அத்தியாயம் 10
கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு பிறகு ,
அவளுக்கு கையும் ஓட வில்லை காலும் ஓடவில்லை அவளுடைய அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை...அவர் இப்போது மருத்துவமனையில் இருக்கிறார்...
அவளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தாள்...அவளுக்கு என்று இருக்கும் ஒரே உறவு அம்மா...வீட்டில் தனியாக இருந்தவர் மயக்கம் வருவது போல இருக்கிறது என அழைத்து கூறவும் பதறி துடித்து அவளும் சரவணனும் வரும்பொழுது அம்மா மயங்கிய நிலையில் இருந்தார்..
அதைப் பார்த்து அவளோ அப்படியே நிலை குலைந்து போக சரவணன் தான் ஆம்புலன்ஸ் வரவைத்து அவளுடைய அம்மாவை மருத்துவமனையில் சேர்த்தான்..
"சரவணா எனக்கு ரொம்ப பயமா இருக்கு சரவணா" என்று கூற," பயப்படாத ஒண்ணும் ஆகாது" என்று அம்மாவை ஆப்ரேஷன் தியேட்டருக்குள் அனுப்பி வைத்து விட்டு கையை பிசைந்தபடி வெளியே நின்று கொண்டிருந்தவளுக்கு உலகமே இருண்டு விடும் போல இருந்தது..
"எனக்கு இருக்கிறது என்னோட அம்மா மட்டும்தான் அவங்க இல்லைன்னா என்னால எதுவுமே செய்ய முடியாது எனக்கு இருந்த ஒரே ஆதரவு அவங்கதான் ஊரே என் அசிங்கமா பேசுச்சு அந்த அசிங்கத்தால் என்னோட அப்பா இறந்துட்டாரு இப்போ அம்மாவுக்கும் முடியல" என்று கூற
"நீ ஏன் இவ்வளவு யோசிக்கிற வயசான ஏதாவது வர்றதுதான் அதுதான் கரெக்டான சமயத்துல நாம கொண்டு வந்து அட்மிட் பண்ணிட்டோமே பயப்படாதே" என்று அவன் அவளுக்கு ஆறுதல் கூறினான்..
"இல்லடா என்னோட மனசு என்னமோ சரியில்ல எப்போ அந்த ஜெகதீஷை மறுபடி பார்த்தேனோ அப்போ இருந்து குழந்தைகள் என்னை விட்டு போயிடுவாங்களோ அப்படிங்கற பயம் எனக்குள்ள வர ஆரம்பிச்சிருச்சு அதனால தினமும் அம்மா கூட சண்டைதான் போட்டுட்டு இருக்கேன் இப்போ அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனதும் எனக்கு ஏதோ ஒரு கில்ட்டி ஃபீல் வர ஆரம்பிச்சிடுச்சு என்னால தான் அம்மாவுக்கு இப்படி எல்லாம் ஆயிடுச்சோ அப்படின்னு நினைக்கத் தோணுது" என்று அவள் கூற ,"நீ ரொம்ப யோசிக்கிற" என்று சரவணன் கூறினான்..
அந்த சமயம் பார்த்து ராணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வெளியே வர ,"டாக்டர் அம்மாவுக்கு எப்படி இருக்கு" என்று கேட்க அவரும் ,"அம்மாவுக்கு கொஞ்சம் சீரியஸ் தான் ஹார்ட்ல பிரச்சனை ஆப்ரேஷன் பண்ணனும் உடனடியா பண்ணுனா உங்க அம்மாவை காப்பாத்திடலாம்" என்று கூற
"சார் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை ஆனால் எங்க அம்மா எனக்கு உயிர் பிழைச்சா போதும் தயவு செய்து எங்க அம்மாவை காப்பாற்றி கொடுங்க" என்று அவள் கண்ணீர் விட்டு மருத்துவரிடம் கூறினார்.. அதை கேட்ட மருத்துவர் ,"மா நாங்க காப்பாத்த தயாராக தான் இருக்கோம் ஆனால் உங்க அம்மா அதற்கு உடன்படனுமே" என்று கூற அவளோ திகைத்தாள்...
"என்ன டாக்டர் சொல்றீங்க???"
"ஆமாம்மா அவங்க உங்களை விட ரொம்ப பயந்து போய் இருக்காங்க எங்கே ஆபரேஷன் பண்ணினா அவங்க செத்துருவோமோ அப்படின்னு பயந்து போய் இருக்காங்க நீங்க போய் பேசுங்க" என்று மருத்துவர்கள் கூற அதைக் கேட்டு அவளோ," சரி" என்று கூறினாள்..
