அதிகாயன் 29
அத்தியாயம் : 29
யாழினி எதற்காக தினமும் இவனது அறைக்கு சென்று வருகிறாள் அதுவும் ஒரு வேலைக்கார பெண்ணவளுக்கு என்ன வேலை இங்கே என்பது தணிகாசலத்தின் கேள்வியாக இருந்தது. அதே தான் சதாசிவத்தின் எண்ணமாகவும் இருக்க இருவரும் அவளையும் அவனையும் நோட்டம் விட துவங்கினார்கள்..
அதிலும் பெரிதாக இருவரும் சேர்ந்து இருக்க கூடாதே மூன்று பேரும் மூன்று இடத்தில் அல்லவா இருக்க வேண்டும். அதனால் வெறும் கண்ஜாடை மற்றும் பார்வையில் தான் இவர்கள் பேசிக் கொள்வது ஒருத்தி அறையே கதி என்று இருந்து தன் கையை கவனித்து கொண்டு இருந்து விட, இத்தனை செய்தும் அவர்களுக்கு திருந்த வேண்டும் என்ற எண்ணம் துளியும் கிடையாது. இனியும் வஞ்சம் அவர்களது மனதுக்குள் இருக்க இவனை எப்படியாவது பழி தீர்த்து ஆக வேண்டும் என எண்ணிக் கொண்டு இருந்த தணிகாசலம் இன்னும் அந்தப் பாம்பை எங்கேயும் விடவில்லை அதே டப்பாவில் போட்டு அடைத்து தான் வைத்திருந்தார்...
சதாசிவத்திற்கு தன் மகளை இந்த பாடு படுத்தி இருக்கிறானே என்ற வருத்தம் இருந்தது.தன் மகளால் ஒரு வாய் உணவு கூட சரியாக உண்ண முடியவில்லை. அவளை பார்க்கக்கூட முடியவில்லை. ஒரே வீட்டில் தான் இருக்கிறோம். ஆனால் மூவரும் மூன்று திசையில் தானே இருக்கிறோம்..என் மகளின் முகத்தை பார்த்தே எத்தனை நாட்கள் ஆகிற்று என வருந்தினார். சதாசிவம் அவர்களை கண்காணிக்க ஆட்கள் வேறு சூழ்ந்திருக்க எப்படி அவர்கள் முயற்சி செய்தாலும் அவர்களால் ஒரு வார்த்தை கூட அவன் அறியாமல் பேசிக்கொள்ள முடியவில்லை..அது வேறு அவர்களுக்கு தொல்லையாக இருக்க எப்படி இருந்தாலும் அவன் தங்களை கொலை செய்து விடுவான் என்று தெரியும்..
ஆனால் எதற்காக இப்படி விட்டு வைத்திருக்கிறான் என்று மட்டுமே புரியவில்லை. இன்று கொல்வானா..? நாளை கொல்வானா..? என எண்ணி நாட்களை கடத்தி வந்த அவர்களுக்கு எப்படி இருந்தாலும் மரணம் நடக்கும் அதற்கு முன் அவனை தீர்த்து இருக்கவேண்டும் என்றுதான் அவர்கள் எண்ணி வந்தனர். அவனது அறைக்கு யாழினி சென்று வருவதை கண்டவர்கள் யாழினியின் மீது நோட்டம் விட துவங்க... யாழினி அவன் வரும் நேரம் பிரகாசமாக இருப்பதையும் அவன் செல்லும் நேரம் வாடிய முகத்தோடு இருப்பதையும் கண்டவர்கள் இடையிடையே அவனது அறைக்கு அவன் இருக்கும் நேரத்தில் பகலில் என்றாலும் அவள் செல்வதை கண்டவர்கள் ஏதோ ஒன்று அவர்களுக்கு கேள்வியாக இருந்தது அதே சமயம் அவளை கண்காணித்து வந்தனர்.
