அதிகாயன் 17
அத்தியாயம் : 17
" நீ ராவணன் ஆஹ் அப்போ கர்ணான்னு சொன்னது??" என்று அவள் அவன் அடித்த அடியிலும் எழுந்து நின்று அவள் வினவ...
"நான் சொல்லல நீ தான் சொன்ன" என்றான் அவன்..
" அப்போ நீ யார்" என்க...
" உனக்கு எமன் டி" என்று அவன் கூற அவளோ குழப்பமாக பார்க்க அதற்குள் அந்த அடுக்களைக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பார்வதி கத்தி கத்தி தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொள்ள அவரது இறுதியில் எழுந்த அலறல் அந்த வீட்டை நிறைத்தாலும் அரை மயக்கத்தில் கிடந்த கணவனே வலியில் எழுந்தாலும் சாதனாவும் ஓடி சென்று பார்த்தாலும் அவன் சலனமே இல்லாமல் இருந்தான்..
அவனுக்கு நடக்க வேண்டியது எல்லாம் நடந்துக் கொண்டிருக்க வேண்டும் சத்தமே இல்லாமல் போனதை கண்ட அவர்கள் இருவரும் கதற, சாதனா அவனை திரும்பி பார்த்தவள், "இப்போ நிம்மதியா ஒரு உயிர் போயிடுச்சு" என்க...
"ஓ அப்போ ரயில்ல இருந்து தள்ளிவிட்டு ஒரு உயிர் போனதே வாயே திறக்க முடியாமல் இறுதி மூச்சு கிடைக்காமல் தவித்து துடித்து இறந்த அந்த உயிருக்கு என்ன பதில்?? சொல்லு டி அது உயிர் இது என்ன???" என்க...
இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரியும் என முழித்தவள், " யார் நீ சொல்லு??? கர்ணாவா??" என்க அதே கேள்வி தான் சதாசிவம் வாயில் இருந்தும் வெளி வந்தது அதை கண்டவனின் முகத்தில் ஆத்திரம் கொப்பளிக்க,
"நான் யாருன்னு உனக்கு தெரியணுமா உங்க எல்லோர்க்கும் எமன் நீங்க சாக போறது என் கையில்தான் போதுமா என்னைப்பத்தி நீங்க தெரிஞ்சு கொண்டது???" என்று கூறியவன் கைகாட்ட வெளியே இருந்து இருவர் வந்து அந்த அடுக்களை கதவை திறந்து விட்டு செல்ல அங்கே இறந்த சடலமாய் பார்வதியை காணவும் துடித்தார் சதாசிவம் அவளால் அவளது தாயின் முகத்தை பார்க்க முடியவில்லை... சாதனா அந்த இடத்திலேயே கதறி துடித்தாள். அவளது கண்ணீர் அவனுக்கு நடிப்பாக பட்டது இப்படித்தானே எனக்கும் இருந்திருக்கும் என்று எண்ணிக் கொண்டான். அவன் அவர்களை பழிவாங்க இங்கு வரவில்லை வதம் செய்யவே வந்து இருக்கிறான். அவர்களை நொடி பொழுதில் அவனால் கொன்று போட்டு இருக்க முடியும் ஆனால் அவன் செய்ய மாட்டான் இவர்கள் அனைவரும் அணு அணுவாக வதம் செய்வான் அதற்கு அருகதை பட்ட ஆட்கள் தான் அவர்கள்...
தன் மனைவி இறந்ததை பார்த்து பதறிய சதாசிவம், "என்ன டா ஏதேதோ கதை பேசிட்டு இருக்க நாங்க கொன்னோமா என்ன புது கதை அவனை கொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு என்ன இருக்கு??? அநியாயமா என் மனைவியை கொன்னுட்ட உன்னை நான் சும்மா விட மாட்டேன் என கூறிய சதாசிவம் இப்போவே போலீஸை கூப்பிடுறேன்" என்க...
