராணி மூவர் மட்டும் தான் இருக்க அப்போது தான் இவள் இந்த கேள்வியை கேட்டாள்...
அதைக் கேட்டதும் அவருடைய முகம் மாறியது..." இப்படி ஒரு வார்த்தையை சொல்ற" என்று கலங்கி கேட்க அதைக் கேட்டு அவனும் கூலாக ,"உன்னை எனக்கு யாரும் கூட்டி கொடுக்க தேவை எல்லாம் இல்ல இப்ப கூட உன்னை தூக்கிட்டு போகணும்னா தூக்கிட்டு போக என்னால முடியும் ஆனால் நீயா இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கணும் அப்படிங்கறதுக்காக மட்டும் தான் உன் அம்மாகிட்ட சொன்னேன்..
நான் சொல்லித்தான் அவங்க இப்படி நடிச்சாங்க இதுல அவங்களுக்கும் நடந்த விஷயத்துக்கும் சம்பந்தம் கிடையாது உனக்கு ஏதாவது பேசணும்னா என்கிட்ட பேசு அது என்ன உனக்கு என் மேல எந்த கோபம் வந்தாலும் என்னை விட்டுட்டு மத்தவங்க கிட்ட எல்லாம் பேசிட்டு இருக்க இப்போ உனக்கு என்ன தாண்டி வேணும்???" என அவன் கேட்டான்...
அவளோ திரும்பி நின்று ,"எனக்கு என்ன வேணும்னு உனக்கு சொன்னா புரியாது??? எனக்கு சுய மரியாதை வேணும் உன்னால கொடுக்க முடியுமா???"என்று ஆவேசமாக கேட்டாள் ஏனெனில் அவள் முகத்தில் தோற்றுப் போன ஆத்திரம் இருந்தது...
"அது தான் உன்கிட்டயே இருக்கே நான் ஏன் கொடுக்கணும் அதெல்லாம் அவங்கவங்க சம்பாதிச்சுக்கிற விஷயம்" என்று கூற அவளோ," நீ எல்லாம் ஒரு மனுஷனா இவ்வளவு பண்ணியிருக்க உனக்கு கொஞ்சம் கூட கூசலை" என்று கேட்டாள்...
"எதுக்கு கூசணும்" என அவன் கேட்கவும் இவன் தெரிந்து பேசுகிறானா இல்லை தெரியாமல் பேசுகிறானா என புரியாமல் அவள் ,"இவ்வளவு அசிங்கப்பட்டு இருக்கேன் நான் இவ்வளவு வேதனைப்பட்டு இருக்கேன் நான் அஞ்சு வருஷமா என்னை எத்தனை பேர் எத்தனை விதமாக பேசி இருப்பாங்க எல்லாத்துக்கும் காரணம் நீ... ஒரு நாள் வந்து இந்த ரெண்டு குழந்தைகளை பார்த்ததும் குழந்தைகள் வேணும் அப்படின்னு வந்து நிக்கிற அதுக்காக டிராமா பண்ணி என்னை கல்யாணமும் பண்ணிக்கிற இதெல்லாம் உனக்கு தப்பா தெரியல" என அவள் கேட்க
"ஐயோ என்ன ஆவேசமா பேச போறியா கேட்கிற மூடுல நான் இல்ல எனக்கு வேற வேலை இருக்கு" என்று கூறியவன் அவளைப் பார்த்து கடுப்போடு ஏதோ பேச ஆரம்பித்தவன்," ஏண்டி" என்றவன் அங்கு அவளுடைய அம்மா இருப்பதை பார்த்து ,"கொஞ்சம் அசிங்கமா பேச போறேன் எனக்கு அசிங்கமா தெரியாது ஆனா கேக்குற உங்களுக்கு கொஞ்சம் அசிங்கமா இருக்கும் காது பொத்திக்கோங்க இல்லைன்னா கொஞ்சம் வெளியே இருங்க" என்று கூறவும் ராணி இங்கே இருப்பதை விட வெளியே செல்வதே மேல் என வெளியே சென்று விட்டார் ,"தட்ஸ் பெட்டர் ஆன்ட்டி" என்று கூறினான் ஜெகதீஷ்...
