Share:
Notifications
Clear all

அதிகாயன் 20

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  


அத்தியாயம் : 20

அதில் மூவரையும் ஆளுக்கு ஒரு திசையில் போட்டான். இவளை மட்டும் அடுக்களையே சரணம் என்று போட்டு விட அவளால் சுத்தமாக வேலை செய்ய முடியவில்லை. அவளது பட்டுடல் பார்த்து பார்த்து அவள் சேமித்து வைத்த அவளது அழகுகள் எல்லாம் போக வாழ்க்கையே வெறுத்த நிலைக்கு ஆளாகிட என்ன உண்டாலும் அவள் உடல் வதைப்பட அவளால் முடியவில்லை. இவன் என்ன என்னை தீர்த்து விடுவது அந்த உரிமையை கூட இவனுக்கு கொடுக்க கூடாது என்றெண்ணி அவளே தன்னை தீர்த்து கொள்ள முடிவெடுக்க விட்டு விடுவானா அவன் அவளை தடுத்து நிறுத்தினான்...

"செத்துப் போயிடலாம்னு நினைக்கிறியா அந்த உரிமையை கூட நான் உனக்கு குடுக்க மாட்டேன் கவலப்படாத சீக்கிரம் செத்துடலாம் உன்னை அனுப்ப தானே நான் வந்து இருக்கிறேன்" என்று அவளுடைய முடியைப் பிடித்து, " இனி எங்கேயாவது இதுபோல நீ செய்த அப்படினா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" என்று கூறிவிட்டு சென்றான் ராவணன்.

அந்த சமயம் பார்த்து தான் கர்ணா டிரஸ்ட் மூலம் படித்த பிள்ளைகள் எல்லாம் ட்ரஸ்ட் நிறுவனர் ஆன கர்ணா அதாவது ராவணனை சந்திக்க வந்திருந்தனர்..

அவனும் அவர்களை எல்லாம் உள்ளே அழைத்து அமரவைத்தவன், அவர்களிடம் விஷயத்தை கேட்டறிய அந்த கூட்டத்திலேயே கொஞ்சம் வயதான ஒருவர் வந்திருந்தார் அவர் தான் பேச துவங்கினார். "தம்பி இவங்க எல்லாம் உங்க ட்ரஸ்ட் மூலமா படிச்சு பெரிய ஆள் ஆனவங்க ஆனால் கடந்த ஒரு ஐந்து வருசமா நீங்க எதுவும் பண்ணலேயே தம்பி " என்று வருத்தத்துடன் கூற...

அவனோ அங்கே இருந்த அலங்கார பொருட்களை எல்லாம் துடைத்து கொண்டிருக்கும் தணிகாசலம் மற்றும் சதாசிவத்தை ஒரு பார்வை பார்த்தவன், மேலும் வந்தவர்களுக்கு காபி கொண்டு வந்து தந்தவளை பார்த்தவன் கைகளை முறுக்க... அவளோ அப்போதும் இதுங்களுக்கு எல்லாம் என்னை வேலை செய்ய வைக்கிறானே என்ற அகங்காரம் தான் அவளுக்கு இன்னமும் அவள் திமிரு அடங்கவில்லை இவனை எப்படி வீழ்த்தலாம் என்று தான் எண்ணி கொண்டிருக்க,

அந்த வயதான மனிதரோ, "அப்பா இருக்கும் வரை எல்லாம் சரியா தான் நடந்துட்டு இருந்தது ஆனால் இப்போ அப்படி இல்லை" என சாதனாவை பார்த்துக் கொண்டே கூற அதை கேட்டவனோ, " இனி எல்லாம் சரி பண்ணிடலாம்" என்று கூறியவன், "உங்களுக்கு என்ன வேணும்??" என்க...

"இது போல இன்னும் கொஞ்ச குழந்தைகள் உதவிகள் இல்லாமல் சிரமப்படுறாங்க உங்ககிட்ட வந்து இப்படி கேக்கிறது தவறு தான் ஆனாலும் உங்களுக்கு என்ன சிரமமோ தெரியல நீங்க இப்போ நிறுத்தி வைச்சு இருக்கீங்க. ஆனால் உங்களால முடிஞ்சா அவங்களுக்கு உதவி செய்யுங்க அவங்க எல்லாம் உடல் அளவில் வளர்ந்தும் மனதளவில் குழந்தையா இருக்காங்க. அவங்களை பார்த்துக்க ஒரு இடம் வேணும் அவங்க இருக்கிற இடத்தை காலி பண்ண சொல்லிட்டாங்க அவங்க அந்த இடத்தை விற்க போறாங்களாம்" என்று கூற...