"இத பாருங்க அவங்க என்ன சொன்னாலும் அத ஏத்துக்கோங்க அவங்களை பதட்டப்பட வைக்காதீங்க இயல்பா அவங்ககிட்ட ஆபரேஷன் பத்தி பேசி புரிய வையுங்க.. ஏன்னா அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க உங்களுக்கு நான் சொல்றது புரியும் என்று நினைக்கிறேன்" என்று கூறவும் அவளோ மேலும் பயந்து ,"சரி டாக்டர் " என்று கூறினாள்...
"யாராவது ஒருத்தர் போய் பேசுங்க" என்று இருவர் நிற்பதை பார்த்து மருத்துவர் எச்சரிக்கை செய்துவிட்டு செல்ல அவளும் தயக்கத்தோடு ,"நான் போய் பேசிட்டு வரேன்" என்று கூறி தாய் இருக்கும் அறை நோக்கி சென்றாள்...
அங்கு மருத்துவ உபகரணங்கள் மூலம் சுவாசம் எடுத்துக் கொண்டிருக்கும் தன் தாயைப் பார்த்து அவளுக்கு மிகவும் வருத்தமாகி போனது..
அவள் வாழ்க்கையே முடிந்தது போல அவள் நினைத்தாள் அவளை கண்டதும் லேசாக கண்களைத் திறந்த ராணி ,"நான் செத்துடுவேன்" என எடுத்ததுமே கேட்டார்..
" என்னம்மா இப்படி பேசுறீங்க???"
" எனக்கு அப்படித்தான் தோணுது என்னை தயவு செஞ்சு வீட்டுக்கு கூட்டிட்டு போ என்னால ஒரு நிமிஷம் கூட இங்கு இருக்க முடியாது போற உசுரு வீட்டிலேயே போகட்டும் உன்னோட அப்பா கூட நம்ம வீட்லதான் இறந்தார் நானும் நம்ம வீட்டுல தான் சாகணும் வேற எங்க செத்தாலும் என்னோட ஆத்மா சாந்தி அடையாது" என்று அவர் கூற அதை கேட்டு அவளோ ,"அம்மா தயவு செஞ்சு அப்படி எல்லாம் சொல்லாதீங்க" என்று கூறினாள்...
அவரோ ,"அய்யோ உன்னை அம்போன்னு விட்டுட்டு போக போறேன்.. சின்ன குழந்தைகளை வச்சுட்டு நீ என்ன பண்ண போற உன் கையில அப்பாவோட தொழில் இருக்கு.. அதை வச்சு நீ பிழைச்சாலும் கழுகு மாதிரி உன்னை வேட்டையாட நிறைய பேரு காத்துட்டு இருக்காங்க இவங்களுக்கு இடையில நீ எப்படி இருப்ப என்னால முடியலையே என்னங்க இது எல்லாம் நீங்க பாத்துட்டு தான் இருக்கீங்களா???" என்று அவர் மேலும் புலம்ப
"அம்மா உங்களுக்கு எதுவும் இல்ல தயவு செஞ்சு கொஞ்சம் அமைதியா இருங்க ரிலாக்ஸா இருங்க நீங்க இப்படி பிரஷர் ஆனீங்கன்னா உங்களுக்கு ரொம்ப முடியாமல் போய்விடும்" என்று அவள் கலங்கி கூற
அவரோ ,"என்னால முடியலையம்மா" என்று மேலும் உருகினார்.." அம்மா ஒரு சின்ன ஆபரேஷன் தான் அது செஞ்சா நீங்க நல்லா ஆயிடுவீங்கன்னு டாக்டர் சொன்னாங்க" என்று அவள் கூற அதைக் கேட்ட தாயோ ,"என்னால முடியாது நான் எதுக்கும் ஒத்துக்க மாட்டேன்" என்று அடம் பிடித்தார்...
"அம்மா தயவு செஞ்சு நான் சொல்றதை கேளுங்க நீங்க நூறு வருஷம் நல்லா இருப்பீங்க ஆப்ரேஷனுக்கு மட்டும் ஒத்துக்கோங்க" என்க
"மாட்டேன் நான் ஒத்துக்கவே மாட்டேன்" என்றார் அவர்...