அதன் பிறகு அவளை பார்த்து," ஏன் டி உன்கூட படுத்ததுக்கே நான் கூச்சப்படல இதுக்கு தான் கூச்சப்பட போறேன்னா இப்பவும் சொல்றேன் நான் பண்ணினது எனக்கு தப்பாவே தெரியல உனக்கும் எனக்கும் ஒரு சின்ன பீலிங்ஸ் இருந்துச்சு நாம ஒண்ணா இருந்தோம் குழந்தை வந்துடுச்சு அதுக்கு ஓவரா டிராமா பண்ணிட்டு இருக்காத..
குழந்தை இருக்கு அப்படிங்கற விஷயத்தை என்கிட்ட இருந்து மறச்சது நீ நானும் எதுவும் வேண்டாம் என்று விலகித்தான் இருந்தேன் அவங்கள பார்த்ததும் என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியல குழந்தைங்க கூட இருக்கணும்னு தோண ஆரம்பிச்சிடுச்சு நான் வந்துட்டேன் அவ்வளவுதான்.. இதுக்கு போய் ஏன் இவ்வளவு சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்க சரி நீ பேசுற படியே வச்சுப்போம் அதுதான் நான் கல்யாணம் பண்ணிட்டேன்ல நாளைக்கு ஊர் அறிய இந்த விஷயம் தெரியும் போது எல்லா பிரச்சனையும் முடிஞ்சது தானே அப்புறம் என்ன உன் பாஷையில் சொல்லனும்னா நீ பட்ட அவமானம் எல்லாம் தீர்ந்துடும் தானே" என அவன் கூற
அவளோ அவனுடைய சட்டையை பிடித்து," அவ்வளவுதானா?? உன்னால எப்படிடா இவ்ளோ ஈசியா பேச முடியுது உனக்கு எல்லாம் ஃபீலிங்ஸ் கிடையாதா எல்லாமே டேக் இட் ஈசி தானா?? என்ன அவ்வளவுதானா?? நான் உன்கிட்ட எதிர்பார்க்கிறது இது இல்லடா நான் உன்கிட்ட எதிர்பார்க்கிறது வேற..
நான் என்னை, உன்னை பத்தி மட்டும் பேசிட்டு இருக்கேன்.. மத்தவங்களை விடு... அதை பிறகு பார்த்துக்கலாம் உனக்கும் எனக்கும் நடுவில் இருக்கிறது என்ன??? நீ நெனச்சிட்டு இருக்கிறது காமத்தினால் வந்த விளைவுன்னு நான் நினைச்சுட்டு இருக்கிறது காதலால் வந்த விளைவுன்னு உன்னால அவ்வளவு சீக்கிரம் என் மனசு புரிஞ்சுக்க முடியாது" என அவள் கூற
அவன் ஒரு நொடி திகைத்தான்... "ஏய் என்ன தாண்டி உன் பிரச்சனை அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணனும்னு சாவடிச்ச இப்ப கல்யாணம் பண்ணா ஏன் கல்யாணம் பண்ணனு கேக்குற உனக்கு என்ன தாண்டி வேணும்" என்றான் கடுப்பாக ஏனெனில் இதுபோன்ற சென்டிமென்ட் எல்லாம் இவனிடம் வேலைக்கு ஆகாது அவனுக்கும் அதுவெல்லாம் தெரியாது..
அவளோ அவளைப் பார்த்து ,"நான் தான் சொல்றேன் இல்ல உனக்கு நான் யாரு உனக்கு எனக்கு என்ன உறவு அதை முதல்ல தெரிஞ்சுட்டு வா அதுக்கப்புறம் என்கிட்ட வந்து பேசு" என்று எரிச்சலோடு அவள் கூறினாள்...
