Share:
Notifications
Clear all

அதிகாயன் 14

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் : 14

இவர்கள் இருவரும் என்ன தேடுகிறார்கள் என்பதை நன்றாக புரிந்துக் கொண்டார் அம்மையப்பன்.. அவரது இருதயம் விம்மி விம்மி வெடித்தது நான் செய்த பாவமா இப்படி சபிக்கப்பட்டு இருக்கிறேன் இவர்களிடம் என் மகன் என்ன பாடுபடுகிறானோ??? என்ன நடக்க போகிறதோ என அவர் விம்மி கொண்டிருக்க, இருவரும் அதே நேரம் அவரை பார்க்க தன் நண்பர்கள் என்ற கயவர்களை தனது கடைசி நிமிடங்களில் தெரிந்து கொண்டிருக்கிறோம் என வருந்திக் கொண்டிருக்கும் அவரிடம் சென்றவர்கள்,

"சொத்து பத்திரங்கள் எல்லாம் எங்க?? என்ன அப்படி பாக்கற என்னடா இவனுங்க ரெண்டு பேரும் இப்படி மாறிட்டாங்க அப்படின்னா பார்க்கிற நாங்க மாறவே இல்லை நீதான் நல்லவன் வேஷம் போட்டு ஊரை ஏமாத்தி இத்தனை சொத்து சேர்த்து வைத்தும் நண்பர்கள் எங்க ரெண்டு பேருக்கும் எதுவுமே கொடுக்காம ஏமாத்திட்டு நாங்களும் உன் கூட தான் சுத்திட்டு இருந்தோம் எங்களுக்கு நாய்க்கு போடற ரொட்டி துண்டு மாதிரி தூக்கி வீசினா எப்படிடா பத்தும் நீ மட்டும் இப்படி வசதியாய் இருப்ப நாங்க எல்லாம் உன் காலுக்கு கீழேயே இருக்கணுமா இதுல டிரஸ்ட் ஆரம்பிச்சு மக்களுக்கு நல்லது செய்யறானாம் கூட இருக்க எங்களுக்கு கொடுக்காம கண்டவர்களுக்கு எல்லாம் பிச்சை போட்டு நல்ல பேரு சம்பாதிச்சு என்ன பண்ண போற சொல்லுடா நாயே அதுக்குத்தான் கடவுள் உனக்கு இந்த தண்டனையை கொடுத்திருக்கார் கொடுக்கலைனாலும் என்ன நடந்து இருக்கும் தெரியுமா??" எனக்கூறிய சதாசிவம் உடல் நிலை மோசமாக படுத்திருக்கும் அம்மையப்பனை ஓங்கி தலையிலேயே அடித்தார்..

அவரோ வலியால் துடிக்க அவரால் வாய் விட்டு கதற கூட முடியாது கண்கள் மட்டும் துடித்துக் கொண்டு இருக்க அவரது கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. "பாருடா எவ்வளவு பெரிய ரவுடி உனக்கெல்லாம் கண்ணுல தண்ணி வருதா??" என கூறிய தணிகாசலம் ஓங்கி அறைந்தார் ..

"ஏண்டா, இப்படி படுத்து இருக்க நீ உன் பையன் ஒரு லூசு இவனுக்கு போய் இத்தனை இத்தனை சொத்தா மரியாதையா அந்த சொத்து எல்லாம் எங்ககிட்ட வரணும் இல்லாட்டி வர வைப்போம் எப்படின்னு தெரியுமா உன்னையும் உன் பையனையும் போட்டுத் போட்டுத் தள்ளிட்டு இதையெல்லாம் நாங்க அனுபவிக்க போறோம்" என்று கூற அதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருக்க தான் முடிந்தது அம்மையப்பனால் வேறு எதுவும் அவரால் செய்ய முடியவில்லை அப்படி இருக்க, " சதாசிவம் எத்தனை நாள்தான் இவன் செத்துப் போவான் சொல்லி காத்திருக்கிறது இப்பவே இவன முடிச்சு கட்டு அடுத்த 10 நாளில் இவன் பையன போட்டு தள்ளி விட்டு வேற வேலையை பார்ப்போம்" என்று கூற அதைக் கேட்ட தணிகாசலம் சரி என்று ஒப்புக் கொண்டார்..

ஏனெனில் எல்லாம் கூடி வந்த சமயம் இதுதான் அவர்கள் போட்ட பிளானுக்கு உகந்த தருணம் என எண்ணி அவர்கள் இருவரும் தலையணையை தூக்கி அம்மையப்பன் முகத்தில் வைத்து அழுத்த அவர் துடிதுடிக்க பாவம் அவரால் தன் கை கால்களைக் கூட அசைக்க முடியாமல் தவித்து துடித்து இறந்து போனார் அம்மையப்பன் ..

