Share:
Notifications
Clear all

அதிகாயன் 32

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் : 32

அதேநேரம் சதாசிவம் அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என எண்ணினார். அவரால் இனியும் அங்கு இருக்க முடியும் என தோன்றவில்லை அவரது மனமும் உடலும் மிகவும் உடைந்து விட்டது. அவன் செய்வது எல்லாம் பார்த்து அவரது கை கால்கள் உதறியது இப்படியே வேலை செய்து செத்துப் போனாலும் கூட என்ன என்றுதான் எண்ணினார்..

ஆனால் இன்று கொல்வானா நாளை கொல்வானோ என்ற கேள்வியே அவரை வாட்டி வதைக்க அவர் இங்கிருந்து தப்பித்து செல்ல வேண்டும் என எண்ணினார். இரவு ஆனதும் தப்பித்து செல்லலாம் என அவர் முடிவு செய்ய அந்த சமயம் தன் உயிரே பிரதானம் என்று தான் எண்ணினார் மகளை விட்டு விட்டு செல்ல மனமில்லை தான்.

ஆனாலும் இங்கிருந்து இவனது சித்திரவதையை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இரவு ஆனதும் நாய்கள் அங்கும் இங்கும் ஓலமிட்டுக் கொண்டிருக்க அதைக் கண்டதும் அவருக்கு பயம்தான் வந்தது. அன்று தணிகாசலம் யாழினியின் மீது பாம்பை ஏவி விட அன்றிலிருந்து நாய்களை சுற்ற விட்டுவிட்டான் ராவணன். எப்படி தப்பித்து செல்வது என்று தெரியாமல் இருந்த அவர் இரவு ஆனதும் அந்த வீட்டின் ஒரு செடியின் மூலையில் பதுங்கிக் கொண்டு அங்கிருந்து சுவரேறி தப்பித்து விடலாம் என இரு நாட்களாக திட்டம் போட்டு கொண்டிருந்தார்..

அதன்படி தோட்டத்தில் இருக்கும் செடி வைக்கும் தொட்டிகளை எல்லாம் சேகரித்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து அதன் மீது ஏறி சுவரேறி குதித்து விடலாம் என எண்ணிக்கொண்டார். ஏனெனில் அது அவரது வீடாக இருப்பதால் அவருக்கு எங்கு எது இருக்கிறது என தெள்ளத் தெளிவாக தெரியும். அதனால் சுவர் ஏறி கீழே குதித்து விட்டால் போதும் அங்கிருந்து எப்படியாவது ஓடிவிடலாம். இவர்களது கண் காணாமல் ஓடிவிடலாம் என எண்ணிக் கொண்டு இருந்தவர், அன்றைய நாள் அது போல அவர் எண்ணியபடி சுவர் ஏறி குதித்து விட்டார்..

சுவற்றின் மீது காலை வைக்கவும் அலாரம் பலத்த வேகத்தோடு அடிக்க நாய்கள் இவரது மீது பாய அந்த வீட்டில் அனைத்து விளக்குகளும் எரிந்தது. 'ஐயோ மாட்டி விட்டோமே' என நினைக்க இனி வாழ்வா சாவா போராட்டம் தான் இங்கிருந்து தப்பித்துவிட வேண்டும் என எண்ணிய சதாசிவம் சுவர் ஏறி கீழே குதித்தார். வயதான மனிதர் என்பதால் அவருக்கு குதித்ததும் அவரது கை கால்கள் அடிபட்டது இருந்தும் அவனிடம் மாட்டி வதைபடுவதை காட்டிலும் இது எவ்வளவோ மேல் என எண்ணியவர், வேகமாக அங்கிருந்து தப்பித்து ஓடினார்.

அதற்குள் வீட்டுக்குள் சதாசிவத்தை ராவணன் ஆட்கள் தேட அங்கு அவர் இல்லை என்பதை புரிந்துக் கொண்ட அவர்கள் உடனடியாக ராவணனுக்கு தகவல் தெரிவித்தனர் ராவணன்,
" அவனுக்கு அழிவு காலம் வந்துடுச்சு நான் பாத்துக்குறேன்" என்று கூறிவிட்டு வண்டியை எடுத்தான்..

