அதிகாயன் 34
அத்தியாயம் : 34
"அது எப்படி நீ சொல்லலாம்?? என் குழந்தைகளை பார்க்க கூடாது அப்படின்னு நீ எப்படி சொல்லலாம் என் குழந்தைங்க அவங்க??" என்று கூற,
" பெற்றவ நான் சொல்லாமல் வேற யார் சொல்லுவா??" என்று சாந்தி திருப்பிக்கொடுக்க அதை கேட்டவரோ, "வானத்திலிருந்து குழந்தை வந்துடுமா??? உனக்கு குழந்தைங்க மேல என்ன உரிமை இருக்கோ அதே அளவு உரிமை எனக்கும் இருக்கு. உன்னால முடிஞ்சா என் கூட சேர்ந்து வாழ வழியை பார் இல்லை அப்படி என்றால் உன் வேலையை பார்த்துட்டு போகலாம் ஆனால் என்னால குழந்தையை விட்டு எல்லாம் கொடுக்க முடியாது. நீ சொல்ற அப்படின்னு கைய கட்டிகிட்டு போக என்னை யாருன்னு நெனச்சிட்டு இருக்க நான் அம்மையப்பன் அதை மறந்துடாதே" என்று கூறவும்,
சாந்தி ஒரு நொடி அதிர்ந்தார். என்னதான் அம்மையப்பன் பாசமாக பேசினாலும் அவருக்கு அகங்காரம் வந்து விட்டால் அவரை யாராலும் மாற்ற முடியாது என்பது சாந்திக்கு நன்றாக தெரியும் அதன்படி அவர் இவ்வாறு கேட்கவும் சாந்தி ஒரு நொடி அதிர,
" என்னால உங்க கூட வாழ முடியாது என்னால குழந்தைகளையும் விட்டு தர முடியாது" என்று கூறவும்," என்னாலயும் குழந்தையை விட்டு தர முடியாது" என்று கூறினார். அம்மையப்பனின் பெயர் சொல்ல பிள்ளை வேண்டாமா என்று அவர் நினைக்க வாக்குவாதம் இருவருக்கும் முற்றியது பின் இருவரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டனர்.
சாந்திக்கு தான் பிறந்த குழந்தையை அவருக்கு கொடுக்க மனமில்லை ஆனால் அம்மையப்பனின் குணமறிந்து தான் ஒரு குழந்தையை கொடுத்தார். இல்லையே அவர் இரு குழந்தையையும் எடுத்துக்கொண்டு சென்று விடுவார். அதற்கெல்லாம் அம்மையப்பன் அஞ்ச மாட்டார் என்பதை உணர்ந்த சாந்தி, மனமே இன்றி பிறந்த சிறிது நேரத்திலேயே ஒரு குழந்தையை அவருக்கு தாரை வார்த்தார்..
ஒரு குழந்தையாவது என்னுடன் நன்றாக வளரட்டும் என எண்ணினார். அவர் செய்வது ஒரு தாயாக துரோகம் தான் ஆனால் அவருக்கு வேறு வழி தெரியவில்லை இதே பாதையில் சென்றால் இரு குழந்தைகளும் மரணத்தை தழுவுவது நிஜம் இருவரில் ஒருவராவது உயிரோடு இருக்கட்டும் என்று தான் எண்ணினார் ..
மேலும் அம்மையப்பனின் மீது சிறு நம்பிக்கை அவருக்கு இருந்தது குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்வார் என்று மேலும் சாந்திக்கும் அம்மையப்பனின் பேச்சில் மனம் நொந்துபோய் இருக்க அவர் கொடுத்துவிட்டார். அதிலும் அம்மையப்பனின் அந்த வார்த்தைதான் அவரை தீயாக சுட்டது..
அவர் எவ்வளவு கூறியும் அவருடன் வர மறுத்த சாந்தி குழந்தையையும் கொடுக்க ஒப்பு கொள்ளாமல் இருக்க அவர் கடைசியாக, " எனக்கு பிறந்த குழந்தையாக இருந்தால் எனக்கு ஒரு குழந்தை கண்டிப்பாக வேண்டும்" என்ற வார்த்தை அவரது நெஞ்சை கூட தாரை வார்த்து விட்டார்..
