அதிகாயன் 27
அத்தியாயம் : 27
அவனது அறையில் இருந்து வெளியே வந்தவளுக்கு கால்கள் ஒரு நிலையில் இல்லை என்று தான் கூற வேண்டும் அவனிடம் சேர்த்துவைத்து இன்றுதான் பத்து வார்த்தை பேசி இருக்கிறாள். அதுவும் ஏதோ மன உளைச்சலில் உள்ளதால் படபடவென பேசி விட்டாளே ஒழிய அவள் இது போலெல்லாம் அவனிடம் பேச முடியாது எப்படி பேசினோம் என்றே தெரியவில்லை முதலுக்கு மோசம் வந்தால் இப்படித்தான் இருக்குமோ என்னவோ மிகவும் மகிழ்ச்சியாக கீழே வர மாரியம்மா தான், 'இன்னும் சென்றவள் ஆளையே காணோமே ஏதாவது நடந்து இருக்குமா' என எண்ணிக் கொண்டிருந்தார்.
அவள் சிரித்த முகமாக வரவும், " என்னடி எதுக்கு இவ்வளவு நேரம் அங்க என்ன பண்ணிட்டு இருந்த??" என்று வினவ, "அது அக்கா அவருக்கு ஜூஸ் கொடுக்க போனேன்..நீங்க தானே கொடுக்க சொன்னீங்க??" என்று மழுப்பலாக பதில் கூறிவிட்டு வேகமாக சமைக்க சென்று விட்டாள். அவர்தான் போகும்போது மூக்கை உறிஞ்சிகிட்டு இருந்தா இப்ப என்ன மாயம் என்று எண்ணிக்கொண்டு மாரியம்மா தன் வேலையை பார்க்க துவங்கி விட்டார்.
அவனுக்கு அவள் தன் கைக்குள்ளேயே வந்து விட்டாள் என்பதுதான் மிகப்பெரிய ஆசுவாசமாக தான் இருந்தது நேற்று முழுவதும் பைத்தியம் பிடித்தவன் போல சுற்றிக் கொண்டிருந்தான். எதையும் முகத்தில் வெளிப்படுத்திக் கொள்ளாமல் அவள் எங்கே சென்று இருப்பாளோ என பயந்துக் கொண்டு தான் இருந்தான். ஆனால் அவள் இங்கேதான் வந்து இருக்கவும் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவனது அம்மா சொல்லை தட்டாத அவன் தான் ராவணன் அவனது அம்மா கூறித்தான் யாழினியை மணமுடித்தான்.
யாழினி அவளைப்பற்றி கூற வேண்டும் என்றால் வீட்டு வேலைக்காக வந்தவள் தான் தாய் சொல்லி கல்யாணம் செய்தவன் தான் இருந்தும் ஏதோ ஒன்று அவனுக்கு அவளிடம் ஈர்த்தது கண்கள் நோக்கி கதை பேசியதில்லை நீண்ட நேரம் அளவளாவியதும் இல்லை.. இவன் செய்வது இப்படிப்பட்ட தொழில் என்பதால் அவளோடு அவன் சமயம் செலவிட்டதும் இல்லை. முக்கியமாக அவனை காணும் போதே 4 அடி தூரத்தில் நிற்கும் பெண்ணவள் தான் யாழினி அப்படி இருக்கும்பொழுது இன்று அவனிடம் அவள் குறைபட்டு பேசியது கூட அவனுக்கு பிடித்துதான் இருந்தது. அவனும் எடுத்த காரியத்தை முடிக்காமல் வீட்டிற்கு வரக்கூடாது என எண்ணிக் கொண்டிருக்க அவனது மனைவியோ ஆறு மாத கருவை சுமந்துக் கொண்டு அவன் முன் நிற்க அவனால் அவளை தனியாக விட்டுவிட்டு உறங்கக் கூட முடியவில்லை.
அன்றைய தின மதியமே அவளிடம் மீண்டும் ஜூஸ் கொண்டு வருவது போல அழைத்தவன், அவளை இரவு அனைவரும் உறங்கிய சமயம் அவனது அறைக்கு வர சொல்ல அவளோ," எனக்கு பயமா இருக்குங்க யாராவது பார்த்துட்டா??" என்று கூற...
