Share:
Notifications
Clear all

அதிகாயன் 38

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் : 38

ராவணன் செல்லும் போது அருகே அவன் வீட்டில் இருக்கும் மருத்துவர் முதலுதவி கொடுத்துக் கொண்டிருக்க அவன் அவளை பார்த்து, "ஒன்னும் இல்லை உனக்கு ஒன்னும் இல்லை எல்லாம் சரியாகிடும் நம்ம குழந்தை நம்ம கிட்ட வரப்போறான் அதை மட்டும் நினைத்துக் கொள்" என்று கூறிக் கொண்டு தன் மனைவியை அழைத்துக்கொண்டு தன் தாயிடம்," இங்கேயே இருங்க" என்று கூற,

அவரோ நானும் வருவேன் என அடம்பிடித்து அவரும் அவனுடன் வந்துக் கொண்டார். மூவரும் சேர்ந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்தவர்கள் சாதனா அனுமதிக்கப்பட்டு இருக்கும் அதே மருத்துவமனையில் தான் அவளை அனுமதித்தான் ராவணன்.. ஒரு பக்கம் சாதனா மறுபக்கம் யாழினி இருவரும் பிரசவ அறையில் இருந்தனர். அவனுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை தாய் வேறு குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருக்க எங்கேயாவது மாட்டி விடுவோமோ என்ற பயம் அவனுள் இருந்தது தாயிடம் ஒரு வி.ஐ.பி ரூம் எடுத்து தாயை அங்கு அமர வைத்தவன், " அம்மா நான் இருக்கேன் நான் பார்த்துக்குறேன் நீங்க இந்த அறையில் ஓய்வு எடுங்க அவளை இப்பதானே லேபர் ரூமுக்கு அழைச்சிட்டு போய் இருக்காங்க டெலிவரி ஆக சிறிது காலம் தாமதம் ஏற்படும் அது வரை இங்கேயே இருங்க" என்று கூறி தாய் மறுக்க மறுக்க அவரை அந்த அறையில் அமர வைத்து விட்டு வெளியே வந்தான் ராவணன்...

அதற்குள் யாழினியின் கதறல் அவனை தவிக்க செய்ய... அவளை அனுமதித்து இருக்கும் அறையின் வாயிலேயே நின்றான். ஒவ்வொரு நொடியும் அவனுக்கு நரகமாக இருந்தது. அவனால் ஒரு அடிகூட அவள் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையை விட்டு நகர முடியவில்லை.. அந்த நொடி அவனுக்கு சாதனா நினைவு கூட இல்லை என்று கூறலாம்..

தன் மனைவியின் துடிப்பு அவனது செவியில் அடைத்துக்கொண்டு இருந்தது. அவளது கதறலைக் கேட்டு அவனுக்கு கை கால்கள் உதற தொடங்கியது. இது நாள் வரை அவன் எதற்கும் பயந்தது இல்லை இப்பொழுதும் பயம் இல்லை எப்படியாவது தன் மனைவி தன்னருகே மீண்டு தன் குழந்தையோடு வந்து விட வேண்டும் என்ற நினைப்பு மட்டும் தான் அவனுக்குள் இருந்தது..

அதற்குள் ஒரு செவிலி வெளியே வந்து அவனிடம், " சார் உங்க மனைவி உங்களை பார்க்கணும்னு சொல்றாங்க ரொம்ப பீல் பண்ணிட்டு இருக்காங்க " என்று கூற அவன் உள்ளே சென்றான். அங்கே வலியால் துடித்துக் கொண்டிருந்த அவள், " என்னங்க நான் உயிரோடு இருப்பேனா மாட்டேனா எனக்கு தெரியலை??? என்னால முடியல செத்துடுவேன் போல இருக்கு" என்று கூற,

" யாழினி நீ அப்படி எல்லாம் சொல்லாதடி நீ எனக்கு வேணும் தயவு செஞ்சு அப்படி சொல்லாத" என்று கூற, " ரொம்ப வலிக்குதுங்க " என்று அவள் பதறி துடித்தாள். அவளது துடிப்பை அவனால் பார்க்க முடியவில்லை, " அட்லீஸ்ட் நீ கொஞ்சம் பொறுத்துக்கோ நம்ம குழந்தை வந்துடுவான்" என்று கூற,

