Share:
Notifications
Clear all

அதிகாயன் 12

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  


அத்தியாயம் 12

ஒரு நாள் தணிகாசலம் மற்றும் சதாசிவம் அம்மையப்பனை காண வர அவர்கள் எதார்த்தமாக கர்ணாவை பார்த்து, " ஹே கர்ணா! என்ன செய்யற??" என கேட்டு அவன் விளையாடி கொண்டிருக்கும் ரயிலை எடுக்க அவனோ அது அவனுக்கு வேண்டும் என்பது போல அவர்களிடம் இருந்து பறிக்க முற்பட அவர்கள் இருவரும் தராமல் அவனிடம் போக்கு காட்ட அவன் இருவரையும் தாக்கி தள்ளி விட்டான் பின் அவனது ஆத்திரம் அடங்காமல், "தான்னு சொல்றேன்ல" என கூறி மீண்டும் அடிக்க போக அம்மையப்பன் வந்து அவனை கட்டுக்குள் கொண்டு வந்து, " கர்ணா என்ன இது" என கடிந்து தன் நண்பர்களை காப்பாற்ற அவருக்கு என்னவோ போல ஆனது..அவரது நண்பர்கள் அவன் அடித்த அடியில் நிலை குழைந்தாலும் அம்மையப்பன் முன் எதுவும் காட்டி கொள்ளாமல் இருந்தனர் ஆனால் அவருக்கு தான் வருத்தமாக போய் விட்டது..

அன்றைய நாள் இரவு அம்மையப்பன் கையில் மது கோப்பையை பிடித்துக்கொண்டு தன் நண்பர்களிடம், "எப்படிடா நான் அவன விட்டுட்டு போவேன்?? அவனுக்கு என்ன தெரியும் இன்னமும் நாலு வயசு குழந்தை மனம் தான் அவனுக்கு எனக்கு பிறகு அவனுக்கு யார் இருப்பா யார் பார்த்துக்குவா மனுஷன்னா யாருக்கு என்ன வேணாலும் நடக்கும் அப்படி இருக்கும் போது எனக்கு பிறகு என் பையன் வாழ்க்கை என்ன ஆகும்..?" என மிக மனமுடைந்து கூற,

அவர் எப்போதும் இப்படி கூறுபவர் தான் என்றாலும் அவரது நண்பர்கள் ஏதாவது கூறி அவரை தேற்றுவர் அப்படி இருக்க இன்று அவரை தேற்ற முயற்சி செய்து , " இப்பவே எதுக்கு நீ இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க உனக்கு தான் நாங்க இருக்கோமே நீ கர்ணாவை பத்தி கவலை படாதே உனக்கு எப்படி நாங்க உன்கூட இருந்தோமோ அதுபோல அவனுக்கு எங்க பசங்க கூட இருப்பாங்க நீ அதை நினைத்து கவலைப்படாதே" என்று கூற அதைக் கேட்ட அம்மையப்பன் உணர்ச்சி வசப்பட்டார்..

"பிறந்ததிலிருந்து எனக்குன்னு யாரும் இல்ல..நான் கெட்டவன் தான் இப்போ வெள்ளை சட்டை போட்டாலும் ஒரு காலத்தில் ரத்தம் பார்த்த கை தான் என்னோடது நான் செய்த பாவம் தான் எனக்குன்னு யாரும் இல்லை என் பையனும் தனிமரம் ஆகிவிடுவானோன்னு பயமா இருக்கு அதுவும் அவன் நல்லபடியா இருந்திருந்தா எனக்கு எந்த கவலையும் இல்லை ஆனால் அவன் இப்படி இருக்கும் பொழுது அவனுடைய எதிர்காலத்தை நினைக்கும் பொழுது கொஞ்சம் பயமாக தான் இருக்கு" என்று கூற நண்பர்கள் ஏதேதோ கூறி அவரை சமாதானம் செய்து விட்டு அவரவர் அவர்களது வீட்டுக்கு சென்றனர்...

அன்றிரவு ஏதேதோ எண்ணி உறக்கம் தொலைத்த அம்மையப்பன் மறுநாள் காலை எப்பொழுதும் போல எழ முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை அவரது கை கால்களை அசைக்க கூட அவரால் முடியவில்லை வாயை திறந்து கத்தலாம் என நினைத்தால் அதுவும் அவரால் முடியவில்லை கண்கள் மட்டும் துடித்துக் கொண்டிருக்க அவரது கை கால்கள் செயல் இழந்து போய் விட்டன...

எப்பொழுதும் என்ன நேரம் ஆகினாலும் எழுந்து வருவாரே இன்னும் எழவில்லையே என எண்ணிக்கொண்டிருந்த சிவகாமி கர்ணா எழுந்ததும் எப்பொழுதும் போல தன் தந்தையின் படுக்கைக்கு சென்று அவர் அருகே படுக்க செல்ல அவரால் தன் மகனை கட்டிப் பிடிக்க முடியாமல் போனதை பார்த்த கர்ணா, " அப்பா எந்திரி அப்பா என்னை கட்டிபிடி அப்பா ஏன் ப்பா இப்படி இருக்க கர்ணா நேத்து செஞ்சது தப்புதான் அப்பா மாமாவை அப்படி அடித்து இருக்க கூடாது அப்பா இனி அப்படி பண்ண மாட்டேன் அப்பா" என்று கூற அதை புரிந்துகொள்ள அம்மையப்பனால் முடிந்தது ஆனால் அவரால் திருப்பி பதில் அளிக்க முடியவில்லை..

