Share:
Notifications
Clear all

அதிகாயன் 7

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் : 7

சதாசிவம் இல்லம் முன் மிக பெரிய கார் வந்து நின்றது ..அவர் வீட்டு காவலாளி யாரென்று பார்க்க கர்ணன் மற்றும் சாதனா இருவரையும் பார்த்து காவலாளி அதிர வேகமாக கதவை திறந்தான்.. அவனே அவனை பார்த்து அதிர்ந்தான்..

அவளுக்கு அவளது வீட்டுக்குள் தான் நுழைந்து கொண்டு இருக்கிறாள் என புரிகிறது ஆனால் அதை எண்ணி சந்தோஷமே வரவில்லை இனி என்ன நடக்க இருக்கிறதோ என்று தான் அவள் மூளை யோசிக்க அதை எல்லாம் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே அவளுடன் பயணம் ஆனவனின் கண்கள் தீயை கக்க மட்டும் மறக்கவில்லை.. அவனது காருக்கு பின்னால் பல கருப்பு நிற கார்கள் உள்ளே நுழையவும் அவளுக்கே கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது..உள்ளுக்குள் உயிர் பயம் வந்து போனது என்னவோ உண்மை தான் ஏனெனில் இந்த ஆறு மாதம் அவள் தான் படாதப்பாடு பட்டு இருந்தாளே..

கார் அந்த பெரிய வீட்டுக்குள் நுழையும் முன் விஷயம் சதாசிவம் காதுக்கு சென்றதோ என்னவோ வேகமாக வெளியே வர அதற்குள் கார் அவரை இடிப்பது போல நின்றது...

சட்டென்று அவர் தள்ளி நின்றதால் உயிர் தப்பித்து கொள்ள காரில் இருந்து இறங்கியவனை கண்டதும் அவருக்கு தலையே சுற்றியது. அவருக்கு பின்னால் காரில் இறங்கிய மகளின் கோலம் அவருக்கு மேலும் அதிர்ச்சியை கொடுக்க மகளை கண்ட சந்தோஷத்தை கூட வெளிக்காட்ட முடியாமல் இதோ கர்ணன் ஆக்கிரமித்து இருந்தான்..

"கர்ணா நீயா??" என அவர் அதிர...

"என்ன நீயும் உன் பொண்ணு மாதிரி அதிர்ந்து இருக்க நானே தான்" என்க...

"நீ செத்துட்டன்னு நினைச்சேன்" என்றவர் அவனுக்கு பின்னால் நின்று கொண்டிருக்கும் தன் மகளை பார்த்து, " அம்மாடி நீ உயிரோட இருக்கியா என்னம்மா இது யாரு இதுக்கு காரணம்??" என்று கேட்கவும் சத்தம் கேட்டு ஓடி வந்த சாதனாவின் தாய் அவளது கோலத்தை பார்த்து, "என் கண்ணே வந்துட்டியா டி ராஜாத்தி நீ உயிரோட இருக்கியா இல்லையான்னு தவிச்சு போயிட்டேன் டி ராஜாத்தி இதுக்கு யார் டி காரணம் என்ன கோலம் டி உன்னை பார்க்காமல் செத்து போயிடுவேன்னு நெனச்சேன் டி" என்று கூற...

அவளுக்கு இத்தனை நாள் கழித்து தன் உறவுகளை கண்டதும் அழுகை பீறிட்டு வர அவள் அழுது கரையவும் சதாசிவத்தின் முகத்தில் மட்டும் நக்கலாக இவர்களை எல்லாம் பார்த்து கொண்டு இருப்பவனை பார்த்து ஒரே குழப்பமாக இருக்க அதை கண்ட அவனோ, " அத்தனை எளிதா உங்க பொண்ணு செத்துடுவாளா?? இன்னும் அவ அனுபவிக்க வேண்டியது இருக்குதே..?" 'என்ன' என்ற கேள்வி வர அதுவரை அவனை கவனிக்காமல் இருந்த பார்வதியின் முகத்தில் இவனை கண்டதும் அதிர்ச்சியாக "கர்ணா" எனவும்,

"ஓ பேர் எல்லாம் ஞாபகம் இருக்கே என்னை எதிர் பார்க்கல போல" என்று அலட்சியமாக கூற...

"நீ எப்படி" என வார்த்தைகள் அவரை தடுமாற வைக்க அவனோ, "இங்கேயே இருந்து பேசினா எப்படி உள்ளே போய் சாவகாசமா பேசுவோம் பேச வேண்டியது தான் நெறைய இருக்கே" என்க...

