Share:
Notifications
Clear all

அதிகாயன் 13

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் : 13

அம்மையப்பன் ஆரம்பகாலத்தில் ரவுடியாக இருந்த காலம் தொட்டு கூட இருந்த நண்பர்கள் இருவரும் தங்களால் அம்மையப்பன் போல வளர முடியவில்லையே என்று எண்ணி அவருக்கு அல்லக்கை போல இருந்து வந்தனர்..

ரவுடியாக இருந்த காலத்தில் சேர்த்து வைத்த சொத்துக்கள் எல்லாம் அம்மையப்பன் அவர் பெயரில் சேர்த்துவைக்க தன் நண்பர்களுக்கு என்று ஒரு தொகை கொடுத்து வந்தார். அந்த தொகை அவர்களுக்கு போதுமானதாக இல்லை ஏனெனில் இவர் வளர்ந்து வரும் பொழுது தாங்கள் மட்டும் இன்னமும் அடி மட்டத்திலேயே இருக்கிறோமோ என்ற எண்ணம் அவர்களை வெகுவாக வாட்டியது ..அதை அம்மையப்பனிடம் எப்படி எப்படியோ சொல்லி பார்த்தனர் ஆனால் அவர் கேட்கும் விதமாக தெரியவில்லை...

மேலும் கர்ணா பிறந்ததற்கு பிறகு திருந்துகிறேன் பேர்வழி என்று தான் செய்து வந்த ரவுடி தொழிலையும் உதறி விட்டு தான் இத்தனை நாட்கள் சம்பாதித்து வைத்த பணத்தை எல்லாம் ஒரு டிரஸ்ட் துவங்கி அதில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்துக் கொண்டிருந்தார் அம்மையப்பன் அந்த விஷயம் சுத்தமாக தணிகாசலம் மற்றும் சதாசிவம் அவர்களுக்கு இந்த செயல் பிடிக்கவில்லை..

அவர்களும் அப்படி இப்படி என ஏதேதோ வழிகளிலெல்லாம் அம்மையப்பனிடம் பேசிப் பார்க்க அவரோ, " நான் கொஞ்சம் மாறலாம்ன்னு இருக்கேன் நான் செய்த பாவமோ தெரியல என்னுடைய மகன் இப்படி ஆகி விட்டான் இனி நான் தவறு செய்ய விரும்பல நான் செய்த பாவத்தை நானே கழுவிட்டு போக ஆசைப்படறேன் அதனால இந்த டிரஸ்ட் மூலமா நான் சம்பாதித்த பணத்தையெல்லாம் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யலாம்னு இருக்கேன் என்ன தயவு செஞ்சு என் பாதையில் செல்ல விடுங்க" என்று கூற அவரது நண்பர்கள் இருவரும் செய்வது அறியாது முழித்தனர்..

ஏனெனில் அவர்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை அம்மையப்பனுடன் கழித்த அவர்கள் இப்பொழுது திருந்தவேண்டும் தன்னைப்போல மாறுங்கள் என அம்மையப்பன் கூறியதும் அவர்களால் முடியுமா இயலாத ஒன்றாகி விட அதனால் அம்மையப்பனிடம் வாயைத் திறவாமல் அவருக்கே தெரியாமல் அவரது பெயரை பயன்படுத்தி சில பல இடங்களில் காசு பார்த்து வந்தனர்.. ரவுடி தொழில் விட்டு விட்டாரே என புலம்பி கொண்டிருக்க அவர் அமைச்சர் ஆகவும் தான் அவர்கள் இருவருக்கும் உயிரே வந்தது அதனால் அவர் பெயரை பயன்படுத்தி நன்றாக காசு பார்க்க துவங்கினர்..

அது மட்டும் அவர்களுக்கு போதவில்லை. ஆனால் அம்மையப்பனுக்கு இது எல்லாம் தெரியாமல் தன்னைப் போல தன் நண்பர்களும் திருந்தி விட்டனர் என எண்ணி அவர் ஆரம்பித்திருக்கும் ட்ரஸ்டில் தன் நண்பர்களை நிர்வாகிகளாக ஆக்கினார்..

ஏனெனில் அவர் அவரது நண்பர்களை தன்னுடைய குடும்பம் ஆகத்தான் பார்த்தார் அதனால் அவர் இல்லை என்றாலும் அவரது வழிகாட்டுதலின்படி இந்த ட்ரஸ்ட் பின்னாளில் சிறப்பாக நடைபெறும் என்பது அவரது கனவாக இருந்தது எண்ணமாகவும் இருந்தது..

ஆனால் அம்மையப்பன் இவ்வாறு நினைக்க அவரது நண்பர்களும் வேறுவிதமாக எண்ணிக் கொண்டிருந்தனர். இவரை எப்படி தீர்த்து கட்டலாம் என்று தான் அவர்கள் எண்ணிக் கொண்டிருக்க ஆனால் யார் செய்த பாவமோ தெரியவில்லை. அவர்கள் இப்படி தீர்மானிக்கும் முன்பே அம்மையப்பன் உடல்நலம் பாதிக்கப்பட, இவர்கள் இருவருக்கும் உள்ளுக்குள்ளே தங்கள் காரியம் இப்படி சுலபமாக முடியும் என எதிர் பார்க்க வில்லை..அவர் வீழ்ந்ததில் யார் மகிழ்ந்தார்களோ என்னவோ தணிகாசலம் மற்றும் சதாசிவம் குடும்பம் நன்றாக மகிழ்ந்து..பணம் இருந்தும் அனுபவிக்க விடாமல் இருக்கும் அம்மையப்பனை எண்ணி அவரது நண்பர்களின் குடும்பத்தார்க்கும் கோபம் தான் அதனால் அவர் படுத்த படுக்கையானதில் மகிழ்ச்சியே..

