Share:
Notifications
Clear all

அதிகாயன் 30

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் : 30

அதேநேரம் தணிகாசலம் யாழினியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி அன்று இரவு அவள் உறங்காமல் காத்திருந்து எப்பொழுதும் போல மாரியம்மா உறங்கியவுடன் இருட்டில் மெல்ல தன் கணவனின் அறைக்கு செல்ல போக அந்த சமயம் பார்த்து அவரது கையில் இருந்த பாம்பை அவள் மேல் வீசி எறிந்தார் தணிகாசலம்..

அதுவும் அவள் மாடிப் படிகளில் ஏறிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்த இருட்டுக்குள் அந்த வேலையை அவர் செய்ய ஒன்று அவளை பாம்பு கடிக்கும் இல்லை என்றால் அவள் கீழே விழுவாள் கர்ப்பிணியான அவளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும் இதை மனதில் வைத்துதான் அவர் அந்த வேலையை செய்தார். அவர் செய்தது போலவே பாம்பு அவள் மீது விழவும் அவள் ஐயோ என்று கத்தி தட்டி விட்ட அவள் பயத்தின் உச்சிக்கே சென்று படியிலேயே உருண்டு கீழே விழுந்தாள். இரண்டு நாட்களாக அடைக்கப்பட்ட டப்பாவில் இருந்த விஷமுள்ள பாம்பு மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. அதுவும் தணிகாசலம் அதனை டப்பாவில் இருந்து வெளியே விட்டதும் ஆக்ரோஷமாக யார் வந்தாலும் கடித்து தீருவேன் என்ற வெறியோடு இருந்தது. பாம்பை விட்டதும் அவர் வேகமாக ஒரு மூலையில் யாரும் காணாத வகையில் பதுங்கிக் கொண்டார்..

அவள் மீது பாம்பு விழவும் பாம்பு முதலில் தாக்கியது என்னவோ அவளது உடையை தான் அதற்குள் கீழே விழவும் சரியாக இருக்க பாம்பின் கடியில் இருந்து தப்பித்தாள். அதற்குள் அவளது சத்தத்தில் வேகமாக கதவை திறந்து விளக்கை இட்ட இராவணனுக்கு அவள் உருண்டு விழும் காட்சி தான் கண்ணுக்கு பட்டது. மேலும் ஒரு பாம்பு சீறிக்கொண்டு அங்கும் இங்கும் படம் எடுத்து ஓடிக் கொண்டிருப்பதையும் கண்டவன், வேகமாக தன் ஆட்களை வர சொன்னவன் ஓடிச்சென்று தன் மனையாளை தூக்கினான் அதற்குள் அவள் மூர்ச்சையாகி போயிருந்தாள்.. அவளை அந்த நிலையில் கண்டவனுக்கு உயிரே இல்லை என்று கூறலாம்...

யார் இந்த வேலையைச் செய்தது என்ன ஆயிற்று என எதுவுமே அவனுக்கு அந்த நேரம் யோசிக்க முடியவில்லை. படபடவென இருக்க அவனே அவளை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்..அவனது பதற்றம் அனைவரையும் தொற்றிக்கொள்ள மாரியம்மா வேகமாக எழுந்து வந்தவர் அவன் யாழினியை தூக்கிக்கொண்டு செல்வதை பார்த்ததும் பதறினார். மருத்துவமனைக்கு விரைந்த அவன் மருத்துவர்களிடம் பரிசோதிக்க சொல்ல மருத்துவர்களோ பரிசோதனை செய்து விட்டு அவள் அதிர்ச்சியில் மயங்கி இருக்கிறாள். "மேலும் கர்ப்பிணியான அவள் படியிலிருந்து உருண்டு விழுந்த போது லேசான அடி மட்டும் தான் தெரிகிறதே ஒழிய வயிற்றை அவள் குறுக்கி விழுந்ததால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை மிக முக்கியமாக பாம்பு அவளை தீண்ட வில்லை" என்று மட்டும் அவர்கள் கூற அப்பொழுது தான் அவனுக்கு நிம்மதி யான மூச்சே வந்தது என்று கூறலாம் அதன் பிறகு அவன் ருத்திர மூர்த்தியாக மாறினான்...