அம்மையப்பன் இப்படி சொன்னாலாவது அவள் தன்னுடன் வருவாளா என்று எண்ணி தான் அந்த வார்த்தையை விட ஆனால் சாந்தியின் பிடிவாதம் அம்மையப்பனிடம் விட மனமில்லை இருந்தும் கல்லாக்கிக் கொண்டு ஒரு குழந்தையை தாரைவார்க்க கருணாவை தூக்கிக்கொண்டு அம்மையப்பன் சென்றார். நண்பர்களிடம் இது என் குழந்தை என்று மட்டும் கூறி விட்டு குழந்தையை வளர்க்க துவங்கினார் ..
குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு சாதாரணமில்லையே மிகவும் கஷ்டப்பட்டு குழந்தையை வளர்த்தார்.. மனைவியின் நினைவு மட்டும் அவரை விட்டு செல்லவில்லை எப்பொழுதும் அவரது நினைவிலேயே வாடிக்கொண்டு இருந்தார். கர்ணா மூன்று வயது வரை சாதாரண குழந்தை போலத்தான் வளர்ந்தான். மூன்று வயதிற்குப் பிறகுதான் குழந்தையின் நடத்தையில் மாற்றம் வர அவருக்கு என்ன விஷயம் என்பது புரிபட்டது. நான் செய்த பாவம் தான் என் குழந்தை இப்படி ஆகிவிட்டான் என எண்ணத் தொடங்கினார். என் மனைவி படித்துப் படித்து சொன்னாளே நான் கேட்கவில்லையே என நொந்து தான் செய்து கொண்டிருந்த வேலைகள் அனைத்தையும் விட்டு விட்டார். தன் மனைவியை அவர் யாருக்கும் தெரியாமல் தேடாத இடமில்லை அவர் எங்கேயும் கிடைக்கவில்லை..அதனால் வாடிய அவரோ குழந்தையை பார்த்துக் கொள்ள சிவகாமி அம்மாவை நியமித்தார்...
தன் ஒரு மகனை அழைத்துக் கொண்டு இந்த இடமே வேண்டாமென நாடு விட்டு நாடு புலம்பெயர்ந்தார் சாந்தி. யாரும் இல்லாமல் அனாதை இல்லத்தில் வளர்ந்தவர் என்பதால் அவரது அனாதை இல்லத்தில் அவருடன் வளர்ந்த அவருடைய தோழி வெளிநாட்டில் வசிக்க அவருடன் சேர்ந்து தன் மகனை எடுத்துக் கொண்டு அங்கு சென்று விட்டார். மகனை அங்கு நன்றாக படிக்க வைக்க வேண்டும் என எண்ணிய சாந்தி மகன் விதேஷை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார் ..அங்கேயே தனக்கும் ஒரு வேலை பார்த்துக் கொண்டவர் தன் மகனிடம் ஒரே ஒரு கோரிக்கை மட்டும் தான் சாந்தி வைத்தார்..
" விதேஷ் நீ என்ன வேணா படி என்ன வேணா செய் அம்மாக்கு ரொம்ப சந்தோஷம் தான் ஆனால் நீ அடிதடி வம்பு தும்பு ரவுடியிசம் எதுக்கும் நீ போகக்கூடாது உன்னுடைய வேலை என்னவோ அதை மட்டும் தான் நீ செய்யற இதுக்கு மட்டும் எனக்கு சத்தியம் செய்து கொடு" என்று கூற எட்டு வயது மகனான விதேஷ் தன் தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்தான். ஆனால் அந்த சத்தியத்தை அவன் மீறுவான் என அவன் எதிர்பார்க்கவில்லை...
விதேஷ் தாய் கூறியது போல தனது 10 வயது வரை அடக்க ஒடுக்கமாக யார் வம்பு தும்புக்கும் செல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் இருந்து வந்தான். ஆனால் ஒரு சில விஷயத்தை பார்க்கும்பொழுது அவனால் அவனது கோபத்தை அடக்க முடியவில்லை. அவன் வசிப்பது வெளிநாட்டில் என்பதால் அங்கு நிறவெறி அதிகமாக இருக்கும் ..
