Share:
Notifications
Clear all

அதிகாயன் 6

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் : 6

அவளோ அதை கண்டு அதிர்ந்து இவளெல்லாம் மனுஷியா என எண்ணி, "நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கவா நீங்களும் ஒரு பொண்ணு தானே என்னோட நிலையில் நீங்க இருந்தா என்ன செய்விங்க??" என்று வினவ அந்த பெண்ணோ அவளை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு, "செத்து இருப்பேன் ஆனால் நீ தான் சாக மாட்டியே உன்னை அப்படி சாகவும் விட மாட்டார்" என்று கூறி விட்டு சென்றாள்...

அதை கேட்டு அதிர்ந்த அவளுக்கு மிக அருவருப்பாக இருந்தது அவள் வயிற்றில் ஒரு குழந்தை என அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை அதுவும் யாரென்று தெரியாமல் ஒருவனின் குழந்தை எதற்காக இதெல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது என புரியாமல் தவித்தாள் சாதனா..

அவள் கருவுற்று இருக்கிறாள் என்பதை அறிந்ததும் அவளுக்கு மூன்று வேளையும் நல்ல உணவுகள் வந்தது. அதுவும் சமயத்துக்கு ஆனால் என்ன விஷயம் எனில் அவளால் அந்த உணவை உண்ணத்தான் முடியவில்லை..அவளுக்கு என்ன உணவு உண்டாலும் அது வெளியே வந்துக் கொண்டு இருக்க அது வேறு அவளை படுத்தி கொண்டு இருந்தது. ஆரம்பத்திலேயே மிகவும் மெலிந்த நிலையில் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருப்பவள் இங்கே வந்தது முதல் முன்பை விட மெலிந்த நிலையில் தான் இருக்கிறாள் ஆனால் அவள் உடல் மிகவும் பலவீனமாகி கொண்டே இருக்க அவளது உடலை அவளது மனம் தான் யோசித்து யோசித்து எந்த மாதிரி நிலையில் இருக்கிறது என அவளுக்கே புரியவில்லை. ஆம் அவள் கருவுற்று இருக்கிறாள் என்றால் அந்த ஒரு நாள் மட்டும் என்னை வதைத்தவனிடம் உருவான கரு இது எண்ணியவளுக்கு இந்த கருவுற்ற பின் வரும் உடல் உபாதைகளை விட அவள் மனமே சோர்ந்து போய் இருந்தது..

அதை விட அவள் கழுத்தில் எப்போதும் அந்த மஞ்சள் கயிறு இருக்க வேண்டும் என்ற விதிமுறையும் அவளுக்கு அங்கு விதிக்கப்பட்டது. அதனால் அவளது தாலி கழுத்தில் கிடக்க வயிற்றில் ஒரு சிசு ஆனால் இதற்கு எல்லாம் காரணமானவனின் குரல் மட்டும் அவள் இது நாள் வரை கேட்டு இருக்கிறாள் ஆனால் அதற்கு எல்லாம் காரணம் அவன் தானா என்று கூட அவளுக்கு தெரியாது..அன்றைய இரவு என்ன நடந்தது என்று கூட அவளுக்கு தெரியாது அதற்கான விடை தான் அவள் வயிற்றில் உள்ளதே..

