அதிகாயன் 15
அத்தியாயம் : 15
சிவகாமி அம்மாவிற்கு இந்த இரு கயவர்களின் செயலும் அவர்கள் இருவரும் பாவம் கர்ணாவிடம் செய்யும் துரோகமும் அவனை போட்டு எப்போது பார்த்தாலும் அடிப்பதும் தடுத்து நிறுத்த போனால் அடித்தால் தான் திருந்துவான் என்பதும் அவருக்கு மிக வருத்தமாக இருந்தது மேலும் அம்மையப்பன் மரணத்தை தழுவும் அன்று ஏதோ சத்தம் கேட்டதும் அவர்கள் இருவரும் இரவு தாமதமாக அம்மையப்பன் வீட்டில் இருந்து தாமதமாக சென்றதும் மறுநாள் அவர் எழுந்து வந்து பார்க்கும் போது இறந்து கிடந்தது எல்லாமே சந்தேகமாக இருந்தது ஆனால் அவரால் வாய் திறக்க முடியாதே..?
இவர்களிடம் போராடி ஜெயிக்க அவரால் முடியாதே மேலும் கண்களால் காணாத ஒரு விஷயத்தை எப்படி அவர் உறுதியோடு அவர் வாதாடுவார் எல்லாமே அவருடைய சந்தேகங்கள் தானே... இவர்களின் குணங்களை வைத்து அவர் இப்படி நடந்து இருக்கலாமோ என யூகித்து தானே வைத்திருக்கிறார் உண்மை எது பொய் எது என புரியாமல் கர்ணா எனும் வளர்ந்த குழந்தையின் பிற்கால நிலையை எண்ணி அவனை வளர்த்தவராக வருத்தம் கொண்டார்..
அன்றைய தினம் தணிகாசலத்தின் வீட்டில் தான் சதாசிவத்தின் குடும்பம் கூடியிருந்தது சதாசிவத்தின் மனைவி பார்வதி, " என்ன இந்த ஆளு சாகும் போது இப்படி எழுதி வச்சுட்டு போயிருக்கான் யாருக்கும் உபயோகம் இல்லாமல் இத்தனை சொத்துக்களை எவளோ ஒருத்தி அனுபவிக்கணுமா?? " என்க
"அதுவும் இந்த பைத்தியத்தை எவ கட்டிக்குவா அப்படியே கட்டிக் கொண்டாலும் இதுக்கு குழந்தை வேற பொறக்கணுமா கிரகம் வேற எதுவும் செய்ய முடியாதா??" என்று தணிகாசலத்தின் மனைவி மங்கலம் கூற , "அதையேதான் நானும் யோசிச்சேன் இப்போ என்ன செய்யுறது??" என்று இருவரின் மனைவிமார்களும் யோசித்துக் கொண்டிருக்க அதையே தான் இருவரின் கணவன்மார்களும் யோசித்துக் கொண்டிருந்தனர்..
அந்த சமயம் பார்த்து தான் போர்டிங் ஸ்கூலில் படித்து வரும் தங்களது பிள்ளைகள் ராகவ் மற்றும் சாதனா இருவரும் தங்களது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு அடுத்து கல்லூரியில் சேரலாம் என எண்ணி அவர்களது வீட்டிற்கு வந்திருந்தனர் இருவருக்கும் ஏறக்குறைய 18 மற்றும் 19 வயது மட்டுமே ஆகியிருக்கும் ஆனால் தணிகாசலத்தின் மற்றும் சதாசிவத்தின் பிள்ளைகளுக்கு அனைத்து கிரிமினல் மூளையையும் ஒருங்கே பெற்ற இருவர் தான் ராகவ் மற்றும் சாதனா...
அதில் சாதனா தான் ராகவ்வை விட கைதேர்ந்த வில்லி.. வயது பதினெட்டு என்றாலும் இருபத்தி எட்டு வயதுக்கு உண்டான பக்குவம் அவளிடம் உண்டு.. அப்படி இருக்க விஷயத்தை எல்லாம் தனது தாய் மூலம் கேட்டறிந்த அவள் தன் தந்தையும் தனது அங்கிளும் குழம்பிக் கொண்டு இருப்பதை கவனித்த அவள், "எதற்காக இப்படி குழம்பிட்டு இருக்கீங்க. கர்ணா மனைவிக்கு தான் இந்த சொத்து போகும் அப்படித்தானே அப்போ அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சிடுங்க வேலை முடிஞ்சுது" என்று கூற...
"இவனை கட்டிக்க யார் வருவா?? ஒரு பைத்தியத்தை தான் தேடணும்" என்று ராகவ் கூறினான்..
"அப்படியே வந்தாலும் வரவ பணத்தை சுருட்டி விட்டு போனா என்ன செய்யறது??" என்று தணிகாசலம் மற்றும் சதாசிவம் கூற ,
அதை யோசித்த அவளோ, "பேசாம நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு மா??" என்று அவள் கேட்க அதைக் கேட்ட பார்வதி, " வாய மூடு ஏதோ சின்ன வயசா இருந்தாலும் அறிவு இருக்குன்னு பார்த்தா அந்த பைத்தியக்காரனை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ற??" என்று கடிய,
" இதுல என்னமா இருக்கு.. நான் விவரமா தான் சொல்றேன் நான் என்ன அவனை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தவா போறேன் அந்த சொத்தை அவன் பெயரில் இருந்து என் பெயருக்கு மாற்ற போறேன் நான் கல்யாணம் பண்ணிட்டேன் அப்படின்னா சொத்து நம்மள விட்டு போகாது என்னை விட வேற எந்த பொண்ணாலும் இதை செய்ய முடியாது. வேற யார்கிட்டேயாவது இதை சொன்னா அவங்க நமக்கு சாதகமாக இருப்பாங்கன்னு சொல்ல முடியாது" என்று அவள் கூற,
அதைக் கேட்ட சதாசிவம் தணிகாசலத்திற்கு அவள் கூறுவது சரியாக பட இரு குடும்பமும் அப்படியே செய்யலாம் என முடிவு செய்தது எப்படி இருந்தாலும் அந்த சொத்தை கைப்பற்ற வேண்டும் என அவர்கள் முடிவு செய்து இருக்க திருமணம் செய்ய வேண்டும் என்றால் முதலில் கர்ணாவிடம் இவள் பழக வேண்டும் அதற்காக அவள் அடுத்த நாளே களத்தில் இறங்கி விட்டாள்...
