Share:
Notifications
Clear all

அதிகாயன் 36

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  


அத்தியாயம் : 36

அதே நேரம் அவளுக்கு நேற்றையதினம் ஞாபகத்துக்கு வந்து போனது அந்த வீட்டில் வேலை செய்ய பல நபர்கள் இருந்தாலும் அவளது வேலையை அவளேதான் செய்துக் கொண்டிருப்பாள். அவள் என்றும் அவளை அந்த வீட்டின் ஒரு வேலைக்காரியாக தான் எண்ணிக் கொண்டிருக்கிறாள். அப்படி அவளது துணியை துவைத்து விட்டு துணியை மொட்டை மாடியில் காய வைக்க செல்ல வேண்டும். அவளோ அவளது அறையிலிருந்து வீட்டுக்குள்ளே இருந்து மொட்டை மாடிக்கு செல்ல மாடிப்படிகளை ஏறிக் கொண்டிருந்தாள்..

அதேசமயம் ராவணன் மேலிருந்து கீழே செல்ல இறங்கிக் கொண்டிருக்க அவளோ பாவாடை தாவணி அணிந்து உடலெல்லாம் நனைந்த பாவாடையை இடுப்பில் சொருகி கையில் ஒரு பக்கெட்டை பிடித்துக்கொண்டு மெல்லப் படியேறி கொண்டிருக்க அவன் வியர்த்து வழிய எக்சர்சைஸ் செய்து விட்டு வந்துக் கொண்டிருந்தான்...

அவள் அவனை பார்க்காமல் படியேறிக் கொண்டிருக்க அவன் மேலே இருந்து அவளை பார்த்து விட்டான் போலும் மெல்ல அவன் அவளை பார்த்துக் கொண்டே இறங்கியவனை கிட்டத்தட்ட இரண்டு படிகள் இருக்கும் போது தான் அவள் பார்க்க மூச்சடைத்தது..

அவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அப்படியே கீழே இறங்கி போய் விடலாமா என்று கூட எண்ணினாள். இதுவரை அவனது அருகே நின்றது கூட இல்லை பாட்டி இருக்கும் வரை அவள் அவன் முன்னே கூட வந்து நிற்க மாட்டாள். இப்பொழுதுதான் சாந்தி அம்மாவுடன் இருக்கும் தருணங்களில் அவனை சந்திக்க நேரிடுகிறது இப்பொழுது என்ன செய்வது என எண்ணி அவள் வேகமாக தலையை குனிந்துக் கொள்ள அவள் அணிந்திருந்த உடை அவனது கண்ணை உறுத்தியது. அவனும் அதே நேரம் மார்பில் கையை கட்டிக்கொண்டு அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது குறுகுறு பார்வை அவளை அச்சுறுத்த மனதுக்குள்ளே என்ன இப்படி பார்க்கிறார்கள் என எண்ணிக் கொண்டாள். அவன் மனதுக்குள் இவ என்ன மசமசன்னு நின்னுட்டு இருக்கா என்று நினைக்க ஒரு படி மேலே கால்வைக்க ஒரு படி கீழே கால்வைக்க என விளையாடிக் கொண்டிருந்தாள். அவளது பதற்றத்தை பார்த்து , "ஒன்னு மேல போ இல்ல கீழே இறங்கு இரண்டும் சேர்ந்து செஞ்சிட்டு இருக்காதே" என்று கூற அவள் ஒரு படி மேலே ஏற அவன் ஒரு படி கீழே இறங்கினான் இருவரும் கொஞ்சம் கூட நெருக்கத்தில் வர அவனது பார்வை அவளது தேகத்தில் படிந்தது இன்னும் ஒரு படி தான் இருவருக்குள்ளும் இருக்க,

அதற்குள் அவள் பார்வை அவனை சந்திக்க அவளோ, 'இவரு என்ன இப்படியே பார்த்திட்டு இருக்கார். அவர் பார்வையே சரியில்லையே அவர் கிட்ட நின்னுட்டு இருந்தா நமக்கு தான் மூச்சடைக்குது பேசாமல் போயிடுவோம்' என எண்ணி மேலும் ஒரு படியேறினாள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் எப்படியாவது சிறிதேனும் உரசிக் கொள்ள நேரிடும் அதனால் அப்படியே நின்று விடுவோம் அவர் இறங்கி போகட்டும் என யாழினி நினைக்க,

