Share:
Notifications
Clear all

அதிகாயன் 37

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் :37

மூன்று மாதங்களுக்கு பிறகு யாழினிக்கு ஒன்பது மாதம் தொடங்கி விட்டது அதேதான் சாதனாவுக்கும் அவளுக்கும் 9 மாதங்கள் துவங்கிவிட்டன...

இருவரும் நிறைமாத கர்ப்பிணிகள் என்று கூறவேண்டும் மருத்துவர்கள் இருவருக்கும் ஏறத்தாழ மூன்று நாட்கள் வித்தியாசத்தில்தான் தேதி குறித்து கொடுத்திருந்தனர். கணவன் தன்னை அவனுடன் இருக்க வைக்காமல் இங்கே கொண்டுவந்து விட்டதிலிருந்து யாழினியின் முகம் வாடிப்போய் இருந்தது. அவளுக்கு அவளது கணவனின் முகம் தான் நித்தமும் வந்து வந்து போக அவன் தினமும் அவளிடம் உரையாடுவான் தான் அப்பொழுது எல்லாம் அவள் பேசாமல் உம்மென இருப்பாள்..

அப்படி ஒருநாள் அவள் அவளது அறையில் அமர்ந்திருக்க திரைச்சீலைகளை நீக்கிவிட்டு ஜன்னலை எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள் யாழினி... அவளது பார்வை தொலைதூரத்தில் இருந்தது எதை பார்த்து கொண்டிருக்கிறாள் என்று கூட அவளுக்கு தெரியவில்லை..ஆனால் மனம் நிறைய கணவன் கணவன் அவன் மட்டுமே... அந்த சமயம் பார்த்து அவளது அறையின் கதவு மெதுவாக திறக்க கதவு திறந்தது கூட அறியாமல் அவள் நின்றுக் கொண்டிருந்தாள்..

கதவை திறந்து கதவில் சாய்ந்து நின்று மார்பில் தன் கையை கட்டி தன்னவளை பார்த்துக்கொண்டிருந்த ராவணனுக்கு தன் மனையாளின் ஏக்கம் சுமந்த முகம் அவனை வாட்டி வதைத்தது..அவள் எதனால் இப்படி இருக்கிறாள் என அவனுக்கு தெரியாமல் இல்லை தனக்கிருக்கும் தொல்லையால் என்னவளை கூட கவனிக்க முடியவில்லையே என எண்ணினான் ...

ஒவ்வொரு அடியாக எடுத்து அவன் அவளை நோக்கி செல்ல காற்றில் கலந்திருந்த அவனது வாசத்தை நுகர்ந்தவளோ அவனது அழுத்தமான காலடி ஓசை கேட்டு திரும்பிப் பார்க்க அங்கு அவன் வருவதைக் கண்டும் கனவு என எண்ணிக் கொண்டாளோ என்னவோ மீண்டும் முகத்தை திருப்பிக் கொண்டாள். அதைக்கண்டு மெல்லிய புன்னகையோடு அவள் அருகே வர, 'என் மேல கோபமா' என எண்ணிக் கொண்டே அவள் அருகே வந்து அவளது தோள் தொட சட்டென்று திரும்பியவள் கண்களில் ஆயிரமாயிரம் கேள்விகள் எழ வந்து விட்டானோ அவன் தானா என அவள் அறியாமல் அவளது கை நீண்டு அவன் முகத்தை தொட அவளால் முடிகிறது என்ற உணர்வுகள் ஆட்கொள்ள அவளது கண்களில் சந்தோஷ துளி விழ அதை தாங்கிய அவளது கணவனும் அவளது கண்களில் விழும் அந்த சந்தோஷ கண்ணீரைக் கூட விடாமல் தாங்கிக் கொண்டான் இராவணன்..