"என்ன புதுக் கதையா??? இதெல்லாம் நடந்து முடிந்த கதை உங்களுக்கு ஞாபகம் இல்லைன்னா நான் வேண்டுமென்றால் ஞாபகப்படுத்துட்டுமா??? உன் பொண்ணு சொன்னத கேக்கலையா??? அதுக்கு தான் அடி விழுந்தாலும் மயங்காமல் இருக்கணும் அவளே சொல்றா கொன்றது நான் தான் அப்படின்னு நீயும் என் லிஸ்டில் இருக்க மறந்துடாத.. என்கிட்ட கதை பேசினா அதை நம்பிடுவேன் நினைச்சுட்டு இருக்கியா???" என்று கூறியவன், "என்ன அப்படி பார்க்கிற??? இப்ப கூட ஒரே புல்லட்டில் பொசுக்கிட்டு போயிட்டே இருப்பேன் எந்த நாயும் என்னை கேள்வி கேட்க முடியாது கேள்வி கேட்கவும் நான் விடமாட்டேன் ஆனா உங்கள அணு அணுவா சித்ரவதை பண்ணி தான் கொல்லுவேன் அதுக்காக தான் இதை எல்லாம் செய்யறேன்" என்று கூறினான் ராவணன்..
அவர்கள் இருவரும் முழித்தனர் ஏனெனில் அச்சு அசல் கர்ணாவை போல இருக்கும் யார் இவன் என்று அவர்கள் தடுமாற சதாசிவமும் இந்த நேரம் பார்த்து தணிகாசலம் இல்லையே இப்பொழுது என்ன செய்வது என்று புரியாமல் விழித்தார். தன் மனைவியை துடிதுடிக்க தன் கண்முன்னே இழந்ததை எண்ணி தாளமுடியாமல் இருந்தவர் அடுத்தது என்ன செய்வது என்று புரியாமல் விழிக்க இவளுக்குமே பயங்கர அதிர்ச்சி தான் அவளது கோர முகத்தை காணும்போதே இப்படியே கொளுத்தி விட வேண்டும் என்று தான் அவனுக்கும் தோன்றியது.
ஆனால் இப்பொழுது அதை செயலாற்றும் எண்ணம் அவனுக்கு இல்லை. அவள் வயிற்றில் கிடக்கும் கரு அவனுக்கு சொந்தமானது அது அவனுக்கு வேண்டும் என்று நினைக்க அவரின் முகத்தை பார்த்து, "என்ன அப்படி பாக்குற உன் நண்பன் மட்டும் தப்பிச்சுட்டான்னு நெனச்சிட்டு இருக்காத இப்போவே அவன் கூப்பிடுவான் அவனுக்கும் இருக்கு" என்று கூற அவன் கூறியது போலவே சதாசிவத்தின் மொபைல் அலறியது அதுவோ அவன் வசம் இருக்க அவனோ திமிராக சிரித்தான்.
"உன் பொண்டாட்டி செத்துட்டா அப்படின்னு இந்த சந்தோசமான விஷயத்தை சொல்ல வேண்டாமா கண்ணெல்லாம் தொடச்சுட்டு வா??? என்னடா இத்தனை நாள் பேசாமல் இருந்த நண்பன் தணிகாசலம் இப்பொழுது அழைக்கிறான் அப்படினா அவன் தினமும் கூப்பிட்டு தான் இருக்கான் எனக்கு தான் பேச பிடிக்கல. இனி அவன் கிட்ட பேசி பார் நீ பேசித்தான் ஆகணும் உன் மனைவி இறந்துட்டா அப்படின்னு நல்ல விஷயத்தை உன்னுடைய நண்பன் கிட்ட சொல்லு "என்று கூற...
அவளோ, " என்னடா திமிரா உனக்கு என்னை பார்த்தா எப்படி இருக்கு இப்போவே உன்னை கொல்லணும் போல வெறி வருது???" என்க...
