அதிகாயன் 3
அத்தியாயம் : 3
அவளுக்கு என்ன இப்படி எங்கே என்ன நடந்துக் கொண்டு இருக்கிறது என விளங்காமல் அவள் இருந்தாள். அவளால் அவள் காதலன் இறந்தான் அவன் இந்த உலகத்தில் இல்லை தன் கண் முன்னே இறந்து விட்டான் என அவளால் வருத்தப்பட கூடிய நிலையில் கூட அவள் இல்லை அவள் நிலை அதை விட கொடுமையாக இருந்தது ஏனெனில் கிட்டத்தட்ட விடிந்து இருந்தது...
அவள் முகத்தில் அந்த இருட்டு அறையில் சிறு வெளிச்சம் எங்கு இருந்தோ வர அவள் இலேசாக தன் மயக்கம் கலைந்த நிலையில் இருக்க கண்களை திறந்து பார்க்க அவள் கழுத்தில் ஒரு தாலி ஒன்று கிடந்தது அதாவது இன்று அவளுக்கு நடக்க இருந்த திருமணம் நடந்து விட்டதோ அதுவும் யாரோ ஒருவனுடன் யார் என்றே தெரியாதே அவள் காதலனுடன் நடக்க இருந்த அவளது திருமணம் இன்று நடந்து இருக்கிறது ஆனால் யாருடன் என்று தான் அவளுக்கு தெரியவில்லை மேலும் இந்த உடல் வலி அவளை தாக்கி சென்றது..
கண்கள் குளம் கட்டி இருக்க நேற்று இரவில் இங்கே மாட்டிக் கொண்டது முதல் அவள் சிறு துளி நீர் கூட அருந்தாமல் அவள் இருக்க அவளுக்கு அந்த தாலியை பார்க்க பார்க்க ஒரு வெறி வந்தது போல இருக்க அவள் கழுத்தில் கிடக்கும் அந்த தாலியை தூக்கி எறிய வேண்டும் என தோன்றியது. ஆனால் அவள் கைகள் கட்டப்பட்டு இருக்க அவளால் முடியாமல் தவிக்க அவளது தவிப்பை ஹாயாக ஒரு கப் ப்ளேக் காபி குடித்துக் கொண்டே அவன் கவனித்தான்..
அவளோ சுற்றி முற்றி பார்க்க அந்த சிறு வெளிச்சம் கூட தீடீரென இல்லாமல் போனதோ என்ற நிலை வர அங்கே யாரும் இல்லாததை கண்டும் தன்னால் யாரையும் காண முடியாமல் இருப்பதை கண்டு ஒரு வித இறுக்கம் வர விடாமல் கத்தினாள் சாதனா..
அவளுக்கு தெரிய வேண்டும் எதனால் ராகவ் இறந்தான் என தான் ஏன் இப்படி அடைபட்டு இருக்கிறோம் என தெரிய வேண்டும்.
அப்படி இருக்க, "யார் நீ எதுக்காக என்னை அடைச்சு வைச்சு இருக்க என் கழுத்தில் இந்த கயிறை கட்டினது யார் சொல்லு எதுக்காக ராகவ்வை கொன்ன சொல்லு எனக்கு பதில் தெரிஞ்சே ஆகணும் எதுக்காக என்னை அடைச்சு வைச்சு இருக்க என்னை பத்தி உனக்கு சரியா தெரியாது என்னை விட்டுடு என் அப்பாக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சது உன்னை சும்மா விட மாட்டார்" என்று அவள் கத்த அவள் அடைக்கப்பட்டு இருந்த அறையில் குரல் ஒன்று பலமாக ஒலித்தது..
" என்ன பண்ணுவான் உன் அப்பன் என் தலையை அறுத்துடுவானா??" என கூறியவனின் விழிகளில் அத்தனை குரோதம் வழிய,
அந்த குரல் அவளது செவிப்பறைக்குள் கிழித்துக் கொண்டு சென்றதில் அவளோ அந்த குரலை கிரகித்து யார் என அறிய முற்பட அவளால் முடியவில்லை ..
அந்த குரலின் ஆவேசத்தில் கொஞ்சம் அவள் குரலின் சுருதி குறைய, "யார் நீ எங்கே இருக்க எங்கே என்னை கூட்டிட்டு வந்து இருக்க எதுக்காக என்னை அடைச்சு வைச்சு இருக்க??" என்க...
"நான் தான் உனக்கு தாலி கட்டியவன் ஐ மீன் நான் தான் உன்னோட புருஷன் தாலிகட்டினா புருஷன் தானே அப்போ உன் கழுத்தில போட்ட தூக்கு கயிருக்கு எமன் நான் தான்" என்க...