அதை கேட்டவனோ, "அந்த இடத்தில இருங்க நான் பார்த்துகிறேன் இனி நீங்க கேட்ட உதவிகள் தங்கு தடையின்றி நடக்கும் " என்று கூற...

அதை கேட்டவர்களோ மிக்க மகிழ்ச்சியோடு செல்ல அவர்களுக்கு அவன் அளித்த வாக்குப்படி அவர்களுக்கு வேண்டிய உதவியை அவன் செய்தான்..

அதன் படி அந்த நிர்வாகிகள் குழு ஒரு விழா நடத்த திட்டமிட்டு அதற்கு ராவணன் மற்றும் அவனது மனைவி சாதனா வர வேண்டும் என்று கூற அவளை அழைத்துக் கொண்டு அந்த விழாவிற்கு சென்றான்..

அவன் அவளை மனுஷியாக மதிக்கவில்லை என்றாலும் அவள் வயிற்றில் வளரும் கருவிற்காக மட்டும் தான் அவளை உயிரோடு விட்டு வைத்திருப்பதாலும் வெளி உலகிற்கு இவள் அன்றோ அவனது மனைவி அப்போது இவளை அழைத்து கொண்டு செல்ல வேண்டுமே அதனால் அவளை அழைத்து கொண்டு செல்ல மிக நீண்ட நாள்களுக்கு பிறகு வெளி உலகை அவள் காண்கிறாள்..

அவனுக்கும் அவளுடன் வெளியே சென்றே ஆகவேண்டும் ஊராருக்கு கருணா இனியும் சாகவில்லை என்ற விஷயம் தெரிய வேண்டும் அப்படி இருக்க வெளியுலகத்துக்கு சென்றான். அவளுக்கு தான் வர விருப்பம் இல்லை யாராவது ஒருவரிடம் இவன் அவன் இல்லை என கூற காத்திருந்தாள் சாதனா. ஆனால் அவளது இமை கூட அவனை விட்டு அகல விடாதபடி அவன் பார்த்துக்கொண்டான். அந்த விழாவில் பங்கெடுத்த அவனையும் அவளையும் இணைத்து போட்டோக்கள் எடுக்கப்பட அது அடுத்த நாள் பேப்பரில் வெளிவந்தது.

அவன் எதிர்பார்த்தது போல அவன் மரணம் அடையவில்லை என்ற செய்தி நாட்டு மக்களுக்கும் தெரிவிக்க அனைவரும் அப்போ அவர் திரும்ப வந்துட்டாரா என்ற கேள்வியை கேட்க துவங்க அதற்கு ஆம் என்பது போல அவன் அந்த விழாவில் கலந்துகொண்டு கருணா இன்னமும் உயிரோடு இருக்கிறான் என்ற செய்தியை ஊராருக்கு பரப்பினான். அவன் எதற்காக வந்தானோ அதை அவன் செய்துக் கொண்டிருக்க அம்மையப்பன் எழுதி வைத்த உயில் படி அந்த சொத்து அவன் வசமே தங்கிவிட்டது.ஏனெனில் அவன்தான் நலமுடன் இருக்கிறானே அதுமட்டுமின்றி அவள் கர்ப்பமாக இருக்க பிறக்கப்போகும் குழந்தைக்கு தானே அனைத்து சொத்துக்களும் செல்ல இருக்கிறது தாயும் தந்தையும் வெறும் பாதுகாவலர்கள் தானே என்று காய்களை மிகத் தெள்ளத் தெளிவாக நகர்த்திக் கொண்டிருந்தான்.

இதையெல்லாம் செய்தவன் ஒன்றும் அறியாத ஒரு சிறு பெண்ணை பற்றிய எண்ணமே இல்லாமல் இருந்து விட்டானோ என்னவோ இவன் நினைவாகவே வாடிக் கொண்டிருப்பதை அவள் அவன் நினைக்க மறந்து விட்டானோ என்னவோ???



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top