Share:
Notifications
Clear all

அதிகாயன் 35

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் :35

இங்கு வந்தும் இதே போன்ற வேலையில் தான் அவன் தொடர்ந்தான் இருந்த இடத்திலிருந்தே அவன் செய்ய வேண்டிய வேலைகள் ஏராளமாக இருந்தன... ஆனால் எந்த இடத்திலும் அவன் தன் முகத்தை காட்டிக்கொள்ள மாட்டான். வெளிநாட்டில் இருந்தது போலவே இங்கும் அனைவருக்கும் இவன் இங்கேயும் சிம்மசொப்பனமாக தான் இருந்து வந்தான்..

இவனுடைய ஆட்கள் அனைவருக்கும் இவனைப் பற்றி மட்டுமே தெரியும்.. இவனுடைய குடும்பமோ அல்லது இவன் யார் என்ன என்பது பற்றி எல்லாம் அவர்களுக்கு தெரியாது தெரிவிக்கவும் மாட்டான் தாயின் ஆசைக்காக விருப்பமே இல்லாமல் தாயகம் வந்த அவன் தாய்க்காக ஒரு மாளிகையை கட்டினான்.. அதை கோட்டை என்றுதான் சொல்ல வேண்டும் அதில் தாய்க்கு என்ன வேண்டுமோ அது எல்லாம் கிடைக்குமாறு செய்தான். ஆனால் தாய்க்கு வெளி உலகமே தெரியாமல் அந்தக் கூட்டுக்குள் சிறை வைத்தான். தாய்க்கு தெரியாமலேயே சிறை வைக்கப் பட்டிருக்க அவன் வெளியுலகத்திற்கு ராஜாவாக திகழ்ந்து வந்தான்..

கிட்டத்தட்ட சொல்லவேண்டுமென்றால் அவனது தந்தை சிறிய அளவில் செய்ததை அவன் பெரிய அளவில் செய்கிறான் அவ்வளவே இன்றளவும் சாந்திக்கு அம்மையப்பன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று எதுவுமே தெரியாது. அவர் இறுதியாக மருத்துவமனையில் அவரை பார்த்ததுதான் பிறகு அவரை அவர் சந்திக்கவில்லை இருந்தாலும் அந்த குழந்தை அதை இழந்து விட்டோமே என்ற பரிதவிப்பு இப்பொழுதும் அவருக்கு இருக்க அந்த சமயம் பார்த்து தான் வேலைக்கு ஆள் வேண்டும் என தேடிக்கொண்டிருக்க அப்போதுதான் சிவகாமியம்மா அந்த வீட்டில் வேலைக்காக தன் பேத்தி யாழினியை கூட்டிக்கொண்டு வந்தார்..

சிவகாமி அம்மா அந்த வீட்டுக்குள் நுழைந்ததும் அங்கு இருக்கும் ராவணனை கண்டதும் அதிர்ந்தார். "தம்பி நீங்க கர்ணா தானே???" என்று கூற அதைக் கேட்டதும் சாந்தி அம்மா அதிர்ந்து, " அது என்னுடைய பையன் மா கர்ணா இல்லை" என்று கூற,

"இல்லைமா எனக்கு என்னுடைய கருணாவை பார்த்த மாதிரியே இருக்கு அப்படியே எங்கய்யா அம்மையப்பனை உரிச்சி வச்சிருக்கே தம்பி" என்று அவர் கூறவும் அந்தப் பெயரைக் கேட்டதும், "என்ன பெயர் சொன்னீங்க??" என்று அதிர்ந்தார் சாந்தி..

" அம்மையப்பன் அய்யா" என்று சிவகாமி அம்மா சாந்தி அம்மாவிடம் கூறவும் சாந்தி அம்மா அதிர்ந்தார் அவர் முகம் வெளுத்துக்கொண்டிருக்க தந்தையின் பெயரை கூறவும் ராவணனும் அதிர்ந்து, " இப்போ அவங்க எங்கே இருக்காங்க??" என்று தாயின் பரிதவிப்பை பார்த்து கேட்க சிவகாமி அம்மா விஷயம் அனைத்தையும் ஒன்று விடாமல் ராவணனிடமும் சாந்தி அம்மாவிடமும் கூற சாந்தி அம்மா அதிர்ந்தார்..

"என்ன சொல்றீங்க அவங்க இறந்துட்டாங்களா??"

