Share:
Notifications
Clear all

அதிகாயன் 2

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் 2

"என்ன தான் பெரிய கம்பெனி பார்த்து நடத்தினாலும் இன்னும் இது போல சில்லி திங்ஸ் மட்டும் உன்னை விட்டு போகல" என்று சது கூற அவளது கையை பிடித்துக் கொண்டே காரை லாவகமாக ஓட்டிய ராகவ், " சது எப்போவும் பிசினஸ் மட்டுமே பார்த்துட்டு இருந்தா போதுமா இது போல சிலதும் வேண்டாமா??? " என்று கூறியவன் அவளது கையை தூக்கி அவனது உதட்டின் அருகே கொண்டு சென்று தன் இதழை பதிக்க அவளோ வெட்கம் கொள்ள அவளது வெட்கத்தை கண்டு மயங்கியவன், "சது சத்தியமா இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருந்து என்னை கொல்ற எப்போவும் நீ போடுற ஜீன்ஸ்ல இருந்து சேலைக்கு மாறியது தான் காரணமான்னு தெரியல உன்னை பக்கத்தில் இருந்து ரசிக்கணும்னு தான் உன்னை அழைச்சிட்டு வந்தேன்" என்று கூற அவளோ, "எத்தனை நாள் காதல் ராகவ் நீ எனக்காக என்ன எல்லாம் செய்து இருக்க எப்படி எல்லாம் காத்து இருந்து இருக்க நீ என்னோட கிப்ட் ராகவ்" என்று மேலும் அவள் மென்மையாக வெட்கப்பட நலங்கு வைத்த அவளின் சிவந்த முகத்தில் மேலும் இளமஞ்சள் நிறத்தில் அவள் இருக்க அதில் சாலையின் இரவு விளக்கின் ஒளியும் பட்டு மேலும் அவள் அழகாக மின்ன அவளது கொள்ளை அழகில் மயங்கியவன், "ஓ மை சது" என்றவன் யாரும் பார்க்காத ஒதுக்குப்புறத்தில் வாகனத்தை நிறுத்தினான்...

எங்கு நிறுத்தினான் எங்கு இவர்கள் வந்து இருக்கிறார்கள் என இருவரும் அறியர்... கார் போன போக்கில் அவர்கள் பயணப்பட அப்படியே பேசிக் கொண்டே சென்றதில் ஏதோ ஒரு இடத்துக்கு வந்து சேர்ந்து இருந்தனர் அதை கூட அவர்கள் இருவரும் கவனிக்கும் நிலையில் இல்லை. ஆனால் ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக தான் இருவரும் வந்து இருக்க வேண்டும் அவர்களை தவிர வேறு எந்த வாகனமும் அங்கு இல்லை என்ற நிலையில் அந்த நேரம் பார்த்து சாலையில் எரிந்துக் கொண்டிருந்த இரவு விளக்கு அணைந்தது அதை கவனித்த சாதனா, "ராகவ், நாம எங்கே இருக்கோம் ரொம்ப அவுட்டர்ல வந்துட்டோம் போல போலாமா டா நம்மளை தேட போறாங்க" எனவும்...

அவனோ அவளை பார்த்து முறைத்து, " நாம என்ன குழந்தைங்களா சது நம்மளை தேட நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆஹ் இரு யாரும் தேட மாட்டாங்க உனக்கு பயமா இருந்தா சொல்லு. நான் இப்போவே கூப்பிட்டு நாளைய என் பொண்டாட்டி இன்றைய என் காதலி நேற்றைய என் தோழி இப்போ என் கூட தான் இருக்கா அவளுக்கு என் கூட இருக்க தான் பிடிக்குமாம்ன்னு சொல்லிடறேன் போதுமா என்னை ஒரு கிஸ் பண்ண விடு டி கைக்கு மட்டும் தான் கிஸ் பண்ணி இருக்கேன்" என்றவன் அவள் அருகே வந்து தன் இதழை தீண்ட போக அவன் என்ன செய்ய போகிறான் என்பதை உணர்ந்தவள் கண்களை மூடி அவனது முத்தத்திற்கு தயாராக இருக்க,

பின்னால் ஏதோ ஓரிரு வாகனங்கள் பயங்கர வெளிச்சத்தில் வந்துக் கொண்டு இருக்க அவர்களின் கார் வெளிச்சம் அவனின் கண்ணை கூச கண்களை மூடி கொண்டே அவள் இதழ் நோக்கி குனிய அவளும் அவன் அவள் அருகே வருவதை பார்த்து கண்களை மூடி கொள்ள அடுத்த நொடி டமார் என்ற சத்தம் சாதனாவின் செவிப்பறையை கிழித்துக் கொண்டு சென்றது. அவளோ கண்களை திறந்து பார்க்க அவளை சுற்றியும் பெரிய பெரிய வாகனங்கள் நின்றுக் கொண்டு இருக்க,

அவள் முகத்தில் ஏதோ வெள்ளம் போல ஒழுக இங்கே அவளது மார்பில், " சாதனா".. என்ற கடைசி குரலோடு அவள் மீதே விழுந்து சரிந்தான் ராகவ்..

