Share:
Notifications
Clear all

அதிகாயன் 31

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் : 30

"நாங்க செய்தது தப்புதான் அதனால உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் தயவு செய்து என்னையும் என்னுடைய மகளையும் விட்டுடு... நாங்க எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு சென்று விடுகிறோம்" என்று சதாசிவம் ஏதோ ராவணனின் முன் நின்று கெஞ்சி கேட்டுக்கொண்டிருக்க ராவணன் பதில் ஏதும் கூறாமல் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தான்...

அவரது நண்பனின் இறப்பு அவரை அப்படி எல்லாம் மாற்றி இருக்க அவரது பேச்சை கேட்டு அவனும், "ஏன் உங்கள் பக்கத்தில் சாவு வந்தா மட்டும் தான் அது இழப்பா ஒன்றும் அறியாத இரண்டு பேரை கொன்றது இழப்பு இல்லையா???" என்று கேட்க...

"அதுக்குத்தான் ஒண்ணுக்கு நாலு பேர் ஆக நீ கொலை பண்ணிட்டியே இன்னும் உன்னுடைய ஆத்திரம் அடங்கலையா??? இனி நானும் என் மகளும் மட்டும் தானே இருக்கோம். தயவுசெய்து எங்களை விட்டுடு.. நாங்க நீ இருக்கும் திசை பக்கம் கூட வர மாட்டோம் எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போய் விடுறோம்" என்று கூற...

"கண்காணாத இடத்துக்கு தானே நானே சமயம் வரும்போது அனுப்பி வைக்கிறேன். உன்னுடைய நண்பன் எப்படி அவனுக்குள்ள இருக்கிற விஷத்தை கக்க வந்தானோ அதே விஷத்தால் மரணமடைந்தான். அதுபோலத்தான் நீயும் உன் உன்னுள் இருக்கும் விஷத்தை கக்க வரும்போது நீயும் கண்காணாத இடத்துக்கு சந்தோஷமா போ நானே அனுப்பி வைக்கிறேன் இப்ப போ" என்று கூறி அனுப்பி வைத்தான் நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தது...

சாதனா அவன் முன்னே தான் நின்றுக் கொண்டிருந்தாள். அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருக்க அவளை ஏதோ ஒரு மருத்துவர் வீட்டில் வந்து பரிசோதனை செய்து விட்டு குழந்தை நல்லபடியாக இருப்பதாக அவனிடம் கூறிவிட்டு செல்ல அதை கேட்டவளோ நக்கலாக அவனை பார்த்து, " எத்தனை நாள் நீ இந்த குழந்தைக்கு பாதுகாப்பு கொடுப்பன்னு நான் பார்க்கிறேன்" என்று கூற,

அவன் தீர்க்கமாக அவளை பார்க்க அவனது பார்வையை பார்த்த அவளோ, " என்ன பாக்குற நீ எப்படி இருந்தாலும் என்னையும் என்னுடைய அப்பாவையும் கொன்னுடுவேன்னு எனக்கு நல்லா தெரியும் ஆனால் நான் என்னுடைய அப்பா மாதிரி கெஞ்சிட்டு எல்லாம் இருக்க மாட்டேன் டா உன்னை என்கிட்ட கெஞ்ச வைப்பேன் எப்படின்னு பார்க்கிறாயா இதோ இப்படி " என கூறி அவளது வயிற்றை காட்டினாள். அதைக்கண்ட அவனும் எதற்கும் அசராமல் நிற்பவன் போல மார்பில் கையை கட்டி நிற்க...

அவனுக்கு திமிராக அவளும் அவனை எதிர்த்து நின்றாள். " எதுவுமே இல்லாம இருக்கேன். என்கிட்ட இருக்கிற திமிரு மட்டும் போகாது. என்ன பாக்குற இதுக்கு நீ வச்ச பேரு திமிருனா எனக்கு நானே வைத்துக்கொண்ட பேரு தைரியம் எனக்கு யாரைப் பார்த்தும் பயமில்லை. எதுக்கும் நான் பயப்பட மாட்டேன் புரியுதா நான் சாதனா...ஆமாம் டா நான் தான் அந்த கர்ணாவை கொன்னேன் இப்போ உன்னால என்ன பண்ண முடியும் போடா " என்று அவள் கர்ஜித்தாள்.

மார்பில் கையை கட்டிக்கொண்டு நின்றவனை பார்த்த அவளோ, " இந்த ஒன்பது மாசத்துல நான் படாதபாடு பட்டுட்டேன். இனி எனக்கு யோசிக்க எதுவுமே இல்லை உனக்கு இந்த குழந்தை முக்கியம் அது மட்டும் எனக்கு நல்லா தெரியும் விடமாட்டேன்" என்று முகத்துக்கு நேராக அவனிடம் சவால்விட கோபத்தில் அவனது கண்கள் தகிக்க அவளது கழுத்தை பிடித்து அழுத்தினான் ராவணன். எதற்கும் அசராமல் நின்ற அவளை ஏறிட்டு பார்த்தவள், "உன்னால என்னை ஒன்னும் செய்ய முடியாது இந்த குழந்தை வெளியே வர வரை நீ எதுவுமே செய்ய மாட்ட அப்படின்னு எனக்கு நல்லாவே தெரியும். இனி என்னுடைய அப்பா அப்புறம் என்னை நீ ஏதாவது செஞ்சு பார் அப்போது உனக்கு தெரியும் இந்த குழந்தை உனக்கு கிடைக்காது டா" என்று கூறியவள் அவனுக்கே சவால் விட்டாள்.