"ஓ நான் இத்தனை செய்தும் உனக்கு அந்த வெறி வருதா என்கிட்ட வந்து பார் டி அதுக்கு தாண்டி காத்திருக்கேன் வாடி வா" என்றவன், "இத்தனை பேர் சூழ்ந்திருக்கும் போதே என் கிட்டயே சவால் விடுற உனக்கு எத்தனை கொழுப்பு இருக்கும் அந்த கொழுப்பை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைக்க வேண்டாமா இதைப் பார்த்து அதிர்ந்தா எப்படி??" என்றவன் தன் கையில் அலறிக் கொண்டிருந்த போனை ஆன் செய்தான்..
மறுமுனையில் தணிகாசலம், "சதா என்ன அக்கவுண்ட்ல பணம் இல்லைனு வருது பணமே எடுக்க முடியல மங்கலத்துக்கு ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு அதுக்கு மேல் பணம் கட்டினால் தான் மேற்படி அவங்க ட்ரீட்மென்ட் செய்வாங்க என்னாச்சு ரெண்டு அக்கவுண்ட்டுமே உபயோகிக்க முடியவில்லை?? என்ன நடந்துட்டு இருக்கு அங்கே??" என்று தன் மனைவியின் மருத்துவ தேவைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் தணிகாசலம் கூற அதைக் கேட்ட அவனோ, " பணமா அதெல்லாம் நீ என்னதான் சொன்னாலும் கிடைக்காது??? இனி பணம் சோறு ஏதாவது வேணும் அப்படின்னா என்கிட்ட நீ வந்து தான் ஆகணும்" என்று கடுப்புடன் கூற, "யார் பேசுற யார் நீ யார் கிட்ட பேசிட்டு இருக்கேன்னு தெரியுதா???" என்று தன் நண்பனின் எண்ணுக்கு தானே அழைத்து இருக்கிறோம் என்று சரி பார்த்து அவர் வினவ...
"ஒரு எச்ச பொறுக்கி கிட்ட பேசிட்டு இருக்கேன் அதாவது பிச்சைக்காரன் இப்போ நீ பிச்சைக்காரன் தானே அதை சொல்றேன்" என்று கூற அதைக் கேட்டதும் தணிகாசலம், "யாருடா நாயே நீ என்னை பத்தி பேச என்னை பத்தி தெரியாம பேசிட்டு இருக்க நான் எப்படிப்பட்ட ஆளுன்னு தெரியுமா??" என்று கேட்டார்.
"எப்பேர்ப்பட்ட ஆளு நீ??? அடுத்தவன் பணத்துல வாழ்ந்துட்டு இருக்கிற ஒரு நாதாரி தான நீ??" என்க...
"என்ன என்ன உளறிட்டு இருக்க??" என்று வார்த்தைகள் தடுமாற...
"என்ன உண்மை குத்துதா" என்க...
"ஏய், யாருடா நீ..? இதையெல்லாம் பத்தி கேட்க முதல்ல சதாசிவத்தை கிட்ட போனை குடுடா??"
" அப்படியெல்லாம் குடுக்க முடியாது அடுத்தவங்க பணத்துல இப்படி சுத்திட்டு இருக்கியே இதுல உனக்கு கூசல?? உன்னை பார்க்கும் பொழுது கூச வைக்கிறேன் டா நாயே" என்க...
"இதையெல்லாம் கேட்க நீ யாருடா உன் அப்பன் வீட்டு பணமா??" என்று தணிகாசலம் வினவவும்,
"இதையெல்லாம் நீ அனுபவிக்கிற இது என்ன உங்க அப்பன் வீட்டு பணமா??" என்க...
"யாருடா நீ??" என்று எகிறினார் தணிகாசலம்.. அவருக்கு யார் இவன் என்று தெரியவேண்டும் ஒருபக்கம் மனைவி படுத்த படுக்கையாக இருக்க மறுபக்கம் இவன் வேறு சரித்திரத்தை புரட்டி பார்க்கவும் அவர் நொந்து விட்டார்..