அவனோ, "அதுக்குத்தான் நான் இருக்கேன்ல நான் பார்த்துக்கிறேன் எவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்ட மறைச்சு இருக்க, நீ திரும்ப வந்ததில் நான் மரியாதையா என்னுடைய குழந்தையை கூட சரிவர பார்க்கல எனக்கு பார்த்தே ஆகணும்" என்று கூற,
" எப்படி பாக்க முடியும் குழந்தை வெளியே வரத்தான் மூணு மாசம் இருக்கே??" என்று கூற, "அது நான் பார்த்துக்குறேன் நீ வா ஆனாலும் என் மேல இருக்கிற பயம் எல்லாம் இங்க வந்ததும் போயிடுச்சு போல" என்று ராவணன் கூறவும் அதைக்கேட்ட அவளோ கிளுக்கி சிரித்தாள்...
அதன்படி அவளுக்கும் மாரியம்மாவுக்கும் ஒரு அறை ஒதுக்கப்பட்டு இருக்க அங்குதான் இருவரும் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். மாரியம்மா உறங்கும் வரை காத்திருந்த யாழினி அவர் உறங்கி விட்டாரா என பார்த்துக்கொண்டு மெல்ல எழுந்தவள், யாரும் காணாத சமயம் மெதுவாக அவனது அறையை அடைந்து கதவை மெல்ல தொடும்போது கதவு திறந்துக் கொள்ள அவன் அவளுக்காக தான் காத்திருந்தான் போலும். அவள் உள்ளே நுழைந்த நொடி மீண்டும் வேகமாக கதவை அடைத்துக் கொள்ள இந்த முறை அவளுக்கு பயம் இல்லை வெட்கம் தான் சூழ்ந்துகொண்டது..
அவனது பார்வையை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எப்பொழுதும் அவனது கண்கள் தான் அவளை கொலையாக கொள்ளும் அது போலத்தான் இன்றும் பார்த்துக் கொண்டிருந்தான். அவளுக்குதான் அவனது பார்வையின் வீரியத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்னை எப்படிப் பார்க்கிறார் என்று நினைக்க அவனும் அவனது மனையாளை தலை முதல் கால் வரை அணு அணுவாக ரசித்தான். அதுவும் அவனது கருவை சுமந்துக் கொண்டு தாய்மையின் பூரிப்பில் நின்று கொண்டிருக்கும் அவளை கண்டவன், "ஆறு மாசமா உனக்கு எப்படிடி என்கிட்ட சொல்லாம இருக்க முடிஞ்சது??" என்று வினவ,
"நீங்க வரணும் அப்படின்னு தான் நான் காத்துகிட்டு இருந்தேன் இந்த ஆறு மாசம் என்னுடைய நினைப்பை நீங்க பொய்யாக்கிக் கொண்டு இருந்தீங்க உங்கள் கண்ணை பார்த்து சொல்லணும்ன்னு நான் ஆசைப்பட்டு சொல்லாமல் இருந்தேன். அத்தை கிட்ட கூட சொல்ல கூடாது அப்படின்னு சொல்லி இருந்தேன் அதனாலதான் அத்தையும் உங்க கிட்ட சொல்லல" என்று அவள் கூறியதை கேட்ட அவனின் கைகள் அவளது வயிற்றை மென்மையாக தடவ அதற்குள் அவளது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தன் தந்தையின் வருடல் புரிந்து போனதோ என்னவோ மெல்ல அசைந்து நான் இங்கு இருக்கிறேன் அப்பா என அவனுக்கு உணர்த்த குழந்தையின் அசைவை உணர்ந்த அவனுக்கு உள்ளம் பூரித்தது..
பிறகு மென்மையாக அவளை அணைத்துக் கொண்டவன் அவளது நெற்றியில் தன் இதழ்களைப் பதித்து, "நான் உன்கிட்ட பெருசா பேசினது இல்லை நீயும் என்னை பார்த்தா பயப்படுவ ஆனால் உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு தெரியுமா???" என்று கேட்க அவனது அணைப்பில் இருந்து தன் முகத்தை மட்டும் மேல் நோக்கி அவனை பார்த்த அவளோ, " நிஜமாத்தான் சொல்றீங்களா ??" என்று கேட்க...
"இன்னமுமா நீ என்னை நம்ப மாட்டேங்குற நிஜமா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். இதோ இந்த கண்கள் இதோ இந்த மூக்கு, இதோ இந்த உதடு அது மட்டுமில்லாமல் எப்போவும் என்னை பார்த்து பயப்படுற உன் முகம்" என்று தன் விரல்களால் அவளது முக வடிவை அளந்துக் கொண்டே வந்தவன் அவளது இதழ்களில் சேரும்பொழுது அவனது விரல்களுக்கு அழுத்தம் கூடியது..