" ஆமாம்மா படுபாவி பயலுக அந்த குழந்தையை கொன்னுட்டாங்க எப்படி அடிச்சாங்க தெரியுமா???" என்று கருணாவை பற்றியும் அவனின் உடல் நலத்தைப் பற்றியும் கூற சாந்தி அம்மா மேலும் உடைந்தார் ..

"பாவி நான் பாவி என் குழந்தையை அப்படியே விட்டுட்டு போய் விட்டேனே என் குழந்தை உடம்புக்கு முடியாத குழந்தை அந்த குழந்தையோட இந்த நிலைக்கு நான் தானே காரணம் என்னுடைய வறட்டு கௌரவமும் பிடிவாதமும் தானே காரணம் பேசாமல் அவர் கூடவே இருந்து இருக்கலாம்" என சாந்தி அம்மா அழுது கரைந்தார்...

"ஐயோ என் மகனை பறி கொடுத்து விட்டேனே என் மகனை கொன்னுட்டாங்களே இந்த பாவிகளுக்காக தானே அவரு என்னை விட்டு போனார். இப்போ அவரும் போய் என் மகனும் போயிட்டானே கத்தி எடுத்தவனுக்கு கத்தியில் தான் சாவுன்னு சொன்னேனே ஆனால் அவர் கேட்கலையே" என்று சாந்தி அம்மா வருத்தப்பட்டுக் கொண்டிருக்க,

அவரைத் தேற்ற தான் யாரும் இல்லை மகன் தான், " அம்மா தயவு செஞ்சு அழாதீங்க போனவங்க போயிட்டாங்க நீங்கள் வருத்தப்படாதீங்க" என்று மகன் தன் தாயை தேற்றி விட அப்போதும் அவர் தேறாமல் இருந்தார். என்னதான் சண்டை என்றாலும் எங்காவது ஒரு மூலையில் வாழ்ந்து வருவார் என்று எண்ணியிருக்க இப்பொழுது பூவையும் இழந்து தன் மகனையும் இழந்து அவர் வருத்தத்தில் ஆழ்ந்து போனார் அவரைத் தேற்றுவதே அவனுக்கு பெரிய வேலை ஆகிப்போனது...

அழுது அழுது கரைந்த சாந்தி அம்மா தன் உடலை வருத்திக் கொள்ள அவருக்கு உடம்பு சரியில்லாமல் போனது அதைக் கண்டதும் மகன் துடித்து, "எதுக்குமா இப்படி உங்களை நீங்களே வருத்திக்கிறீங்க போன அவங்க போயிட்டாங்க நாம அழுதா மட்டும் அவங்க வரவா போறாங்க??" என்று கேட்க,

" என்னால முடியல விதேஷ் பேசாம அவனை உங்க அப்பா கேட்கும்போதே கொடுக்காமல் இருந்திருக்கலாம். அவன் நம்ம கிட்டயாவது இருந்திருப்பான் உங்க அப்பாவுடைய நண்பர்களே இப்படி இருப்பாங்கன்னு அவர் சத்தியமா எதிர்பார்த்திருக்க மாட்டார். அவங்க செய்தார்களா இல்லை அவருடைய எதிரிகள் செய்தார்களா தெரியலையே எனக்கு மனசு ஆறவே மாட்டேங்குதே" என்று கூற...

"அம்மா, இப்போ பாட்டி சொன்னதுனால தானே உங்களுக்கு விஷயம் தெரிந்தது அவங்க சொல்லலைன்னு நினைச்சுக்கோங்க. உங்களுக்கு நான் எனக்கு நீங்க அதுதான் நம்ம வாழ்க்கை அப்படியே இருங்க அம்மா" என்று தாய்க்கு ஆறுதல் கூறிய ராவணனுக்கு மனது ஆறவில்லை. என்ன கொடுமையான ஆட்கள் இவர்களைப் பந்தாடியே தீர வேண்டும் என எண்ணினான். அப்படி அவர்களின் ஒவ்வொரு அணுவையும் தீரவிசாரித்து ஆராய்ந்து அவர்கள் எங்கே என்ன செய்கிறார்கள் எந்த நொடி என்ன வேலை அங்கு நடக்கிறது என்பதை எல்லாம் அவனது விரல் நுனியில் வைத்துக் கொண்டான்.

