அதிகாயன் 39
அத்தியாயம் : 39
சாதனா ஏதாவது செய்வாள் என அறிந்த ராவணனுக்கு அவளை அனுமதித்த அதே சமயம் தன் மனைவிக்கும் வலி வரும் என எதிர்பார்க்கவில்லை..அதில் தான் அவனுக்கு பிரச்சனை ஏற்பட்டு விட அவளை கவனித்துக் கொண்டு வருவதற்குள் இங்கு இவள் குழந்தையை கையில் பிடித்துக் கொண்டு இவனைப் பழி வாங்குவதற்கு தயாராக இருக்கிறாள்..அதை கண்டதும் அவனுக்கு மூச்சு பேச்சே இல்லை என்ன தான் அவன் மீது கோபம் என்றாலும் அந்த சிறு மொட்டை பற்றி கூட அவள் நினைக்கவில்லையே..!
கண்முன்னே குழந்தையை தூக்கி எறியவும் அவனது உயிரே ஒரு நொடி ஸ்தம்பித்து போய் விட்டது. இத்தனை கொலைகளை செய்தவன் தான் எத்தனையோ அக்கிரமங்களை பார்த்திருக்கிறான். தன் தந்தையை போல ஒரு அக்கிரமக்காரர்களை மட்டும் தான் எதிர்த்து நின்று இருக்கிறான்... அவர்களுக்கு இவன் மீது ஒரு பயத்தை விதைத்து இருக்கிறான். ஆனால் சாதனா என்ன ஒரு பெண்ணிவள் இவள் எல்லாம் பெண்ணாக இருப்பதற்கு அருகதை இல்லாத ஒரு கேடுகெட்ட ஜென்மம் என்று தான் கூறவேண்டும். அவன் மேலிருந்து கீழாக பார்க்கவும் அப்பொழுது ரத்தவெள்ளத்தில் கிடந்தாள். அவள் அவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆத்திரம் தான் வந்தது...தன்னிடம் தோற்க கூடாது என்று அவளே அவளை மாய்த்து கொண்டாள்..
இறந்துவிட்டாள் என துளியும் அவனுக்கு வருத்தமும் ஆதங்கமும் ஏற்படவில்லை. எனினும் குழந்தை குழந்தை எங்கே என அவனது கண்கள் அவளது இறந்த உடலையும் தாண்டி வேகமாக ஆராய அந்த கூட்டத்தின் நடுவே ஒரு ஆளின் கையில் குழந்தை இருந்தது..
அதற்குள் கூட்டம் கூடி இருக்க, கீழே நின்றவர்கள் மேலே நோக்கி, " என்ன பொம்பளை அவ?? " என்று எண்ணினாலும், " குழந்தை பத்திரம் தான் வாங்க" என கூட்டத்தில் இருப்பவர்கள் மேல் நோக்கி கத்த அதில் சமாதானம் அடைந்த ராவணன் வேகமாக கீழே இறங்கி ஓடினான்..
அவனுக்கு அந்த குழந்தையை காண வேண்டும் என்ற வெறியும் குழந்தைக்கு ஒன்றும் ஆகி இருக்க கூடாது என்ற எண்ணமும் அவனை வாட்டி இருந்தது.. என்னதான் அவனது விந்தணுவில் பிறந்த குழந்தை என்றாலும் அக்குழந்தை தனது உடன்பிறப்பின் குழந்தையாகத்தான் பார்த்து வருகிறான். அப்படி இருக்க தன் குழந்தையைக் காட்டிலும் பொக்கிஷமாக அந்தக் குழந்தையின் முகத்தை கூட சரிவர பார்க்க முடியாமல் இவள் இப்படி செய்து விட்டாளே என ஆத்திரத்தோடு கீழே ஓட கையில் குழந்தையோடு ஒரு ஜோடி சாதனாவின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தது..
"குழந்தை எங்கே குழந்தை எங்கே..?" என கேட்டுக்கொண்டே வந்த ராவணன் அங்கு கூடி இருக்கும் கூட்டத்தை விலக்கி குழந்தையை பிடித்து நின்றவர் அருகே சென்று குழந்தைக்கு ஒன்றும் இல்லையே என குழந்தையின் முகத்தை பார்த்துக் கொண்டே குழந்தையை வாங்க கைகளை நீட்ட குழந்தையை அவனது கைகளில் வைத்தவனின் முகத்தை ஒரு நொடி கழித்து தான் பார்த்தான் ராவணன்..