இந்த வேலையை யார் செய்தார்கள் என்று அவனுக்கு தெரிய வேண்டும் மனைவியை பாதுகாப்பாக படுக்க வைத்து விட்டு வந்தவன் வீட்டிற்கு வந்ததும் ருத்ர மூர்த்தியாக எழுந்து நின்றான். வீட்டில் இத்தனை பாதுகாப்பு இருந்தும் வீட்டில் எப்படி பாம்பு வந்தது என்பது தான் அவனுக்கு கேள்வியாக இருக்க இந்த வீட்டை சுற்றி அவன் போடப்பட்டிருக்கும் கேமராவை ஆன் செய்தான் அது இருட்டில் கூட வேலை செய்யும்.. அது தெரியாமலே இந்த வேலையை செய்த தணிகாசலம் வசமாக மாட்டிக்கொள்ள, "என்ன தணிகாசலம் இப்படி வந்து சிக்குவன்னு எதிர்பார்க்கலயா?? உன்னுடைய நண்பன் சொல்லலையா வீட்டை சுத்தி கேமரா மாற்றி வைத்து இருக்கு அப்படின்னு ரெண்டு நாளா ஒரு டப்பாவை நீ பார்த்துட்டு இருக்கும் பொழுதே நாங்கள் யோசித்திருக்கலாம். சரி நீ என்னை தான் குறி வைக்க போற அப்படின்னு நெனச்சா நீ என்னுடைய மனைவியை குறி வைக்கிற உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்????" என்று கூறவும்," என்னது மனைவி ஆஹ்??" என்று அவர் அவன் முன்னே ஒரு இருக்கையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்க எதிரே அமர்ந்து இருப்பவனை பார்த்து அதிர,

"ஏன் எனக்கு எல்லாம் மனைவி இருக்கக்கூடாதா என்னுடைய மனைவிதான் அதுக்கு என்ன இப்போ இதையேன் உன் கிட்ட சொல்றேன் அப்படின்னு பார்த்தா இன்னும் கொஞ்ச நேரத்துல என் விஷயம் தெரிஞ்ச நீ சாகப்போற அதுவும் எப்படி சாகப் போறேன்னு உனக்கு தெரிய வேண்டாமா???" என்று கூறியவன் அந்த அறையில் மூலையில் உள்ள டப்பாவை காட்டினான்..

அது அதே டப்பா அந்த டப்பாவை பார்த்ததும் தணிகாசலம் அதிர்ந்து, "என்னை விடு என்னை விடு "என்று கூற...

"அது எப்படி விட முடியும் இவ்வளவு நடந்தும் நீ உன்னுடைய வேலையை என்கிட்ட காட்டுற அப்படினா உனக்கு என்ன ஒரு கொழுப்பு இருக்கும் அந்த கொழுப்பை அடக்க தான் நான் வந்து இருக்கேன். உன் நண்பர்களையும் கூட்டிட்டு வந்து இருக்கேன். இதோ நீ தான் பாம்பு பிடி வைத்தியன் ஆச்சே இப்போ என்ன பண்ணப் போறேன்னு பார்க்கிறேன்" என்று கூறிய ராவணன் கைகள் கட்டப்பட்டு ஒரு சேரில் அமர்ந்து இருக்கும் தணிகாசலத்தின் மீது அவர் என்ன அவனுக்கு செய்ய வேண்டும் என எண்ணி யாழினிக்கு செய்தாரோ அதே போல பாம்புகளை ஏவி விட்டான்..

கொஞ்சம் கொஞ்சமாக பாம்புகள் அவரை குத்தி விஷம் அவருள் இறங்க வலியால் துடிதுடித்த அவர் அவனிடம் கெஞ்ச... அவரை கொஞ்சம் கூட வருத்தப்படாமல் பார்த்துக்கொண்டிருந்தான் ராவணன்.. அவனுக்கு இவர்கள் எல்லோரையும் பார்த்து இரக்கமே வரவில்லை என்பது தான் உண்மை அவர்களும் அதற்கு தகுந்தது போல இருக்கிறார்கள்.