அந்த அழுத்தத்திலும் சிறு மென்மை உண்டு மென்மையாக அவளது சிவந்த உதடுகளை வருடி கொடுத்தான். அவனுக்கு மேலும் முன்னேற வேண்டும் என ஆசை கிளர்ந்து கொள்ள மென்மையாக அவளது முகம் நோக்கி குனிந்தவன் அவளது இதழ்களை மென்மையாக முத்தமிட்டான். பிறகு அவனுடைய மஞ்சத்தில் கிடத்தி அவன் அவளுக்கு அருகே படுத்துக் கொண்டு அவளை மென்மையாக அணைத்தான்.. அவனது நெருக்கத்தில் அவளுக்கு மூச்சு பேச்சே இல்லை என்றுதான் கூறவேண்டும்.
அவன் அருகே இல்லாத சமயம் ஏதேதோ நினைத்து தன்னைத்தானே வருத்திக் கொண்டவள், இப்பொழுது அவன் அவளருகே இருக்கவும் எதுவுமே தோன்றவில்லை வாழ்க்கை கூட இன்பமயமாக தான் அவளுக்கு காட்சி அளித்தது. ஆனால் அவன் முள் மீது தான் நின்றுக் கொண்டிருக்கிறான் அவனது வதம் இன்னும் தீரவில்லை அவனது வதத்தை அவள் நேரடியாக கண்டதும் இல்லை காண நேரும் பொழுது அவளால் அதைத் தாங்கிக்கொள்ள முடியுமா என தெரியவில்லை.
மென்மையான குணம் கொண்ட அவளுக்கு அவன் என்ன செய்கிறான் என இதுவரை தெளிவாக தெரியவில்லை என்றாலும் இந்த வீட்டில் அவன் இருப்பது நியாயத்திற்காக தான் என்பதை புரிந்துக் கொண்ட அவள் கணவன் கூறியதை முழுமையாக ஏற்றுக் கொண்டாள். ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி உடலோடு உடல் உரசி காமம் எனும் முத்தெடுத்து தான் காதலையும் உணர்வையும் கூற வேண்டும் என்பதில்லை அருகருகே படுத்து கையை பிடித்துக் கொண்டு ஆதரவாக சிறு அன்போடு உறங்கினால் கூட அதுவும் காதலில் சேர்த்தி தான் அப்படி இருக்க இருவரும் மென்மையாக ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி படுத்துக் கொண்டிருந்தனர்..
" நீ இப்படி வயிற்றை தூக்கிட்டு வந்துட்ட இல்லை என்றால் இந்நேரம் உன்னை அப்படியே நான் சாப்பிட்டு இருப்பேன் அந்த அளவுக்கு வெறி இருக்கு" என்றவன் மெல்ல எழுந்து தன் மனையாள் அணிந்து இருந்த உடையை விலக்க அவளுக்கோ கூச்சம் தாளாமல் கண்களை மூடி கொள்ள திரை சீலையின் வெளிச்சத்தில் அவள் செய்வது எல்லாம் தெளிவாக தெரியவும் அவன் அவளது மேடிட்ட வயிற்றை மென்மையாக வருடியவன் மென்மையிலும் மென்மையாக அவளது வயிற்றை வருடி கொடுத்து தன் இதழ்களை பதித்து தன் உதிரத்துக்கு தன் உணர்வுகளை வெளிப்படுத்த கருவில் இருக்கும் குழந்தையும் அதை புரிந்துக் கொண்டதோ என்னவோ அவனுக்கு நான் இருக்கிறேன் அப்பா என்ற அசைவில் அவனுக்கு உணர்த்த அவனுக்கு என்ன மாதிரியான உணர்வுகள் அவனை ஆட்கொள்கின்றது என்பதை அவனாலேயே புரிந்துக் கொள்ள முடியவில்லை..மேலும் இதற்கு எல்லாம் காரணம் தன் மனையாள் தானே என்றெண்ணியவன் அவள் அருகே படுத்து," தாங்க்ஸ் டி" என்று அவளது உச்சி வகிற்றில் தன் இதழ்களை பதித்தான்..
வெளியே உள்ளவர்களுக்கு தான் அவன் சிம்ம சொப்பனம் அவனது மனையாளுக்கு எப்போதும் அன்பான கணவன் மட்டுமே...மேலும் அவனது மனைவியிடம் கூட கர்ணாவின் விஷயத்தை மட்டும் தான் கூறி இருக்கிறானே ஒழிய அதற்கு தான் என்ன தண்டனை கொடுத்து கொண்டு இருக்கிறோம் என்பதை இன்றளவில் கூறவில்லை மேலும் அவன் அந்த மூன்று நபர்கள் இருக்கும் திசைக்கு கூட அவள் செல்ல கூடாது என்று அவளிடம் கூறி இருப்பதால் அவளும் எதுவுமே தெரியாதது போல தான் இருந்து வருகிறாள்..