அதை எண்ணியவளுக்கு தாளாமல் போக, இந்த கரு பேசாமல் அழிந்து போனால் தான் என்ன என கூட எண்ணினாள் ஆனால் அவள் வயிற்றில் இந்த கருவை உருவாக்கியவன் அவ்வளவு எளிதில் விட்டு விடுவானா என்ன அந்த கருவை வளர விடாமல் செய்து விடுவானா என்ன??? இத்தனை வேலைகளை செய்தவன் இனி மேலும் அந்த கருவை இவளது அனுமதியின்றியே வளர செய்து விடுவானே இப்போது எல்லாம் அவள் உண்ணவில்லை என்றாலும் சரி வாந்தி எடுத்தாலும் சரி அவள் உணவை உண்டு இருக்க வேண்டும் என்பது போல கட்டளைகள் அவளுக்கு பிறப்பிக்கப்பட அவளால் மூச்சை தாமே நிறுத்தி விடுவோமா எத்தனை காலத்துக்கு தான் இந்த இருட்டு அறை வாழ்க்கை என நினைத்து நினைத்தே அவள் வயிற்றில் கருவும் வளர்ந்தது என்று கூறுவதை விட அந்த கருவை உருவாக்கியவன் தான் வளர்த்தி கொண்டிருந்தான் என்று தான் கூற வேண்டுமோ இப்படியே ஆறு மாதம் போனதே தெரியவில்லை..

இப்போது சாதனா வயிற்றில் ஆறு மாத கரு வளர்ந்து அந்த கருவை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலை வர எப்போதும் போல எழுந்தாள்..

காலையில் எழுந்தவள் தனது மேடிட்ட வயிற்றை தூக்கி பிடித்தபடி எழ அன்றைய தினம் அவளுக்கு அதிர்ச்சியாகவும் அதே சமயம் அவளுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது..

ஆம் அந்த விடியல் அவள் இத்தனை நாட்களாக அவள் வாழ்ந்த இருட்டு வாழ்க்கைக்கு ஒரு விடிவாக அமைந்தது..

ஆம் அவள் காலையில் எழும் போதே அவள் வெளிச்சத்தை கண்டாள் அவள் தங்கி இருந்த அறை முழுவதும் மிகுந்த வெளிச்சமாக இருக்க அந்த அறையில் அவளுக்கு வேண்டிய உடை எல்லாம் வைக்கப்பட்டு இருக்க அந்த பெண் உணவை கொண்டு வந்தாள்.

அவளை அதிசயமாக சாதனா பார்க்க அந்த பெண்ணோ, " இந்தா உன்னோட உணவு குளிச்சிட்டு வந்து உணவு சாப்பிட்டு தயாரா இரு" என்று கூற அதை கேட்டவளோ, "என்ன இன்னிக்கு வெளிச்சம் ஆஹ் இருக்கு நீங்க தினமும் எனக்கு சாப்பாடு கொண்டு வரவங்க தானே" என விழிகள் மின்ன அவள் கேட்டாள் கிட்டத்தட்ட ஒரு மனிதனை அவள் கண்கூடாக பார்த்து ஆறு மாதத்துக்கு மேல் ஆகி இருக்க இவளை கண்டதும் கண்கள் மின்ன அவள் வினவ அந்த பெண்ணோ மருந்துக்கு கூட அவளை பார்க்காமல் அவள் வேலை முடிந்தது என்பது போல நான்கு அடி தள்ளி நின்று கொண்டாள்..

அதை கண்ட சாதனாவோ கடத்தி வைச்சு இருக்கிறவங்ககிட்ட எதிர்பார்த்தது தப்பு தான் என எண்ணி எப்போதும் போல அந்த பெண் கூறியதை செய்ய போனாள். குளித்து முடித்து உடைமாற்றி வந்தவள் அங்கே பொருத்தப்பட்டு இருந்த ஆளுயர கண்ணாடியில் அவளை காணும் போதே மேடிட்ட வயிற்றை அவள் காண அவள் பார்த்து கொண்டு இருக்கும் போதே அவள் பின்னால் ஒரு உருவம் வந்து நின்றது அவள் திரும்பி பார்க்க அப்படியே அதிர்ந்தாள் சாதனா..

அது கர்ணா அவள் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை "கர்ணா" என்க..

அவனோ அவளை பார்த்து ஆத்திரம் மிகுந்த அந்த விழிகளில் வன்மத்தை கக்க...

"என்னை அதிசயமா பார்க்குறியா இல்லை அதிர்ச்சியா பார்க்குறியா இல்லை எப்படி இவன் இங்கேன்னு பார்க்குறியா?" என்று கேட்க...