அவனோ அவளை அதிர்ச்சியாக பார்க்க," என்ன பார்க்கிற நீ வருவ லவ்வா இல்லை லஸ்ட்டான்னு தெரியாத ஒரு உறவை என்கிட்ட வைப்ப.. நானும் நீ காதலிக்கிறேன்னு மடச்சி மாதிரி உன் கூட இருப்பேன்... தென் எல்லோரும் கேள்வி கேட்டா என்னை விட்டுட்டு போயிடுவ ஒரு ஐந்து வருசம் கழிச்சு வருவ அப்போ என் கையில் குழந்தைகளை பார்த்ததும் அவங்களுக்காக என்னை கல்யாணம் பண்ணுவ அதுக்கு என்னோட அம்மா உனக்கு உடந்தை கேட்டா குழந்தைகளுக்கு அப்பா வேணும்னு அவங்க சொல்லுவாங்க இதை எல்லாம் கேட்டு நானும் தலை ஆட்டி உன் பின்னாடி வரனும் அப்படி தானே
இந்த தாலியை கட்டிட்டா நான் உன் பின்னாடி வருவேன்னு நீ எப்படி நினைத்த???கண்டிப்பா வர மாட்டேன்" என்க
அவனோ அவள் பேசிய பேச்சில் தலை சூடாகி ,"இப்ப என்ன பண்ணலாம்னு இருக்க" என கேட்டான்...
"நான் என்னமோ பண்ண போறேன் உனக்கு என்ன ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் மனசார உனக்கு நான் வேணும் அப்படின்னு எனக்கு தோணனும் அப்படி தோணாத வரை நான் உன்னை தேடி வர மாட்டேன்... அதுவரைக்கும் நீ என்னோட புருஷன் தான்னு நான் எங்கேயும் சொல்ல மாட்டேன்" என கூறினாள்..
"நான் சொன்னா" என அவன் கேட்க
"அது உன்னோட இஷ்டம் இப்போ நீ பழைய மாதிரி கிடையாது உனக்குன்னு ஒரு வட்டம் இருக்கு அதை தாண்டி உன்னால வெளியே வர முடியாது ஆனால் நான் அப்படி கிடையாது நீ தான் என்னோட புருஷன் அப்படின்னு நீ வெளியே சொன்னால் உன்னை பற்றி நான் சொல்ல வேண்டி இருக்கும்" என்று அவள் கூற
அவனோ அவளது கையைப் பிடித்து கோபத்தில் இழுத்தான்..."என்ன டி மிரட்டி பார்க்கறியா?? என்னை பத்தி உனக்கு நல்லா தெரியும்.. இந்த வெண்ணைக் கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்" என்க
"ஆனால் என்னை பத்தி உனக்கு தெரியாது நீ என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்னு நீ நெனச்சிட்டு இந்த வேலையை செஞ்ச ஆனால் அந்த சுபத்ரா எப்பவோ செத்துட்டா இப்போ இருக்கிறது புது சுபத்ரா உன் முன்னாடி வாழ்ந்து காட்டணும்னு நினைக்கிற சுபத்ரா புரியுதா" என கோபமாக அவள் கூறினாள்..
"முடிவா என்ன சொல்ற???" என அவன் தன் மூச்சை இழுத்து விட்டு கோபத்தை கட்டுப்படுத்தி கேட்டான்...
"எப்பவும் சொல்றதுதான் உன் கூட வர முடியாது உன் கூட வாழ முடியாது அவ்வளவுதான்" என்க
"ஏய் விளக்கெண்ண மாதிரி பேசிட்டு இருக்காத நான் ஒன்னும் உன் மேல மயங்கிட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கல எனக்கு என் பசங்க வேணும் அவ்வளவுதான்" என்று கூற அதைக் கேட்கவும் அவளுக்கு வலித்தது...