அங்கு ராவணனுக்கு எதிரே ஆணும் பெண்ணும் இருவர் நின்றுக் கொண்டிருந்தனர்.. அந்தப்பெண் ராவணனை பார்த்து அதிர அதே நேரம் கூட இருந்த ஆணை அந்தப் பெண் தோள் தொட அந்த ஆடவனோ உணர்வுகளே இல்லாமல் அந்த ஆண் சாதனாவின் முகத்தை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்க அந்தப் பெண் தொடவும் அந்த ஆண் நிமிர்ந்து பார்க்க அங்கே ராவணனை கண்டதும் அதிர்ந்தான் கர்ணா..ஆம் அது கர்ணாவே தான் கர்ணா ராவணனை பார்த்து தன்னை போல ஒருவன் என அதிர,
ராவணனும் அதே நேரம் கர்ணாவை பார்த்து அதிர்ந்தான்..இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று சந்தித்துக் கொள்ள, "கர்ணா" என்று கூற,
கர்ணா அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை ஆம் மேலே இருந்து கீழே விழுந்தவளோ மேல் நோக்கி ஒரு நொடி பார்க்க அங்கே கர்ணா நிற்க கர்ணாவும், "சாதனா" என அவனது இதழ்கள் முனக, சாதனா ராவணனிடம் தோற்க கூடாது என எண்ணி தான் தன் உயிரை கூட பணயம் வைத்து மேலே இருந்து குதிக்க கடைசியாக கர்ணாவை உயிரோடு அவளது உயிர் போகும் முன் பார்க்க அதுவும் அவனது காலுக்கு கீழே விழுந்து கிடக்க அவனது கையில் குழந்தை உயிரோடு இருப்பதை பார்த்து கொண்டே இறந்தாள். அதுவும் அவளது கடைசியாக அவள் பார்த்த பார்வை கர்ணாவின் மனக்கண்ணை விட்டு இன்னும் அகலவில்லை.. அனிதா இரு முறை அழைத்து ராவணனை காட்டவும் தான் அவன் தன்னிலை அடைந்தான் அதை எண்ணி கொண்டிருக்க ராவணன் வரவும் அதுவும் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது..
கர்ணா அதிர்ந்து, "என்னை மாதிரியே இருக்கீங்களே?? நீங்க யார்???" என்று கேட்டவன் கண்கள் என்னவோ சாதனாவின் மீதும் ராவணனின் மீதுமே இருக்க, ராவணன் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஆகி, "நீ உயிரோட இருக்கியா கருணா??" என்று கேட்டான். அவனுக்கு தன் தம்பியை தான் பார்க்கிறோமா என்ற அதிர்ச்சி இது கனவா நினைவா என்று கூட அவன் எண்ணிக்கொண்டிருக்க... கருணா, "ஆமாம்" என்று கூற ,
"கர்ணா என்னை தெரியுதா நான் உன்னுடைய அண்ணா??" என்று தன்னை தானே ராவணன் அறிமுகப்படுத்திக் கொள்ள கர்ணா அவனைப் பார்த்த அதிர்ச்சி ஒரு பக்கம் சாதனா மிக சரியாக அவனது காலுக்குக் கீழே இறந்து கிடப்பது மறுபக்கம் என அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை..கர்ணாவுக்கு என்ன நடக்கிறது என ஒன்றும் விளங்கவில்லை..." நீ என் அண்ணனா?? உனக்கு எப்படி சாதனாவை தெரியும்?? இது யார் குழந்தை?? இவ எப்படி இறந்தா??? " என பல கேள்விகள் கேட்டான் கர்ணா..
ஆம் கர்ணா இறக்கவில்லை கயவர்களின் சூழ்ச்சியால் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட ஓடும் ரயிலில் விழுந்தவன் செத்து விடுவான் என அவர்கள் எண்ணிக் கொண்டிருக்க அவனோ கீழேயும் விழுந்தான் தான். ஆனால் இவர்கள் கீழே தள்ளி விடும் சமயம் அந்த ஓடும் ரயிலானது ஒரு மலைப்பகுதிக்கு நடுவே ஓடிக் கொண்டிருக்க இவனை கீழே தள்ளி விட்டதும் அவன் உருண்டு ஏதோ ஒரு பள்ளத்தாக்கில் நடுவே விழுந்தது போன்ற ஒரு உணர்வு மட்டும்தான் கர்ணாவுக்கு இருந்தது..பிறகு அவன் தன் சுயநினைவை இழந்தான்... பிறகு அவன் கண் விழித்து பார்க்கும் பொழுது அவன் அருகே அனிதா மற்றும் அவளது குடும்பம் தான் கூட இருந்தனர்...
ஆம் அவன் எங்கே இருக்கிறான் என அவனுக்கு புரியவில்லை யாரைப் பார்த்தாலும் பயமாக இருக்க அவன் உயிர் பிழைத்ததே அவன் செய்த பாக்கியம் தான் என்று கூற வேண்டும். அந்த நிலையில் தான் அவன் அவர்கள் கையில் கிடைத்து இருந்தான் ஆம் அது அனிதாவின் பெற்றோர் தான்..அவர்கள் தான் அவனை காப்பாற்றினார்கள்..
