Share:
Notifications
Clear all

அதிகாயன் 18

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் : 18

"நானா..? உன் பையன இதோ இந்த கையாலதான் கொன்னேன் போதுமா விளக்கம் நீ என்கிட்ட பேசி சமயம் வேஸ்ட் பண்ணிட்டு இருந்த அப்படினா உன் பொண்டாட்டியோட உடலோடு தான் நீ என்னை சந்திக்க வேண்டியிருக்கும் இல்ல நான் பேசுறத முழுமையா கேட்ட அப்படினா உன் பொண்டாட்டியோட உயிர் கொஞ்ச நாள் உன் கிட்ட இருக்கும்" என்று கூற அதைக் கேட்டவரோ அதிர்ந்தார்..

அவன் கூறியது போல அவரது வங்கி கணக்கை எப்போதே முடக்கி இருந்தானே அவரால் இனி இந்தியா திரும்பி வரத்தான் முடியும் மேலும் தன் மகனை கொன்றவன் இவ்வளவு திமிராக பேசும் பொழுது அவன் யார் என அறிந்துக் கொள்ள வேண்டாமா மேலும் சதாசிவம் ஏதோ இக்கட்டில் இருப்பது போல அவருக்கு தோன்ற நொடிப்பொழுதும் தாமதிக்காமல் தன் மனைவியை அங்கே இருந்து டிஸ்சார்ஜ் செய்து கொண்டு தாயகம் கிளம்பினார். அதற்கு இடையே மூச்சுத்திணறலால் திருவாளர் சதாசிவத்தின் மனைவி இறந்துவிட்டார் என்ற செய்தி நாடறிய எல்லோரும் வந்து ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். ஆனால் அவரால் யாரிடமும் பதில் பேச முடியாத சூழ்நிலை ஏனெனில் மகளைத்தான் பிணைக்கைதியாக கைது செய்து வீட்டு சிறையில் அடைத்து வைத்திருந்தானே..

ஏன் இவர் எங்கேயாவது வாயை திறந்தால் அடுத்த நொடி அவளது வாய்க்குள் தோட்டாக்கள் பாயும் என எச்சரித்து இருந்தானே மகளின் உயிரை காப்பாற்ற அவர் அமைதியாக இருந்தார். மேலும் ஒரு சிலர் ராவணனை கண்டு, "உங்க மருமகன் திரும்பி வந்துட்டாரா இறந்துட்டான் சொன்னீர்களே??" என்று வினவ, " ஆமாம் அவர் திரும்பி வந்துட்டார்" என்று மட்டும் கூறி தன் பேச்சை நிறுத்திக் கொண்டார் சதாசிவம் ..

சாதனாவை கிட்டத்தட்ட அடைத்து வைத்திருந்தான் அவள் வயிற்றில் உள்ள கருவுக்கும் மட்டும் எதுவும் ஆகாமல் இருக்க கண் முன்னேயே தன் தாயை கொன்றவனிடம் இப்படி மாட்டி கொண்டோமே இதில் இருந்து எப்படி தப்பித்து கொள்வது என எண்ணி வெறி பிடித்தவள் போல அமர்ந்து இருக்க அவள் வயிற்றில் இருக்கும் கரு வேறு அவளை எட்டி உதைத்தது..

அது வேறு எரிச்சலை கொடுக்க முதலில் ராகவ் இப்போது அவள் தாய் எல்லாம் இவனது வேலை தான் எப்படி எப்படி என அவள் யோசித்து கலைத்து தான் போனாள் சாதனா...

சதாசிவம் நொறுங்கி போய் இருந்தார் என்றே கூற வேண்டும்...கண் முன்னே தன் மனைவி துடிப்பதை அவரால் கேட்டு கொண்டிருக்க முடியவில்லை அநியாயமாக கொன்று விட்டானே என எண்ணியவருக்கு தான் இது போல தான் ஒரு உயிரை கொன்றோம் என எண்ண தோன்றவில்லை தனக்கு நடக்கும் வரை எல்லாம் வேடிக்கை தானே இந்த நிலை கெட்ட மனிதர்களுக்கு அவர்களுக்கு வரும்பொழுது தானே வேதனையும் வருத்தமும் எழும்...

அதை தான் அவர் செயல்படுத்தி கொண்டிருக்க இவன் விட்டு விடுவானா இதோ தணிகாசலம் அடுத்த பிளைட்டை பிடித்து தன் உடல்நிலை சரியில்லாத மனைவியை அழைத்துக்கொண்டு வேகமாக அவரது வீட்டிற்கு வர அங்கு வீட்டு வாயில் அடைக்கப்பட்டிருந்தது. என்னவென்று விசாரிக்க அவரிடம் வேலை பார்த்த காவலாளி, "ஐயா நீங்க வந்தா உங்கள சதாசிவம் ஐயா வீட்டுக்கு வர சொல்லி இருக்காங்க உங்கள இந்த வீட்டுக்குள்ள அனுமதிக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க??" என்று கூற, "யார் கிட்ட பேசிட்டு இருக்கேன்னு தெரியுதா??" என்று காவலாளியை திட்டினார் தணிகாசலம்...

காவலாளியும், " ஐயா எனக்கு கொடுத்த வேலையை தான் நான் செய்யறேன் நீங்க மேற்கொண்டு ஏதாவது என்கிட்ட கேள்வி கேட்டா உங்கள அடிக்கவும் சொல்லி இருக்காங்க ஐயா" என்க...