"இதோ இந்த வார்த்தைக்காக தான் டா நான் உன் கூட வர மாட்டேன்னு சொல்றேன்" என்றாள்... அவன் மீது அதிக அன்பை வைத்திருக்கும் சுபத்ரா அந்த அன்பை மறைத்து அவளே அவளுக்கு வேலி போட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் சுபத்ரா கூற அதை கேட்டவன் கடுப்போடு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியாத ஜெகதீஷ்," உனக்கு என்ன தாண்டி வேணும் என்னை என்னதான் பண்ண சொல்ற???" என்க
"உனக்கு குழந்தைகள் தான் வேணும்னா வீட்ல வந்து பாத்துட்டு போ அவங்களை காரணம் காட்டி என்னை கல்யாணம் பண்ணி உன் கூட வச்சுக்க பிளான் பண்ணாதே என்று சொல்கிறேன் புரியுதா" என அவள் வெடுக்கென்று கூறினாள்...
அதைக் கேட்டு அவனுக்கு ஒரு காலத்தில் தன் பின்னால் நாய் குட்டி போல சுற்றி வந்த சுபத்ரா நினைவுக்கு வந்தாள் அதை எண்ணி பார்த்தவன் அவளுடைய கையை விடாமல் தன் பக்கமாக இழுக்க அவளோ பூமாலையாக அவன் மீது விழுந்தாள்..
விழுந்தவள் இடையை அழுத்தி பிடித்தவன் அவள் முகத்தை பார்த்து ,"என்ன டி இப்படி பேசி பேசி என்னை கொல்ற " என ஹஸ்கி குரலில் கூறியவனின் உடல் அவளை தேடியது...
அவளோ அவனிடம் இருந்து விடுபட போராட அவனோ இவ்வளவு நேரம் அவள் பேசிக் கொண்டிருந்தது எல்லாம் சட்டையே செய்யாதது போல அடுத்த கட்டத்திற்கு முன்னேறி அவளது முகம் நோக்கி குனிய துவங்கி விட்டான்...
அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை அறிந்த அவளது இதயம் படபடக்க அவன் அருகே வந்தால் அவளால் கட்டுப்படுத்த இயலாது என்பதை அறிந்த அவளோ அவன் தவறு செய்கிறான் என்பதை அவளுக்கு புரிய வைக்க வேண்டும் என உணர்ந்து அவனிடமிருந்து விலக போராட அவனும் அவனின் அழுத்தத்தை கூட்டினான்...
அவளால் விடுபட முடியவில்லை...அவளோ ,"என்னை விடு" என்க
"என்ன டி அப்படி எல்லாம் உன்னை விட முடியாது" எனக் கூற அவளோ ,"இதுதான் உன் பிரச்சனை உனக்கு என்னிடம் வேண்டியது லஸ்ட் அதுக்காகத்தான் நீ இப்படி பண்ற" என கூற அவனோ அவளது முகத்தை பார்த்து ,"என்னை டைவர்ட் பண்ண பார்க்கறியா??? உலகத்திலேயே நீதான் அழகின்னு நினைப்பா ஏன் வேற பொண்ணுகளே கிடைக்க மாட்டாங்களா??" என்க
"அப்படி கிடைச்சா அவங்க கிட்ட போடா என்னை ஏன் இப்படி பிடிச்சிட்டு நின்னுட்டு இருக்க" என அவள் கூற அவள் கையை விட்டான்...
உடனே அவள் அவனிடமிருந்து விலகவும் அதை பார்த்த அவனும் கடுப்போடு," எவ்வளவு நாளைக்கு என்கிட்ட இருந்தது ஓடி ஒழிய போற எனக்கு உன் மேல காதல் வந்ததில்ல அது வருமான்னு எனக்கு தெரியல ஆனால் இப்போதைக்கு நீ என்னோட பொண்டாட்டி என் பசங்களுக்கு அம்மா அந்த உரிமை உனக்கு எப்பவும் என்கிட்ட இருக்கும் அப்புறம் நீ சொன்ன லஸ்ட் அதுவும் உன் மேல எனக்கு வரும்... வரும்போது உன்கிட்ட வருவேன்" என்று ஆணித்தரமாக கூறினான் ..
