Share:
Notifications
Clear all

அதிகாயன் 25

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் : 25

அந்த வீட்டுக்குள் வேலைக்கு சேர்ந்து ஒரு நாள் ஆகியிருந்தது சமையலறையே கதியென இருந்தாள் யாழினி.. எதைப் பற்றியும் அவளால் யோசிக்க கூட முடியவில்லை. ஏதோ ஒரு தைரியத்தில் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாள் தான். அவளைத் தேடி இருப்பார்களோ என்னவோ என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தாள். யார் தேட அங்கு இருக்கிறார்கள் பாவம் அத்தை அவர் மட்டும்தான் வருத்தப்படுவார் வேறு யாரு வருத்தப்பட இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது அவளது கண்களில் கண்ணீர் வந்தது வேகமாக கண்களை துடைத்துக் கொண்டாள்..

தன்னை எந்த வேலையும் வாங்காமல் மாரியம்மா அக்காவே எல்லா வேலையும் செய்துக் கொண்டிருக்க, "அக்கா நான் செய்யறேன் வேலைக்கு வந்துட்டு இப்படி சும்மா உட்கார்ந்து இருக்க எனக்கு சங்கடமா இருக்கு அக்கா" என்று தன் கண்ணீரை மறைத்துக் கொண்டு அவள் கூற,

"அடியே நீ இந்த நிலைமையில் என்ன வேலை செய்ய போற நானே செய்து தரேன். நீ சும்மா இரு உன்னை தனியா ரோட்ல பார்த்ததும் அப்படியே விட்டுட்டு வர எனக்கு மனசு இல்ல அதனாலதான் அழைச்சிட்டு வந்துட்டேன் இங்கே இருக்கிறவங்க கொஞ்சம் கரடு முரடா தான் இருக்காங்க. ஆனால் நாம அவங்க பிரச்சினைக்கு போகலை அப்படின்னா நம்ம கிட்டயும் அவங்க எந்த தொல்லையும் செய்ய மாட்டாங்க. தேவைக்கு அதிகமா சம்பளம் தராங்க நிம்மதியா இருக்கலாம் மாசத்துல ரெண்டு நாள் எனக்கு வீட்டுக்கு போக அனுமதி அளித்து இருக்காங்க. இந்த வாரம் நான் ஒரு விசேஷம்ன்னு சொல்லி போனேன் அப்படி போயிட்டு வரும் போது தான் உன்னை பார்த்தேன் நல்ல வேளை என் கண்ணில் பட்டு தொலைச்ச இல்லைனா என்ன ஆகிறது???" என்று புலம்பிக்கொண்டே சமைத்துக் கொண்டிருக்க, "எல்லாம் ஆச்சா சார் வந்துட்டார் உணவை எடுத்து வைங்க??" என்று அந்த வீட்டில் வேலை செய்யும் ஒருவன் வந்து கூற...

வந்தவன் அவள் எதுவுமே செய்யாமல் அமர்ந்திருப்பதை பார்த்ததும் யாழினி வேகமாக எழுந்துக் கொண்டாள். அவனது பார்வை அவளை பயப்பட வைக்கும்படி இருக்க அவளோ வேகமாக பயந்து மாரியம்மா பின்னால் சென்று கொள்ள அவர்கள் முன்னால் மாரியம்மாவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, "தாங்க நான் கொண்டு போய் உணவு பரிமாறுகிறேன் அக்கா" என்று மெதுவாக கூறிய யாழினி செய்த உணவு பதார்த்தங்களை ஒவ்வொன்றாக கொண்டு போய் மேசையில் வைத்தாள்..

