Share:
Notifications
Clear all

அதிகாயன் 4

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  


அத்தியாயம் :4

ஆம் யாரோ ஒருத்தி வந்தாள் அவளது கையில் கட்டப்பட்டு இருக்கும் கயிற்றை அவிழ்க்க போக மயங்கி இருந்தவள், சட்டென்று அவளது கையை பிடித்து , "யார் நீ ??" என்க அவளிடம் எந்த பதிலும் இல்லை.

"யார் நீ சொல்லு" என்று இருட்டு அறையில் அந்த பெண் அவளை எங்கோ இழுத்து செல்ல , "எங்க கூட்டிட்டு போற சொல்லு.. நான் வரமாட்டேன் என்னை விடு " என்று அவள் கூற...

அந்த பெண் அதற்கும் பதில் அளிக்கவில்லை. அவளை இழுத்து கொண்டு பாத்ரூமில் விட்டவள் , "பத்து நிமிஷம் சமயம் தருவேன் அதுக்குள்ள குளிச்சுட்டு உனக்கு என்ன தேவையோ செய்துட்டு வந்திடு தப்பிச்சு போகலாம்ன்னு நீ யோசிக்க கூட வேண்டாம் அது உன்னால முடியாது இந்த கதவு உள்ளே இருந்தும் திறக்க முடியும் வெளியே இருந்தும் திறக்க முடியும் பத்து நிமிடத்தில் நான் உள்ளே வருவேன்" என்று கூற...

அவளும் தன்னை சுத்தப்படுத்தி கொள்ள செல்ல அவள் உள்ளே சென்றதும் அந்த குளியல் அறையில் மட்டும் விளக்குகள் எரிய அவளோ அந்த அறையை காண அவளை சுற்றிலும் கண்ணாடியால் அடைக்கப்பட்ட ஒரு குளியல் அறை அது அதில் அவளுடைய முகத்தை காண அவள் முகத்தை கண்டவளுக்கு மிக பெரிய அதிர்ச்சி முகமெல்லாம் வீங்கி அவள் இரண்டே நாளில் அடையாளம் தெரியாதது போல அவள் இருக்க எங்கேயாவது சிறு துப்பு கிடைக்கிறதா தப்பித்து போக வழி என்று தேட அதுவும் கிடைக்காமல் போக அவளுக்கு அலுப்பு போக குளித்தால் என்ன என்று இருக்க அவள் குளித்து அங்கேயே தயாராக வைத்திருந்த உடையை எடுத்து மாற்றினாள்...

பின் அவள் வெளியே வரவும் மீண்டும் அந்த அறையின் இருட்டு அவளை வாட்ட , "எதுக்காக விளக்கை அணைச்சு இருக்கீங்க எப்படி இருந்தாலும் இங்கே இருந்து தப்பிச்சு போக முடியாது எதுக்காக விளக்கை அணைச்சு வைச்சு இருக்கீங்க அந்த விளக்கை போடுங்க என்னால இருட்டில இருக்க முடியாது" என்று கூற அதற்கு எதற்கும் பதில் அளிக்காமல் உணவு கொடுக்க அந்த உணவை கண்டவளுக்கு காணாததை கண்டவள் போல வாயில் வைத்தாள் இருட்டிலேயே தான் அவளுக்கு உணவு பரிமாறப்பட்டது..

கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அவளுக்கு எதுவுமே கொடுக்கவில்லை அவள் உடல் மிகவும் பலவீனமாகி விடும் என்ற பின் தான் அவளுக்கு உணவு கொடுக்க அதுவும் சாதத்துடன் கூட்டாக மிளகாய் பொரியல் தான் ஆம் அவளுக்கு நல்ல காரம் உள்ள மிளகாயை தான் அவளுக்கு பொறியல் போல கொடுக்க அவளோ உணவை கண்டதும் அதை வாயில் வைத்ததும் அவளுக்கு எரிய அவளோ ஐயோ என்று துப்ப அவளுக்கு அருகில் இருந்த அந்த பெண்ணோ அவளிடம் , "உனக்கு கொடுக்க சொல்லி இருக்கிறதே பத்து வாய் சாப்பாடு தான் அதையும் துப்பிட்டா உனக்கு நாளைக்கு தான் உணவு கிடைக்கும் " என்க...