அடுத்த நாள் ஊரே திரண்டு கூடி வர உடல்நிலை முடியாமல் இறந்து போய் விட்டார் என்ற போர்வையில் நண்பர்கள் இருவரும் அழுது கதறிக் கொண்டிருக்க தன் தந்தையின் உடலை பார்த்து தந்தை இறந்துவிட்டார் என்று கூட புரிந்து கொள்ள முடியாமல் வெகுநாள் கழித்து தந்தையை கண்ட சந்தோஷத்தில் தந்தையின் உடல் அருகே அமர்ந்து தந்தையை கட்டிக்கொண்டு படுத்திருந்தான் கர்ணா..

சிவகாமி அம்மா இந்த காட்சியை கண்டு கதறிக்கொண்டு இருக்க அவனுக்கு ஆறுதல் கூறினாலும் அதை புரிந்துக் கொள்ள கூட தெரியாமல் இருக்கும் இவனை என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வந்தார் சிவகாமி ...ஆனால் வெளியே நண்பன் இறந்து விட்டான் என்று மிகவும் துடித்து கதறுவது போல நடித்துக்கொண்டிருந்த நண்பர்களும் அவர்களது குடும்பமும் ஊர் மக்களின் நன்மதிப்பை பெற்றுக்கொண்டு இருக்க சிவகாமி அம்மாவுக்கு தான் உண்மை தெரியுமே இங்கே என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்று ஆனால் அவர் வயதும் அவரது நிலையும் அவரால் வாய் திறக்க முடியாமல் போய் விட எல்லாம் முடிந்தது அம்மையப்பன் இவ்வுலகை விட்டு சென்றுவிட மகன் தனிமரம் ஆகிப் போனான்..

இவனையும் தீர்த்துக் கட்டிவிடலாம் அதற்கு முன் செய்ய வேண்டிய சில வேலைகளை செய்துவிட்டு இவன் கதையையும் முடிக்கவேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தனர் தணிகாசலம் மற்றும் சதாசிவம்... ஏனெனில் அவர்களின் எண்ணப்படி அம்மையப்பன் தன் மகனுக்கு தான் அனைத்து சொத்துகளையும் எழுதி வைத்திருப்பார் அவனையும் கொன்று விட்டால் அந்த சொத்து டிரஸ்ட் நிர்வாகிகளான இவர்கள் வசம் வந்துவிடும் என இவர்கள் கணக்குப் போட்டுக் கொண்டிருக்க மறுநாள் அம்மையப்பனின் வழக்கறிஞர் இவர்களை காண வீடு தேடி வந்தார் அவர் மிகப் பெரிய குண்டை தூக்கி இவர்களது தலையில் போட்டார்..

என்னவென்றால் இந்த சொத்துக்களை எல்லாம் அவர் இவர்கள் எண்ணியது போல கர்ணாவின் பெயருக்குத்தான் எழுதி வைத்திருக்கிறார் ஆனால் கர்ணாவிற்கு அதற்கு திருமணம் ஆகியிருக்க வேண்டும் திருமணமாகி அவனது மனைவிக்கு தான் முழு உரிமையும் உண்டு ஒருவேளை மனைவி இல்லை என்றால் கர்ணாவால் இந்த சொத்துக்களை எல்லாம் அவனது காலம் முடியும் வரை உபயோகித்து கொள்ளலாம் இல்லை என்றால் அந்த சொத்துக்கள் எல்லாம் அவரது டிரஸ்ட் அல்லாமல் அனாதை இல்லத்திற்கு சென்று விடும்..

இதுவே அவனுக்கு திருமணம் ஆகி இருந்தால் அவனது மனைவி இந்த சொத்துக்களை எல்லாம் அவரது கண்காணிப்பில் வைத்துக் கொள்ளலாம் அதுவும் அவனது மனைவி வசம் இந்த சொத்துக்கள் எல்லாம் வந்து சேரும் அதிலும் ஒரு சிக்கல் உண்டு இவர்கள் இருவருமே அனுபவித்துக் கொள்ளலாமே தவிர இவர்களால் இந்த சொத்துக்களை எல்லாம் விற்கவோ இல்லை வேறு யாருக்காவது தானம் கொடுக்கவோ இயலாது. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்குத்தான் இந்த சொத்துக்கள் போய் சேரும் என்பது போல எழுதி இருந்தார். ஒருவேளை குழந்தைகள் பிறக்கவில்லை என்றால் இந்த சொத்துக்கள் கர்ணாவின் மனைவியின் பெயரில் மாற்றப்படும் என்று தனது மகனின் உடல்நிலையைக் கருதி அவனுடைய மனைவி மக்களுக்கு இந்த சொத்துக்கள் போய் சேரும் என்பது போல ஒரு உயிலை எழுதி வைத்துவிட்டு அதை யாருக்கும் தெரியாமல் வக்கீலிடம் கொடுத்து வைத்திருந்தார்..

இதை கேட்ட தணிகாசலம் மற்றும் சதாசிவம் இருவரும் இப்படியொரு செயலை அவர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களது முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட இப்பொழுது என்ன செய்யலாம் என அவர்கள் இருவரும் யோசிக்க துவங்கினர். அவர்களின் மூளை மிகவும் சூடாகி விட்டது இனி என்ன செய்யப் போகிறோம் என்று அவர்கள் இருவரும் முழித்துக்கொண்டு இருந்தனர்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top