அப்படி ஒரு சமயத்தில் நிறவெறியின் பிடியில் சிக்கி அந்த நாட்டில் வசிக்கும் அவனுடைய நண்பர்கள் என அவன் நினைத்துக் கொண்டிருந்த நபர்களே அவனை நிறவெறியில் தாக்க அவன் திருப்பித் தாக்கத் துவங்கி விட்டான். முதலில் தன்னை காப்பாற்றிக்கொள்ள எதிர்க்க ஆரம்பித்தவன் பிறகு தன் தாய் அறியாமல் பல வேலைகளை தொடர்ந்தான். அம்மையப்பனின் மறு உருவமாக வளர்ந்தான் விதேஷ் ராவண்... என்ன ஆகக்கூடாது என சாந்தி இங்கே கொண்டு வந்தாரோ மகன் அதுவாகவே மாறி தன் தாயின் சத்தியத்தை மீறி கொண்டிருந்தான். இவன் எதிர்த்துத் தாக்கும் பொழுது மற்றவர்கள் இவனை கண்டு பயப்படுவதை இவன் ரசிக்கத் துவங்கினான். பிறகு சிறு சிறு குற்றங்கள் செய்யத் துவங்கிய பிறகு தன் தாய் அறியாமல் ஒரு கேங்ஸ்டர் ஆக மாறினான். அவன் தாய் மட்டும் அவன் செய்வதை அறிந்து விடக்கூடாது என்பதில் அவன் குறிக்கோளாக இருந்தான்..
அதன்படி அவன் யாருக்கும் தெரியாமல் இப்படி இருக்க உலகமே அவனை கண்டு பயந்தது அதும் வெளிநாட்டில் இவன் கை தேர்ந்த கேங்ஸ்டராக இருக்க, தன் தந்தையின் வாழ்க்கையை பற்றி தன் தாய் மூலம் தெரிந்தவனுக்கு தன் தந்தையை பார்க்க வில்லை என்றாலும் அவர் தான் ரோல் மாடலாக இருக்க தந்தை வழியைப் பின்பற்றி அவன் தாயிடம் தான் என்ன செய்கிறேன் என்பதை மட்டும் மறைத்து விட்டான். மகன் நல்ல முறையில் தான் பார்த்துக் கொள்கிறான் எந்த குறையும் இல்லை நன்றாக படித்து ஒரு நல்ல வேலையில் இருப்பதாகவும் சொல்லி சாந்தியை வேலைக்கு செல்ல வேண்டாம் என வீட்டிலேயே அமர்த்தி விட்டான். இப்பொழுது அவருக்கு குறை ஒன்றும் இல்லை...
தன் தாய்க்கு வெளிநாட்டு வாழ்க்கையில் போரடிக்க துவங்க ஒருநாள் தன் மகனிடம், "நாம நம்ம நாட்டுக்கே போய்விடலாம்" என்று கூறினார்.
அதைக் கேட்ட ராவணன் அதிர அவனது முகத்தை பார்த்த தாயோ பரிவாக, " நம்ம ஊருக்கு போனாலும் உனக்கு வேலை கிடைக்கும் தானே தம்பி??" என்று தன் மகன் ஏதோ ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்துக் கொண்டிருப்பதாக எண்ணி அந்த தாய் கேட்க அவனோ, "சரிங்கம்மா போயிடலாம்" தாய் என்ன சொன்னாலும் செய்யும் மகன் ஏனெனில் அவன் தாய்க்குத் தெரியாமல் இந்த வேலைகளை செய்துக் கொண்டிருப்பது தாய் அறியக்கூடாது. அவருக்கு நான் துரோகம் செய்து கொண்டிருக்கிறேன் என தினமும் அவனுக்கு உள்ளுக்குள்ளேயே குத்திக்கொண்டு இருந்தாலும் தாய் எப்போதும் தன் தந்தையை பற்றி தன்னிடம் கூறியிருப்பதாலும் தாயிடம் அவன் இந்த உண்மையை கூற பயப்பட்டான் மேலும் சிறு வயதிலிருந்தே, " உன் அப்பா இப்படி உன் அப்பா அப்படி " எனக் கூறி கூறி தன் தந்தையின் வீர சாகசங்களை கேட்டு கேட்டு அது போல மாற வேண்டும் என எண்ணியவன் தான். இந்த விதி அப்படி தாய் சொல்லை தட்டாத தமையன் தாய்நாடு வந்தான்…