அதைக் கேட்ட அவளோ தலையை மட்டும் ஆட்டினாள். கண்களில் அருவி போல நீர் ஒழுகிக் கொண்டு இருக்க அவளது நிலையை கண்டவனுக்கு கைகள் கட்டப்பட்டது போல இருந்தது. அவனால் என்ன செய்ய முடியும் எதுவுமே செய்ய முடியாது அந்த நிலையில்தான் அவன் இருந்தான். அவளது முகத்துக்கு அருகே குனிந்து அவளது நெற்றியில் முத்தமிட்டு, "யாழினி நீ என்னை மட்டும் பாரு உனக்கு வலிக்குதுன்னு தெரியும். என்னால அதை புரிஞ்சுக்க முடியுது தயவு செஞ்சு நீ என்னை மட்டும் பாரு இதோ என்னுடைய கைகளை பிடிச்சுக்கோ இறுக்கமாக பிடிச்சுக்கோ உனக்கு கொஞ்ச நேரம் வலி தான் இருக்கும் அதை மட்டும் கொஞ்சம் தாங்கிக்கோ என் கண்மணி..இதை சொல்ல எனக்கு கஷ்டமா தான் இருக்கு என் முன்னாடி நீ கஷ்டபடுறதை பார்க்க முடியல டி" என்று அவன் கூற,

அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு அவள் இருக்க சில மணி நேரம் போராட்டங்கள் கழித்து அவனது செல்ல மகன் அவளது வயிற்றில் இருந்து இந்த உலகிற்கு வந்தான். அதை கண்டவனுக்கு கண்கள் பனித்தன..அதுவரை தன் மனைவி அனுபவித்த துன்பங்களை கண்டவனுக்கு தன் மனைவியின் மீது அன்போடு கலந்த மரியாதை கூடியது...அவளது நெற்றியில் முத்தமிட்டு தன் மனைவியிடம், "நமக்கு மகன் பிறந்து இருக்கான்" என்று கூறவும் அவள் மெல்ல அயர்வோடு புன்னகைக்க... அதே நேரம் அவள் ஓரளவு தேறி விட்டாள் என்ற நிலை வந்ததும் அப்போதுதான் அவனுக்கு சாதனாவின் எண்ணம் வர செவிலிகளிடமும் மருத்துவர்களிடமும் தன் தாயை அழைத்து அவளையும் தன் பிறந்த குழந்தையையும் ஒப்படைத்து விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினான்..

அந்த சமயம் பார்த்து அவளை அனுமதிக்கப்பட்டிருந்த வேறொரு அறுவை சிகிச்சை பகுதிக்கு செல்ல அங்கே இருந்த செவிலியோ, " அவங்களுக்கு குழந்தை பிறந்திடுச்சு ஐந்து மணி நேரம் ஆகுது..அவங்களை ரூமுக்கு மாற்றி ஆச்சு அதோ அந்த ரூம் தான்" என்று கூறவும் வேகமாக அங்கு விரைந்தான் ராவணன்...

சம்பந்தப்பட்ட இடத்துக்கு ராவணன் செல்லும் முன் ஒரு செவிலி கத்தி, " என்ன பண்றீங்க கீழே இறங்குங்க கீழே இறங்குங்க அங்கே எதுக்கு போறீங்க குழந்தையை அப்படி பிடிக்க கூடாது மா" என்று கூற அதைக் கேட்ட அவளோ பலமாக சிரித்தாள்..

ஆம் சாதனா தான் பலமாக சிரித்தது அவள் அவளுடைய நிலையில் இல்லை.. "என்ன டி பதறிட்டு இருக்க நீ பெத்த குழந்தை இல்லைல நான் தானே பெத்தேன் நான் எப்படி வேணாலும் இதை தூக்குவேன் " என்று கூற குழந்தையோ வீறிட்டு அழுதது அதை பார்த்து அந்த செவிலி பெண் அதிர்ந்து நிற்க,

" அவனை வர சொல்லு என்னை இங்கே கொண்டு வந்தவனை வர சொல்லு டி எனக்கு அவனை பார்க்கணும் பார்த்தே ஆகணும் அவனா நானா அப்படின்னு முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்திடுச்சு" என்று கூற,

அந்த செவிலியோ, "ஒன்னும் பண்ணிடாதீங்க கீழே இறங்குங்க மா... நான் உங்க புருஷனை வர சொல்றேன் என்ன பிரச்சனை வந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் மா குழந்தையை பாதுகாப்பா பிடிங்க மா" செவிலி கூற ,

அவளோ அதை கேட்டாள் இல்லை அவளுக்கு பிரசவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு ஐந்து மணி நேரம் தான் இருக்கும் அவளால் எழுந்து நடக்கக் கூட முடியாத நிலை இருந்தும் அவளுடைய திமிர் அகங்காரம் அடங்கவில்லை இவனிடம் அடங்கி போய் விட கூடாத கர்வம் அவளை விட்டுவிடவில்லை.. " யாருக்கு யார் டி புருஷன் அவனா ??" என்று பலமாக சிரித்தவள், " அவனை வர சொல்லு டி இதை கொடுத்திட்டா அவன் ஆம்பிளை ஆகிடுவானா??" என்க...