எதுவுமே பேசாமல் தன் மனையாளை அணைத்து கொண்டவன், " என் மேல நீ கோபமா இருக்க??? அப்படித்தானே???" என்று கூற அவளும் அவளது மார்பிலேயே புதையுண்டு, " எனக்கு உங்க மேல கோபம் எல்லாம் இல்லை எனக்கு உங்களை பார்க்கணும் உங்க கூட இருக்கணும் அவ்வளவுதான்" என்று கூற,

அதைக் கேட்ட அவனும், "எனக்கும் உன் கூட இருக்கணும்னு ஆசை தான் ஆனால் என்னுடைய சூழ்நிலை உன்னுடன் இருக்க முடியாத நிலைமையில் நான் இருக்கேன்" என்று கூறியவன் தன் மனைவியின் முகத்தை தன் கைகளில் ஏந்தி அவளது இமையில் தன் இதழ்களை பதித்தவனுக்கு அவள் அழுது கரைந்ததுக்கு அடையாளமாக அவள் கண்ணில் உப்பு நீர் பரவியதற்கான அடையாளம் இருக்க அவன் அணைக்கவும் மீண்டும் அவள் கண்ணில் நீர் வழிந்தது, அதை கண்டு தாளாதவன், " நீ தான் இப்போ தனியா இல்லையே நம்ம குழந்தை தான் உன்னுடைய வயிற்றில் இருக்கே" என்று கூற,

மெல்லிய புன்னகை அவள் முகத்தில் படர்ந்தது. அதை கண்டு கொஞ்சம் சமாதானம் அடைந்தவன், "அம்மா சொன்னாங்க நீ சரியாக சாப்பிடுவதில்லை என்று அப்படியா???" என்று அவன் கடுமையாக அவனது முகத்தை வைக்க அவள் தலையை குனிந்து கொண்டாள் ..

"நான் வரலை நான் இல்லை அப்படின்னு சப்பை கட்டு கட்டிட்டு சாப்பிடாமல் இருக்கக் கூடாது சமயத்துக்கு சாப்பிடணும் " என்று கூறியவன் அவன் வாங்கி வந்த ஒரு பொருளை அவளிடம் கொடுத்தான். அவள் அதை பார்த்ததும் என்ன என கேட்க, " பிரித்துப் பார் " என்று கூறியவன் அவளது முகத்தையே பார்த்து இருக்க அது ஒரு அழகிய பட்டுப்புடவை அந்த பட்டுப் புடவைக்கு தகுந்தது போல ஆபரணங்களும் வாங்கியிருந்தான். எதற்காக என அவளுக்கு புரியவில்லை ஆனால் பார்க்க மிகவும் அழகாக இருக்க அவளோ அவனை பார்த்து, "எதுக்குங்க இதெல்லாம்???" என்று கேட்க அவன் அவளைப் பார்த்து, "உனக்காக தான் இதெல்லாம் வாங்கினேன்...எனக்கு அதிகம் சமயம் இல்லை நீ இதையெல்லாம் அணிந்து விட்டு வா" என்று கூற,

அவளும் எதற்கு என்று கேட்க," உன்னை இந்த ட்ரெஸ் எல்லாம் போட்டுட்டு வா அப்படின்னு தான் நான் சொன்னேன்" என்று கூறியவன் அவளைப் பார்த்து அவள் நெற்றியில் தன் இதழ்களை பதித்து விட்டு மெல்லிய புன்னகை புன்னகைத்துவிட்டு சென்றுவிட்டான். அவளும் உடை மாற்றி அவன் வாங்கி வந்த ஆபரணங்களை எல்லாம் அணிந்துக் கொண்டு கீழே செல்ல அங்கே அவளுக்கு சிம்பிளாக வளைகாப்பு செய்வதற்காக எல்லா தயாராக இருந்தது...

