அதிகாயன் 19
அத்தியாயம் : 19
"கர்ணா ?? " என்று தணிகாசலம் மற்றும் அவரது மனைவி மங்கலம் கூற அவனும் அதைக் கேட்டு பலமாக சிரித்தான்..
"ஹா ஹா என்னது கர்ணா வா நான் உனக்கு எமன் டா "
"யாரு நீ ?? நீ கர்ணா இல்லை" என்று சரியாக அவனது தோரணையை பார்த்து தணிகாசலம் கூற...
"சரியா சொல்லிட்டியே ஆமாம் நான் கர்ணா இல்ல அப்போ நான் யாரு??" என்ற குழப்பமான கேள்வியை அவள் முன் வைக்க அவனோ, "அதுதான் சொன்னேனே உனக்கு எமன் ன்னு" என்று கூற, "இங்கே நடக்கிறது எல்லாம் பார்த்தா நீ பழி வாங்கத்தான் வந்து இருக்க அப்படின்னு எனக்கு நல்லா புரியுது ஆனால் எதற்காக வந்து இருக்க அப்படின்னு தெரியல நீ கர்ணா இல்லை அப்படினா நீ யார்?? " என்க...
"நான் விதேஷ் ராவணன்" என்க அவனது தோரணையே அவருக்கு மிகுந்த குழப்பத்தை கொடுக்க,
"என்ன யோசிச்சு மூளை குழம்பிடுச்சா இதோ இந்த கையால தான் உன் மகன் செத்தான்" என்க...
"என்ன சொல்ற?? என் மகனை கொல்ல உனக்கு என்ன தைரியம் இருக்கணும் எதுக்காக இதை செய்த???"
"நீ எதுக்காக அம்மையப்பன் மற்றும் கர்ணாவை கொன்னியோ அதுக்காகத்தான் நான் உன்னுடைய மகனையும் இதோ சதாசிவத்தின் மனைவியையும் கொன்னேன் அடுத்த லிஸ்டில் இருக்கிறது நீங்க எல்லாரும் தான்" என்க...
"நானா இது என்ன புது கதை?? தம்பி ஏதோ சினிமா பார்த்துட்டு வந்திருப்பார் போல நாங்க எதுக்காக எங்க நண்பனை கொலை செய்யணும் நாங்க எடுத்து வளர்த்த எங்களுடைய பிள்ளையை நாங்க எதுக்கு கொல்லணும்???" என்று தணிகாசலம் கூற...
"ஓ புது கதை மாதிரி இருக்கா என்ன??
உனக்கு எதுவுமே தெரியாது அப்படி தானே?" என்றவனுக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் போக, "உன் பையன் எப்படி செத்தான்ன்னு நியாபகம் இருக்கா???இல்லை நான் அதை மறுபடியும் தெளிவு படுத்தவா??" என்றவன் நக்கலாக சிரிக்க,
அவருக்கு ஆத்திரம் கிளம்பி, "என் பையனை கொன்னது நீ தானா உனக்கு என்ன கொழுப்பு இருக்கும்" என்று அவனை அடிக்க வர அவரது மனைவியோ அதை கேட்டு, "இந்த படுபாவியை சும்மா விடாதீங்க தவம் இருந்து பெத்த ஒத்த மகனை கொன்னுட்டான் பாவி அவனை கொல்லுங்க. என் கண் முன்னாடி அவன் உயிரோட இருக்க கூடாது" என்று கூற...
அதைக்கேட்ட அவனும் நக்கல் பார்வையுடன், "ஓ ஒரு உயிரை பறித்த நான் உயிரோடு இருக்கக் கூடாதா நல்ல விஷயம் தான் அப்போ ஒண்ணுமே செய்யாம செத்துப்போன அவங்கள பத்தி என்ன சொல்ற உன் பையன் செத்துட்டான் அப்படின்னு இந்த குதி குதிக்கிற கொன்னது நான் தான்னு நானே சொல்லவும் உனக்கு உன் கண்ணு முன்னாடி உன் புருஷன் கையால நான் சாகணும் அந்த அளவுக்கு வெறி வருது இந்த நொடி நான் உயிரோட இருக்கக்கூடாது என்கிற ஆத்திரம் உனக்கு வருது அப்படித்தானே??? அந்த ஆத்திரத்தை குறைத்து விடுவோமா வேணும்னா உன் பையன் கிட்ட போய் ஒரு ஹாய் சொல்லிவிட்டு வா உன் புருஷன் உன் பின்னாடியே வருவான்" என்று கூறியவன் சற்றென்று எழுந்து நின்று தன்னருகே சண்டைக்காக நின்றுக் கொண்டிருக்கும் தணிகாசலத்தின் அருகே வந்த ராவணன் அவனது கையில் இருக்கும் துப்பாக்கியை எடுத்து தணிகாசலத்தின் கையில் நொடிப்பொழுதில் வைத்தவன் அவரது கையாலேயே ஒரு அழுத்து அழுத்தினான்..
