Share:
Notifications
Clear all

அதிகாயன் 8

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் : 8

அதனால், "மாப்பிள்ளை சொல்றது எல்லாம் உண்மை தான் எப்படியோ என் பொண்ணு உயிரோட வந்ததிலேயே எனக்கு சந்தோஷம் மாப்பிள்ளை இறந்துட்டார்ன்னு தான் நான் வேற மாப்பிள்ளை பார்த்தேன்" என்று கூற அதை கேட்ட போலீசாரும் மேற்கொண்டு, "நீங்க யாரையாவது சந்தேகப்படுறீங்களா??" என வினவ அவர்கள் அனைவரும் இல்லை என்று கூற அதை கேட்ட போலீசார் கேஸை முடித்து விட்டு கிளம்பி விட்டனர்..

போலீசாரை அனுப்பி வைத்தவன் அனைவரையும் பார்க்க அவர்கள் அனைவரும் அவன் முன்னே குற்றவாளி போல நின்றுக் கொண்டிருக்க அதை கண்டவன் வேகமாக தன் பாண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவன், "தணிகாசலம் எப்போ வருவார் அமெரிக்கால இருந்து??" என வினவ...

'அவர் அங்கே போனது இவனுக்கு எப்படி தெரியும் என்ன இவனை பார்க்கவே ஒரு மாதிரியாக இருக்கானே' என எண்ணிய சதாசிவம் முழிக்க...

அவரை ஒரு மாதிரியாக பார்த்து கொண்டே , "என்ன பேச்சையே காணோம் நான் கேட்டா பதில் சொல்லணும் இல்ல அப்படின்னா என்ன நடக்கும் ன்னா??" என கூறியவன் அப்படியே நடந்துக் கொண்டே சாதனாவின் அருகில் வந்தவன் அவளது தோளில் தன் கையில் இருந்த எரிந்துக் கொண்டிருந்த சிகரெட்டை எடுத்து அவள் தோளில் சூடு வைத்தான்..மிகவும் அழுத்தமாக அழுத்த அவளோ வலியால் அலறினாள்..

அவளோ அலர தன் மகள் அலறுவதை கண்டு அதிர்ந்த சதாசிவம், " ஐயோ உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு ஐயோ என் பொண்ணை என்ன பண்ற படுபாவி இந்த நிலையில் என் பொண்ணை ஆக்கினதும் இல்லாமல் இப்படி பண்ணி வைச்சு இருக்கியே??" என்று கூற...

அதை கேட்ட அவனோ, " ஓ உன் பொண்ணை என்ன பண்ணேன் ன்னு தெரியணுமா இதோ காட்டுறேன்" என கூறியவன் அந்த சிகரெட்டை எடுத்து சதாசிவம் மற்றும் அவரது மனைவி மீதும் இரக்கமின்றி சூடு வைத்தான்..அவர்களும் அவர்கள் பங்குக்கு கதற, " இதுக்கு தான் உங்க பொண்ணு கதறிட்டு இருக்கா எப்படி டி இருக்கு ட்ரீட்மெண்ட்" என்க அவர்கள் மூவரும் அலறி கொண்டிருக்க இவனோ இரக்கமே இன்றி பார்த்து கொண்டிருந்தான்..

அந்த வீட்டு வேலைக்காரர்கள் எல்லாம் இவன் இந்த வீட்டுக்குள் நுழைந்ததும் அவர்கள் வெளியே அப்புறப்படுத்தப்பட்டு இருக்க அவனது அடியாட்கள் போக மீதம் உள்ளவர்களை எல்லாம் புதிதாக பணி நியமனம் செய்ய அவன் உத்தரவிட்டு இருக்க அனைவரும் செய்து கொண்டிருந்த பகுதி வேலையில் இருந்தே அப்புறப்படுத்தி இருந்தனர் ..