சதாசிவமோ, "அதுக்கு நான் விட்டா தானே வெளியே போடா என்ன மிரட்டறியா உன்னை சும்மா விட மாட்டேன் என்னை யாருன்னு தெரியாமல் இருக்க " என்று சதாசிவம் கூறிய அடுத்த நொடி, "உன்னை பேச நான் விட்டா தானே டா நாயே பண்றதை பண்ணு டா நீ தான் பெரிய பருப்பு ஆச்சே பண்றதை பண்ணு டா அதுக்கு தானே நான் வந்து இருக்கேன் கிழட்டு பயலே " என்று இடியென அவனது கால் சதாசிவத்தின் வயதை கூட கணக்கில் எடுத்து கொள்ளாமல் அவரது நெஞ்சில் விழ இதை சத்தியமாக அவர் எதிர் பார்க்கவில்லை..

அவர் இடியென அடி விழவும் கீழே விழ அவள் குடும்பமே அந்த காட்சியை பார்த்து அதிர அவன் எப்போது இந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தானோ அப்போதே அவனுடைய ஆட்கள் அந்த வீட்டை ஆக்கிரமித்து இருக்க சுற்றி முற்றி என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரியவில்லை...

"அப்பா உங்களுக்கு என்ன ஆச்சு அப்பா உனக்கு ஈவு இரக்கமே இல்லையா??" என கூறி தன் தந்தையை ஓடி சென்று தாங்கி பிடித்து வினவ...

"அப்படியா அதெல்லாம் என்னன்னு உனக்கோ இல்லை இங்கே விழுந்து கிடக்கிறவனுக்கோ தெரியுமா?? வாயை மூடிட்டு இருந்தா இன்னும் கொஞ்சம் காலத்துக்கு நான் நினைக்கும் வரை உங்க உயிர் உங்க உடம்பில இருக்கும் இல்லை அப்படினா இப்போவே போயிடும்" என்று கூறியவன் அடுத்த நொடி போலீசை அழைத்தான்..

அவர்கள் வரவும், "நான் கர்ணன் நானும் என் மனைவி சாதனாவும் இங்கே வந்து இருக்கோம் என் மனைவி கடத்தப்பட எல்லாம் இல்லை அவ என்கூட தான் இருந்தா அவளுக்கு அவங்க பேரெண்ட்ஸ் பண்ணி வைக்கிற திருமணத்தில் விருப்பம் இல்லை அதனால அவ வீட்டை விட்டுட்டு வெளியே போய்ட்டா..

ராகவ் இவளை தேடி போகும் போது விபத்தாகி இறந்துட்டான் அவனை யார் சுட்டாங்கன்னு தெரியல அதை கண்டு பிடிக்க வேண்டியது உங்க பொறுப்பு" என ஒன்றுமே நடவாதது போல என்னவோ காதல் மனைவியை அணைத்துக் கொண்டு இருப்பது போல சாதனாவை அணைத்துக் கொண்டு கூற அதை கேட்ட போலீசார்,

எத்தனை நாள் இந்த கேஸை இழுத்துக் கொண்டு இருப்பது என எண்ணி முடிக்க நினைத்தவர்கள் அடையாளம் தெரியாத நபரால் மரணம் அடைந்து விட்டனர் என செய்தியை முடித்தவர்கள், " நீங்க இறந்துட்டதா சொன்னாங்களே??" என சதாசிவத்தை பார்த்துக் கொண்டே கூற...

"சாதனாவும் தான் இறந்து இருப்பான்னு நெனைச்சீங்க ஆனால் அவள் இப்போ இரண்டு உயிரா வந்து இருக்காளே அது போல இத்தனை நாள் எனக்கு வெளியே வரணும்னு தோணல இப்போ இந்த உலகத்துக்கு வரணும்னு தோணுச்சு வந்தேன் ரொம்ப சந்தேகமா இருந்தா எனக்கு என்ன ஆச்சுன்னு என் மாமனார்கிட்டவே கேளுங்களேன் அண்ட் புருஷன் உயிரோட இருக்கும் போது மகளுக்கு இரண்டாவது கல்யாணம் செய்து வைக்கிற அப்பனுக்கு என்ன தண்டனைன்னு சொல்லுங்க" எனவும் கூற...

அதை கேட்ட போலீசார் சதாசிவத்தை பார்க்க அவர் அவனிடம் வாங்கிய உதையை எண்ணி அவன் கூறிய அனைத்திற்கும் தலையாட்டினார் எங்கே தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் அவர் முகத்தில் வெளிவந்தது..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top