கிட்டத்தட்ட கால் போன போக்கில் ஓடிக்கொண்டிருந்த சதாசிவம் எங்கு நிற்க வேண்டும் என்று கூட தெரியாமல் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து ஒரு வாகனம் அவரை துரத்துவது போல இருக்க ஓடி ஓடி களைத்த அவர் அவன் கையில் மட்டும் அகப்பட்டு விடக்கூடாது என ஓட அவருக்கு கண்முன்னே ஒரு ரயில்வே பாலம் தென்பட்டது அதில் ஒரு ரயில் பயணத்திற்காக ரெடியாக இருந்தது. அதில் ஏறி தப்பித்து விடலாம் என ஓடினார்..

அவர் ஓட ஓட அவருக்கு உயிர் பயம் வாட்டியது எப்படியும் அவனிடம் அக பட்டுவிடக் கூடாதே என்ற பயம் அவரை வாட்ட வேகமாக ஓடியவருக்கு ஒரு தயார் நிலையில் ரயில் கண்ணில் பட வேகமாக அங்கு ஓடினார்.. அந்த புறப்பட தயாராக நிற்கும் ரயிலில் ஏறிய பின் தான் அவர் அமைதி அடைந்தார். நீண்ட நீண்ட பெரிய மூச்சுகள் எடுத்து விட்ட பின் தான் அவர் அமைதியாக இருக்க எங்கேயாவது பிச்சை எடுத்தாவது பிழைத்து கொள்ளலாம் என எண்ணிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த ரயிலும் புறப்பட்டது அதன் பின் தான் அவரும் கொஞ்சம் சமாதாம் ஆனார்..

தப்பித்து விட்டேன் மகளே என்னை மன்னித்துவிடு என மானசீகமாக சாதனாவிடம் மன்னிப்பு கோரினார். ரயில் பட படவென வேகமாக சென்றுக் கொண்டிருந்தது. யாருமில்லாத ரயில் பெட்டியில் தான் அவர் மட்டும் அங்கு இருக்க கையில் காசு இல்லை எப்படி வாழ்ந்த மனிதன் இப்படி ஆகி விட்டேனே என எண்ணிக் கொண்டிருக்க ரயில் வேகமாக பயணம் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது தான் அவருக்கு மிகவும் ஆசுவாசமாக இருந்தது தப்பித்து விட்டோம் என்று எண்ணினார். பிறகு ஒரு பத்து நிமிடம் அவர் எதைப் பற்றியும் யோசிக்காமல் கண்களை மூடிக்கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் ..

இத்தனை தூரம் ஓடி வந்ததில் அவருக்கு களைப்பு அதிகமாக தொண்டை வரள அவருக்கு தண்ணீர் தாகம் எடுத்தது சுற்றுமுற்றும் பார்க்க யாருமே இல்லை. எப்படி தண்ணீரை குடிப்பது எங்கே தண்ணீர் கிடைக்கும் என பார்த்தவருக்கு ரயில் பெட்டியில் இருக்கும் கழிவறை ஞாபகத்துக்கு வர வாழ்க்கையில் எவ்வளவோ அடிபட்டு விட்டோம் இதில் போய் ஒரு வாய் நீர் அருந்துவதற்கு என்ன கேடு அதற்கு கூட வக்கில்லாமல் தானே இப்படி ஓடி வந்திருக்கிறேன் என எண்ணி அவரை பற்றியும் யோசிக்காமல் அந்த கழிவறையில் நீரை குடிக்க சென்றார்.

அப்பொழுதுதான் கண்ணாடியில் தன் முகத்தை பார்க்க அவர் தானா எனும் அளவிற்கு அவர் ஆளே மாறிப் போயிருக்க முகமெல்லாம் மழிக்கப்படாத தாடியும் மீசையும் அவரை அவராகவே அவருக்கே உணர்த்தாமல் இருக்க தன் முகத்தை நீரினால் கழுவிய பிறகு கை கால்களில் காயத்தை பார்த்தவருக்கு கால்கள் வின் வின் என வலித்துக் கொண்டிருந்தது..

வேகமாக அதையும் தண்ணீரில் கழுவியவர் அந்த தண்ணீரை பிடித்து குடித்தார். பிறகு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு கழிவறையின் கதவை திறந்து பார்க்க அங்கு ராவணன் நின்றுக் கொண்டிருந்தான். அவனை இங்கு எதிர்பார்க்கவில்லை என அவரது முகமே காட்டிக் கொடுக்க அவனோ நக்கலாக சிரித்து, "என்ன சதாசிவம் என்கிட்ட இருந்து தப்பிச்சு எங்க போற??? " என்று நக்கலாக கேட்டான் ராவணன்..