அந்த சமயம் பார்த்து ஒருநாள் பகல் வேளையில் ராவணன் வெளியே இருந்து வீட்டுக்கு வந்தான். அந்த சமயம் பார்த்து ஜூஸ் வேண்டும் என கேட்க மாரியம்மா கொண்டு செல்ல முனையும் போது வேகமாக அவரை தாண்டி ஓடி வந்த யாழினி, " நான் கொண்டு போய் கொடுக்கிறேன் அக்கா" என்று கூற,
மாரியம்மா ஒரு மாதிரியாக அவளை பார்த்து அவருக்கு ஏதோ ஒரு சந்தேகம் எழுந்தது அதனால்... "நானே கொண்டு போய் கொடுக்கிறேன்" என்று கூற அவளுக்கு இப்போது என்ன சொல்வதென்று தெரியவில்லை... தயங்கிக் கொண்டு யாழினி நிற்க, அதற்குள் ஒரு வேலை ஆள் வந்தான் அவன், "வந்து அக்கா வாங்க சமையலுக்கு தேவையான காய்கறிகள் வாங்கணும்னு சொன்னீங்களே கூட்டிட்டு போயிட்டு வரேன்" என்று கூற அவர் அந்த ஜூஸை அவள் கையில் கொடுத்து விட்டு வேகமாக அவனுடன் சென்றார் மாரியம்மா..
அவளும், "அப்பாடி தப்பிச்சேன்" என்று எண்ணிக் கொண்டு வேகமாக தன் கணவனுக்கு ஜூஸ் எடுத்துக் கொண்டு அறைக்கு செல்ல அறைக்கு செல்லும் பொழுதே மலர்ந்த முகத்தோடு அவள் செல்ல அதைப் பார்த்த அவர்கள் ஏதோ நினைத்துக் கொள்ள பின்புறமாக அந்த வீட்டின் பின்புறமாக மிகத் துல்லியமாக கூற வேண்டுமெனில் ராவணன் இருக்கும் அறையின் ஜன்னல் பகுதி இருக்கும் திசையில் போய் அங்கு வேலை செய்வது போல் நடிக்க வேலையாட்கள் இவர்களை நோட்டம் விட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். அவ்வளவு எளிதில் இவர்களை விட ராவணன் ஒன்றும் முட்டாள் இல்லை என்பதையும் அவர்கள் இந்த சமயத்தில் உணர்ந்து இருக்க வேண்டுமோ ????
அந்த சமயம் ராவணன் இருக்கும் அறையின் திரைச்சீலைகள் விலகி இருக்க வெளியே இருந்து பார்த்தால் உள்ளே என்ன நடக்கும் என்பது தெள்ளத்தெளிவாக அவர்களுக்கு தெரியும் அப்படி இருக்க அங்கு அவளை கண்டவனோ அவளை வேகமாக தன் பக்கமாக இழுத்தான்..
" என்னடி அந்த அக்கா உன் மேல ரொம்ப சந்தேகம் படுவாங்க போல???அந்த அக்காவை தூக்கிடலாமா???" என்று விளையாட்டாக கூற அதை கேட்ட அவளோ, " ஐயோ அப்படி எல்லாம் செய்திடாதீங்க அந்த அக்கா இல்லனா என்னால உங்களை பார்த்து இருக்க முடியுமா??? யாருக்கு தான் நாம இப்படி இருக்கிறதில் சந்தேகம் வராது. நீங்க தான் சொல்ல வேண்டாம் சொல்லிட்டீங்க. ஆனா அக்கா என்னை ரொம்ப சந்தேகப்படுறாங்க பேசாம அந்த அக்கா கிட்ட மட்டும் சொல்லி விடவா??" என்று கேட்க,
"சொல்லு உன் புருஷன் நான் தான் சொல்லு அதுல என்ன இருக்கு??" என்று கேட்க...
"அப்போ அவங்க ஏதாவது செஞ்சிட்டா??" என்று பாவமாக கேட்டாள் அதைக்கேட்ட அவனோ, "உன் புருஷன் வேடிக்கை பார்த்துட்டு இருப்பேன்னு நீ நினைக்கிறியா???" என்று கேட்ட அவன் அவளை தன் பக்கமாக இழுக்க அவளோ, " முதலில் ஜூஸ் குடிங்க" என்று யாழினி ஜூஸ் கொண்டு வந்து அவனிடம் கொடுக்க அதை வாங்கி பருகாமல் அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, "என்னை பார்த்தா மட்டும் போதுமா ஜூஸ் முதலில் குடிங்க" என்று கூற...