அவளது சவாலை எதிர்கொண்டு நின்றவனும் அதையும் பார்க்கலாம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டான். ஆனாலும் அவனுக்கு தேவை இந்த சொத்தோ பணமோ இல்லை இந்த டிரஸ்ட் இல்லை இவனுக்கு எதுவுமே வேண்டாம். அதெல்லாம் தேவைக்கு மேலேயே அவனிடம் உள்ளது. ஆனால் இவனுக்கு தேவையானது என்னவோ இவள் மூலம் ஒரு குழந்தை அது மட்டும் தான் வேண்டும் அந்தக் குழந்தை தன் தமையனின் வாரிசாக வளரவேண்டும் அதற்காகத்தான் அவன் போராடிக்கொண்டிருக்க ஒவ்வொரு நிமிடமும் இவளை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் இவளை எப்படியாவது அவன் வதம் செய்திருப்பான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்கு முன் இவள் மூலம் ஒரு குழந்தை அவனது அண்ணனின் வாரிசாக பிறக்க வேண்டும் அது மட்டுமே அவனது ஒற்றை குறிக்கோளாக இருந்தது. அதை செயலாற்ற தான் அவன் அன்று அவனுடைய விந்தணுவை அவளுள் செலுத்தினான்..

அவனது குடும்ப வாரிசு அவளது வயிற்றுக்குள் வர வேண்டும் அது மட்டுமே அவனது குறிக்கோளாக இருந்தது.. ஏனெனில் இவள் இந்த சொத்துக்காக தானே இவனை திருமணம் செய்தாள். அவளே தானே ராவணனின் தந்தையையும் தம்பியையும் கொன்றாள். அப்போது ராவணனை பொருத்தவரை இவள் மூலம் தம்பியின் வாரிசு வரவேண்டும் இந்த உலகுக்கு பெயர் சொல்ல இவள் மூலம்தான் ஒரு குழந்தை வேண்டும். அது இவளுக்கு தகுந்த தண்டனையாக இருக்கும் என்றுதான் அப்படி செய்தான் ...அவன் ராவணனாக இருந்தாலும் பெண்கள் விஷயத்தில் அவன் ராமனாக தான் இருந்தான் அதில் எந்த சந்தேகமும் யாருக்கும் வேண்டாம். ஒரு ஆட்டிஸம் உள்ள மனிதனை என்ன எல்லாம் பாடு படுத்தினார்கள். அவர்களுக்கு உண்டான தண்டனையை அவன் கொடுக்கிறான் அவ்வளவே வேறு ஒன்றும் செய்யவில்லையே தன்னை எதிர்த்து நின்றுக் கொண்டிருக்கும் இவளை பார்த்து ஒரு நிமிடம் அவன் மலைத்தே தான் போனான்..

சாதனா சாதாரணமான பெண்ணில்லை அவள் இவ்வளவு செய்தும் எதிர்த்தே தான் நின்றுக் கொண்டிருக்கிறாள் சதாசிவம் கூட உள்ளுக்குள் பயந்து கொண்டு இருக்கிறார்.ஆனால் இவள் நேருக்கு நேர் நின்று நீ என்ன வேணா செய் நான் திருப்பி உனக்கு அடிக்கிறேன் என்று தைரியமாக அவள் நிற்பதை கண்டு அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

இப்பொழுதும் கூட அவனது முகத்தை பார்த்துக்கொண்டு நின்றவள், " நீ என்னை கொலை பண்ணிடுவ ஆனா இப்ப பண்ண மாட்ட இந்த குழந்தை வெளியே வர வரைக்கும் நீ எனக்கு அவகாசம் கொடுப்பேன்னு எனக்கு தெரியும் உன்னோட அவகாசம் எனக்கு தேவை இல்லை " என்று கூறியவள் அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தாள். அவளுக்கு ஒரு ஆளுயர கண்ணாடி தென்பட வேகமாக ஒரு சேரை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கண்ணாடியின் மீது எறிந்தவள் அந்த கண்ணாடி துகள்களை எடுத்து அவளது வயிற்று பகுதிக்கு கொண்டுபோக அதற்குள் அவன் தடுத்து நிறுத்தினான். " என்னை விடு என்னை விடு உன்னை ஜெயிக்க நான் விடமாட்டேன் இந்த சாதனாவை ஜெயிச்சதா யாரும் இருக்கவே கூடாது" என்று அவள் கூற அதைக் கேட்ட அவனும் அவளது செய்கையை தடுத்து நிறுத்தி கொண்டே," சரித்திரத்தை மாற்றி எழுத தான் நான் வந்து இருக்கேன்" என்று கூறினான் ராவணன்.

மேலும் அவன், "நான் இதையெல்லாம் செய்யறேன் அப்படின்னா உன்னைப் பத்தி தெரியாம இதுல எல்லாம் இறங்க மாட்டேன். நீ இத்தனை பேரை கொன்று இருக்க உன்னையும் கொல்ல போறேன் இந்த குழந்தையை எப்படி இந்த உலகத்திற்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும். அந்த கவலை உனக்கு வேண்டாம் அதையும் நான் பார்க்கிறேன் குழந்தை எப்படி கைக்கு வரணும்னு எனக்கு நல்லா தெரியும்" என்று கூறினான். அதன் பிறகு அவளை மீண்டும் அடைத்து வைத்தான். அவளை பார்த்துக் கொள்ள மாரியம்மாவை நிற்க வைத்து விட்டான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top