அடுத்த நொடி மங்கலத்தின் மீது தோட்டாக்கள் பாய்ந்தது நொடிப்பொழுதும் யோசிக்கவில்லை. அவரோ தோட்டாக்கள் பாய்ந்து அடுத்த நொடி கீழே சரிந்து துடிதுடித்து இறக்க இரண்டு வினாடிகளில் என்ன நிகழ்ந்தது என்று கூட தெரியாமல் கண்முன்னே தன் மனைவி சரிந்து விழுந்து கிடப்பதை கண்ட அவர் திணறினார் அவருக்கு கை கால்கள் நடுங்க, "டேய், என்னடா பண்ணிட்ட ஐயோ போய் விட்டாளே??" என வார்த்தைகள் துடிக்க அவர் நன்கு அதிர இருதய கோளாறு காரணமாக அவளை காப்பாற்ற எண்ணியவருக்கு அவரது இருதயத்தை துளைத்துக்கொண்டு குண்டடி பாய்ந்ததும் அந்த இருதயத்தில் இருந்து ரத்தம் பீறிட அதைக் கண்டதும் அவர் அழுது புரள அதைக் கண்ட அவனோ நொடிப்பொழுதும் தாமதிக்காமல், " என்ன தணிகாசலம் இப்போ எல்லாம் ஞாபகத்துக்கு வருதா??" என்று கூறினான்..
அவரோ வார்த்தைகள் அற்று மூர்ச்சையாகி அவனை அதிர்ச்சியாகி பார்க்க அவனோ, " என்ன பார்க்குற இத்தனை நாள் எதுக்காக நீங்க எல்லாரும் அலைஞ்சு திரிஞ்சிங்களோ இனி அந்த வாழ்க்கை உங்களுக்கு கிடைக்காது இந்த பணம் சுகம் சுகத்துக்காக தானே நீங்க எல்லாரும் ஒரு அப்பாவியை அடித்து கொன்னிங்க இப்போ 3 விக்கெட்டை போட்டாச்சு அடுத்து மூன்று விக்கெட் நீங்கதான் அதுவும் மெயின் விக்கெட் நடந்ததற்கு எல்லாம் காரணமான முக்கியமான விக்கெட்" என்று கூற அவர்கள் மூவருமே அதிர்ந்தனர் அதில் அவள் மட்டும் இறுமாப்பாக இருந்தாள்..
அவளது திமிரை அவனுக்கு அடக்கியே ஆக வேண்டும் அவளது கண்கள் இங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயத்தை காணும் பொழுதும் அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நிற்க அதையும் அவனது கண்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருந்தது. இருதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெறமுடியாமல் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த தணிகாசலத்தின் மனைவி வரும் வழியிலேயே உயிரை விட்டார் என்ற செய்தி ஊர் முழுதும் பரவி அவரது ஈமக்கிரியை அவர் மூலமாகவே செய்து முடித்து அதே வீட்டில் சிறை வைத்தான்.
இவர்கள் மூன்று பேரையும் மூன்று அறைகளில் அடைத்து வைத்தான் அவர்கள் மூவரையும் ஒன்று சேர விடாமல் அவனும் அவனது ஆட்களும் பார்த்துக்கொண்டனர் வெளியே எந்த செய்தியும் கசிய விடாமல் பார்த்துக் கொண்டான். இவனால் அவனது முகத்தை கூட காட்டாமல் இவர்களையெல்லாம் கொலை செய்திருக்க இயலும். அதற்குரிய திறமை அவனிடத்தில் உண்டு. ஆனால் அவனுக்கு அவர்களை அணுஅணுவாய் சித்திரவதை செய்ய வேண்டும் அதிலும் இறுதியாக மீதம் உள்ள மூவரை வதைத்தே தீரவேண்டும் என எண்ணினான் ராவணன்..