அதை கேட்டவளோ அதிர்ந்து, "சீ அந்த வார்த்தையை மட்டும் சொல்லிடாதே ஒரு கயிறை கட்டிட்டா மட்டும் நீ புருஷன் ஆகிடுவியா??"
"வேற என்ன செய்யணும் உன் கூட படுக்கணுமா அதுக்கும் நான் தயார் தான் " என்க...
"சீ நீ எல்லாம் ஒரு மனுசனா மிருகம் காட்டுமிராண்டி" என்க...
"ஆமாம் அப்படி தான் வைச்சுக்கோ நான் கூட உன்னை என்னவோன்னு நெனச்சேன் இவ்வளவு நடந்தும் நல்லா தெம்பா தான் இருப்ப போல இன்னும் இரண்டு நாளைக்கு சாப்பிடாமல் இருந்தா தான் உன் கொழுப்பு குறையும் போல" என்று கூற...
அவளோ, " யார் நீ சொல்லு" என்று கத்த அதுக்கு மேல் அந்த குரல் அவளுக்கு கேட்கவில்லை. அவளால் கிரகித்து கொள்ளவும் முடியவில்லை யாரென்று எதற்காக அடைத்து வைத்திருக்கின்றனர் என விளங்கவும் இல்லை புரியவும் இல்லை அவளுக்கு கத்தி கத்தி தொண்டை வலித்தது.. அவள் அறையில் தெரிந்த அந்த சிறு துளி வெளிச்சமும் போய் கும்மிருட்டு மட்டும் தான் அவளுக்கு துணையாக இருந்தது இருட்டில் கூட யாரோ அவளை கவனித்து கொண்டிருப்பது போல அவளுக்கு தோன்ற, "என்னை விடு என்னை விடு" என்று கத்த யாரும் கேட்கவே இல்லை அவளுக்கு உரிய பதிலும் அளிக்கவில்லை.
உயர் அழுத்தத்தில் கத்தியதில் அவளுக்கு மயக்கம் வர அவளோ அப்படியே சரிந்தாள்..
அதே நேரம் சதாசிவம் மற்றும் அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை செய்து கொண்டு இருக்க தணிகாசலம் அவரது வீட்டில் மகனது சடலத்தின் முன்னே சரிந்து அழ துவங்கினார் ஒற்றை மகனை பெற்று வைத்து ஆளாக்கி மகன் போய் சேர்ந்து விட்டானே என்று அவர் தவித்து கொண்டு இருக்க அவனது நெற்றியை கிழித்துக் கொண்டு பாய்ந்த தோட்டா பகுதியை பார்த்து அழுது கரைய அவரது மனைவிக்கு இன்னும் நடந்த விஷயத்தை நம்ப முடியாமல் தவித்து வந்தார்..
சதாசிவத்தை விசாரித்த போலீசார், " யார் மேலயாவது உங்களுக்கு சந்தேகமா இருக்கா உங்களுக்கு எதிரிகள் யாராவது இருக்காங்களா??" என்று வினவ...
"இல்லை சார் எங்களுக்கு எதிரிகள் யாரும் கிடையாது நாங்களே நாங்க உண்டு எங்க வேலை உண்டுன்னு இருக்கோம் சார் எங்களுக்கு தொழில் முறை எதிரிகள் கூட கிடையாது சார் ராகவ் தான் இறந்துட்டான் என் பொண்ணு உயிரோட இருக்காளா இல்லை இறந்துட்டாளான்னு கூட தெரியலையே சார் எங்க பொண்ணுக்கு மட்டும் ஏதாவது ஒண்ணுன்னா நாங்க உயிரோட இருக்க மாட்டோம் சார் " என்று கூற,
"கவலைபடாதீங்க சார் உங்க பொண்ணு இறந்து இருக்க மாட்டாங்க நாங்க தீவிரமாக விசாரிச்சுட்டு தான் இருக்கோம் கவலைபடாதீங்க கண்டு பிடிச்சுடுறோம் ஏதாவது கால் வந்தா மட்டும் எங்களுக்கு தகவல் சொல்லுங்க" என்று கூறி விட்டு அவர்கள் சென்றனர்..
இங்கு அவளோ இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தவளின் நிலையோ பரிதாபத்துக்கு உரியதாக இருந்தது..அவள் அங்கு அடைக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆகி இருந்தது உணவு தண்ணீர் எதுவுமே கொடுக்கப்படாமல் அவள் மிகவும் பலவீனமாக இருந்தாள்..
