Share:
Notifications
Clear all

அதிகாயன் 5

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் : 5

மூன்று மாதங்களுக்கு பிறகு..

அதே இருட்டு அறையில் தான் அடைத்து வைக்கப்பட்டு இருந்தாள் சாதனா.. அவளால் அவளது தலையை கூட தூக்க முடியவில்லை..தலை பாரமாக இருந்தது கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்களாக இதே நிலைமை தான் அவர்கள் கொடுப்பதே கொடுமையான உணவு அதுவும் இரு வேளை அதை கூட அவளால் உண்ண முடியவில்லை...

கிட்டத்தட்ட இரு நாட்களாக அவளது உடலில் வலு இல்லாதது போலவே அவளுக்கு இருந்தது..மெல்ல தன் உடலை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு எழுந்து அமர்ந்தாள் சாதனா. அவளுக்கு குமட்டி கொண்டு வந்தது...அங்கேயே அவள் வாந்தி எடுத்தாள் அவள் படுத்து இருக்கும் படுக்கை நாசமாகி இருக்க அவள் மீதும் நாறி இருந்தது ...அவளால் எழ மட்டும் தான் முடியுமே தவிர அந்த படுக்கையை விட்டு செல்ல முடியாது.. ஏதோ இப்போது படுக்கையாவது கொடுத்தார்களே என்ற எண்ணம் அவளுக்கு வந்தது முன்பு இருந்த இடத்திலேயே அவளை உட்கார வைக்கவில்லையே என்று கூட அவள் மனம் சமாதானம் அடைந்தது ஆனால் தான் இன்று வரை எதற்காக அடைப்பட்டு இருக்கிறோம் என்று அவளுக்கு புரியவில்லை...

இருட்டு அறையில் அவள் தான் பாவம் என்ன செய்வாள் அவள் குமட்டிக் கொண்டு இருக்கிறாள் என்றதும் அவளுக்கு எப்போதும் உணவு கொடுக்கும் அந்த பெண் வேகமாக அவளது அறைக்கு வந்தவள் அவள் நிலைமையை கண்டதும், " உடம்புக்கு என்ன??" என கேட்க...

"தெரியல தலை பாரமாக இருக்கு என்னோட கட்டை அவிழ்த்து விடு" என்றாள் அந்த பெண்ணோ வேகமாக அவளது கால்கட்டை அவிழ்த்து விட்டு குளியல் அறைக்குள் கொண்டு செல்ல அங்கே செல்வதற்குள் மீண்டும் அவளுக்கு குமட்டி கொண்டு வர அந்த பெண்மணி தான் அவளை தாங்கி பிடிக்க வேண்டியதாக இருந்தது..பின் அவள் அவளுடைய உடலை கழுவிக் கொண்டு துணியை மாற்றி வர அதுவரை காத்திருந்த பெண்மணி மீண்டும் அவளை கட்டி போட சாதனாவோ வெறுமையாக, " என்னை கட்டி போட வேண்டாமே என்னால முடியல உடம்பு ரொம்ப வலிக்குது இங்கே இருந்து நான் எப்படி இருந்தாலும் தப்பிச்சு போக மாட்டேன் அதற்கான வலு என் உடம்பில இல்லை தயவு செய்து என்னை விடுங்க" என்று கூற அந்த பெண் கட்டி வைத்து விட்டே கீழே சென்றாள்..

அதை கண்ட சாதனாவுக்கு கோபமெல்லாம் வரவில்லை கோபம் ஆத்திரம் எல்லாமே அவளை விட்டு சென்றுக் கொண்டிருந்தது இங்கே அவள் வந்து எத்தனை நாட்கள் ஆகி விட்டன என அவளுக்கு சரி வர தெரியாது ஆனால் வந்ததில் இருந்து இந்த இருட்டு அறையும் அவள் கேட்கும் சில குரல்களும் அவளது குரல் ஓங்கி ஒலித்தால் அவளுக்கு விழும் அடிகளை வாங்க அவள் உடலில் தெம்பு இல்லை இனியும் யாரும் அவளை காப்பாற்ற போவதும் இல்லை என்ற நம்பிக்கை அவளுக்கு வந்து விட இருக்கும் வரை அமைதியாக இருப்போம் என எண்ணிக்கொண்டாள் சாதனா அந்த அளவுக்கு அவளுக்கு வெறுத்து போய் இருந்தது..