அவளோ இன்னும் அவனை கண்ட அதிர்ச்சியில் இருந்து அவள் மீளவில்லை. அவள் கண்களை இன்னும் அவளால் நம்ப முடியவில்லை. அந்த கண்களில் எத்தனையோ ரசங்கள் மாறி மாறி வந்து போக அந்த ரசங்களை எல்லாம் மாறி மாறி கவனித்து வந்தான் அவள் கூறிய கர்ணன்...

"நீ எப்படி உயிரோட ??" என்று அவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

"அது நான் இன்னும் சாகலையே உன் முன்னாடி தானே இருக்கேன் என்ன டா பொழைச்சுட்டானேனு பார்க்குறியா" எனவும் அவள் மேலும் அதிர்ந்து, " நீ இறந்துட்டன்னு சொன்னாங்க கர்ணா"
என அவனை கண்டதில் வார்த்தைகள் தடுமாறி அவள் கூற...

அவனோ அந்த அறையே குலுங்கும் அளவுக்கு ஆக்ரோஷமாக சிரித்தான்..சிரிக்கிறானா இல்லை இவள் மீதும் இவளது குடும்பத்தின் மீதும் உள்ள வன்மத்தை தீர்த்து கொள்கிறானா என அவளுக்கு புரியவில்லை. ஆனால் மனம் முழுவதும் இவன் எப்படி இங்கே என்பதிலேயே அவள் நினைவு இருக்க,

அவனோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், "என்ன செத்தவன் எப்படி வந்துட்டான்னு பார்க்குறியா நல்லா பார் நான் அந்த சாவுக்கே அப்பாற்பட்டவன் டி " என அவள் கழுத்தை பிடித்து ஓங்கி அறைய அவளோ நிலை குலைந்து விழ போனாள்..

ஓ நாம் விழுந்து செத்துவிடுவோம் என அவள் நினைக்க அதற்கு அவன் எளிதில் விட்டு விடுவானா என்ன இனியும் அவள் பார்க்க வேண்டியது தான் இன்னும் இருக்கிறதே..?

அடுத்த நொடி அவளை அவன் தான் தாங்கவும் செய்தான்... "கர்ணா நீயா இப்படி மாறிட்ட " என அவனின் குணம் அறிந்து அவன் தாங்கவும் அவள் வினவ,

அவனோ, "மாற வைச்சுட்ட சாதனா இல்லை சது இல்லவே இல்லை சதி இது தான் சரியான பெயர் உன் பேருக்கு பொருந்திய பேர் சதி.." எனவும்

அவளுக்கு எல்லாமே விளங்கியது இவன் தன்னை சும்மா விட மாட்டான் என்று அவனும் அதை விட பலமாக தானே எண்ணி இருக்கிறான். "அப்போ இதெல்லாம் செய்தது நீ தானா??" என்க...

"நான் இல்லாமல் செத்து போன உன் காதலனா??" என்று அவன் கண்களில் வன்மத்தோடு கேட்க...

அவளோ வாயடைத்து போனாள் அவளால் நம்பவே முடியவில்லை. இது கர்ணன் தானா என்று அவள் கண்ட கர்ணன் வேறு ஆனால் இப்போது இருக்கும் கர்ணன் வேறு நடை உடை தோற்றம் அனைத்திலும் மாறுப்பட்டு இருக்க அவள் அதிர்ச்சியாக பார்க்க அவனோ , "இதுக்கே அதிர்ச்சியான எப்படி சதி ?? இன்னும் இருக்கே போவோமா??"

"எங்கே??"

"உன் வீட்டுக்கு தான்" என்று கூறியவன் அவளை அழைத்து கொண்டு அங்கு சென்றான். இனி என்ன நடக்க இருக்கிறதோ என யூகிக்க முடியாமல் திணறினாள் சாதனா...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top