அதை கேட்டு அவளோ அதிர ,"என்ன பாக்குற இதுவரைக்கும் தோணல இப்ப தோணுச்சு உன்கிட்ட வந்தேன் நீ விலகிப் போன இனி எனக்கு தோணினா நீ விலகினாலும் உன்கிட்ட வருவேன்" என்று அவன் கூறவும் அதைக் கேட்டு அவளோ திகைத்தாள்...
"சும்மா பக்கம் பக்கமா டயலாக் பேசிட்டு" என கடுப்போடு கூறினான்... ஏனெனில் அவனிடமிருந்து அவள் விலகியது அவனுக்கு பிடிக்கவில்லை...அதனால் அவன் அவ்வாறு கூறியவன் இவன் எல்லாம் மனுஷன் தானா இல்லை இது இவனுடைய குணமா என புரியாமல் தவித்தாள் அவள்..
அவளுடைய மனதை கூறியும் அவன் அவனுக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் அவன் கூறினான் அவள் மனதை புரிந்து கொள்ளவே அவன் முற்படவில்லையே என்ற ஆதங்கம் அவளுக்கு வர அவளோ," உன்ன மாதிரி ஒரு ஆளு நான் பார்த்ததே இல்லை" என அவள் வாய்விட்டு கூற அவனோ சிரித்தான்...
"இதோ பார் என் கிட்ட இருந்து நீ விலகனும்னு யோசிக்க யோசிக்க தான் உன்கிட்ட வரணும்னு எனக்கு தோணுது இனி எவ்வளவு தூரம் தான் போகணும்னு முடிவு பண்ணி இருக்க ஒரு வேளை நான் உன்னை தேடி வந்தா என்ன பண்ணுவ இப்போ என்கிட்ட இருந்து தப்பிச்சிட்ட ஒரு வேளை நீ சொல்ற மாதிரி லஸ்ட் வேணும்னு சொல்லி உன்கிட்ட வந்தா நீ என்ன பண்ணுவ??? இப்ப வேற நீ என்னோட அபிஷியல் பொண்டாட்டி வேற நான் என்ன வேணாலும் பண்ணலாம் அப்படித்தானே லைசன்ஸ் வேற கிடைச்சிருக்கு லைசென்ஸ் இல்லாமலே குழந்தை பெத்துட்டேன் லைசன்ஸ் ஓட தாராளமா குழந்தை பெத்துக்கலாம் இல்லையா அதுக்கான முயற்சிகளில் இறங்கலாம் தானே அதுக்கு லஸ்ட் தேவைதானே" என கேட்டான் அவனோ அவளை சற்று பயப்பட வைக்க வேண்டும் என்று கூறி தான் கேட்டான் அவளோ அதிர்ந்தவள் அதற்கு என்ன செய்யலாம் என யோசித்தாள்..
ஏனெனில் இவன் செய்தாலும் செய்வான் என்ற எண்ணம் அவளுக்கு வந்தது அதற்கு அவளுடைய அம்மா துணை போனாலும் போவாள் என்பது அவளுக்கு நன்றாக தெரியும் என்ன செய்யலாம் என யோசித்த அவளுக்கு ஒரு ஐடியா கிடைத்தது...
அதன் படி ,"நீ என்கிட்ட வர முடியாத இடத்துக்கு நான் போவேன்" என்றாள்
"அது என்ன இடம்" என அவன் நக்கலாக கேட்க
"நான் போகும் போது உனக்கே தெரியும் இப்போ நான் போகலாமா" என கூறினாள்...
"அப்போ இது தான் உன் முடிவா???"