அங்கே அவளது வீட்டில் மகளை காணவில்லை மகள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்ற சிறு துப்பும் கூட கிடைக்காமல் தவித்த சதாசிவம் மற்றும் அவரது மனைவியோ மகள் ஒரு வேளை உயிரோடு தான் இருக்கிறாளோ இல்லை இறந்து விட்டாளா ராகவ்வோடு போய் சேர்ந்து விட்டாளா என்று கூட எண்ணினார். சதாசிவம் அதாவது நாம் தேடும் நபர் இல்லை என்றால் இல்லாதது போல இருந்து கொள்ளலாம் என கூட எண்ணி கொண்டவருக்கு யாரை தேற்றுவது யாருக்கு ஆறுதல் சொல்வது என்று கூட தெரியவில்லை ஏனெனில் மகன் இறந்ததை ஏற்று கொள்ள முடியாமல் தவித்து வந்தவரை ஆறுதல் கூட சொல்ல முடியாமல் இருந்தார் சதாசிவம்..

சாதனாவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் சென்றதும் அடுத்த பத்தாவது நிமிடம் மருத்துவர் ஒருவர் வர வேகமாக அந்த பெண்ணுடன் சாதனாவின் அறைக்குள் நுழைய அவரும் அவளை தொட்டு பரிசோதிக்க முற்பட அவளோ, " என்னை விடு விடு" என திணறினாள் அவளுக்கு அன்றைய நாளின் ஞாபகம் வேறு வந்து தொலைத்தது... அன்றைய பயம் இன்னும் அவளை விட்டு போகவில்லை..

அதனால் இவனும் ஆடவன் என்றதும் தன்னை தான் ஏதாவது செய்து விடுவானோ என அவள் அதிர, " பயப்படாத மா நான் டாக்டர் தான் இருங்க உங்க உடம்புக்கு என்னன்னு செக் பண்றேன்" என்று கூற...

அவளோ ஆதரவாக ஒரு குரல் வந்ததும், "டாக்டர் ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க" என்று மெல்லிய குரலில் சாதனாவின் அருகில் இருக்கும் பெண்ணுக்கு கேட்டு விட கூடாது என அவள் மெதுவாக கூற அது அந்த மருத்துவரின் காதில் விழுந்ததா என தெரியவில்லை அவரோ கேட்காதது போல அவளை பரிசோதனை செய்து விட்டு, " கவலைபடாதீங்க மா நீங்க கர்ப்பமா இருக்கீங்க" என்று ஒரு குண்டை தூக்கி அவள் தலையில் போட அவளுக்கு இப்போது அவள் இருக்கும் அறை மட்டுமல்ல உலகமே இருண்டது போல இருந்தது..அவள் இதற்கு என்ன காரணம் என்று வெகுவாக யோசித்து அவளை குழப்பி கொள்ள தேவையில்லையே அன்றைய தினமாக தான் இருக்கும் என அவளே கிரகித்து கொண்டவள் மீண்டும் கதற,

அதை கண்ட அந்த பெண்ணோ மருத்துவர் அந்த அறையை விட்டு வெளியே செல்ல முனைவதை அவரது காலடி ஓசையை வைத்து கிரகித்தவள், " டாக்டர் ப்ளீஸ் இதை கலைச்சிடுங்க இல்லை என்னை கொன்னுடுங்க இது அசிங்கம் இதுக்கு காரணமானவன் ஒரு கொடுமைக்காரன்" என்று கத்த அவர் கேட்டார் இல்லை சென்று விட்டார்..

அந்த மருத்துவரை வழியனுப்பி விட்டு வந்தவளோ, "எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க??" என்று கடிந்தாள்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top