அதிகாயன் 40
அத்தியாயம் : 40
குழந்தை விழுந்த அடுத்த நொடி சாதனாவும் வந்து விழ இதை அவன் எதிர்பார்க்கவில்லை. அந்த அதிர்ச்சியில் இன்னும் உறைந்திருக்க நடந்ததை ஒன்று விடாமல் அனிதா இராவணனிடம் கூற ராவணனும் தன் பங்கிற்கு நடந்ததையெல்லாம் கூறினான்..
ராவணன் தன் தம்பியைப் பார்த்து,
" கர்ணா உன்னை உயிரோட பார்ப்பேன்னு நான் நினைக்கவே இல்லை..உன்னையும் அப்பாவையும் இந்த நிலைக்கு ஆளாக்கினவங்களை சும்மா விட கூடாதுன்னு நான் நினைச்சேன் அதுக்கான வதம் தான் இது " என்க அதை கேட்டதும் கர்ணா உடைந்தான்..தன் தம்பி அழுவதை பார்த்து, " அழாதே கர்ணா நீ அனுபவிச்ச வலிகளை என்னால் புரிந்துக் கொள்ள முடியும்..அதுக்கு உண்டான தண்டனையை அவங்க அனுபவிச்சுட்டாங்க. ஆனால் இறுதி வரை அவங்க திருந்தவே இல்லை அதிலும் சாதனா அவளே தான் அவ உயிரை மாய்த்துக் கொண்டாள். அவளை போல ஒருத்தி மறுபடியும் பிறக்காமல் இருப்பது தான் சரி " என்று கூற அனிதாவும் கர்ணாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள...
தன் உடன் பிறப்பை பார்த்த கருணாவுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது ராவணனுக்கு தான் தலை கால் புரியவில்லை என்று கூறலாம்.. அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை கருணாவை மீண்டும் சந்திப்பான் என்று கருணாவை பார்த்ததும் இந்தப் பாவிகளுக்கு எப்படி மனம் வந்தது. இதுபோன்ற ஒருவனை துன்புறுத்த அதே நேரம் அவனது மனைவியைப் பார்க்கும் பொழுது மனைவியும் அதே குறையோடு தான் இருக்கிறாள்.
ஆனால் இருவரும் மனநிறைவாக இருப்பதாகத் தான் அவர்களது முகத்தை பார்த்ததுமே ராவணனுக்கு புரிந்துபோனது. ஒருவேளை அனிதாவின் குடும்பம் மட்டும் இல்லை என்றால் என் தமையன் உயிரோடு கிடைத்திருக்க மாட்டானே என எண்ணிய ராவணனுக்கு .. அனிதாவை கண்டதும் அவனுக்கு ஒரு உடன் பிறவா தங்கை இவள் என்ற உணர்வை கொடுத்தது. அதிலும் அவளும் அவனுடைய உடன்பிறப்பை போல தானே இருக்கிறாள் அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் மேலும் தன் தம்பியை இதுநாள் வரை கவனித்து பார்த்து கொண்டது மட்டுமின்றி அவனுக்கு இணையாக தோள் கொடுத்து வருகிறாளே...
காலம் முழுவதும் அனிதாவின் குடும்பத்தாருக்கு தான் கடமை பட்டதாகவே அவன் உணர்ந்தான்... அனிதாவின் கைகளில் குழந்தை அழுதுக் கொண்டிருக்க அப்பொழுதுதான் உணர்வைப் பெற்றவன், "வாங்க நான் உங்களை ஒருத்தர்கிட்ட அறிமுகப்படுத்தி வைக்கிறேன் இந்த உலகத்தில கருணாவை பார்க்க மிகவும் ஆசைப்படும் ஒருத்தர்கிட்ட கூட்டிட்டு போறேன்" என்று கூற...
கருணா, "யாரது" என்று புரியாமல் கேட்க, " நீ வா நான் கூட்டிட்டு போறேன் வா மா உன்னோட குழந்தையை எடுத்துக்கோ" என்று கூற அவர்களோ முழிக்க, " ஆமாம் இந்த குழந்தை உங்க குழந்தை தான் " என்று கூற இருவரும் முழிக்க,ராவணன் அவர்களை பார்த்து, " ஆமாம் இது உங்களுக்கு கிடைக்க வேண்டிய குழந்தை நீங்க இல்லாட்டி உங்க பேர் சொல்லி நான் வளர்த்து இருப்பேன். இப்போ நீங்க இருக்கீங்க இனி உங்க வாரிசை பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு. உங்களை பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு" என்று கூறி அழைத்து சென்றான்..