இப்படியே சில காலம் கழிய இதற்கு இடையில் சாந்தி அம்மாவுக்கு ஒரு பக்கம் முடியாமல் இருக்க மறுபக்கம் சிவகாமி அம்மாவுக்கு உடல் உபாதை காரணமாகவும் வயோதிகத்தின் காரணமாகவும் அவர் மரணத்தை தழுவினார். யாழினி யாரும் இல்லாத அனாதை ஆகிப்போனாள்...

யாரும் இல்லாத யாழினி தன் பாட்டி இறந்ததும் அவள் தனிமரம் ஆகிப்போக அந்த சமயத்தில் சாந்தி அம்மாதான் அவளுக்கு ஆதரவாக இருந்தார் அங்கேயே தங்க வைத்தார்... அந்தப் பெரிய வீட்டில் இந்த இரு பெண்கள் மட்டும்தான் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொள்ள யாழினி தான் கூட இருந்து சாந்தி அம்மாவிற்கு துணையாக இருந்து வந்தாள்..

ராவணனைப் பொருத்தவரை எப்போது வெளியே செல்கிறான் எப்பொழுது வீட்டுக்குள் இருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. அந்த சமயங்களில் எல்லாம் யாழினி தான் துணையாக இருக்க அவள் இருப்பதால் சாந்தி அம்மாவுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது அவனும் யாழினியை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான்.. அவனுக்கு அவளை மிகவும் பிடித்திருந்தது கண்டதும் பிடித்ததா என்று கேள்வி கேட்டால் தெரியாது ஆனால் அவளை பார்க்க பார்க்க அவனுக்கு பிடித்துதான் இருந்தது. ஆனால் அதை வெளியே அவன் கூறிக் கொண்டதில்லை. எங்கே அவனை பார்த்தாலே தலைதெறிக்க ஓடும் அவளிடம் எப்படி கூற முடியும்???

அவளும் அப்படித்தான் அவள் அவனை நிமிர்ந்து கூட பார்த்தது இல்லை. எப்பொழுதும் சாந்தி அம்மா அறையே கதி என கிடப்பாள் அப்படி இருக்கும் வேளையில் தான் ஒரு நாள் அவள் சாந்தி அம்மாவின் காலை பிடித்து விட்டுக்கொண்டிருக்க சாந்தி அம்மா அவளிடம் ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தார்..

அந்த நேரம் பார்த்து ராவணன் வீட்டுக்குள் நுழைய இவள் வேகமாக அவ்விடம் விட்டு பாய்ந்து ஓடினாள். அவளுக்கு அவனைக் கண்டாலே பயம் அது ஏன் என்று தெரியவில்லை.. எப்பொழுதும் கரடுமுரடாக இருப்பதாகவே அவளுக்கு தோன்றும் பார்வையாலேயே மற்றவர்களை பயமுறுத்துவதாக அவள் நினைப்பாள். இப்படிப்பட்ட ஒரு தாய்க்கு இப்படிப்பட்ட மகனா என்று கூட பலமுறை நினைத்திருக்கிறாள்.ஆனால் அவளை இதுவரை ஒன்றும் அவன் கூறியதும் இல்லை அவள் புறம் கூட வந்ததும் இல்லை.

வீட்டில் அவள் வேலைக்காரியாக வந்தாலும் அவளையும் சரி அவளது பாட்டியையும் சரி வேலைக்காரியாக அவர்கள் நினைத்ததே இல்லை. எப்பொழுது சிவகாமி அம்மாள் நடந்த உண்மையை கூறினாரோ அப்பொழுது இருந்து அவரை அவன் நல்ல முறையில் பார்த்து வந்தான். ஆனால் வயோதிகத்தின் காரணமாக அவர் மரணத்தை தழுவ நிராதரவாக நின்றுக் கொண்டிருந்த யாழினியை கண்டவனுக்கு பாவமாக தோன்றியது. அன்று அவள் பாட்டி இறந்த போது அவள் அழுத அழுகை இன்றும் அவனது கண்ணுக்குள் இருந்தது. இவள் ஒருத்தி மட்டும் ஏன் என்னை இப்படி அவள் புறம் நோக்கி செல்ல வைக்கிறாள் என்ற கேள்வி அவனுக்கு எழுந்துக்கொண்டே இருந்தது ஆனால் அவனுக்கு விடை தான் கிடைக்கவில்லை..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top