"அம்மா ப்ளீஸ் அடம் பிடிக்காதீங்க"
"என்ன எதுக்குடி ஆபரேஷன் பண்ண சொல்ற நானா டி அடம் புடிக்கிறேன் நீயும் தானடி அடம் பிடிக்கிற" என்க
"என்னம்மா சொல்றீங்க???"
"உன்னோட வாழ்க்கை உறுதியாகாமல் நான் ஆப்ரேஷன் பண்ணிக்க மாட்டேன்" என்று முகத்தை திருப்பிக் கொள்ள அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..
"அம்மா என்னோட வாழ்க்கை நல்லாத்தான் இருக்கு!!!"
"என்ன இதெல்லாம் ஒரு வாழ்க்கையா நீ போய் ஜெகதீஷ் வர சொல்லு இப்பவே உனக்கும் ஜெகதீஷுக்கும் கல்யாணம் என் கண்ணு முன்னாடி இன்னைக்கே நடக்கணும் அத பாத்துட்டா போதும் அதுக்கப்புறம் என்னோட உடம்புல கத்தியையோ கடப்பாரையோ எடுத்து வெட்டி விடு நான் தாங்கிக்கிறேன்" என்க
அவளோ திகைத்தாள் தாய் எங்கே சுற்றி எங்கே வந்து நிற்கிறார் என்பதை பார்த்து அவளுக்கு ஆத்திரம் வந்தாலும் எதிர்த்து பேச முடியாதபடி தாய் இருக்கும் நிலையை பார்த்து ,"அம்மா இப்போ என்னோட கல்யாணம்தான் முக்கியமா நீங்க தயவு செஞ்சு ஆப்ரேஷன் பண்ணிக்கோங்க" என்று கூற,
"அதெல்லாம் முடியாது நீ என் கண்ணு முன்னாடி அவனை கல்யாணம் பண்ணினா மட்டும் தான் நான் ஆபரேஷன் பண்ண ஒத்துக்குவேன்" என்று அவர் பிடித்த பிடியிலேயே நின்றார் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை..
அவனை திருமணம் செய்ய அவளுக்கு விருப்பமில்லை ஆனால் அவனை திருமணம் செய்யவில்லை என்றால் அவளுடைய அம்மாவை உயிரோடு அவளால் பார்க்க இயலாது தன்னுடைய அம்மா தன்னை எமோஷனல் பிளாக் மெயில் செய்கிறார் என்று தெரிந்தே அதில் சிக்குண்டு கிடந்தாள் சுபத்ரா...
அவளுக்கு வேறு வழி தெரியவில்லை அவனை திருமணம் செய்ய விருப்பமில்லை அவன் செய்த பாவத்துக்கு அவன் காலடி விழ அவளுக்கு மனம் இல்லை ஆனால் அவளுடைய அம்மா உயிரை காப்பாற்ற வேண்டிய நிலையில் அவள் தள்ளப்பட்டு இருக்கிறாள்..
இறுகிய மனதோடு ஜெகதீஷை அழைத்தாள்...நடந்த விசயத்தை அவள் சுருக்கமாக கூறியவள்," உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் அம்மா ஆபரேஷனுக்கு ஒத்துக்குவாங்கன்னு சொல்றாங்க" என்று அவளிடம் கூற
"அதுக்கு நான் என்ன பண்ணனும்???" என்று அவன் தெரிந்து கேட்டான் அதைக் கேட்டு அவளுக்கு ஆத்திரம் வந்தது," என்னை கல்யாணம் பண்ணிக்கணும்" என்று அவள் கூற
"அதுதான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ரெடியா தானே இருக்கேன்" என்க அவளுக்கோ செருப்பால் அடித்தது போல இருந்தது...
தனக்கு தீங்கு இழைத்து இத்தனை அவமானத்திற்கும் காரணமாக இருந்த ஒருவன் முன்னாள் தலைகுனிந்து விடக்கூடாது அவனை திருமணம் செய்து அவனை தன்னை ஜெயிக்க விடக்கூடாது தன்மானத்தோடு இருக்க வேண்டும் என்று எண்ணிய அவளுக்கு கிடைத்த பரிசு என்னவோ இதுதான் எனும் போது அவள் என்ன செய்ய இயலும் அவள் எதுவுமே பேசவில்லை...