என்ன நடந்தது என்று அவளுக்கு சரி வர தெளிவாக புரியவில்லை ராகவ் அவள் மீது விழுந்து இருக்கிறான் என்று மட்டும் அவளுக்கு மிக சரியாக விளங்க அவளோ, " ராகவ் ராகவ் என்னாச்சு??" என்று அவனை தன்னிடம் இருந்து பிரித்து அவள் கன்னத்தை தட்டி எழுப்ப அவனோ எழவில்லை கண்களை மூடி அவளை முத்தமிட வந்தவன் நிரந்தரமாக தன் கண்களை மூடி இருந்தான் என அவள் அணிந்து இருந்த மஞ்சள் நிற சேலை சற்று முன் அவன் ரசித்த அழகு எல்லாம் அவளது ராகவின் ரத்த வெள்ளத்தில் மிதக்க சாதனா யார் இந்த பாவத்தை செய்தது என்று பார்க்க அங்கே அவளை சுற்றி இருந்த வாகனங்கள் அவளை சுற்றி வட்டம் போட்டு கொண்டிருந்தன..அதாவது அவள் அமர்ந்து இருந்த வாகனத்தை வட்டம் அடிக்க,

யாரிவர்கள் என்று அவள் பார்க்கும் போதே இறுதியாக தன் உயிரை விட்டு கொண்டிருந்த ராகவின் உடல் இலேசாக துடித்து அவளது விரலை இலேசாக கடைசியாக தொட்டு தீண்ட அவளோ துடித்து, "ஹே என்னை பார் ராகவ்" என்றவள் இங்கு இருக்கும் வாகனத்தில் வந்தவர்கள் தான் அவளது ராகவை கொன்று இருக்க வேண்டும் என்றவள் நொடி பொழுதில் அவளது போனை எடுத்தவள், அவள் வீட்டுக்கு அழைக்க போக அதற்குள் அவளை சுற்றி கொண்டிருந்த காரில் இருந்து இருவர் இறங்க... அவர்கள் முகத்தை சரியாக அவளால் காண முடியவில்லை.

ஆனால் ராட்சத ரூபத்தில் இருந்த அவர்கள் இருவரும் அவளை நெருங்கி அவள் அமர்ந்து இருந்த கார் கதவை திறக்க அவளுக்கு பயம் எட்டி பார்க்க அவள் மீது அவள் காதலனின் சடலம் அவளால் அவனை மாற்றி படுக்க வைத்தால் மட்டுமே அவளால் அங்கிருந்து தப்பிக்கவோ ஏதாவது செய்ய முடியும் அவள் யோசிக்கும் முன் காரில் இருந்து இறங்கிய இருவர் அவளை தூக்கி இருந்தனர். "யார் யார் நீங்க என்னை விடுங்க என்னை விடுங்க யார் நீங்க எதுக்காக என்னோட ராகவை கொன்னீங்க உங்களை நான் சும்மா விட மாட்டேன் ஹெல்ப் ஹெல்ப்" என்று அவள் கத்த யாருமே அவளை திரும்பி பார்க்கவில்லை என்பதை விட எந்த வாகனமும் அங்கு வரவில்லை என்று தான் கூற வேண்டும்..

இவளை தரதரவென இழுத்து செல்ல அவளோ, " என்னை விடுங்க" என்று கத்த அவளை ஒரு காருக்குள் அவள் கதறுவதை பொருட்படுத்தாமல் உள்ளே தள்ள அந்த காருக்குள் யார் இருக்கிறார்கள் என்ன நடக்கிறது என அறியும் முன்னே யார் மீதோ அவள் மோத அவள் அருகே அமர்ந்து இருந்தவனின் சட்டையை பிடித்து, " யார் நீ ??" என்று சாதனா வினவ ஓங்கி ஒரு அறை அவள் கன்னத்தில் இடியென விழுந்தது அந்த அடியின் பயனாய் அவள் மயங்க கார் அந்த நகரத்தை விட்டே பறந்தது..

இங்கே தணிகாசலம் மற்றும் சதாசிவம் இருவரும் எங்கே மணமகன் மற்றும் மணமகள் என்று தேட அவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் வெளியே சென்றது தெரியவர விஷயம் அறிந்து அவர்கள் அதிர்ந்து நிற்கும் போது தான் ராகவ் இறந்த செய்தி தெரிந்ததும் தணிகாசலம் நொறுங்கி போனார்...

மேலும் சாதனாவை காணவில்லை என்றும் செய்தி வர கடவுளே இங்கே என்ன நடக்கிறது என நொந்து போய் இருக்க அங்கே அவளோ கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு இருட்டு அறைக்குள் இருந்தாள் சாதனா...அவள் முகத்தில் பெண் என்றும் பாராமல் அவளை அடித்ததில் அவள் உதடு கிழிந்து ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது... அவளுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. அவள் மனமும் உடலும் இரு மணி நேரத்தில் வெகுவாக சோர்ந்து போயின..

அவளுக்கு என்ன நடந்துக் கொண்டு இருக்கிறது என்றே விளங்கவில்லை. அவள் என்ன கேட்டாலும் யாரும் அவளுக்கு உரிய பதிலை கொடுக்கவில்லை..அவள் கத்தியும், கதறியும் யாரும் அவளுக்கு செவி சாய்க்கவில்லை தொடர் கத்தலில் அவளது தொண்டை வறண்டு அவளுக்கு தண்ணீர் தேவைப்பட "தண்ணீர் தண்ணீர்" என முனகினாள் சாதனா..அதை கூட பொருட்படுத்தாமல் அவள் படும் வேதனையை கண்டு ஒருவன் ரசித்துக் கொண்டு இருந்தான்..அவனே விதேஷ் ராவணன் ஆவான்...அவனின் குரூர பார்வையே கூறியது இவள் இன்னும் அவனிடம் அனுபவிக்க போகிறாள் என்று அவளுக்கு உணர்த்த கூட அவளுக்கு அங்கு யாரும் இல்லாதது அவள் செய்த துர்பாக்கியம் தானோ????..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top