அவனும் அதே தான் எண்ணி இருப்பான் போலும் அந்த சமயம் அவன் அவளை பார்க்க வியர்வை முத்துக்கள் வழிந்துக் கொண்டிருக்க அவளது முந்தானை சரி வர போட்டு இருக்காமல் அவளது அழகிய பெண்மை அவனுக்கு லேசாக அவனது கண்ணில் பட அவள் தூக்கி சொருகிய பாவாடையில் அவளது வாழைத்தண்டு கால்கள் அவனது மனதை தாக்க,

அவளது இடை அவனை மேலும் கிறங்கடிக்க என்ன பெண் இவள் என எண்ணினான். இதுபோல அவன் பெண்கள் பின்னால் சுற்றியது கிடையாது பெண்கள் என்றாலே ஒதுங்கி செல்லும் ரகம்தான் ராவணன்...என்ன தான் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு நிற்பவன் என்றாலும் இதில் அவன் வீக் தான் அப்படி இருக்கும் பொழுது இவளை பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற நினைப்பு அவனுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்துக் கொண்டிருந்தது..

இப்ப நான் எப்படி போவேன் என நினைக்க சரி பேசாமல் ஒரு படி மேலேயே போய் விடுவோம் என எண்ணிய யாழினி, மெல்ல ஒரு படியில் ஏறவும் இருவருமே இப்பொழுது ஒரே படியில் நின்றுக் கொண்டிருக்க அவளுக்கு மூச்சு அடைத்தது. அவளது நாசியில் அவனது வியர்வை வழிந்த வாசனை அவளுக்கு அவனை அவ்வளவு அருகில் பார்க்கவும் தலைகால் புரியவில்லை மேலும் இரு உடல்களும் இலேசாக உரசியதோ என்ற சந்தேகம் அதற்குள் கீழே இருந்து விதேஷ் என்ற சாந்தியின் குரல் கேட்கவும்,

அவள் அந்த சத்தத்தில் வேகமாக தன் கையிலுள்ள பக்கெட்டுடன் கீழே விழ போக அவன் அவளது இடையை தாங்கி பிடித்தான். தாங்கிப் பிடித்தவனின் கண்கள் அவளை பார்க்க அவளும் அந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது இமை அவனை கண்டதும் படபடவென அடித்துக் கொள்ள அவனுக்கு அந்த படபடப்பு பிடித்துக் கொண்டதோ என்னவோ மேலும் ஒரு நொடி ஆழ்ந்து அவளைத்தான் பார்த்தான். அவனது கை அவளது இடையில் கொஞ்சம் அழுத்தத்தை கொடுக்க இவ்வளவு வழுவழுப்பான ஒரு தேகமா என எண்ணினான். பெண்ணின் உடல் இப்படித்தான் இருக்குமா?? இதுவரைக்கும் அவன் தொட்டது இல்லை என அவனது கைகள் அவனுக்கு கூறியது கத்தி துப்பாக்கி பிடித்தத்தின் பயனோ என்று கூட அவன் எண்ணிக்கொண்டான்..

அவனுக்கு மேலும் அவளருகே முன்னோக்கி செல்லவேண்டும் அவளது துடிக்கும் இதழை தீண்ட வேண்டும் என நினைத்து ஒரே ஒரு நொடி அவனது கழுத்து முன்னோக்கி சென்றது. அவளது மருண்ட விழிகள் அவனை நோக்கி விழிக்க அவளது உதடுகள் துடித்துக் கொண்டிருக்க அதற்குள் மீண்டும் அவனது தாய் அழைக்கவும் அவன் வேகமாக அவளது இடையில் இருந்து கையை எடுத்தான்..இருவருக்கும் அந்த காட்சி அவ்வளவு எளிதாக அவர்களின் மனக் கண்ணில் இருந்து வெளியேற வில்லை.

அதிலிருந்து அவள் அவன் இருக்கும் திசை அருகில் கூட வருவதில்லை அப்படியிருக்க இன்றும் தன் தாயை காண அவன் வரவும் அதுதான் அவள் வேகமாக ஓடி விட்டாள்..