அவனோ அவள் அமைதியாக இருப்பதை பார்த்து,"கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனா ரெண்டு கண்டிஷன் ஒன்னு என்னோட பசங்க நான் உன் கழுத்துல தாலி கட்டுறத பார்க்கணும் இரண்டாவது கண்டிஷன் அதே இடத்தில் ரிஜிஸ்டர் பண்ணனும் இதுக்கு ரெண்டுக்கும் ஓகேவா நான் இப்பவே வரேன்" என்று அவன் கூறினான்..
அதை கேட்ட அவள் அதிர்ந்தாலும் சரி என்று கூற அவனோ அடுத்த ஒரு மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்தான்...
அவளோ தலை குனிந்தபடி நிற்க குழந்தைகள் இருவரும் குதூகலத்தோடு நின்று கொண்டு இருந்தார்கள்.." சஞ்சய் நான் ஃபர்ஸ்ட் டைம் ஹாஸ்பிடல் ஒரு கல்யாணத்தை பார்க்கிறேன்" என்று சஞ்சனா கூற ," நானும் தான் சஞ்சு" என்று கூறவும் ஜெகதீஷ் அவர்கள் இருவரும் பேசுவதை கேட்டு சிரித்தபடி நின்று கொண்டிருந்தான்... அவளுக்கோ தவிப்பாக இருந்தது...
அவன் சார்பாக ராம் மற்றும் ரிஜிஸ்டர் ஆஃபீஸர் வந்து இருக்க, அவள் சார்பாக சரவணன் நின்று கொண்டிருந்தான்.. இருவருக்கும் துணையாக அவர்களின் வாரிசுகள் நின்று கொண்டிருக்க ராணி படுக்கையில் அமர்ந்தபடி இந்த காட்சியை பார்த்துக்கொண்டு இருந்தார்..சரவணனுக்கு தான் கண்ணில் கண்ணீர் வந்து கொண்டிருந்தது அந்த இடத்திலேயே வருத்தமாக இருக்கும் இரண்டு நபர்கள் சரவணன் மற்றும் சுபத்ரா தான்...
அதை கண்ட ஜெகதீஷ் ,"சரவணன் நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்ல எதுக்கு அழுதுட்டு நின்னுட்டு இருக்கீங்க சந்தோஷமா இருங்க" என்று கூற அதற்குள் ராணி தாலியை எடுத்து கொடுக்க அதை வாங்கிய ஜெகதீஷ் குனிந்த தலையோடு இருக்கும் அவளை பார்த்து ,"ஏய் நிமிந்து பாரு டி " என்று கூறினான்...
ஒரு காலத்தில இதற்கு அவள் ஆசைப்பட்டு இருக்கிறாள் ஆனால் இப்பொழுது வேப்பங்காயாக கசந்தது...
அவளோ நிமிர அவளின் கலங்கிய விழிகளை பார்த்தவன்," என் கண்ணை மட்டும் பாரு" என்று அவளிடம் அதிகாரமாக கூறியவன் அவளுடைய கழுத்தில் தாலி கட்டினான்.. அவனுடைய கண்ணை மட்டும் பார்த்தபொழுது முகம் லேசாக தெரிந்தது போல அவளை உணர்ந்தாள் அதனால் உறுதியோடு அவனது கையால் தாலியை வாங்கி கொண்டாள்...
மிக எளிமையாக அவனுடைய திருமணம் நடந்தது பிறகு ரிஜிஸ்டர் செய்ய சாட்சி கையெழுத்தாக அவன் சார்பில் ராமும் அவள் சார்பில் சரவணன் கையெழுத்து இட போகும் போது கூட சுபத்ராவை பார்க்க ஜெகதீஷ் தான் ,"சரி சரி தேவதாஸ் மாதிரி அவளை பார்த்துட்டு இருக்காம கையெழுத்து போடுங்க ரெண்டு குழந்தை இருக்குன்னு தெரிஞ்சும் மனச தவற விட்டது உங்க தப்பு அதுவும் ஜெகதீஷ் தான் அதுக்கு காரணம் என்று தெரிஞ்சும் என்கிட்ட மோதனும்ன்னு நெனச்சது அதைவிட தப்பு எந்த தைரியத்துல இதெல்லாம் யோசிச்சிங்கன்னு எனக்கு தெரியல சாட்சி கையில் ஏதாவது போடுங்க" என்று நக்கலாக கூறினான்...
அதைக் கேட்டு தன்னுடைய ஒன்றும் செய்ய இயலாத தனத்தை எண்ணிக் கொண்டே அதில் கையெழுத்து இட்டான்...
