அதிகாயன் 26
அத்தியாயம் : 26
அவள் எதற்காக இங்கே வந்தாள் எதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தாள் தன்னிடம் யாருமே எதுவுமே சொல்லவில்லையே ..அவனது அம்மா பதறிய போது தானே அவனுக்கு விஷயமே தெரிய வந்தது...அதுவும் ஒரு வேலைக்காரியாக அவள் வர வேண்டியது என்ன காரணம் என்று எதுவுமே புரிபடாமல் இருந்தவனுக்கு அவளிடம் பேசிய ஆக வேண்டும் என்று எண்ணியவன் வேகமாக கீழே தன் வேலைக்காரனை அழைத்து தனக்கு ஒரு ஜூஸ் கொடுத்து விடும்படி கூறினான் அதுவும் யாழினியிடம் கொடுத்து விடும்படி கூற...
அந்த வேலைக்காரனும் அடுக்களைக்குள் சென்று, "அக்கா சார் ஒரு ஜூஸ் கேட்கிறார் அந்தப் பொண்ணை கொண்டு போய் கொடுக்க சொல்லுங்க" என்று வேறொரு வேலையாக இருந்த மாரியம்மாவிடம் கூற மாரியம்மாவோ, " சரிங்க தம்பி" என்று கூறினார். பிறகு அவளைப் பார்த்து ஜூஸ் எடுத்துக் கொடுத்து," போய் சாருக்கு கொடு டி பயப்படாத" என்று அவள் முகத்தை பார்த்து கூற அவளும் மெல்ல அவனது அறைக்கு சென்றாள்...அதற்குள் அவள் மனதில் மிகுந்த போராட்டமாகவே இருக்க 'அவன் தன்னை நிமிர்ந்து கூட பார்க்கவில்லையே ஒரு வேளை அவருக்கு என்னை பிடிக்கலையா அவங்க அம்மா சொன்னதுனால தான் என்னை கல்யாணம் செய்துகிட்டாங்களா???' என்றெல்லாம் எண்ணிக் கொண்டே அந்த அறைக்குள் நுழைய,
அவள் அறைக்குள் காலை எடுத்து வைத்த அடுத்த நொடி அந்த கதவு அடைத்துக் கொண்டது கூடவே அவள் கையிலிருந்த ஜூஸும் பதட்டத்தில் கொட்ட அடைத்த கதவில் சாய்ந்து நின்றவள் அவனை நிமிர்ந்து பார்க்க கோபமான விழிகளோடு அவளை சிறை செய்திருந்தான்...
இருவருக்கும் ஒரு அடி கூட இடைவெளி இல்லாமல் இருக்க இருவரின் சூடான மூச்சுக்காற்றும் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டது. அவளுக்கு தான் அவனது கோபத்தை பார்க்கும் பொழுது உள்ளுக்குள் உதறல் எடுக்க அவளது கை கால்கள் நடுங்கிக் கொண்டு இருப்பதை உணர்ந்த அவனோ தன்னை மெதுவாக நிலைப்படுத்திக் கொண்டான். இருந்தும் அவனது ஆத்திரம் அடங்கவில்லை ஆத்திரம் அடங்கும் வேலையா அவள் செய்து இருக்கிறாள். " எங்கே இந்த பக்கம்" என்று அவளது கண்ணை பார்த்து அவன் கேட்டான்..
அவளிடம் பதில் இல்லை அதை பார்த்து கோபம் கொண்டவன், "நான் தான் கேட்கிறேன்ல" என்று கேட்க, "அது வந்து "...வார்த்தை தடுமாறியது. இருவரும் அதிகமாக பேசிக்கொண்ட ஆட்கள் கிடையாது.. மனம் விட்டு பேசி இருந்தால் ஒருவேளை சந்தேகம் வந்து இருக்காதோ என்னவோ ஆனால் மனம் விட்டு பேசாததால் தானோ அவளுக்கு சந்தேகம் என்ற விதை முளைத்து இருக்க, அவளைப் பற்றி நன்கு புரிந்து வைத்துக் கொண்டவன், "நான் தான் கேட்டுட்டே இருக்கேன் இல்ல பதிலே பேசாமல் நின்னுட்டு இருக்க சொல்லுடி" என்று சத்தம் போடவும் அதில் அவள் நடுங்க என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவளுக்கு தான் ஏதோ தவறு செய்தவள் போல அவன் முன்னே கூனிக்குறுகி நிற்க கண்களில் கண்ணீர் கொட்டியது..