" உங்க இரண்டு பேரால எப்படி ஒரு குழந்தையை பார்த்துக்க முடியும்??" என மருத்துவர் கேட்டதில் இருந்து வருத்தத்தோடு வந்துக் கொண்டிருந்த அவர்களுக்கு அந்த கடவுளாக கொடுத்த உறவு தான் இக்குழந்தை என எண்ணிய கர்ணா மற்றும் அனிதாவுக்கு குழந்தையை கண்டது முதல் தலை கால் புரியவில்லை என்று கூற வேண்டும் ..
இதோ யாழினியின் அறையில் தன் பேர குழந்தையை கையில் வைத்துக் கொண்டு இருந்த சாந்தி உள்ளே நுழைந்த ராவணனை பார்த்து, "எங்கடா போயிட்ட?? அவள் கண் முழித்து உனக்காக காத்திருக்கா மனைவி பக்கத்தில் கூட இருக்காமல் நீ எங்க போயிட்ட???" என்று தன் பேரக் குழந்தையை பார்த்து பார்த்து கண்கள் பூத்து போக அவர் கூற,
" அம்மா அதை எல்லாம் விடுங்க அது தான் நான் வந்துட்டேனே நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இப்போ என் உயிர் போனா கூட சந்தோசமா இருக்கும்னு நெனைக்கிறேன். அந்த அளவு மகிழ்ச்சியில் நான் இருக்கேன் மா... இந்த சமயம் உங்ககிட்ட நான் ஒன்று கேட்கிறேன் உங்க இன்னொரு மகனை பார்க்க கூடிய சந்தர்ப்பம் அமைந்தால் நீங்க என்ன செய்வீங்க??? என்று கேட்டான்..
அதைக் கேட்ட சாந்தியோ, " என்ன உளறிட்டு இருக்க நடக்கிறத பேசு?? எந்த நேரத்தில் என்ன பேசணும்ன்னு உனக்கு தெரியாதா விதேஷ் அறிவு இல்லாமல் பேசிட்டு இருக்க நடக்கிறத பேசு" என்று கூற,
"நடக்கிறதை தாம்மா பேசறேன் உங்க மகன் கருணா வந்தான்னா நீங்க அவனை ஏற்றுக்கொள்வீங்களா கூடவே உங்களுக்கு இன்னொரு பேர குழந்தையும் பிறந்து இருந்தா அவனுக்கு ஒரு அழகான மனைவியும் இருந்தா நீங்க என்ன செய்விங்க??" என்று கூற அவரோ அதைக் கேட்டு நம்ப முடியாத பார்வை பார்த்து தன் மருமகளை பார்த்து, "இவன் என்ன உளறிட்டு இருக்கான். இவனுக்கு வர வர அறிவே இல்லாமல் போயிடுச்சுன்னு நினைக்கிறேன் நான் நல்ல மனநிலையில் இருக்கும் பொழுது இப்படி நடக்காததை பேசினால் எப்படி இருக்கும் " என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்க, அறைக்குள் நுழைந்தனர் கருணாவும் அவனது மனைவி அனிதாவும் இருவரையும் கண்ட சாந்திக்கு மயக்கம் வராத குறைதான் யாழினிக்கும் அதே போன்ற உணர்வுதான்..
சாந்தி அம்மாவுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை ராவணனைப் போன்ற ஒத்த உருவத்தை கொண்ட கருணாவை பார்க்கவும் அவரது கண்களுக்கு தெரியவில்லை எந்த தாய்க்கு தான் தன் மகனை பார்க்க பிடிக்காது பிறந்தவுடனேயே தாரைவார்த்த தங்கம் மறுபடியும் அவரது கைக்கு கிடைக்க வேண்டாமென சொல்வாளா அந்த தாய்... "கர்ணா... கர்ணா என் பையன் தானே மகனே" என்று வளர்ந்த குழந்தையை கண்ட சாந்திக்கு கண்களில் கண்ணீர் தான் வந்தது. கருணாவும் தன் தாயை பார்த்ததும், " அம்மா" என்று அழைக்க சாந்தி உடைந்தே விட்டார்..