மகனும் கெஞ்சி கெஞ்சி பார்த்தான் ஆனால் எதற்கும் அவரால் பதிலளிக்க முடியாமல் போக , "அப்பா அப்பா" என்று மகன் உருகுவது அவருக்கு புரிபட அந்த நேரம் பார்த்து சிவகாமி அம்மா வந்து பார்க்க அவர் அசைவின்றி படுத்து இருப்பதை பார்த்ததும் பதறி கர்ணாவை சமாதானம் செய்த சிவகாமி அம்மா உடனே நொடிப்பொழுதும் தாமதிக்காமல் சதாசிவம் மற்றும் தணிகாசலத்தை அழைத்தார்..

அவர்களும் வந்து பார்த்து பதறி வேகமாக மருத்துவமனையில் அம்மையப்பனை அனுமதிக்க மருத்துவர்களோ பரிசோதனை செய்து அம்மையப்பனுக்கு உயர் ரத்த அழுத்தத்தால் அவரது உடல் செயலிழந்து விட்டது என்று கூற அதைக் கேட்ட நண்பர்கள் பதறினர் அவரால் இனி படுக்கையிலிருந்து எழ முடியாது அவர் இருக்கும் வரை இப்படித்தான் இருக்க முடியும் என்று கூற ஒரு சில நாட்கள் மருத்துவமனையில் வைத்து பார்த்துவிட்டு பின் வீட்டிற்கு அம்மையப்பனை கொண்டு வந்து விட்டனர்.

திடீரென அம்மையப்பனுக்கு இப்படி ஆனதும் எல்லாமே தலைகீழாக மாறி போனது வளர்ந்த குழந்தையான கர்ணா தன் தந்தைக்கு என்ன ஆனது என்று புரிபடாமல் திணறினான் அவனை சமாதானம் செய்வது மிக கொடுமையாக இருந்தது..

அவனுக்கு தன் தந்தைக்கு என்ன ஆனது என்று சரியாக புரியவில்லை என்றாலும் தன் தந்தைக்கு ஏதோ ஒன்று ஆகியிருக்கிறது அதனால் தானோ அவர் இப்படி படுத்து இருக்கிறார் இனி அவர் திரும்பி வர மாட்டாரோ என அந்த குழந்தை மனம் கொண்ட கர்ணா எண்ணினான்..

அதனால் அவன் ஒருவித இறுக்கத்துடன் சுற்றிக்கொண்டு இருக்க அவனை சமாதானம் செய்வது தான் மிக கொடுமையான விஷயமாக சிவகாமி அம்மாவுக்கு இருந்தது மேலும் அம்மையப்பனை பார்த்துக்கொள்ள ஒரு செவிலி இருக்க அவர் அம்மையப்பனை பரிசோதிக்க சென்றால் இவன் அவரை அடிப்பதும் துன்புறுத்துவதும் என்ற செயலில் ஈடுபட தணிகாசலம் சதாசிவம் சிவகாமி அம்மா என யார் சொன்னாலும் அவன் கேட்கும் நிலையில் இல்லை அதனால் அவனை ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்துவிட்டார் தணிகாசலம்..

அது அவனது மனதை மேலும் எரிச்சலடைய தான் செய்தது அவன் கத்தி தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ள சிவகாமி அம்மாவோ, " ஐயா தம்பியை போட்டு பூட்டி வைக்காதீங்க அய்யா அது அவருக்கு கஷ்டமா இருக்கும் அது அவருக்கு வெறியை தான் கொடுக்கும்".. என்று கூற,

சதாசிவம் , "வாயை மூடுங்க சிவகாமி அம்மா அவன் என்ன செய்கிறான் பார்த்தீங்களா நர்ஸ அடிக்கிறான் இப்படி வர்றவங்க போறவங்கள அவன் ஏதாவது செய்தா என்ன ஆகறது சாப்பாடு கொடுக்க மட்டும்தான் நீங்க உள்ள போகணும் மத்தபடி உள்ள போகாதீங்க அவன பூட்டியே வைங்க" என்று கூறிவிட்டு இருவரும் சென்றுவிட சிவகாமி அம்மாவுக்கு அவர்கள் கூறியதை மீறவும் முடியவில்லை. கர்ணாவை சமாதானம் செய்யவும் தெரியவில்லை இப்படி இருக்கும் பொழுதுதான் சதாசிவம் மற்றும் தணிகாசலத்திற்கு தங்களது நெடுநாள் கனவை தீர்த்துக்கொள்ள ஒரு அவகாசம் கிடைத்தது போல அவர்கள் எண்ணினர்..

அவர்கள் இருவரின் உண்மையான குணம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட துவங்கியது..அவர்கள் இருவருக்கும் அம்மையப்பன் வீழ்ந்ததும் கொஞ்சம் தைரியம் கூட வந்ததோ என்னவோ உடனே இருவரும் கூடி ஆலோசித்து ஒரு தீர்மானம் எடுத்து வைத்தனர். அதன்படி அம்மையப்பன் மற்றும் கர்ணாவை தீர்த்துக் கட்டுவது என்ற முடிவை அவர்கள் இருவரும் எடுத்தனர்... தீர்த்துக் கட்டிவிட்டு இந்த சொத்துக்களையெல்லாம் அவர்கள் ஆண்டு அனுபவிக்க வேண்டுமென எண்ணினர் அந்த கயவர்கள்.. உண்ட வீட்டுக்கு குந்தகம் செய்ய எண்ணினர் அந்த பாவிகள்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top