பின்னாலேயே வந்த மாரியம்மா, " தட்டை சாருக்கு வை யாழினி" என்று கூற அவளும் அங்கு யார் அமர்ந்து இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் தட்டை வைக்க அருகில் செல்ல ஏதோ ஒரு உணர்வு அவளை ஆட்கொண்டது குனிந்த தலை நிமிராமல் அந்த தட்டை கொண்டு போய் வைக்கவும் அவளுக்கு முதலில் தெரிந்தது அந்த நீண்ட கால்கள் தான் அப்படியே அவளது விழிகள் மேல் நோக்கி செல்ல கடுகடு முகத்தோடு அமர்ந்திருந்தான் ராவணன்... அவளை இங்கே பார்த்ததும் அவன் என்ன உணர்வை கொண்டுள்ளான் என்பதை யாராவது அவனை தீவிரமாக அவன் முகத்தை கவனித்து இருந்தால் கண்டுபிடித்து இருக்க முடியும் ஆனால் யார்க்கும் அந்த தைரியம் இல்லையே????

மேடிட்ட ஆறுமாத வயிறு அவனது கையில் லேசாக உரசிக் கொண்டே தான் அவள் தட்டை அவன் முன் வைத்தாள் அந்த உரசலில் ஏதோ ஒரு உணர்வு ஆட்கொள்ள அப்பொழுதுதான் அவள் நிமிர்ந்து பார்க்க அங்கே அவன் அவனைத் தேடித் தான் அவள் வந்து இருந்தாலும் அவனை அவள் வந்த அடுத்த நாளே பார்ப்பாள் என யாழினி கனவிலும் நினைத்து பார்க்கவில்லை..

அதுவும் அவனது கோபமான முகம் ஏதோ இவள் தவறு செய்தது போல அவளை ஒரு நொடி பின்னோக்கி செல்ல பின்னாலேயே நின்று கொண்டிருந்த மாரியம்மா, "யாழினி சாருக்கு தட்டை வை" என்று கூற வேகமாக தட்டை படாரென வைத்தாள்..அந்த சத்தத்தில் அனைவரும் அதிர, மாரியம்மா அதிர்ந்து ராவணனை பார்க்க அவனோ கோபத்தோடு இருக்கவும், " ஐயா பொண்ணு வேலைக்கு புதுசுங்க ஐயா மன்னிச்சுடுங்க" என்று கூறி அவர் அவனுக்கு பணிவிடை செய்ய போக அவன் எப்படி அமர்ந்திருந்தானோ அப்படியே தான் அமர்ந்திருந்தான் அவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை..

ஆனால் அவனது கண்கள் அவளது மேடிட்ட வயிற்றின் மீது அவனது முழு பார்வையும் இருக்க அவன் என்ன மாதிரி உணர்வை ஆட்கொண்டு இருக்கிறான் என அவனே உணராத போது அவள் எப்படி உணர்வாள் அவனிடம் ஆசையாக சொல்ல வைத்த விஷயம் இப்படித்தான் அவனுக்கு தெரிய வேண்டுமா?? என எண்ணிக் கொண்டிருக்க அவள் தட்டை வைத்ததும் உணவை மாரியம்மா பரிமாற வந்தும் உணவு வேண்டாம் என எழுந்து அவனது அறைக்கு சென்று விட்டான்..

அதை கண்டதும் என்னை நிமிர்ந்துகூட அவர் பார்க்கவே இல்லையே என அதற்கும் அவள் வருத்தம் கொள்ள அவனது புறக்கணிப்பு தாங்கொன்னா வலியை கொடுத்தது.. அவளை கண்டுகொள்ளாமல் சென்றவன் புலியைப் போல அங்குமிங்கும் உழன்று கொண்டிருந்தான்..

அவனுக்குத்தான் தெரியும் நேற்றையதினம் எத்தனை கொடுமையான தினமாக அவனுக்கு இருந்தது என்று கண்ணுக்கு தெரியாத எதிரிகள் முதல் கண்ணுக்கு தெரியும் எதிரிகள் வரை அனைத்து இடத்திலும் சல்லடை போட்டு விட்டான் இவள் எங்கு சென்றாள் என்று தெரியவே இல்லை அவளை அழைத்துச் சென்ற டிரைவர் இப்பொழுது மருத்துவமனையில் இருக்கிறான் கோபத்தில் அவனை கூட அடித்திருந்தான் ராவணன்..அப்போது கூட அவளை அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top