Share:
Notifications
Clear all

அதிகாயன் 11

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் : 11

ஐந்து வருடங்களுக்கு முன்

அம்மையப்பன் இல்லம்...

"தம்பி தம்பி இங்கே வாங்க தம்பி யார் வந்து இருக்காங்கன்னு பாருங்க" என்ற குரல் கேட்க எந்த பக்கமும் பார்க்காமல் அமர்ந்து இருந்தான் கர்ணா..

அவன் கையில் பலதரப்பட்ட விளையாட்டு கார், ட்ரையின், விமானத்தின் பாகங்கள் குவித்து வைக்கப்பட்டு இருக்க அவன் விளையாடிக் கொண்டு இருந்தான்.. அவன் வயதோ 25 ...வளர்ந்த குழந்தை அவன்..

சொத்துக்கும் சுகத்துக்கும் குறைவு இல்லை தந்தை அம்மையப்பனின் தற்போதைய நிலைக்கும் குறைவு இல்லை...ஒரு பெரிய கட்சியின் முன்னாள் அமைச்சர் இந்நாள் எம்.எல்.ஏ வான அவர் தன் இஷ்டத்துக்கு ஆசைபடாத எளிமையானவர் மக்கள் நலனை போற்றும் மாமனிதர் என்ற பெயரை மக்களிடம் பெற்றுள்ள அம்மையப்பனுக்கு ஒரு குறைவும் இல்லை மகன் இப்படி பிறந்து இருக்கிறானே என்ற கவலை மட்டும் தான்..

கர்ணா ஒரு வளர்ந்த குழந்தை அதாவது உடல் அளவில் மட்டும் தான் அவன் வளர்ந்து இருக்கிறானே ஒழிய மனதளவில் இன்னும் குழந்தையாகவே இருக்கும் ஒருவன் சுருக்கமாக சொன்னால் அவனுக்கு ஆட்டிஸம் அப்படி தான் அந்த வகையில் உள்ளவர்களை கூறுவர். அதுவும் ஒரு வகை பாதிப்பு தான் அந்த பாதிப்பு உள்ளவர்கள் சிறு குழந்தைகள் எந்த மனநிலையில் இருப்பார்களோ அது போல தான் இருப்பார்களே தவிர அவர்கள் மனநலம் குன்றியவர்கள் இல்லை கர்ணாவும் அப்படி தான்.. கர்ணாவை பார்த்தால் எளிதாக கண்டு பிடிக்க முடியாது...

ஆனால் அவனிடம் பேசும் போது அவனது சுபாவம் அனைவருக்கும் புரிப்படும் அப்படி இருக்க அவனை விடாமல் அழைத்துக் கொண்டிருந்தார். சிவகாமி அம்மா அவர் தான் அவனை பார்த்து கொள்கிறார் வயதான பெண்மணி இவனின் சிறு வயதில் இருந்து பார்த்து வருகிறார்..

அப்படி இருக்க அவர் அழைக்கும் போது அவனோ கண்டு கொள்ளாமல் அமர்ந்து இருக்க அவன் கோபமாக அமர்ந்து இருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்ட அம்மையப்பன், " கர்ணா அப்பா கூட பேச மாட்டியா கண்ணா அப்பா பார் என்ன வாங்கிட்டு வந்து இருக்கேன் பார்" என்று பொம்மை காரை காட்ட அவனோ திரும்பி பார்த்தவன் தன் தந்தையை பார்த்து சிரித்தான்..

"நீ நேத்து வரேன்னு சொல்லி வரவே இல்லை அதான் கர்ணாக்கு கோபம் வந்துடுச்சு" என்று அப்போதும் சிலிர்த்து கொண்டு கர்ணா கூற...

அதை கேட்ட அம்மையப்பனோ, " கொஞ்சம் பேர் உதவின்னு கேட்டாங்க யா செஞ்சு கொடுக்காமல் வர முடியுமா??" என்க...

என்னவோ தன் தந்தை தன்னிடம் பெரிய விஷயத்தை கூறுவது போல கூர்ந்து கேட்ட கர்ணாவையும் அவனது உமிழ்நீர் வடிந்துக் கொண்டு சிரிக்கும் அவனது சிரிப்பையும் கண்டவர் ரசித்து தன் வேட்டியில் தன் மகனின் வாயை துடைத்தவர், "என் சாமி இரண்டு நாளா சரியா சாப்பிடலையா??" என மகனின் முகத்தை பார்த்து வினவ, மகனோ ஆமாம் என்பது போல தலையாட்ட ,

அவரோ சிரித்து , "அப்போ சிவகாமி அம்மா என் தங்கத்துக்கு ஒன்னும் கொடுக்கலையா??" என்று கூறியவர், " அப்போ சிவகாமி அம்மாவ அடிப்போமா??" என கேட்க...

கர்ணாவோ, "வேண்டாம் பாவம் என் சிவா மா " என்க இதை பார்த்து சிவகாமி அம்மா கண்களில் கண்ணீர் வழிய அவனை சிறு வயதில் இருந்து அம்மையப்பன் மற்றும் சிவகாமி அம்மாவும் தான் பார்த்து கொள்கின்றனர்..