அதற்கு அவரோ, " தம்பி என்னை விட்டுடு என்னால முடியாது" என்று ஓட நினைக்க அவனிடம் முடியாமல் போக,

" உன் பொண்ணை கூட விட்டுட்டு ஓடி வந்துட்ட போல உயிர் பயம் அப்படி உன்னை வாட்டி வதைக்குதா???" என்று கேட்க அவரோ அவனை கண்டு பயந்து, "தம்பி நான் செய்ததெல்லாம் தப்புதான் என்னை விட்டுடு என்னால இப்படி வாழ முடியாது வாழ முடியாது நான் செத்துப் போறேன்" என்று கூற, "அப்போ செத்துப்போ " என்று கூறிய ராவணன் கொஞ்சம் கூட இரக்கமே இன்றி ஓடும் ரயிலிலிருந்து அவரை தள்ளி விட்டான் ..

அவரது சத்தம் அந்த ரயிலோடு ரயிலாக கலந்துவிட அவனுக்கு இன்னும் அவனது வதம் அடங்கவில்லையே இதே போல தானே அந்த பாவப்பட்ட ஒருவனை செய்தார்கள். அதற்கு இந்த தண்டனை அவனைப் பொறுத்தவரை சரிதான்..

சதாசிவம் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்ட சாதனா வெறி கொண்ட வேங்கை ஆனாள். அவளை எதிர்த்து நிற்க அவன் தயாராகி இதோ அவளது அறையில் நின்றுகொண்டிருக்க, " ஏய் உனக்கு என்னடா வேணும் ஆமாம் நாங்க தான் அவங்க ரெண்டு பேரையும் கொன்றோம். அதுக்கு என்ன இப்போ இன்னும் நான் மட்டும்தான் பாக்கி அப்படி தானே ??" என்று சாதனா கேட்க அதைக் கேட்ட அவனோ, "கண்டிப்பா நீ மட்டும்தான் பாக்கி உனக்கு நான் கொடுக்கிற அவகாசம் ஒருமாதம் அதுக்குள்ள உன்ன முடிக்கிறேன்" என்று அவளுடைய பிரசவம் நடக்கும் நாளை கணக்கிட்டு அவன் கூற அதைக் கேட்ட அவளோ, " இதையெல்லாம் செய்ய நீ யாருடா நீ என்ன அம்மையப்பனோட மகனா ??" என்று கோபமாக கேட்டாள்.

"ஆமாம் டி இதையெல்லாம் நான் செய்யாம நீயா செய்வ??? அம்மையப்பன் மகன் டி நான்... கர்ணா என் தம்பி அவனுக்கு ஒண்ணுனா நான் தானே வரணும் நீயா டி வருவ இல்லை செத்து போன உன் அப்பன் வருவானா??" என்று ஓங்கி அவளது கன்னத்திலேயே அறைந்தான் இராவணன்..

அவனைப்போலவே இருக்கிறானே என யோசித்து யோசித்து அவளுக்கு கிடைத்த விடை தான் இது ஆம் அவன்தான் அம்மையப்பனின் மகன் விதேஷ் ராவண்... " என்ன இப்போ புரியுதா நான் யார் எதுக்காக இதை எல்லாம் செய்யறேன்னு???" என்று கூற அவள் அதிர்ந்தாள். அதை கண்டவனோ, "என்னை பொறுத்தவரை என்னை பற்றிய விஷயங்கள் தெரிந்த ஆட்களை நான் உயிரோடு விட்டு வைத்திருப்பது இல்லை...அடுத்து நீ...நீ தான் இப்போதைக்கு என் விஷயம் தெரிஞ்ச ஆள் உனக்கு என்னோட பரிசு மரணம் கூடிய சீக்கிரமே அதை சிறப்பா நடத்திடறேன்" என கூற அதை கேட்டு சாதனா திகைத்தாள்..

அவன் பழிவாங்குவது தனது தந்தைக்கும் தம்பிக்கும் வேண்டிதான் என்று அவளது செவியில் உரைக்கும்படி அவன் கூற அதைக் கேட்ட அவள் அதிர்ந்தாள். அதிலும் அவளது முகத்தை பார்த்து, "என் முகத்தை பார்த்தும் கூட உனக்கு நான் யாருன்னு புரியலயா டி ??" என்று கேட்டவன், " நான் விதேஷ் ராவண்... அம்மையப்பனோட மகன் கர்ணாவோட அண்ணன் இப்போ புரியுதா எல்லாமே???" என்று கேட்டான் ராவணன்.



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top