அதிகாயன் 28
அத்தியாயம் : 28
அதேநேரம் சாதனா அவளது அறையில் தனது கையில் கட்டப்பட்டிருக்கும் கட்டை அவிழ்த்து கொண்டு இருந்தாள்... மருந்து கட்டி இருக்கும் பொழுதே அந்த செவிலி அவளிடம் கூறியிருந்தாள். தண்ணீரில் கை படாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆனால் அத்தியாவசிய தேவைக்காக அவள் சென்று தானே ஆக வேண்டும் யாரும் அவளுக்கு பெரிதாக உதவி செய்யக்கூட இல்லை உணவைக்கூட மாரியம்மா கொண்டு வந்து வைத்துவிட்டு சென்று விடுவார். இவளுக்கு தேவை என்றால் உண்டு கொள்ளலாம் அப்படித்தான் போய்க்கொண்டிருந்தது. அதில் தண்ணீரில் கை பட வேண்டாம் என்று செவிலி கூறியிருக்க இடையிடையே அவள் கழிவறைக்கு செல்லும் பொழுது தண்ணீரில் கை பட்டு கையில் உள்ள காயம் ஆறாமல் மாறிவிட அவளுக்கு அந்த இடம் முழுவதும் அரித்துக்கொண்டே இருந்தது அரிப்பு தாளாமல் அவள் கஷ்டப்பட்டு அந்த கட்டை அவிழ்த்து விட்டாள்..
எப்பொழுதும் அழகில் ஆர்வம் கொண்டவள் கைகள் தோல் போய் உள்ளே இருக்கும் சதை தெரிந்தது பொதுவாக தீக்காயங்கள் ஏதேனும் பட்டால் இப்படி வருவது இயல்புதான் அதைக்கூட அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்பொழுது இவனை அவள் சந்தித்தாளோ அப்பொழுது முதல் இன்று வரை நரக வேதனையை தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். அதற்கெல்லாம் காரணம் அவன் ஒருவன் தான் அவனுக்கு என்ன வேண்டும் என்று அவளுக்கு நன்றாக தெரியும் அவனுக்கு தேவை அவளுடைய உயிர் தான். ஆனால் அவன் அவளை விட்டு வைத்திருப்பது இந்த குழந்தைக்காகத்தான் என்பதை இத்தனை நாட்களில் அவள் புரிந்து கொண்டாள். " டேய், விட மாட்டேன்டா இந்த குழந்தை உயிரோட உன் கைக்கு கிடைக்க நான் விடமாட்டேன் பார்த்திடலாம் எப்படி உனக்கு இந்த குழந்தை கிடைக்கிறது என்பதை பார்த்து விடலாம்" என்று சூளுரைத்துக் கொண்டாள் ..
அதேநேரம் தணிகாசலம் அவர் படுத்திருப்பது நாய்கள் படுத்திருக்கும் கூண்டு... ஆம் அதில் தான் ஒரு கூண்டில் சதாசிவமும் மறு கூண்டில் தணிகாசலமும் படுத்திருக்க அங்கே கொசுக்கடியோடு படுத்து இருந்தவருக்கு இவனை எப்படியாவது கொன்றே தீரவேண்டும் என்ற ஆத்திரம் இருந்தது. அவன் முன்னே நடிப்பது போல இருந்தாலும் உள்ளுக்குள்ளே உழன்று கொண்டுதான் இருந்தார். என்ன செய்யலாம் என்ன செய்யலாம் என யோசித்து யோசித்து அவருக்கு கிடைத்த விடையோ ஒரு பாம்பு..
ஆம் தணிகாசலம் பாம்பு பிடிப்பதில் வல்லவர் அவர் நேற்று முன்தினம் தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருக்கும் பொழுது அவர் கண்ணில் ஒரு பாம்பு பட்டது. அது விஷத்தன்மை உடைய பாம்பாகும் அந்த பாம்பை யாருக்கும் தெரியாமல் பிடித்த அவர் ஒரு டப்பாவில் போட்டு அடைத்து வைத்திருக்கிறார். அந்தப் பாம்பை அவனது அறையில் ஏவிவிட்டு அவனை கொன்று விட வேண்டும் என்றுதான் அவர் எண்ணிக் கொண்டிருக்க சதாசிவத்திற்கு கண் ஜாடையோடு விஷயத்தை கூறியிருந்தார். தணிகாசலமும் சதாசிவமும் இவனை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று தானே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி இருவரும் ராவணனை கொலை செய்ய திட்டமிட்டு கொண்டிருக்க அவர்களது கைகளில் ரெடியாக பாம்பு இருந்தது. அதை யாருக்கும் தெரியாமல் அவனது அறையில் விட்டு விட வேண்டும் இரவு நேரத்தில் யார் கண்ணுக்கும் படாமல் இந்த காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தனர்.