அவனை உயிர் பிழைக்க வைத்ததே அவர்கள் தான் அவனுக்கு அவர்கள் தான் ஆதரவாக இருந்தனர். "பயப்படாதே தம்பி நாங்க இருக்கோம்" என்று கூறியவர்கள் அனிதாவை காட்ட அவளும் அவனைப்போல ஒருத்தி தான் ஆம் ஒற்றை மகளான அனிதாவுக்கு இந்த குறைபாடு இருப்பதை உணர்ந்த படித்த பெற்றோர்களான அனிதாவின் பெற்றோர்கள் அவளுக்கு தேவையான கவனிப்பை சரிவர கொடுத்தார்கள்..
பிறகு தான் இதுபோன்ற பாதிப்பு உள்ள குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு ஒரு சிறிய பள்ளியை நடத்தி வருகின்றனர். அதில் முக்கியமாக அந்த பாதிப்பு உள்ள குழந்தைகள் இந்த சமூகத்தில் எப்படி வளர வேண்டும் என்பதை அவர்களின் போக்கில் அவர்கள் கற்பித்து வருகின்றனர்.. மேலும் இதுபோல் உள்ள பாதிப்புள்ள குழந்தைகள் எப்பொழுதும் ஏதாவது ஒன்றில் மிக திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை அவர்களின் திறமை எது என கண்டறிந்து அதற்கும் வழிகாட்டுதல்கள் செய்து வருகின்றனர். அப்படி அவர்களிடம் சேர்ந்துவிட கர்ணாவை கொஞ்சம் கொஞ்சமாக வெளி உலகத்துக்கு பழக்கி அவர்கள் கூடவே வைத்துக் கொண்டனர்..
கர்ணாவுக்கும் அங்கே போக மனமில்லை மேலும் யாரையும் நம்ப முடியாமல் திணறியவனுக்கு முதலில் அவர்களை பார்த்து பயம் தான் என்றாலும் அவனை போன்றவர்களை பார்த்து அவன் மனம் மாறினான். அதிலும் அனிதா... அவளை அவனுக்கு பிடித்து இருந்தது அவளும் சாதனாவை போல இருப்பாளோ என்றெண்ணி கொண்டிருந்தான். ஆனால் அவள் அப்படி இல்லை என உணர்ந்துக் கொண்டவன் அதன் பின் தான் அவர்களோடு இயல்பாக பழக துவங்கினான்...
அவர்கள் நடத்தும் பள்ளியில் தான் கருணாவும் தங்கியிருக்க பிறகு ஒரு சில வருடங்கள் கழித்து கருணாவுக்கும் அனிதாவுக்கும் திருமணம் செய்து வைத்தனர். கர்ணா அவனை பற்றி எல்லாம் அவர்களிடம் கூறி இருக்க அதன் பிறகு தான் அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.. அவர்களும், " நீ எங்கேயும் போக வேண்டாம் எங்கள் கூடவே இருந்து விடு" எனக் கூறி தங்களின் மகளையும் திருமணம் முடித்து வைத்து தங்களுடனேயே வைத்துக்கொண்டனர்..
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவனது குணத்தையும் மனதையும் மாற்றி தற்பொழுது அவன் பெரிய பலசாலியாகவும் இல்லை மலையை புரட்டிப்போடும் அளவுக்கு அவனுக்கு சக்தி கிடைக்கவில்லை என்றாலும் அவனாக இந்த சமூகத்தில் அவனது வாழ்க்கையை வாழ்ந்துக் கொள்ள முடியும் அது போன்ற ஒரு மாற்றத்தை அவன் அடைந்து இருக்க, தற்போது அந்தப் பள்ளியில் தன்னை போல வரும் குழந்தைகளுக்கு அனிதாவும் கருணாவும் தான் பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர். அவர்கள்தான் திறன்பட அந்தப் பள்ளியை நடத்தி வருகின்றனர். அவர்களுக்குத் துணையாக அனிதாவின் பெற்றோர்களும் உள்ளனர்..
அங்கே பல குழந்தைகளை பார்த்து அவர்களுக்கும் குழந்தை ஆசை வந்தது. அதிலும் கருணாவை விட அவனது மனைவிக்கு தான் அந்த ஆசை கூடுதலாக இருக்க தங்களைப் போன்றவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா என்பதை அறியத்தான் அவர்கள் இந்த மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அந்த சமயம் பார்த்து மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்து வரும் போதுதான் மேலிருந்து ஒரு குழந்தை கீழே வர மிகச்சரியாக கையை மேலே தூக்கிய கருணாவின் கைகளில் அழகாக பூ பந்து போல குழந்தை விழுந்தது..
Currently viewing this thread 2 guests.