அதனால் இரு குடும்பமும் சேர்ந்து பிளான் செய்ய அவர்களின் கூற்றுப்படி கர்ணா மற்றும் அம்மையப்பனை தீர்த்துக் கட்டினால் போதுமே இந்த சொத்துக்கள் எல்லாம் அவர்களின் வசம் ஆகிவிடுமே என்று எண்ணிக் கொண்டிருக்க ஒரு மாதம் இப்படி அமைதியாக சென்றது. ஏனெனில் அவர் ஒரு எம்.எல்.ஏ அதுவும் தேர்தல் வேறு நெருங்கிக் கொண்டிருக்க அவருக்கு ஏதாவது ஒன்று ஆகி விட்டால் போலீஸ் கோர்ட் கேஸ் என சுற்றிக் கொண்டிருக்க முடியாது என அம்மையப்பனை நன்றாக பார்த்துக் கொள்வது போல இவர்கள் இருவரும் நடித்துக் கொண்டிருந்தனர்..

அவர்கள் எதிர்பார்த்தது போல தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது அம்மையப்பன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தேர்தலில் போட்டியிடாமல் இருக்க நடந்து முடிந்த தேர்தலில் அவர் முன்னாள் எம்.எல்.ஏ ஆகிப் போனார். அப்படியே மேலும் ஒரு ஆறுமாதம் செல்ல எல்லோரும் இப்படி ஒரு எம்.எல்.ஏ இருந்தார் என்ற பேச்சுக்கு அவரை கொண்டு வந்துவிட்டனர் அவரையும் மக்கள் மற்றும் அரசியல் களம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து போனது..அப்படியே ஒரு வருடம் ஆனது கூட யாருக்கும் தெரியவில்லை. ஏனெனில் இவர்கள் எதையும் எடுத்தோம் கவித்தோம் என செய்ய நினைக்கவில்லை மிக கச்சிதமாக தான் நடத்த திட்டமிட்டு அதன்படி செய்தும் கொண்டிருந்தனர்..
அப்படி மக்களின் பார்வை அவர் மீது இருந்து விலக தொடங்கவும் இது தான் சரியான தருணம் என இருவரும் எண்ணிக் கொண்டு அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். அதன்படி கடந்த 10 நாட்களாக அவரை கவனித்துக் கொண்டிருந்த நர்சை வரவேண்டாம் என கூறி விட சிவகாமி அம்மாவுக்குத்தான் இங்கு நடப்பது எல்லாம் ஒருவித அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருந்தது..

ஏனெனில் நாளுக்குநாள் கர்ணாவின் நிலைமை படுமோசமாக இருந்தது இரண்டு நாட்களுக்கு முன் உணவு கொடுக்க போன போது சிவகாமியை தாக்கினான் கர்ணா..

அவன் மிகுந்த ஆத்திரத்தோடு கோபத்தோடும் இயலாமையோடும் காணப்பட சம்பவத்தை கண்ட தணிகாசலம் ஓடிவந்து கர்ணாவை அடித்து அவனது தலையை உடைத்தார். "தம்பி... தம்பி அடிக்காதிங்க தம்பி அது குழந்தை மாதிரி தம்பி இப்படி எல்லாம் அடிக்க கூடாது அவனுக்கு புத்தி இருந்தா இப்படியெல்லாம் செய்ய மாட்டானே, அது புத்தி வளர்ச்சி இல்லாத குழந்தை நம்ம தான் கொஞ்சம் பொறுமையா போகணும் இப்படியே அடைச்சு வெச்சு இருக்கிறதுனால தான் அவன் இப்படி வெறியாக இருக்கான்.

அவன கொஞ்சம் நீங்க அவங்க அப்பா கிட்ட விடுங்க தம்பி அவர பார்த்தா அவன் அமைதியாகிடுவான்" என்று சிவகாமி கூற அதை அவர் கேட்டார் இல்லை..

" இதோ பாரு நீ இந்த வீட்டில் வேலைக்காரி நாங்க சொல்றத மட்டும் நீ செய்தா போதும் தேவையில்லாம அட்வைஸ் பண்ற வேலையெல்லாம் வேண்டாம்" என்று முகத்தில் அடித்தது போல கூறிவிட்டு செல்ல சிவகாமி இதுவரை தான் ஒரு வேலைக்காரி என்று இந்த வீட்டில் உணர்ந்தது இல்லை. முதன்முறையாக அதாவது அம்மையப்பன் உடல்நிலை மோசமானத்திலிருந்து தான் இப்படி அவர் உணர்ந்துக் கொண்டிருக்க அவருக்கு கர்ணாவை எண்ணித்தான் மிகுந்த வருத்தமே..

என்னவோ நடக்கக்கூடாது நடக்க போகிறது போல அவருக்கு தோன்ற தணிகாசலம் மற்றும் சதாசிவம் இருவரும் ஒரு நாள் அந்த வீட்டை அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய துப்பு கிடைக்கவில்லை அவர்கள் இருவரும் அவரது சொத்து விவரத்தை தான் தேடிக் கொண்டிருந்தனர் ஆனால் கிடைக்கவில்லை..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top