இது அவனின் வதம் அவன் செய்வது மிகக் கொடுமையானதாக இருக்கலாம். ஆனால் அவர்கள் அதற்கு தகுந்தவர்கள் தான் எண்ணிக் கொண்டவன், இனியும் இவர்களை விட்டு வைப்பதில்லை என முடிவுக்கு வந்தான். இதோ தணிகாசலம் துடிதுடித்து இறப்பதை வேண்டுமென்றே சாதனா மற்றும் சதாசிவத்தை அழைத்து காட்டிக் கொடுக்க அவர்களுக்கு உயிர் பயம் வந்தது என்னவோ உண்மைதான்..

அப்படி யாழினி தான் அவனது மனைவி என சாதனா மற்றும் சதாசிவத்திற்கு தெரிய அவர்கள் இருவரும் அதிர்ந்தனர். சதாசிவத்திற்கு தான் பயம் தொற்றிக்கொண்டது ஒருவர் பின் ஒருவராக மரணத்தை தழுவிக் கொண்டு இருக்க அடுத்தது நாம் தான் என எண்ணிக்கொண்டார். உயிர் பயத்தை அவர் மனதில் ராவணன் விதைத்திருக்க சாதனா எதற்கும் அசராமல் போல இருந்தாள்..

தன்னால் தானே அவளுக்கு ஆபத்து என எண்ணி அவன் அவளை பாதுகாப்பாக தன் வீட்டிலேயே தங்க வைத்தான். " அவள் வேண்டாம் நான் உங்க கூடவே இருக்கேன்" என மறுத்தும் அவன் கேட்கவில்லை. "உன் உன் விஷயத்தில் நான் எப்பவும் ரிஸ்க் எடுக்க மாட்டேன் யாழினி... எனக்கு நீ வேணும் உன் கூட நான் நூறு வருஷம் வாழணும் உன்னை எவ்வளவு பிடிக்கும்னு எனக்கு சொல்ல தெரியல ஆனால் என் உயிரை விட அதிகமாக உன்னை நேசிக்கிறேன் இங்க இருந்தா உனக்கு ஆபத்து தான் நான் இங்கே செய்வது எல்லாம் நீ அம்மாகிட்ட சொல்லிட்டு இருக்க தேவையில்லை இது ஒரு வதம் ஒரு மகனாக என் அப்பாவுக்கும் ஒரு தமையனாக என்னுடைய தம்பிக்கும் நான் செய்யும் பிராயச்சித்தம் அதை என்ன செய்ய விடு" என்று கூறியவன் அவளிடம் தான் என்ன செய்துக் கொண்டிருக்கிறேன் என்பதையும் அவளிடம் கூற அதை கேட்ட அவளோ அதிர அவன்,

" இதுக்கு தான் நான் சொல்றேன் கொஞ்ச நாள் நீ நம்ம வீட்டில் இரு" என அவளை அங்கே விட்டுவிட்டு செல்ல அவளுக்கு அவன் கூறியதில் பெரிதாக விருப்பமில்லை என்றாலும் மரணத்திற்கு மரணம் தீர்வாகுமா தன் கணவன் ஒவ்வொருவராக கொலை தான் சென்று செய்துக் கொண்டிருக்கிறான் அப்போது தன் அத்தையிடமும் அவன் பொய்யுரைக்கின்றானோ என்றெல்லாம் எண்ணினாள்..

ஆனால் அவர்கள் செய்ததும் கொடுமை தானே என எண்ணி அவள் தன் கணவனின் போக்கிலேயே அவனைவிட எண்ணினாள். கர்ப்பிணியான அவளுக்கு தன் கணவனின் உயிருக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்ற பிரார்த்தனை மட்டும் தான் அவள் மனதில் நிலைத்து நின்றது. யாழினிக்கு கணவனை பிரியவும் முடியவில்லை அவனோடு இருக்கவும் முடியவில்லை அவள் இருதலை கொள்ளி எறும்பாக தவித்துக் கொண்டிருந்தாள். இப்படியே மேலும் மூன்று மாதம் சென்றது அவர்களுக்கு தெரியவில்லை. இப்பொழுது யாழினியும், சாதனாவும் 9 மாதத்தில் இருந்தனர்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top