"இந்த அம்மாவை மன்னிச்சிடு மன்னிச்சிடு தங்கமே..! உன்னோட இந்த நிலைக்கு நான் தானே காரணம் இதோ இந்த குழந்தைகள் போல தான் பிறந்த உடன் உன்னை தவிக்க விட்டுட்டு போன பாவி நான் உங்க அப்பா உன்னை தர சொல்லி என்கிட்ட கேட்ட போது நான் அவர் கையில் ஒப்படைத்து இருக்கக்கூடாது பா. என்னை மன்னிச்சிடு அந்த சமயம் உங்க அப்பா உன்னுடைய உங்களுடைய பிறப்பைப் பற்றி தப்பா பேசும்போது எனக்கு வேற வழி தெரியல என்கிட்ட இருந்திருந்தால் நான் உன்னை பார்த்திருப்பேன்" என்று கூற...
கர்ணாவுக்கு தான் தெரியுமே தன் தாயைப் பற்றி அவனது தந்தை தான் தெளிவாக அவனுக்கு சொல்லி கொடுத்து இருந்தாரே அவனுக்கு தனது தாயை பார்த்ததும் வருத்தம் எல்லாம் இல்லை கோபமும் இல்லை. தனது தாய் கிடைத்து விட்டார் என்ற சந்தோஷம் மட்டும் தான் அவனுள் இருந்தது. யாரும் இல்லாத அனாதை என்ற நிலை இனி அவனுக்கு வராதே மனைவி இருக்கிறாள் மனைவியின் குடும்பமும் உண்டு இருந்தாலும் அவனது குடும்பம் என்ற ஒன்று அவனுக்கு கிடைத்துவிட்டதே இது எதிர்பார்க்காத ஒன்று தானே என கர்ணா எண்ணினான். அதனால், "அம்மா அதையெல்லாம் விடுங்க நான் தான் வந்துட்டேனே" என்று கூறினான்..
" என் மனசு ஆறவே இல்லை உனக்கு நடந்ததையெல்லாம் கேட்டப்போ நான் ஏன் இன்னும் உயிரோட இருக்கேன் அப்படின்னு தான் நான் நெனச்சு தவிச்சிட்டு இருந்தேன் இந்த உடம்புல உயிர் மட்டும்தான் இருந்தது. ஆனால் உணர்வுகள் எல்லாம் உன்னை சுற்றி தான் இருந்தது என்னோட ஒரே பிரார்த்தனை உன்கிட்ட வந்து சேரணும் அப்படின்னு தான் ஆனால் இப்போ நீயே என் கையில வந்து கிடைச்சிட்ட அது போதும் எனக்கு" என்று கூற,
கையில் இருக்கும் குழந்தையை பார்த்து," உங்க குழந்தையா??" என்று சாந்தி கேட்க ராவணன் அதற்கு பதில் சொன்னான்.." ஆமா அவனுடைய குழந்தை தான்" என்று கூறினான். அதைக் கேட்ட சாந்தி மிகவும் சந்தோஷப்பட ராவணன் தன் மனைவியின் அருகே போய் நின்றுக் கொள்ள யாழினிக்கு தன் கணவனின் முகத்தில் தெரிந்த தெளிவையும் சந்தோஷத்தையும் கண்டவளுக்கு அவன் நினைத்த காரியத்தை முடித்து விட்டான் என்பதை உணர்ந்த அவளும் மகிழ்ந்தாள்..
"உனக்கு அவர்கள் செய்த இந்தப் பாவத்துக்கு அவர்களை சும்மா விடக் கூடாது. நான் நினைச்சேன் தெரியுமா???" என்று சாந்தி கூற கருணா தன் அண்ணனை பார்த்தான்...அவனோ ஒன்றும் தெரியாதது போல சிரிக்க கருணாவும் அதை புரிந்துக் கொண்டு சிரித்து வைத்தான்.
"அவர்களுக்கு தண்டனை கிடைத்து விட்டது மா கவலைப்படாதீங்க இப்போ அவங்க யாரும் உயிரோடு இல்லை" என்று ராவணன் கூற அதைக் கேட்ட சாந்தி, "அந்த கடவுள் அவர்களுக்கு நல்ல தண்டனையைத்தான் கொடுத்திருக்காங்க" என்று கூறினார். அதைக் கேட்ட கருணா விழுந்து விழுந்து சிரிக்க ராவணனோ, 'தன் கண்ணை காட்டி எதுவும் சொல்லிடாதே' என்பது போல சைகை காட்டினான். அதை புரிந்துக் கொண்ட கருணா இல்லை இல்லை என்பதுபோல கூற அந்த இடம் சிரிப்பலையால் நிறைய சாந்தி தன் இரண்டாவது மருமகளை வாரி அணைத்துக் கொண்டார்..