சிவகாமி அம்மா அந்த வீட்டு வேலைக்காரி தான் சமையல் செய்ய தான் கர்ணாவின் வீட்டுக்கு வந்தாலும் கர்ணாவின் நிலையை கண்டதும் அம்மையப்பனின் குணத்தை கண்டதும் அங்கேயே இருந்துக் கொண்டார். அவரது சொந்தங்கள் இருந்தாலும் அவர் கர்ணாவின் மீது வைத்துள்ள பாசத்திற்காக அவரது சொந்தங்களை கூட தூரம் வைத்து விட்டு கர்ணாவுடன் இருந்து கொண்டார்..

அதற்கு எல்லாம் அம்மையப்பனின் ஆதரவான கவனிப்பும் ஒரு காரணம் என்று கூறலாம்..

சிவகாமி அம்மாவின் அளவு கடந்த அன்பும் இவன் இந்த நிலையில் இருப்பதை கண்டும் மற்றவர்கள் போல கர்ணாவின் அருகிலேயே வராமல் ஒதுங்கிக் கொள்ளும் ஆட்களை கண்டு இடையில் அம்மையப்பனுக்கு அவர் ஆதரவாய் இருக்க என்ன தான் பண வசதி பெயர் புகழ் ஆட்சி கவுரவம் என இருந்தாலும் தனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்பது ஊராருக்கு தெரிந்தாலும் இப்படி ஒரு மகன் இருக்கிறான் என்பதை பிறர் பார்வைக்கு மறைத்தே வைத்திருந்தார்.. ஒரு சிலருக்கு தெரியும் என்றாலும் பெரும்பான்மையான ஆட்களுக்கு அவர் மகன் கர்ணாவுக்கு இப்படி ஒரு நோய் இருப்பது பெரிதாக தெரியாமல் பார்த்து கொண்டார்..

அது தன் மகன் இப்படி என அவரால் கூற முடியாமல் இல்லை தன் மகன் மீது பிறர் பார்வை தவறாக பரிதாபமாக விழ கூடாது என்பதும் தான் அதற்கு ஒரு காரணமாக இருக்க மேலும் ஒரு காலத்தில் தான் ஒரு பெரிய ரவுடியாக இருந்து பலரை துன்புறுத்தி அதில் இன்பம் கொண்ட எனக்கு இன்று என் மகன் வாயிலாக இறைவன் அவரை தண்டிப்பதாக தான் அவர் நினைக்க மகனுக்கு இப்படி என தெரிந்ததிலிருந்து அவர் திருந்தி மக்களுக்கு உதவி செய்ய மக்கள் அவரை முன்னாள் அமைச்சர் மற்றும் இந்நாள் எம்.எல்.ஏ. வாக்கி அழகு பார்த்து வருகின்றனர்..அதில் ஒன்றும் அவருக்கு பெரிய ஆசை எல்லாம் இல்லை மக்களுக்கு உதவி செய்வதே அவரது நோக்கமாக இருந்தது. அதற்காக அவர் இந்த அரசியலை தேர்ந்தெடுத்தாரே ஒழிய அவருக்கு அதில் நாட்டம் எல்லாம் இல்லை மேலும் அவர் கர்ணா ட்ரஸ்ட் என்ற பெயரில் ஒரு டிரஸ்ட் நடத்தியும் வருகிறார்..தான் முன்பு செய்த பாவத்தை எல்லாம் தற்போது கழுவி வருகிறார் அவ்வளவே..

கர்ணாவை பொறுத்தவரை அவன் அமைதியாக அவன் வேலையை பார்த்து கொண்டிருப்பான் யார் வம்புக்கும் தும்புக்கும் போக மாட்டான் ஆனால் அவனை தொல்லை செய்தால் மட்டுமே அவன் கோபம் கொண்டு எதிரே இருப்பவரை தாக்குவான் பின் அவனே மடிந்து அழுது தன்னை தானே சமாதானம் செய்து கொள்வான்..மேலும் அவன் வருத்தமாக இருக்கும் சமயத்தில் யாராவது அவனிடம் பேச வந்தாலும் அவர்களை தாக்குவான்..

அப்படி இருக்கும் கர்ணா யாரிடமும் பெரிதாக ஒட்டிக் கொள்ள மாட்டான் அவனது உலகமே சிவகாமி அம்மாவும் அவனது தந்தை அம்மையப்பனும் தான்.

ஆனால் அம்மையப்பனுக்கு இரு நண்பர்கள் உண்டு தணிகாசலம் மற்றும் சதாசிவம் இருவரும் ஆரம்ப காலத்திலிருந்தே அம்மையப்பனுடன் இருந்து வருகின்றனர்..

அவர் ரவுடியாக கத்தியை எடுத்தது முதல் இந்த வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து மக்களுக்கு தொண்டு ஆற்றுவது வரை அவரது இரு கண்களாக அவருடனேயே இருந்து வருகின்றனர்.. அவர் எந்த நேரத்தில் என்ன விதமாக யோசிப்பார் என்பது முதல் அவருக்கு என்ன தேவை என்ன தேவை இல்லை என்பது வரை இந்த இரு நண்பர்களுக்கும் தெரியும் அம்மையப்பன் பெரிதாக யாரிடமும் தன் மனதை வெளிக்காட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்றாலும் அவரது சூழ்நிலைகளை புரிந்து அந்த இரு நண்பர்களும் இருப்பர் அப்படியிருக்க தனது இந்த ஆஸ்திக்கு எல்லாம் ஒரே சொத்தான தன் மகன் இப்படி இருக்கிறானே என்ற வருத்தம் அவருக்கு பெரிதாக உள்ளதை எண்ணி அவரது நண்பர்கள்தான் அவரை தேற்றிக்கொண்டு இருப்பர்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top