" யாருடா சொன்னது ??" என்று வினவ,

"இந்த வீட்டு முதலாளி தான் ஐயா" என்று கூறிவிட்டு தன் வேலை முடிந்தது என்பதுபோல அவரது வீட்டின் கதவை அடைத்துக் கொண்டு உள்ளே சென்று தாழிட்டுக் கொண்டான் அந்த காவலாளி. இங்கு என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்று மிகுந்த எரிச்சலில் சதாசிவத்தின் வீட்டை தேடி சென்றார் தணிகாசலம் அவரது மனைவிக்கு அவரது மகன் இறந்தது முதல் எதிலும் நாட்டம் இல்லாமல் இருந்த மங்கலம் இறுதியில் இருதய நோயின் பிடியில் சிக்கிக் கொண்டார்.

மருத்துவம் பார்த்து சரி செய்ய வேண்டிய அளவில் தான் இருக்கிறார் கைமீறி போனால் மட்டும் தான் அவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்ற நிலையில் அவர் இருக்க முன்னெச்சரிக்கையாக தனக்கு தன் மனைவி மட்டுமே இன்னும் இருக்கிறார் என்பதை புரிந்துக் கொண்ட தணிகாசலம் மனைவியை அழைத்துக் கொண்டு அமெரிக்கா செல்ல மருத்துவமனையில் அனுமதித்து ஆபரேஷன் நடக்க இருக்கும் தருவாயில் தான் இப்படி பணப் பிரச்சினை காரணமாக அவர் திரும்பி வர மேலும் அவர் மகனை கொன்ற ஒருவன் அவருக்கு சவால் விடவும் மேலும் அவருக்கு கட்டுக்கடங்காத கோபத்தில் திளைத்த அவர் வீட்டுக்கு வந்ததும் அவரது வீட்டு வாசலில் கூட அவரை அவரது காவலாளி உள்ளே விடாமல் தடுக்க எல்லாம் சேர்ந்துக் கொண்டு ஆத்திரத்தில் சதாசிவத்தின் வீட்டிற்கு சென்றார்..

அங்கே வழிநெடுகிலும் சதாசிவத்தின் மனைவியின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்க என்னது பார்வதி இறந்து விட்டாரா என்ற அதிர்ச்சி செய்தியோடு என்னதான் இங்கு நடந்துக் கொண்டிருக்கிறது என்று புரியவும் இல்லாமல் அவர் சதாசிவத்தின் வீட்டுக்குள் நுழைந்தார். அவரை வெகுவாக காக்க வைக்காமல் அவர் நுழைந்ததும் அந்த வீட்டின் பெரிய கதவு அடைத்து கொண்டது. மேலும் அவருக்கு அந்த வீடு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது ஏதேதோ மாறியது போல அவருக்கு தோன்ற என்னதான் ஆகிறது என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய வீட்டுக்குள் தன் மனைவியுடன் உள்ளே நுழைந்தார் தணிகாசலம் அவரது மனைவியும், " என்னங்க இதெல்லாம் பார்வதி இறந்துவிட்டாரா போனவாரம் தானே நான் பேசினேன்??" என்று தன் கணவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே வர, "பொறுமையா இரு மங்கலம் எனக்கும் ஒன்னும் புரியல என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்" என்று தன் மனைவிக்கு ஆறுதல் கூறிக்கொண்டு அந்த வீட்டுக்குள் நுழைந்தார் தணிகாசலம் அடுத்தது அவருக்கு தான் என்பது அவருக்குப் புரியவில்லை யாரது என்று தெரிந்து கொள்ள நுழைந்தார் தணிகாசலம்..

அங்கு மனைவி இறந்து இரண்டு நாள் கூட முழுதாக முடியவில்லை.ராவணன் குடுத்த வேலையாக அவர் அந்த வீட்டின் காவல் நாயை குளிப்பாட்டி கொண்டு இருக்க அதைக் கண்ட தணிகாசலம் அதிர்ந்தார். "என்ன சதா நீ இதையெல்லாம் செஞ்சுட்டு இருக்க??" என்று கேள்வி எழுப்பிக் கொண்டே செல்ல பதிலேதும் சொல்லாமல் அவர் தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்க அதுவே அதிர்ச்சி என்றால் அந்த முழு வீட்டையும் குனிந்து துணியால் துடைத்து கொண்டிருந்தாள் சாதனா பார்க்க வேலைக்காரி போல தோற்றத்துடன் தனது ஆறுமாத வயிற்றை பிடித்தபடி அமர்ந்து துடைத்துக்கொண்டு இருக்க அவளைப் பார்த்து, " என்னம்மா என்ன கோலம் இது??" என்று அதிர்ந்தார் மங்கலம். அவளோ பார்வையாலேயே சுட்டெரித்து அவன் இருக்கும் திசையை காட்ட அங்கே அந்த ஒற்றை சோபாவில் சிம்ம சொப்பனமாக சிங்கம் போல அமர்ந்திருந்தான் ராவணன்..

அவனைக் கண்டதும் அதிர்ந்த தணிகாசலம் "கர்ணா" என்க அவரைப்பார்த்து கோணல் புன்னகையை உதிர்த்தான்..

" ராவணன் வெல்கம் டு மை ஹோம் மிஸ்டர் அண்ட் மிஸஸ் தணிகாசலம்" என்று கர்ஜனை ஒலிக்க சிரித்தான். ராவணன் அவனது ஒலியே அவருக்கு அச்சுறுத்தலாக இருக்க அவரது குழப்பமான முகத்தை பார்த்து மேலும் அந்த வீடே அதிரும் படி சிரித்தான் அவன்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top