அதைக் கண்ட அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிய, "வாம்மா வந்து இப்படி உட்கார் " என்று கூற அவளும் வந்து அமர்ந்தாள்.. சாந்தி அவளுக்கு நலங்கு வைத்து வளையல்கள் மாட்டிவிட அதேபோல ராவணனும் அவளுக்கு வளையல் மாட்டி நெற்றியில் குங்குமம் வைத்து நலங்கு வைத்து விட்டான். அதில் அவளது கண்கள் மிளிர அவனோ அவளை பார்த்து மெல்லிய புன்னகை புன்னகைத்தவன் அவளது நெற்றியில் தன் இதழ்களை பதித்தான்..

தன் கணவன் இதை செய்வான் என எதிர்பார்க்காத அவளும் அவனது கைகளை மெல்ல தொட அவன் இறுக்கமாக பிடித்துக் கொண்டு அவளது நெற்றியில் நெற்றி முட்டி, "எனக்கு நீ ரொம்ப ஸ்பெஷல் நம்ம குழந்தையும் ரொம்ப ஸ்பெஷல் நம்ம குழந்தையை நான் வரவேற்காமல் இருப்பேனா???" என்று கூறினான்.

"நான் நீங்க வர மாட்டீங்கன்னு நெனச்சேன்" என்று கூற

" நான் அப்படி வராமல் போவேனா??" எனவும்,

அதைக் கேட்ட சாந்தி சலித்துக் கொண்டு, " அப்படி என்ன சம்பாதித்து எங்களுக்கு சோறு போட போற??? தேவைக்கு அதிகமாகவே நம்ம கிட்ட இருக்கு. இதுக்கு மேல என்ன வேணும் அவ கூட கொஞ்சம் இரு தம்பி எல்லாம் இருந்தும் வேலையே கதின்னு இருக்கிறது நல்லாவா இருக்கு புள்ளதாச்சி புள்ள ஆசைப்படுறா அவ கூட கொஞ்ச நேரம் உன்னால இருக்க முடியாதா??? அப்படி என்னதான் நீ வேலை பார்க்கிறாயோ எனக்கு சத்தியமா தெரியல தம்பி" என்று தாய் வேதனை கொள்ள கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...அவனுக்கு தன் தாயிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை..

" அம்மா என்னோட வேலை அப்படி மா??"

" அப்படி என்ன தான் வேலையோ???" என்க அதை கேட்டதும், " இல்லை அத்தை என்கிட்ட கூட சொன்னாங்க அவருக்கு வேலை அதிகம் அத்தை அதனால தான் அவரால நம்ம கூட இருக்க முடியல அவரை தவறா நினைக்காதீங்க" என்று கூற அதை பார்த்து அவன் மெல்லிய புன்னகை பூக்க சாந்தி அம்மாவும்," நல்ல ஜாடிக்கு ஏத்த மூடி தான்" என்று கூறினார்..அன்றைய இரவு அவளுடன் இருப்பதாக அவன் கூறி இருக்க அவளும் கொஞ்சம் முகம் தெளிந்தாள்..

அதேநேரம் அங்கே ஒருத்தி தனது மேடிட்ட வயிற்றை ஒரு குரூர புத்தியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் கண்களில் குரூரம் மட்டுமே தென்பட்டு கொண்டிருந்தது. எப்படி இதை அழிக்கலாம் என்று தான் அவள் தன் எண்ணத்தில் கொண்டு வந்துக் கொண்டிருந்தாள் மாரியம்மா சமைக்கிறாரோ இல்லையோ அவளது அறையிலேயே அவள் என்ன செய்துக் கொண்டிருக்கிறாள் என்பதை கண்காணிக்க வேண்டும். அதுதான் அவருடைய வேலையாக இருக்க இவள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தாள்.