எல்லாம் நடந்து முடிந்துவிட்டது பதிவு திருமணமும் நடந்து முடிந்து விட்டது தாலியும் கட்டியாகிவிட்டது எல்லாம் முடிந்துவிட்டது இனி எதுவும் நடக்க பாக்கி இல்லை என்ற நிலையில் தன் குழந்தைகளை பார்த்து ,"இப்பவாவது நம்புறீங்களா நான் தான் உங்க அப்பான்னு" என்று கேட்க அவர்களோ கைதட்டி," நம்புறோம் நம்புறோம் அதுதான் நீங்க தாலி கட்டிடீங்களே" என்று வெட்கப்பட்டு கொண்டு கூற அவனும் சிரித்தான் அவளால் சிரிக்கவே முடியவில்லை அவன் முன்னே தோற்றது போன்ற உணர்வு..
உணர்வல்ல தோற்று தான் போய்விட்டாள்.. அவன் முன்னே தோற்று விட்டாள்...அதுவும் அவளுடைய தாய்க்காக பரவாயில்லை அவளுக்கு முக்கியம் அவளுடைய வைராக்கியத்தை விட அந்த இடத்தில் அவளுடைய தாயின் உயிர் தான் முக்கியம் என்று அவள் எண்ணி இருக்கும் வேலையில் ராம் அந்த ரெஜிஸ்டர் ஆபீஸ்ரிடம் ,"என்ன பீட்டர் எல்லாம் முடிஞ்சது தானே" என கேட்க
"ஆமாம் ராம் எல்லா ஃபார்மாலிட்டிசும் முடிந்தது" என்று கூற அதை கேட்ட ஜெகதீஷ் தன் கையை தூக்கி லேசாக நெட்டி முறித்தவன் ,"அப்போ அப்படி கல்யாணமும் நடந்துடுச்சு இல்லையா சட்டப்படி நீயும் நானும் கணவன் மனைவி ஒரு மஞ்ச கயிறு நம்மளை இணைச்சுடுச்சு சட்டப்படியும் இணைஞ்சிட்டோம் அப்படித்தானே என்னோட பொண்டாட்டி மிசஸ் ஜெகதீஷ் என்னோட அபிசியல் பொண்டாட்டி" என்றவன் ராணியை பார்த்து ,"இப்போ ஹேப்பியா உங்களுக்கு" என்று கேட்டான்
அவரோ கண்ணீர் மல்க தலையை ஆட்ட ,"பழைய ஜெகதீஷ் இல்ல என்னை நீங்க நம்பலாம்" என்று மட்டும் அவருடைய பதட்டத்தை எண்ணி அவன் கூறினான் அதுவே அவருக்கு போதுமானதாக இருந்தது," சரி ஓகே ஷார்ட் ஓகே பேக்கப்" என்றான் ஜெகதீஷ்..
அதை அவன் கூறியதும் பெட்டில் இருந்து குதித்து இறங்கினார் ராணி கூடவே அந்த மருத்துவர்களும் சிரித்தபடி நின்று கொண்டிருந்தனர் மருத்துவராக நடித்த ஜூனியர் ஆர்டிஸ்ட்கள்...
தன் தாய் சிறு குழந்தை போல கட்டிலில் துள்ளி குதித்து இறங்குவதை பார்த்த அவள் அதிர ஜெகதீஷ் அதைப் பார்த்து நக்கல் சிரிப்போடு ராணியிடம் ,"சூப்பரா நடிக்கிறீங்க.. பத்து நாள்ல இவ்வளவு அழகா நடிப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை!!! உங்களுக்கு நல்ல சான்ஸ் இருக்கு என்னோட அடுத்த படத்துல நடிக்கிறீங்களா???" என கேட்டான்...
அதைக் கேட்டு அவரோ வெட்கப்பட்டு சிரிக்க அவனும் பதிலுக்கு சிரித்தான் இப்பொழுது திகைத்துப் பார்ப்பது சரவணன் மற்றும் சுபத்ராவின் முறையாகியது!!!!!... ஆம் இங்கு நடந்ததும் அனைத்தும் ஜெகதீஷின் வேலைதான் கல்யாணத்தை தவிர அனைத்தும் நாடகம் தான் அவன் ஒரு டைரக்டர் என்பதை இந்த இடத்தில் அவன் அழகாக நிரூபித்து விட்டான்...