அவள் கண்களில் கண்ணீர் வந்தது அதை கண்டவளோ, " ஹ்ம்ம் சீக்கிரம் சாப்பிடு" என்க...

அவளோ உண்ண மறுத்தாள் அதை கண்டு கோபம் கொண்ட அந்த பெண்ணோ, "சாப்பாடு கொடுத்தா சாப்பிட மாட்டியா டி சாப்பிடு" என சாதனாவை மீண்டும் கட்டி வைத்தவள் அவளை ஓங்கி அறைந்து, " நீ இன்னிக்கு இதை சாப்பிட்டே ஆகணும்" என அவளே எடுத்து சாதனாவின் வாயில் உணவை திணித்தாள் அவளோ கதற...

கதற கதற அவளை சிறு துளி இரக்கமின்றி அவள் வாயில் திணிக்க, " எனக்கு சாப்பாடு வேண்டாம் நான் இப்படியே செத்து போறேன் விடுங்க தயவுசெய்து இந்த சாப்பாடு வேண்டாம்" என்று கூற அவள் கேட்டாள் இல்லை..

"நீ இதை சாப்பிடணும் இந்த சாப்பாடு உன் வயித்துக்குள்ள போயே ஆகணும்" என்று அவள் வாயில் திணித்து விட்டே அந்த பெண் மறைய அவளது கண், மூக்கு, வாய் மட்டுமின்றி அவளது உடலே எரிய ஒரு வாய் தண்ணீர் கூட தராமல் அந்த பெண் செல்லவும் அவள் காரம் தாளாமல் கத்தினாள் சாதனா..

அந்த சத்தத்திற்கு பதில் ஏதும் வராது இப்படியே ஒரு வாரம் சென்றது கூட சாதனாவிற்கு தெரியவில்லை இரவு பகல் என்று பாராமல் கூட அவளை அவள் அமர்ந்து இருக்கும் இருக்கையில் அமர வைக்கப்பட்டு இருக்க இந்த ஒரு வாரமும் அவளுக்கு ஒவ்வொரு வகையான உணவுகள் தான் கொடுக்கப்பட்டன..

ஒரு நாள் அவளுக்கு காரமான உணவு என்றால் மறுநாள் அவளுக்கு கசப்பு பாகற்காயை ஜூஸ் எடுத்து அதை பிழிந்து சாதத்தில் கலந்து கொடுக்க மறுநாள் அதீத உப்பு கலந்த சாப்பாடு அதற்கு மறுநாள் சக்கரை இனிப்பு கலந்த உணவு என ஒவ்வொரு நாளும் விதம் விதமாக இருக்க அவளால் முடியவில்லை இதற்கு மேல் அவளால் முடியாமல் போக உணவு கொண்டு வரும் அந்த பெண்ணிடம், "தயவு செய்து என்னை விட்டுடுங்க உங்களுக்கு எவ்ளோ பணம் வேணுமோ அதை கொடுத்திடுறேன்" என்க

அந்த பெண்ணோ அமைதியாக இருக்க , "உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க செய்யறேன் எதுவாக இருந்தாலும் செய்ய நான் தயாராக தான் இருக்கேன்" என்க

"என்ன சொன்னாலும் செய்வியா??" என்ற அதே குரல் முதல் நாள் அவளது செவிப்பறையை கிழித்த அதே குரல் கேட்க அவளால் அந்த குரலை வைத்தே புரிந்து கொள்ள முடிந்தது இவன் தான் அவளை கடத்தியவன் என அவள் அறிந்த அடுத்த நொடி, "ஆமாம் கொடுக்கிறேன்" என்க...

"அப்போ உன் உயிரை கொடு எனக்கு தேவை உன் உயிர் ஒரேயடியாக உன்னை கொல்ல எனக்கு விருப்பம் இல்லை" என்ற குரல் ஒலிக்க...