"நீ செஞ்சதுக்கு இது கூட செய்யலைன்னா எப்படி ஆமாம் இதுதான் என்னோட முடிவு" என்றாள் அவள்
"அப்புறம் உன்னோட இஷ்டம் நான் சொல்றத சொல்லிட்டேன் எப்ப வேணாலும் என்கிட்ட வரலாம் நான் எல்லாம் இந்த மாதிரி ஓவர் டயலாக் எல்லாம் பேசிட்டு இருக்க மாட்டேன் ஆல்வேஸ் வெல்கம் தாலி வேற கட்டிட்டேன் நீ என்னோட பொண்டாட்டி வேற ஆயிட்ட அப்படி எல்லாம் நடுத்தெருவுல விட்டு விட மாட்டேன்" என அவன் கூற
"தேங்க்ஸ் ஃபார் யுவர் கரிசனம் கடவுள் அப்படி உன்கிட்ட என்னை வரவிடாமல் செய்யணும்னு வேண்டுகிறேன்" என்று அவளும் ஏகத்தாளமாக பதில் கூற அதை பார்த்து சிரித்த அவனும் ,"அதையும் பார்க்கறேன் டி.. இத காரணம் காட்டி பசங்கள பார்க்க விடாம பண்ணிடாத அப்புறம் தூக்கிட்டு போனாலும் தூக்கிட்டு போயிடுவேன் அவங்களை இல்ல உன்ன" என கூறினான்...
அதைக் கேட்டு அவளோ ,"ச ச்சே.. நீ எப்ப வேணாலும் வந்து குழந்தைகளை பார்க்கலாம்" என்றவள் அந்த அறையை விட்டு வெளியே வந்தவள்," பசங்களா வாங்க நாம புது வீட்டுக்கு போகலாம்" என்று சிரித்த முகத்தோடு கூற அதைக் கேட்ட அவர்களோ," அப்பா வீட்டுக்கு போக போறோமா??" என்று கேட்க,
" ஆமாம் அப்பா வீட்டுக்கு தான் போகப் போறோம்" என்று கூற ராணி முழிக்க அவரை பார்த்து," எவ்வளவு பெரிய வேலை பார்த்துட்டு இப்படி கமுக்கமா நின்னுட்டு இருக்கில கொஞ்ச நாள் தனியா இரு நான் போறேன்" என்க
அவரோ ஜெகதீஷ் உடன் தான் செல்கிறார் என்று எண்ணி," கல்யாணம் பண்ணினா புருஷன் வீட்டில் தானே பொண்ணு போயாகணும் இதுக்கெல்லாம் வருத்தப்பட்டு இருக்க முடியுமா" என்று கேட்க,
அவரை நக்கலாக பார்த்த சுபத்ரா ,"புருஷன் வீட்டுக்கு தான் போக போறேன்" என்று தெள்ளத்தெளிவாக கூற அதைக் கேட்டுக் கொண்டே வெளியே வந்த ஜெகதீஷ் ,"அவ என் கூட வரலையாம் " என்று கூறினான்..
அதைக் கேட்டு பதறிய ராணி," ஏய் அப்புறம் எங்கடி போக போற" என்று கேட்க ,"அதுவா நான் போக போற இடம் என் புருஷனோட வீடு அதாவது ஜெயமோகன் வீட்டுக்கு போக போறேன் ஜெயமோகன் யாருனு தெரியுமா என்னோட மாமா அதாவது என்னோட மாமனார்..
இதோ இருக்காருல்ல மிஸ்டர் ஜெகதீஷ் அவரோட அப்பா வீட்டுக்கு தான் நானும் பசங்களும் போக போறோம் என்ன மிஸ்டர் ஜெகதீஷ் வரட்டா" என்று அவன் பேசியது போலவே நக்கலாக பேசிவிட்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றாள் அவள்...அதை கேட்டு அவனோ அதிர்ந்தான்...அவன் அதிர்வதை பார்த்து நக்கலாக சிரித்தபடி சென்றாள் சுபத்ரா ஜெகதீஷ்....