அந்த வீட்டின் சமையல் முதல் காவலாளி வரை குறிப்பிட்டு சொல்ல போனால் அந்த வீடே அவன் வசம் ஆகி போனது. இவர்களை இங்கேயும் சிறை வைக்க தான் அவளை கொண்டு வந்து இருக்கிறானோ என அவள் எண்ணினாள்..

அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு புறம் கதறி கொண்டு இருக்க, " ஹ்ம்ம் இப்போ சொல்லுங்க பார்ப்போம் தணிகாசலம் எப்போ வருவார்??"..என்க

"இந்த மாசம் கடைசியில வந்திடுவான்" என்று வலி தாளாமல் சதாசிவம் கூற...

"இதை முன்னமே சொல்லி இருக்கலாமே" என கூறியவன் அவர்களை காண ஆளுக்கு ஒரு புறம் வலியால் துடித்து கொண்டிருக்க அதை கண்டும் அவனது குரோதம் அடங்கவில்லை..அவன் மனம் முழுவதும் அடுத்து இவர்களை எல்லாம் என்ன செய்யலாம் என்று இருக்க குடும்பமே ஆளுக்கு ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள,

"என்ன பார்க்கறீங்க செத்தவன் எப்படி டா உயிரோடு வந்தான்னா??? " என்று கூறும் போதே அவனது விழிகள் கோபத்தை கொட்டி தீர்க்க...

தன்னால் தன் குடும்பமே வதைப்பட பாவம் எனது அம்மா அப்பா என எண்ணி அவளே மிக கொடுமையை அனுபவித்து விட்டு வந்தாலும் அது தன்னோடு போகட்டும் என் கண் முன்னால் என்னை பெற்றவர்கள் வதைப்பட வேண்டாம் என கருதி மெல்ல அவன் அருகே தன் கை வலியை மீறி அவள் சென்று,

"கர்ணா எதுக்காக இத்தனை கோபம் கர்ணா ?? நீ உயிரோட இருக்கிறது எங்க யாருக்கும் தெரியாது கர்ணா..உன்னால எப்படி கர்ணா இப்படி கோபமா இருக்க முடியுது" என்க...

"எப்படியா இப்படி தான்" என்று கூறியவன் அவள் முகத்தை தீவிரமாக பார்க்க அவளோ தனது பார்வையை தழைத்து கொண்டாள்..

"என்னமா நடிக்கிற நடிப்புக்கு பெயர் போனவ தானே நீ" என்க...

சதாசிவமோ, "கர்ணா கர்ணா நான் சொல்ல வரதை கேளு பா" என்று சுருதி இறங்கி அடங்கி போய் வினவ...

"வாயை மூடு சூடு தான் வைச்சேன் அடுத்து ஏதாவது பேசின பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவேன் " எனவும் அவரே அரண்டு விட்டார்..

மகளோ, "இருங்க பா நான் கர்ணாகிட்ட பேசுறேன் கர்ணா நம்மளை தப்பா புரிஞ்சு இருக்கார்ன்னு நெனைக்கிறேன்" என்றவள், "கர்ணா நான் அப்படிப்பட்டவ இல்லை கர்ணா " என்க...

"ஓ அப்படியா செல்லம் சரி அப்போ இன்னும் நீ பழைய மாதிரி தான் இருக்க அப்படி தானே??" எனவும்,

"ஆமாம் கர்ணா நான் பழைய சாதனா தான்" என கூற...

"அப்போ சரி எனக்கு பசிக்குது போய் சமைச்சிட்டு வா" என்று கூறியவன், " துணைக்கு உன்னோட அம்மாவை கூட்டிட்டு போ" என்று ஒரு மாதிரி குரலில் அவளை பேசவே விடாமல் அவன் அனுப்பி விட அவனது முகமே கூறியது அதில் ஏதோ ஆப்பு வைத்திருக்கிறான் என்று,

"வீட்டுல குக் இருக்காங்க கர்ணா அவங்க செய்வாங்க" என்று கூற

அவனோ மீதம் உள்ள சிகரெட்டை உள்ளிழுத்து கொண்டே, "ஹ்ம்ம் குக் இருக்காங்களா இப்போ இருக்காங்களான்னு போய் பார் எனக்கு நீ செய்யணும் சதி வேற யாரும் செய்ய வேண்டாம்" என்க...