அவளோ அதிர்ந்தாள் அதை கேட்டவனோ அவள் தங்கி இருக்கும் அறையே அதிரும் அளவுக்கு அவன் சிரிக்க அவள் சுற்றும் முற்றும் அவன் இருக்கிறானா என பார்க்க அவனது குரலை தவிர வேறேதும் அவளுக்கு தென்படவில்லை.

"என்ன என்னை தேடுறியா நான் இங்கே தான் இருக்கேன் ??" என்க...

"என் முன்னாடி வா எதுக்காக இப்படி உன் முகத்தை மறைச்சு இருக்கிற??"

"ஹா ஹா என்னை பார்த்து நீ அதிர்ந்துட்ட உன் பக்கத்தில் வரேன் கூடிய சீக்கிரம்" என்றான். அதன் பிறகு அவனது குரல் அவள் கத்தியும் கேட்கவில்லை பத்து நாட்கள் அவளை அதே நிலையில் வைத்திருக்க அவளுக்கு அந்த இருட்டும் அந்த சூழலும் ஒரு வித இறுக்கத்தை கொடுக்க அவள் அங்கு அடைக்கப்பட்டு பத்து நாட்கள் ஆன பிறகு அன்றைய இரவே அவளது அறைக்குள் யாரோ வந்தது போல இருந்தது.

அவளை கட்டி வைத்த நிலையிலே வைத்திருக்க அவளது கைக்கட்டை யாரோ அவிழ்க்க அவளோ அதில் உணர்வு பெற்றவள், "யார் நீ யார் நீ??" என்று தன்னை தொடும் கையை பற்றி பிடிக்க, " நீ தான் என்னை பார்க்கணும்னு சொன்னியே" என்ற குரல் அவள் அருகே கேட்க அந்த குரலின் உரிமையாளன் அவளது கையை அழுத்தமாக பற்றி இருக்க அவனது மறு கையோ அவளது ஆடையில் வைக்க இவளுக்கு பொங்கிய ஆத்திரத்தில் இத்தனை நாட்கள் தன்னை இப்படி படாதபாடுப்படுத்துகிறானே என எண்ணி, " சீ என் கையை விடு என்னை தொடாதே " என்று கூற அவன் கேட்டான் இல்லை..

மீண்டும் அவளை பிடித்து அவன் பக்கம் இழுக்க அவளோ விலகினாள் அவனும் விடாமல் இருக்க அவளோ அவனிடம் முரண்டு பிடித்தாள் ஏனெனில் அவளுடைய உள்ளுணர்வு கூறியது அவளிடம் ஏதோ நடக்க கூடாது நடக்க இருக்கிறது என்று அந்த அறைக்குள் மேலும் ஒருவன் நுழைந்தானோ என்று அவளுக்கு தோன்ற அவனும் அவளது தோளை தொட அவளோ , "என்னை விடுங்க டா விடுங்க " என்று கத்த அதில் ஒருவன் அவளை ஓங்கி அடிக்க அவளோ சுற்றி கொண்டு அந்த அறையில் இருந்த படுக்கையில் விழ அவளுக்கு பயபந்து ஓங்கி ஒலித்தது..

வேகமாக அடி வாங்கினாலும் பரவாயில்லை என எண்ணி வேகமாக எழ எதன் மீதோ மோதினாள் அவளுக்கு சரி வர புரியவில்லை மோதியது ஒரு ஆள் என அந்த ஆள் அவளை அடிக்கவும் தான் புரிய மீண்டும் அவள் படுக்கையில் விழுந்தாள் அதன் பின் அவளால் எழ முடியவில்லை படுக்கையில் விழுந்தவளின் கைகள் மீண்டும் கட்டப்பட்டன அவளால் எழ முடியவில்லை அவள் கதறுவதை கேட்க யாரும் இல்லை..மீண்டும் ஒரு அடி அவள் மீது விழுந்தது அந்த அடியில் உச்சத்தில் விழுந்தது யாரோ ஒருவன் அவளின் உடையை விலக்கினான்... அவளின் அலறல் அந்த அறை முழுவதும் ஒலிக்க அதை கேட்க யாரும் இல்லை கத்தியவள் பயத்தின் உச்சத்தில் அப்படியே மயங்கி போனாள்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top