இருவருக்குமிடையே ஆதரவாக அவர்களது குழந்தை வயிற்றுக்குள் இருந்து அவனை லேசாக அவளது மேடிட்ட வயிறு மூலம் உரசிக் கொண்டிருக்க கொஞ்சமாக தன்னை மீண்டும் சாந்தப்படுத்தி கொண்டான்.
"எதுக்காக வீட்டைவிட்டு வந்த???" என்று அவன் அமைதியாக கேட்கவும் அவள் விழிகள் அவனை எதிர்கொள்ள பயம் ஆட்கொண்டு இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், " நான் வந்ததுனால தானே எனக்கு எல்லாம் தெரியுது உங்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை இருக்கு அப்படிங்கிறது எல்லாம் இப்போ தானே தெரியுது. இனி நான் உங்களை தொல்லை செய்ய மாட்டேன் நான் என் பாட்டுக்கு இருக்கிறேன் என்னை விட்டுடுங்க" என்று அவனை குற்றம் சொல்ல முடியாமல் தவித்தவள் அழ ஆரம்பிக்க அவளது வார்த்தைகளிலேயே அவன் புரிந்துகொண்டான் எதற்காக அவள் வீட்டை விட்டு வெளியே வந்து இருக்கிறாள் என்று அவன் மௌனமாக அவளைப் பார்க்க,
"உங்களுக்கு என்னை விட அழகான மனைவி இருக்குன்னு முன்னாடியே சொல்லி இருக்கலாமே..! நீங்க யாரு நீங்க என்ன செய்யறீங்க உங்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிடுச்சா இல்லை ஆகலையா எதுவுமே எனக்கு தெரியல இப்போ என்னை எப்படி அங்கே இருக்க சொல்றீங்க??? உங்க பேர் கூட கர்ணாவாமே அது கூட இப்பத்தான் எனக்கு தெரியுது. நீங்க என்ன செய்றீங்க என்ன பண்றீங்க எதுவுமே எனக்கு தெரியாது. ஆனால் இப்பதானே எனக்கு தெரியுது உங்களுக்கு ஒரு மனைவி இருக்காங்க அப்படின்னு நான் யார்கிட்டயும் பிரச்சனை பண்ண மாட்டேன் ஆனால் என்னை விட்டுடுங்க நான் எங்கேயாவது போயிடுறேன்" என்று கூற அதைக் கேட்ட அவனும் அவளை தீர்க்கமாக பார்த்துக் கொண்டே இருந்தான் மூக்கு விடைக்க தன் மனதில் உள்ளதை எல்லாம் அழுதுக் கொண்டே கூறும் தன் மனையாளை பார்த்தவன் அதற்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாமல் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.. அந்த அணைப்பு அவளுக்கு ஆயிரம் மடங்கு பலத்தை கொடுக்க,
அவளை பார்த்து , "உனக்கு என்னடி தெரியணும் சொல்லு??" என்று கூற அவனது அணைப்பில் கட்டுண்டு கிடந்தவளுக்கு அந்த அணைப்பில் இருந்து வெளியே வரவேண்டும் என்ற எண்ணம் கூட வரவில்லை மாறாக அவன் அவளது முகத்தை கைகளில் ஏந்தி அவளது முகத்தை நோக்கி குனிந்தவன், " எதுக்கும் தவிக்காத என்னை இப்படி ஒரு நாளில் தவிக்க வைத்த உன்னை அப்படியே சும்மா விட எனக்கு மனசு இல்லை" என்று கூறி இதழ்களால் கவி பாடினான்..
நீண்ட நேரம் அப்படியே இருவரும் இருந்தனர். அவளுக்கும் அந்த நேரம் தான் எதற்காக வந்தோம் என்ன விஷயம் எல்லாமே மறந்து போனது எதுவுமே ஞாபகத்தில் இல்லை பிறகு அவளை விட்டவன் அவளை ஒரு நொடி ஏற இறங்க பார்த்தவனுக்கு கண்கள் பனித்தன. அதை அவள் அறியாமல் மறைத்துக்கொண்டவன் அவளிடம், "நான் எத்தனையோ தடவை உன்கிட்ட பேச முயற்சி செய்தேன். ஆனால் நீ இந்த ஆறு மாசத்துல என்கிட்ட பேசவே இல்லையே இதை சொல்லி இருக்கலாமே நான் வந்து இருப்பேன்" என்று கூற அதைக் கேட்ட அவளோ, "உங்களை நேரில் பார்த்து சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்தேன் ஆனால் இப்போ தானே தெரியுது" என்று கூறியவள் மீண்டும் மூக்கை உறிஞ்ச அவனும் அவளைப் பார்த்து ஒரு சில விஷயங்களை எல்லாம் கூறினான்.