அவளோ குழப்பமாகி வேகமாக அடுக்களைக்குள் சென்று பார்க்க அங்கு அவளது சமையல் அறையே மாறி இருந்தது அதாவது மாடர்ன் அடுக்களை போய் ஆதிக் காலத்து அடுக்களையாக நிமிடத்துக்குள் மாற்றி இருந்தனர் அவனுடைய ஆட்கள், அவள் அதை கண்டு அதிர்ந்து, " என்ன கர்ணா இங்கே எப்படி சமைக்க எனக்கு சமைக்க தெரியாது" என்க...

"அதுக்கு தான் உன் அம்மாவை கூட்டிட்டு போக சொன்னேன்" என்க...

இதை எல்லாம் கண்ட சதாசிவம், "எதுக்காக இப்படி எல்லாம் செய்யற எங்களை எதுக்காக படுத்துற"

"எதுக்காக செய்யறேன்னு உனக்கு தெரியாது அப்படி தானே புரிய வைச்சிடறேன் போய் பாத்ரூம் கழுவு போ" என்று கூற சதாசிவமோ, "நானா??" என அவர் அதிர...

அவனோ, " அப்போ நானா??" என கேட்டவன் மீண்டும் ஒரு மாதிரியாக பார்த்து சிகரெட்டை பற்ற வைத்து அவனது கையை முறுக்க அதை கண்டவரோ வேகமாக எழுந்து கொண்டார்...

மேலும் மனதுக்குள் தன் மகள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை என்று எண்ணி இருப்பார் போலும் அவரால் இவனது வருகையால் இனி என்ன நிகழ போகிறதோ என்ற பயம் அவருள்ளும் சென்றது என்னவோ உண்மை தான் பழைய கடன்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்து கொண்டு இருக்கிறதோ என்னவோ???

காலம் மறந்த செயல்களின் பாவத்தை இப்போது அனுபவிக்க வேண்டிய காலம் வந்து விட்டதோ என்னவோ இவன் வீட்டுக்குள் நுழைந்த நேரம் முதல் அவரால் அவரது சொந்த வீட்டுக்குள்ளேயே ஒரு வேலைக்காரன் என்ற நிலையில் வாழ வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்... அவரால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை..அவரால் யாருடனும் பேச முடியவில்லை முதலில் அவருடைய போன் முடக்கப்பட்டது தற்போது அவருடைய தொழில் எல்லாமே முடக்கப்பட்டது..

தொழில் மூலம் துவங்கப்பட்டு இருந்த வங்கி கணக்குகள் எல்லாம் அவன் வசம் ஆகின... இது ஏதும் அறியாத அவரோ தோட்ட வேலை செய்து கொண்டிருக்க அடுக்களைக்குள் சென்ற தாயும் மகளும் விறகு அடுப்பில் சமைக்க தத்தளித்து கொண்டிருந்தனர்...

ஆம் ஆதி காலத்து விறகு அடுப்பு தான் இருக்க அதை கண்டதும் அவள் மலைப்பாக அவளது தாயோ, "என்ன டி இது எங்கே இருந்து டி இவன் வந்தான் எப்படி டி மாட்டின இப்போ என்ன எல்லாம் செய்ய இருக்கானோ கடவுளே??" என்க...

பின்னாலே அவனது அடியாள் வந்து, " உங்களை வேலை தான் செய்ய சொல்லி இருக்காங்க பேச இல்லை" என்று கூற அவர்களும் அவர்களுக்கு கொடுத்த வேலையை செய்ய துவங்கினர்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top