ஓடும் அவளை கண்ட சாந்தி அம்மா தன் மகனிடம், "கண்ணா நீ அம்மா எப்படி நினைத்தேனோ அதே போல வளர்ந்து இருக்க... உனக்கான ஒரு தொழிலை நீ செய்துட்டு இருக்க அதற்கான ஓட்டத்தில் தான் நீ இருக்க!! உனக்கு இனி ஒரு கல்யாணத்தை செய்து பார்க்கணும்னு அம்மாவுக்கு ஆசையாக இருக்கு உன் மனசுல யாராவது இருக்காங்களா???" என்று கேட்டார்..

தாய் பாசமாக கேட்கவும் இவனுக்கு தான் தன் தாயை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோமோ என்ற வருத்தம் இருந்தது இருந்தும் யாரையாவது பிடித்து இருக்கிறதா என்ற கேள்வி வரவும் அவனுக்கு யாழினியின் முகம் மட்டுமே வந்துபோக அவன், " எதுக்குமா இப்போ எனக்கு கல்யாணம் ??" என்று கேட்டான்..

" இல்ல கண்ணா அம்மாவுக்கு உடல்நிலை சரி இல்லை உனக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்துவிட்டேன் அப்படினா நான் சந்தோஷமா போயிடுவேன் என்ன சந்தோஷம் என்னுடைய செல்லத்தை நான் பறி கொடுத்துட்டேனே என்னுடைய வரட்டு கௌரவம் தானே அந்த குழந்தையை இப்படி தவிக்க வைத்தது" என்று மீண்டும் கருணாவை எண்ணி வருத்தம் கொள்ள,

" அம்மா எனக்கு யாரையும் யார் மேலேயும் ஆசை இல்லை அம்மா" என்று தன் தாயின் பேச்சை மாற்ற எண்ணினான் அது சரியாக வேலை செய்ய, " கண்ணா, அப்போ அம்மா உனக்கு ஒரு பெண் பார்த்து இருக்கேன் நீ கல்யாணம் செய்து கொள்வாயா??" என்று கேட்கவும் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை அவன் மனமோ யாழினி யாழினி என்று துடித்துக் கொண்டிருக்க,

இவன் ஒரு வேளை நேரடியாக சொன்னால் அவள் சம்மதிப்பாளா என்று கூட தெரியாது. ஏனெனில் இவன் இங்கே நின்றால் அவள் தெற்கே அல்லவா நிற்கிறாள் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடி கொண்டிருக்க தாய் மகனது முகத்தை பார்த்து, " நான் உனக்கு பார்த்து இருக்கிற பொண்ணு யாழினி அவளைத் தவிர உனக்கு வேற நல்ல பெண் கிடைக்கமாட்டா தம்பி" என்று கூறவும் அவனுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது ..

அதை தாய்க்கு தெரியாமல் மறைத்துக் கொள்ள தாய் அறியாத சூலா அடுத்த முகூர்த்தத்திலேயே இருவருக்கும் மணம் முடித்து வைக்க யாழினி அந்த வீட்டின் அங்கமாகி போனாள் அவனின் உயிராகியும் போனாள்.. அவளுக்கு தான் அவன் மீது ஆசை கலந்த பயம் ஆனால் அவனுக்கு அதே சமயம் அவள் மீது கொள்ளை ஆசை ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துவது என தெரியவில்லை என்றாலும் இருவரும் ஒரு சராசரி தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவளுக்கு தான் இடை இடையே இவருக்கு நான் சரியான ஜோடி இல்லையோ என தோன்றும் அவனுக்கு அப்படி தோன்றியது இல்லை எல்லாம் மகிழ்ச்சியாக நடந்து முடிந்து விட்டது என சாந்தி அம்மா நினைக்க மகனோ அப்படி நினைக்கவில்லை.. அவன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய அவர்களை திட்டமிட்டு வதைக்க களத்தில் இறங்கி விட்டான் ராவணன் தன் தாய்க்கு சமாதானம் சொன்னாலும் தன் தந்தையையும் தந்தை மகனையும் கொன்றவனை அப்படி விட்டுவிடுவானா விதேஷ் ராவண்…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top