எப்படி இருந்தாலும் இவன் அவர்களை சித்திரவதை செய்து கொன்று இருப்பான். அதற்குமுன் வாழ்வோ சாவோ இவனை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்று தான் அவர்கள் எண்ணிக் கொண்டிருக்க இப்படியே இரு நாட்கள் கடந்துவிட்டன. இரு நாட்களும் வேவு பார்த்து உறங்காமல் யார் எந்த நேரத்தில் உறங்குகிறார்கள் எத்தனை பேர் அந்த வீட்டை சுற்றி இருக்கிறார்கள் என்பதையெல்லாம் கண்காணித்து அன்றைய தினம் அவர்கள் ராவணனின் அறைக்கு செல்ல திட்டமிட்டு யாருக்கும் தெரியாமல் சதாசிவம் ஒரு பக்கமும் மறு பக்கம் தணிகாசலமும் ஒளிந்துக் கொள்ள அனைவரும் உறங்கிவிட்டனர். அந்த சமயம் பார்த்து மெல்ல அவர்கள் மேலே ராவணனின் அறைக்கு செல்ல திட்டமிட்டுக் கொண்டிருக்க அந்த சமயம் பார்த்து யாழினி தன் கணவனது அறைக்கு சென்றாள்..
அந்த காட்சியை இவர்கள் இருவரும் பார்த்துவிட இவள் எதற்காக அங்கு செல்கிறாள் என்று கேள்வி இருவரையும் தாக்க என்ன விஷயம் என்பதை அறிந்துக் கொள்ள இருவரும் முயன்றனர். அதனால் அன்றைய தினம் பாம்பை அவனது அறையில் விடலாம் என எண்ணிக் கொண்டு இருந்ததை விட்டு விட்டு அன்றைய தினம் அங்கேயே நோட்டம் விட்டுக் கொண்டிருக்க விடியற்காலை 4 மணி அளவில் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே யாழினி தன் கணவனின் அறையில் இருந்து வெளியே வந்தாள். அதை அவர்கள் கண் கூட பார்த்துவிட அவர்களுக்கு விஷயம் ஏதோ புரிவது போல இருந்தது.
இங்கே இவர்கள் யாழினியை கண்காணிக்க இது அறியாத யாழினி மெதுவாக யாருக்கும் தெரியாமல் சுற்றும் முற்றும் பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்டு மாரியம்மாவுடன் தங்கும் அறைக்குள் நுழைய அங்கு மாரியம்மா விளக்கை போட்டு விட்டு அமர்ந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் யாழினி அதிர்ந்தாள்.
"எங்க போயிட்டு வர??"
" அது வந்து அக்கா".. என்று வார்த்தை மென்று முழுங்க, "உன்கிட்ட தான் கேட்கிறேன் யாழினி பதில் சொல்லு இத்தனை நாளும் நீ என்னை ஏமாத்திட்டு தான் இருக்க அப்படித்தானே???" என்று கேட்க,
"இல்லை அக்கா அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை"
" பிறகு எங்க போயிட்டு வர்ற மாசமாக இருக்க பொண்ணு நீ அதை மறந்துடாத வேறொருத்தன் மனைவி நீ அதையும் மறந்துடாத. நீ தப்பான பொண்ணு கிடையாது என்று நான் நெனச்சிட்டு இருக்கேன் என்னுடைய நினைப்பை பொய்யாக்கிடாதே கட்டிய புருஷனுக்கு உண்மையாக இருக்க பார்" என்று யாழினி யார் கணவன் என்ற விஷயத்தை அவளிடம் கூறாததால் அவர் கூற யாழினியின் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது கணவன் தன்னை பற்றி யாரிடமும் கூறக் கூடாது என்று கூறி இருக்க இங்கே இவரோ தன்மானத்தை விலை பேசிக் கொண்டிருக்க அக்காவிடம் தன் நியாயத்தை கூட கூற முடியாமல் அவர் முன்னே கூனி குறுகி நின்றாள் யாழினி…
