அதிகாயன் 24
அத்தியாயம் : 24
"இல்லைம்மா நான் உங்களை டிராப் செய்கிறேன்" என்று பயந்து கூறிவிட்டு செல்ல அவனுடன் பயணமானாள். பயணம் கிட்டத்தட்ட ஆரம்பிக்க அவள் எங்கு இறங்கலாம் என யோசித்துக் கொண்டே இருந்தவள் கண்ணில் ஒரு பெரிய மருத்துவமனை பட அந்த மருத்துவமனை வாசல் முன்னே நிற்க சொன்னாள். "நீங்க இங்கேயே இருங்க நான் வந்துடறேன்" என்று கூறியவள் அந்த மருத்துவமனை முன்பக்கமாக உள்ளே நுழைந்து பின்பக்க வாயில் வழியாக வெளியே வந்தவள் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள். அதுவரை கட்டிக்காத்த கண்ணீர் அவளுக்கு அருவியாக கொட்ட என்ன வாழ்க்கை என்று நினைக்கத் துவங்கி விட்டாள்..
அவளுக்கு தற்பொழுது அவளது கணவனையும் வயிற்றில் வளரும் குழந்தையையும் தவிர வேறு உறவுகள் இல்லை. குழந்தை மட்டும் இல்லையென்றால் அவள் தன்னை மாய்த்துக்கொள்ள கூட தயங்கி இருக்க மாட்டாளோ என்னவோ அப்படியே கால் போன போக்கில் நடந்து நடந்து எங்கு செல்ல வேண்டும் என்று கூட அவளுக்கு தெரியவில்லை. ஆனால் எங்கேயாவது அவளுக்கு செல்ல வேண்டும் அப்படி செல்லும் வழியில் ஒரு இடத்தில் மட்டும் ஒரு போஸ்டர் அவளது வேதனையை மீண்டும் அதிகப்படுத்தியது.. அந்த டிரஸ்ட் பற்றிய போஸ்டர் தான் அது ..
அதில் நடுநாயகமாக அவளது கணவன் நிற்க கூடவே ஒரு பெண் இப்பொழுதுதான் சாதனாவை தெள்ளத்தெளிவாக பார்த்தாள் யாழினி.. தன் கணவனுடன் இருப்பதால் தானோ என்னவோ சாதனாவை தலை முதல் கால் வரை அவள் ஆராய்ந்தாள். சாதனாவை பார்க்கும்பொழுது அவளைவிட அழகாக இருப்பதாக தான் யாழினியின் கண்களுக்கு பட்டது. ஒரு வேளை அது தான் காரணமோ என அந்த சிறுமனது அப்படி நினைக்க சாதனா அவளைப்போல கர்ப்பிணியாக இருக்க அதை கண்டதும் மேலும் உடைந்து போனாள். " இதனால் தான் நீங்க என்னை வந்து பார்க்கலையா?? இப்படி ஒரு வாழ்க்கை உங்களுக்கு இருக்குது அப்படின்னு சொல்லி இருந்தா நான் உங்களை திருமணம் செய்து இருக்கவே மாட்டேன்" என்று எண்ணி அவளுக்கு அவளுடைய ஆசையை பற்றி அங்கு யாருமே கேட்கவில்லையே கேட்காமல் தானே அவர்களுடைய திருமணமும் நடந்தது என்று எண்ணியவள் அவனை பார்க்க மீண்டும் கண்களை கரித்துக் கொண்டு வந்தது..
மீண்டும் கால் போன போக்கில் அவள் நடக்க துவங்கினாள் எவ்வளவு தூரம் நடந்து இருப்பாள் என தெரியவில்லை. ஆனால் அவளது மனம் மிகுந்த பாரமாக இருந்தது அதை அகற்ற அவளும் பாடுபட அவளால் முடியவில்லை. அவளுக்கு அவளது கணவனை காண வேண்டும் அது எப்படி என தெரியவில்லை. வருபவர்களும் போறவர்களும் சாலையில் அவளை தான் பார்ப்பது போல அவள் நினைக்க அந்த நேரத்தில் அப்படியே அவளுக்கு மயக்கம் வருவது போல இருக்க, நேற்றிலிருந்து அவள் சரியாக உணவு கூட அருந்தவில்லை எப்பொழுது இந்த விஷயத்தை அவள் பார்த்தாலோ அந்த விஷயம் அவளை வெகுவாக பாதித்து இருந்தது. அப்படியிருக்க இன்று யார் கண்ணிலும் படாமல் இருக்க இரவெல்லாம் உறங்காமல் காலையில் நேராக எழுந்து வந்தவள் இவ்வளவு தூரம் நடந்தும் அவளுக்கு களைப்பாக இருக்க அப்படியே அவளுக்கு தலையெல்லாம் சுற்றுவது போல மயக்கம் வருவது போல எல்லாம் இருந்தது விழுந்து விடுவேன் என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் அவள் மயங்கினாள்.