பிரசவம் முடிந்ததும் இந்த அறைக்கு சாதனாவை மாற்றி இருக்க சிறிது நேர மயக்கத்துக்கு பிறகு அவள் எழுந்து பார்க்க பஞ்சு துணி போல இருக்கும் குழந்தையை பார்த்து அவளுக்கு ஆத்திரம் எழுந்தது..தாயாக சிறு பாசம் கூட இல்லை வெறுப்பு ஆத்திரம் தான் எழுந்தது..வேகமாக எழுந்தவள், "என்னோட இந்த நிலைக்கும் காரணம் நீ தானே டா உன்னை விட மாட்டேன்" என்று கூறி குழந்தையை எடுத்து நின்றவள் அவள் இருக்கும் அறையில் மிகப்பெரிய பால்கனி இருக்க அந்த பால்கனி அருகே சென்று நின்றுக் கொண்டாள்..

அதை கண்ட அந்தப் பெண்ணும், "என்ன பண்றீங்க குழந்தையை தாங்க" என கூற ஏனெனில் இப்பொழுதுதான் பிரசவம் முடிந்து இருக்க அவளுக்கு அவளது உடலை பாதுகாக்கவே முடியாது இருந்தும் குழந்தையை ஒரு கையால் ஏதோ ஒரு பொருளை தூக்குவது போல தூக்கி இருக்க குழந்தையை பாதுகாப்பாக தூக்கவில்லை எனில் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும் என அந்த பச்சிளம் குழந்தை அழுவதை பார்த்து அதிர்ந்து செவிலி கூற அவள் கேட்டாள் இல்லை..

"சரி நீங்க குடுங்க குழந்தையை" என்று கூற அவளும் கேட்டாள் இல்லை அதற்குள் அவன் வர அவனைப் பார்த்ததும் வெகுண்ட சாதனா அவனை நக்கலாக பார்த்தவள், " வா டா வா உன்னை தான் எதிர் பார்த்து காத்துட்டு இருக்கேன் " என்க ராவணனுக்கு அவளையும் அவள் கையில் குழந்தையையும் கண்டு மூச்சடைத்தது. " ஹே குழந்தையை ஒன்னும் பண்ணிடாதே" என்க,

" ஒரு அடி எடுத்து வச்ச குழந்தைய அப்படியே கீழே போட்டுட்டு போய்ட்டே இருப்பேன். என்ன நினைச்சுட்டு இருக்க ஜெயித்துவிடலாம் நினச்சிட்டு இருக்கியா அது உன்னால முடியாது டா... யார்கிட்டயும் இந்த சாதனா எப்பவும் தோத்ததா சரித்திரமே இருக்கக்கூடாது. என்னை சாதாரணமான பொம்பளைன்னு நினைச்சுட்டு தானே நீ இதையெல்லாம் பண்ணினே ஒரு குழந்தையை கொடுத்துட்டா நான் அடங்கிடுவேன்னு நினச்சிட்டு இருக்கியா?? இந்தக் குழந்தை தானடா உனக்கு வேணும் இந்த குழந்தை உனக்கு கிடைக்காது பாக்குறியா பாக்குறியா?? நான் சாதனா டா என்னை நீ செய்ததுக்கு உனக்கு தண்டனை வேண்டாமா??" என்று கூறியவள் பெண் பிறப்புக்கே சாபமாக தான் நின்றுக் கொண்டிருந்த பால்கனியில் இருந்து பின்னோக்கி குழந்தையை தூக்கி பிடித்தவள் அவனை பார்த்து,

" பார்த்தியா டா உன்னை ஒரே இடத்தில் நிக்க வைச்சுட்டேன். எவனும் இந்த சாதனாக்கு தண்டனை கொடுத்ததாக இருக்கவே கூடாது" என்று கூறியவள், " நான் சாதனா டா" என கூறியவள் அப்படியே கீழே பார்க்காமல் முன்பே பால்கனியில் விளிம்பில் நின்றுக் கொண்டிருந்தவள் கையை மேலே தூக்கி கீழே போட்டு அவளும் விழுந்தாள் ..

சாதனா மற்றும் குழந்தை நான்காவது மாடியில் இருந்து கீழே விழ அய்யோ குழந்தையை, "தூக்கி போட்டுட்டா" என கத்தும் சத்தம் கேட்க ராவணனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை... வேகமாக வந்து எட்டிப்பார்க்க ரத்த வெள்ளத்தில் சாதனா கீழே கிடந்தாள்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top