இப்பொழுது ராவணனுக்கு அவனது குடும்பம் கிடைத்துவிட்டது. இரண்டு மக்கள், தம்பி, தம்பி மனைவி, அவனுடைய மனைவி, தாய் என அவனது குடும்பம் விரிவடைந்திருக்கிறது. இவர்கள் அனைவரையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவன் கையில் உள்ளது ..அவன் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்..அவனது உயிர் உள்ளவரை அவன் இதை சிறப்பாக செய்வான் அதில் எந்த விதமான ஐயமும் இல்லை..
எந்த காரணத்திற்காக அவன் சாதனாவின் வயிற்றில் ஒரு கருவை கொடுத்தானோ கடைசியில் அந்த கரு யாரிடம் சேர வேண்டுமோ அவர்களிடம் சேர்ந்து விட்டது. அதை எண்ணிய போது தான் ராவணன் மிகவும் மகிழ்ந்தான்.. ஒவ்வொரு நிமிஷமும் கோபத்தால் இதை செய்கிறோமோ என்ற எண்ணம் அவனுக்கு இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அந்த கயவர்கள் அவர்களின் விஷத்தை கக்கும் போதெல்லாம் அவன் செய்வது சரிதான் என்ற எண்ணம் எப்பொழுதும் ராவணனுக்கு வருவதுண்டு.
அதையெல்லாம் விட பிறந்த குழந்தையை கொலை செய்ய எண்ணிய சாதனா அவளை எண்ணித்தான் அவன் மிகவும் அதிர்ந்தான். அப்படி இருக்கும் பொழுது சாதனாவின் எண்ணம் நிறைவேறாமல் போனதை எண்ணி அவனுக்கு மகிழ்ச்சியே... அந்த குழந்தை யாரிடம் சேர வேண்டுமோ அவர்கள் இடத்திலேயே சேர்ந்து விட்டதே அந்த சந்தோஷம் அவனை நிலைகொள்ள செய்யாமல் செய்தது. அதிலும் கருணாவுக்கு இழைத்த கொடுமையை எண்ணி அவனுக்கு சாதனாவின் மரணம் கருணாவின் காலடியிலேயே நிகழ்ந்ததை எண்ணி அவன் அகம் மகிழ்ந்தான். அவன் செய்த வதத்தின் நிறைவு இதுதான் என எண்ணிக்கொண்டான்..
கர்ணாவுக்கும் அனிதாவுக்கும் குழந்தை பாக்கியம் இல்லை அதற்கான மருத்துவமனை சிகிச்சைக்கு வரும் பொழுது தான் அவர்கள் கையில் இந்த குழந்தை கிடைக்கவும் அவர்களும் மகிழ்ந்தனர். பிறகு ராவணன் அவங்களுக்கு நான் தண்டனை கொடுத்துட்டேன் என்று நடந்த விஷயத்தை முழுவதுமாக கூறாமல் கொஞ்சம் மேலோட்டமாக கூறி அவர்களுக்கு புரியவைக்க கர்ணா மகிழ்ந்தான். ஏனெனில் கர்ணாவுக்கு மட்டுமே தெரியும் அங்கு என்ன நடந்தது என பிறகு கருணாவுக்கு யாழினியை கண்டதும் பிடித்துப்போனது..
யாழினிக்கும் கர்ணாவையும் அனிதாவையும் மிகவும் பிடித்துப்போனது. அப்படி அவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக ஒருசேர மகிழ்ச்சியோடு இருக்க யாழினிக்கு தன் கணவன் செய்தது மேலோட்டமாக தெரியும் என்றாலும் அவன் நினைத்த காரியத்தை அவன் எண்ணப்படி முடித்து விட்டான். இனி இதுபோன்ற வேலைகளில் அவன் ஈடுபடக்கூடாது அதற்கான புத்தியை அவனுக்கு கொடு தாயே என வேண்டுதலையும் அவள் வைத்தாள். அந்த சமயம் யாழினியின் முகத்தை பார்த்த அவனது கணவனும் சிரிக்க அவளோ அவனது சிரிப்பில் லயித்துப் போனாள்…
Currently viewing this thread 3 guests.