மாரியம்மா வேறு இவளை நோட்டமிட்டுக் கொண்டே இருக்க என்ன செய்யலாம் என எதிர்பார்த்த மாரியம்மாவை பார்த்து, " என் முகத்தில் என்ன இருக்குன்னு பார்த்துட்டு இருக்க?? உனக்கு வேற வேலையே இல்லையா???" என்று கூற மாரியம்மா," உங்களை கவனிச்சுக்க சொல்லியிருக்காங்க சார் அது தான் என் வேலை" என்று கூறிய மாரியம்மாவுக்கு இவளை பார்த்து பயம் வந்தது. அவளது முகமே அவருக்கு அச்சுறுத்தும் வகையில் இருக்க,

"அதுக்கு மூஞ்சிய பாத்துட்டே இருப்பியா போய் தண்ணி எடுத்துட்டு வா " என்று கூற அதைக் கேட்ட மாரியம்மாவும் சரி என கீழே இறங்க அந்த சமயம் பார்த்து கதவை திறந்து வெளியே வந்த சாதனா வேகமாக வேண்டுமென்றே தன் ஒன்பது மாத கருவை சுமந்துக் கொண்டே வெளியே வந்தவள் கையில் கால் வலிக்கு தேய்த்துக் கொண்டிருந்த எண்ணெய் இருக்க அதை கீழே கொட்டினாள்..

பிறகு வேண்டுமென்றே அதில் காலை வைத்தவள் அவளாகவே மாடிப்படியில் உருண்டு கீழே விழுந்தாள். அவள் விழும் சத்தம் கேட்டு ஓடிவந்த அனைவரும் பதற அவளோ விழுந்த சமயத்தில் மூர்ச்சையாகி போனாள்..

அதற்குள் வேகமாக ராவணனுக்கு அழைக்க ராவணன் அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினான். பிறகு அவன் அங்கு விரைய அதற்குள் அவளுக்கு பிரசவ வலி எடுத்தது இது அவன் எதிர்பார்க்காத ஒன்று.அவள் ஏதாவது செய்வாள் என்று தான் அவன் எண்ணிக் கொண்டிருந்தான். அதற்காகத்தான் கண்கொத்தி பாம்பாக அவளை கவனித்துக் கொண்டிருக்க அவள் அவன் தன் மனைவியை காண வந்திருக்கும் சமயம் பார்த்து அவள் இந்த வேலையை செய்து வைத்திருக்க இதோ அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

வேண்டுமென்றே அழுத்தத்துடன் மாடிப்படிகளில் உருண்டு விழுந்து அவள் வயிற்றில் அடிபட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அதனால் அவளுக்கு அறுவை சிகிச்சை செய்து தான் குழந்தையை வெளியே எடுக்க முடியும் என்று கூறி இருக்க அவன் சரி என சம்மதம் கூறினான்..என்ன என்றாலும் ஊராருக்கு அவன் மனைவி சாதனா ஆகிற்றே இவன் கர்ணாவும் ஆகிற்றே அப்படியே செத்து தொலையட்டும் என விட்டு விட முடியாதே!!

அவளது வயிற்றில் பலமாக அடிபட்டு இருக்க அவளை அறுவைசிகிச்சை அறைக்குள் கொண்டு செல்ல அதுவரை அவள் மூர்ச்சையாகி தான் இருந்தாள்.. குழந்தைக்கு ஒன்றும் ஆகி விட கூடாது என்ற பிராத்தனை அவனுக்கு இருந்தது. இப்படியும் ஒருத்தி இருக்கிறாளா என்ற கேள்வியும் அவனுள் எழ,

அதற்குள் இங்கே வளைகாப்பு முடிந்த யாழினிக்கு பிரசவவலி வந்துவிட்டது என சாந்தி அழைத்து அவனுக்கு தகவல் கொடுக்க ராவணன் துடித்தான்.. "இப்போது கூட நன்றாக இருந்தாளே அம்மா" என கேட்க,

"நீ அந்த பக்கம் போகவும் அவளுக்கு பனிக்குடம் உடைஞ்சிடுச்சு பா நீ சீக்கிரம் வா" என்க, "சரி மா நான் வரேன்" என்றவன் இப்போது என்ன செய்வது என தெரியாமல் வேகமாக தன் மனைவியை அழைத்து வர செல்ல அங்கு அவள் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள் யாழினி..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top