இவளை சிறுபெண் என நினைக்க முடியாது இந்த சாதனா பிஞ்சிலேயே பழுத்தவள்..அவளுக்கு நியாயம் என்றால் எந்த கடையில் விற்பனை செய்கிறது என கேட்கும் ரகம் கிட்டத்தட்ட பஜாரி என்றும் கூறலாம் அவளுக்கு ஏதாவது ஒன்று தேவை என்றால் அதை நிறைவேற்றி விடுவாள் அவளுக்கும் பணத்தின் மீது மோகம் உண்டு தன் தந்தை புலம்பி கொண்டிருப்பதை பல இரவுகள் கேட்டவள் ஆகிற்றே.. அவளுக்கும் அந்த சொத்தை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் உதிக்க அதை செயலாற்ற இறங்கி விட்டாள்..
இவளை எல்லாம் பெண், சிறு பெண் ஒன்றும் அறியாத பெண் என்ற வகையில் சேர்க்கவே முடியாது முகத்தை பாவமாக வைத்து கொண்டு உள்ளே வேஷம் கட்டும் நயவஞ்சகி...
இதோ கர்ணாவின் அறையில் சாதனா நுழைந்து இருந்தாள்.. அங்கே அறை முழுவதும் அவனுக்கு பிடித்த நீல நிறத்தில் இருக்க இவனை பல முறை அவள் பார்த்து இருந்தாலும் பேசி பழக வேண்டும் என்று தோன்றியது இல்லை..இவனிடம் எல்லாம் பேச வேண்டுமா என்ற அகம்பாவம் அவளை இவனிடம் திரும்பி பார்க்க வைக்கவில்லை என்றாலும் இன்று வழக்கம் போல முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு ஒன்றுமே அறியாதவள் போல வருத்தத்தோடு பாவாடை தாவணி உடையில் அவனை காண சென்று அவன் அருகே அமர்ந்தாள் சாதனா..
அவனை பார்க்க அவனோ கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவன் படுத்து இருந்தான் தன் கழிவுகளை கூட சுயமாக கழிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான் கர்ணா.. அவனைக் கண்டதும் வேகமாக அவள் அந்த கட்டை அவிழ்த்து விட அவனும் ஆக்ரோஷமாக அவளது தலைமுடியை பிடித்து இழுக்க அவளுக்கு வலி உயிர் போனது.. ஏனெனில் அவன் ஒரு வித இறுக்கத்தில் இருக்க அவளை பிடித்து தள்ளினான்.. 'ஐயோ இந்த பைத்தியம் என்னை கொன்னுடுவானோ' என கீழே விழுந்தவளோ நினைக்க,
ஆனால் அதை எல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகுமா அவனோ வேகமாக எழுந்து வந்து அவளை அடிக்க, "கர்ணா விடு வலிக்குது உன்னை யாரு இப்படி கட்டிப்போட்டா. பாரு உனக்காக நான் என்ன கொண்டு வந்து இருக்கேன்னு என்னை யாருன்னு உனக்கு தெரியலையா நான் தான் சாதனா உன்னோட சாதனா மாமா நம்மள விட்டு சாமிகிட்ட போயிட்டாரு நீ அதை நினைச்சு வருத்தப்படாத உனக்கு நான் இருக்கேன் " என்று ஆறுதல் மொழிகளைக் கூற,
அவனோ இவள் அருகில் வந்தான் இல்லை வேகமாக தன் கழிவுகளை அடக்கி வைத்து முடியாமல் அங்கேயே போய் விட்டவன், கொஞ்சம் சமாதானம் ஆக அதை கண்டவளோ முகத்தை சுழிக்க, வேகமாக ஓடி வந்த சிவகாமி அம்மா அவளை பார்த்து, " ஐயோ நான் வரதுக்கு முன்னாடி ஏன் மா வந்த பார் தம்பி என்ன பண்ணிட்டானு"
"என்ன தம்பி இதெல்லாம் பார் எப்படி பண்ணி இருக்க பாவம் பாப்பா" என்று வருத்தப்பட,
"யார் இப்படி செஞ்சா பாட்டி??" என்று பாவமாக மிருதுவாக அவள் வினவ,
" அம்மாடி அப்பாதான் சாமி கட்டிப் போட்டு இருக்காரு" என்று கூற,
"இந்த அப்பாவுக்கு அறிவே இல்லையா இப்படி செஞ்சிருக்காரு நீங்க போய் இவருக்கு ஏதாவது குடிக்க கொண்டு வாங்க பாட்டி" என்று பாவமாக பேச அந்த வயதான பெண்மணியும் நம்பி விட்டார் அவரோ தன் கண்களைத் துடைத்துக்கொண்டு அவனுக்கு உண்ண உணவு எடுத்துக் கொண்டு வர அதை தன் கைகளாலேயே அவள் அவனுக்கு ஊட்டி விட முயல அவன் அதை தட்டி விட்டான்..