அப்பொழுது அவளை எதிரே வந்த யாரோ ஒரு பெண்மணி தாங்கிப் பிடிக்க அவளோ அவர் மீது சாய்ந்தாள். அவளுக்கு அந்தப் பெண்மணி யார் என்று சரியாக தெரியவில்லை ஆனால் அவரோ, "யாழினி".. என்று கேட்டுக்கொண்டே அவர் தாங்கிப் பிடிக்க யாழினிக்கு சரியாக யார் என்று தெரியவில்லை. கண்கள் இருட்டிக் கொண்டிருக்க அந்த பெண்மணி வேகமாக தன் கையில் உள்ள தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தார் ..
அப்பொழுது கண்கள் சரியாக தெரிய அந்த பெண்ணை பார்த்ததும் யாழினி மெல்ல சிரித்து, "அக்கா" என்று கூற அந்தப் பெண்மணியும் உரிமையாக," எங்கடி போன உன்னை எங்க எல்லாம் தேடினேன் தெரியுமா உன்னுடைய பாட்டி நல்லா இருக்காங்களா?? ஏதோ ஒரு பெரிய வீட்டுக்கு வேலைக்கு போறேன் சொல்லிவிட்டு உன் பாட்டி உன்னை அழைச்சிட்டு போனாங்க. இப்போ எப்படி இருக்க என்னடி எத்தனை மாசம் ஆச்சு உன் புருஷன் எங்க இப்போ எங்க வேலை பார்த்துட்டு இருக்க??" என்று கேட்க,
"மாரியம்மா அக்கா, மொத்தமா இத்தனை கேள்விகள் கேட்கிறீர்களே நான் இதுக்கெல்லாம் பதில் சொல்ல போறேனான்னு தெரியல ஆனால் இப்போ என்கிட்ட எதுவுமே கேட்காதீங்க. பாட்டி செத்துப் போச்சு எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு ஆனால் இப்போ யாரும் இல்லை தயவு செஞ்சு அதை பத்தி கேக்காதீங்க. எனக்கு ஒரு வேலை வாங்கி கொடுங்க அக்கா எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல எனக்கு ரொம்ப பசிக்குது அக்கா" என்று கூற அதைக் கேட்டதும் மாரியம்மா உடைந்தார்..
"ஏய், என்னடி இப்படி சொல்ற சரி நான் எதுவும் கேட்கல இந்தா இந்த உணவை சாப்பிடு" என்று தன் கையில் உள்ள உணவை கொடுத்தவர் அப்பொழுதுதான் யோசித்தார் தான் வேலை செய்யும் வீட்டிற்கு இவளை அழைத்து செல்லலாம் இவளை பார்த்தால் யாரும் இல்லாமல் இருப்பது போல அவருக்கு தோன்ற இவளை தனியே விட மனமின்றி, " நான் வேலைக்கு தான் போயிட்டு இருக்கேன் நீ என்கூட வேலைக்கு வரியா ??" என்று வினவ அவளும் சரி என்று தலை ஆட்டினாள்..
ஏனெனில் இந்த இடத்திலிருந்து அவளுக்கு எங்கு செல்லவேண்டும் என தெரியவில்லை. ஏதோ ஒரு தைரியத்தில் வெளியே வந்துவிட்டாள் ஆனால் எங்கு பார்த்தாலும் அவளுக்கு அவளுடைய கணவனின் புகைப்படமே கண்முன் வந்து போக அதிலிருந்து எப்படி தன் மனதை மாற்றுவது என தெரியவில்லை. மேலும் தன் கணவனை கண்டுபிடிக்க வேண்டுமெனில் ஏதாவது ஒரு இடத்தில் தங்க வேண்டும் அதுவும் பாதுகாப்பான இடத்தில் தங்க வேண்டுமே என எண்ணி அவள் சரி என தலையாட்ட மாரியம்மாவுடன் அங்கிருந்து கணவன் இருக்கும் இடத்திற்கு கணவனை தேடி பயணமானாள் யாழினி கணவன் அங்குதான் இருக்கிறான் என்பது கூட தெரியாமல்..