அவனோ அதை வாங்கியவன், அவளது வாயில் வைத்து ஒரு மிடறு அவளை குடிக்க வைத்தான். பிறகு அவன் குடிக்க அந்த காட்சி தணிகாசலத்தின் கண்களில் பட்டது. இவர்களுக்குள் ஏதோ ஒன்று இருப்பது போல அவருக்குத் தோன்றியது. அவர்களின் நெருக்கம் அவருக்கு ஏதோ ஒன்று தவறாக பட மேலும் அவள் கர்ப்பமாக இருப்பதும் அவருக்கு கேள்வியாக இருந்தது. ஒருவேளை இவள் அவனுடைய காதலியாக மனைவியாக இருக்க நேரிடலாம் அதனாலதான் இந்த நெருக்கம் என எண்ண, தணிகாசலத்தின் மூளை அடுத்து வேறு விதமாக வேலை செய்ய தொடங்கியது. இவனை கொல்வதற்கு முன் அந்தப் பெண்ணை தீர்த்துக்கட்ட வேண்டும் என எண்ணிக் கொண்டார்.
அங்கே ராவணன் தன் மனைவியை பார்த்து, "உன்கிட்ட ஒழுங்கா ஜூஸ் ஆகாரம் எல்லாம் சாப்பிடணும்னு சொல்லி இருக்கேன் இல்லையா என்னடி சாப்பிடுற???" என்று கேட்க,
" அதுக்குத்தான் காலை மதியம் இரவு அப்படின்னு நேரா நேரத்துக்கு ஜூஸ் குடிக்க வைக்கறீங்களே" எனக் கூற அவனுக்காக தயார் செய்துக் கொண்டு வந்த ஜூசை அவள் குடித்தாள். இது எப்பொழுதும் இங்கு நடப்பது தான்," இனி சாப்பாட்டையும் இங்கே கொண்டு வர வைக்கணும்னு நினைச்சுட்டு இருக்கேன் மரியாதையா சாப்பிடு இல்லை அதையும் நான் செய்வேன் " என்று மிரட்டலாக கூற அவளும் சிரித்தபடி தலையாட்டினாள்..
" ஏங்க அந்த அறைக்குள் இருக்கிற சாதனா வெளியே வரவே மாட்டாங்களா நான் இங்கே வந்ததிலிருந்து அவங்களைப் பார்க்கவே இல்லையே" என்று கூற அவளது பெயரை கூறியதும் அவனது முகம் இறுகியது. "அவளை பார்த்து நீ என்ன பண்ண போற?? அவளை ஒன்னும் நீ பார்க்க வேண்டாம்" என்று சொல்லவும் யாழினியன் முகம் வாடிப் போக அதன் பிறகு அவள் அமைதியாக இருந்துக் கொண்டாள்..
அவனும் அவளது கை சரி ஆகட்டும் என்று தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் மேலும் அந்த கையால் அவளுக்கு சில பல பிரச்சனைகளை உண்டாகி இருக்க அது எல்லாம் தெளியட்டும் என ராவணன் சாதனாவின் பக்கம் செல்லாமல் அமைதி காத்து வருகிறான் அவளுக்கு தற்போதைக்கு அந்த அறையே போதும் என எண்ணி விட்டானோ என்னவோ???
அந்த அறையே கதி என இருக்கிறாள் கூண்டில் அடைத்த புலி போல நிலைதான் அவளுடையது. இருந்தும் அவளுடைய திமிர் மட்டும் கொஞ்சம் கூட குறையவில்லை மீண்டும் மீண்டும் பழி வெறி மட்டும்தான் அவள் மனதில் உழன்றுக் கொண்டிருந்தது. அந்த பழி வெறிக்கு தற்போது அவளது வயிற்றில் வளரும் குழந்தையை தான் கணக்கில் எடுத்து இருக்கிறாள் அந்த பாதகத்தி...