தன் மனைவியிடம் எதையும் அவன் மறைக்கவில்லை அதில் எதற்காக தான் இங்கே வந்திருக்கிறேன் என்ற விஷயத்தில் கடந்தகால விஷயங்களையும் எல்லாம் கூறி முடித்தவன் அவளிடம், "இந்த இடத்தை பொருத்தவரை எதிரிகள் சூழ் இடம் அப்படின்னு சொல்லலாம் கொஞ்சம் ஏமாந்தால் கூட இங்கே இருக்கிறவங்க நம்மளை கொன்னுட்டு போயிட்டே இருப்பாங்க. நான் இந்த வேலையை முடிக்க தான் இங்கே வந்தேன் மத்தபடி எனக்கு வேற மனைவியோ குழந்தையோ இல்லை எனக்கு இருக்கிறது ஒரே ஒரு மனைவி அதுவும் நீ தான்" என்று கூறியவன்,
அவளது மேடிட்ட வயிறு பார்த்தவன் கண்கள் பனிக்க மெல்ல குனிந்து அவளது மேடிட்ட வயிற்றில் தன் இதழ்களை பதித்தான். பிறகு நிமிர்ந்து அவளைப் பார்க்க, அவளோ அவன் சொல்வது எல்லாம் உண்மைதானா என்பது போல பார்க்க, " என்ன டி அப்படி பார்த்திட்டு இருக்க??? நான் உண்மையை தான் சொல்லுவேன் அப்படின்னு உனக்கு தெரியாதா???" என்று கேட்க...
" நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே உங்க பெயர் என்ன??" என்று கேட்க அதைக் கேட்டவன் பலமாக சிரித்தான். தன் கருவை சுமந்துக் கொண்டு இருப்பவளுக்கு தன் பெயர் கூட தெரியவில்லையா என்பது போல அவன் சிரிக்க அவளோ, "இல்லை கர்ணா அப்படின்னு சொல்றாங்களே அதனாலதான் கேட்டேன்" என்க...
"இப்போதைக்கு கருணா மற்றும் ராவணன் எல்லாமே நான்தான்" என்று கூறியவன், "என் கூட வாழ்ந்து என் குழந்தையை சுமந்து இருக்க இப்ப கூட உனக்கு என்மேல நம்பிக்கை இல்லை தானே??" என்று கூற...
" இல்ல அப்படியெல்லாம் இல்லை எனக்கு உங்க மேல ரொம்ப பயம் நீங்க எப்பவும் கோபமா இருப்பீங்களா அதனால பயம் எனக்குள்ள உங்களுக்கு என்னை பிடிக்குமா பிடிக்காதா அந்த கேள்வி எப்பவும் இருந்துட்டே இருக்கும். அதுக்கு தகுந்த மாதிரி இதை பார்க்கவும் நான் கொஞ்சம் பயந்துட்டேன். நீங்களும் ஆறு மாசமா வரவே இல்லையா அதனால நான் தவறாக நினைத்துவிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க" என்று அவள் கூற அவன் கருணாவை பற்றிய விஷயங்களை எல்லாம் அவளிடம் கூறினான்.
அவனிடமிருந்து அனைத்து விஷயங்களும் கேட்டறிந்துக் கொண்டு அவள் கண்கள் கலங்கி நிற்க, "அவருக்கு நேர்ந்தது கொடுமைதான் " என்று கூற ராவணனும், "ஆமாம்" என்று கூறியவன், " இங்கே இருக்கும் வரை நீ யாரோ நான் யாரோ நீயும் நானும் அதிக நேரம் இங்கே பேசிட்டு இருக்கிறது ஆபத்து" என்று கூறியவன், "பேசாமல் நீ மறுபடியும் வீட்டுக்கு போயிடறயா??" என்று கேட்க அவளோ, "இல்லை நான் உங்களை விட்டுட்டு எங்கேயும் போகமாட்டேன்" என்று கூற,
" சரி இங்கேயே இரு பாதுகாப்பாக இரு" என்று கூறிவிட்டான் ராவணன். பிறகு அங்கிருந்து வெளியேறியவன் வேகமாக தன் தாயை அழைத்து அவள் என்னிடம் தான் இருக்கிறாள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி போனை வைத்து விட்டான். இங்கே இவர்கள் உரையாடிக் கொண்டிருக்க அங்கே வெளியே யாரும் பார்க்காத வண்ணம் தணிகாசலம் மற்றும் சதாசிவம் இருவரும் இவனிடம் இருந்து எப்படி தப்பிக்கலாம் என பேசிக்கொண்டிருந்தனர். அதே நேரம் அவர்களுக்கென அவன் செக் வைத்திருந்தான்…
