அதிகாயன் 10
அத்தியாயம் 10
"கதவை திறங்க மூச்சு அடைக்குது கதவை திறங்க " என பார்வதி அம்மா கதற இவர்கள் இருவருக்கும் ஒரே படபடப்பு ஏற்பட வேகமாக அவன் பக்கம் ஓடி வந்த சாதனா,
"கர்ணா கதவை திறந்து விடுங்க கர்ணா அம்மாவுக்கு மூச்சு திணறல் இருக்கு" என்க...
அந்த அறைக்குள் இருந்து புகையாக வர அவரால் சுத்தமாக மூச்சு விட முடியவில்லை..
இன்ஹெலர் இப்போது அவர் எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு அவர் இருக்க,
"தம்பி கதவை திறங்க தம்பி அவ கத்துறது கேட்கலையா??" என சதாசிவம் கேட்க...
அவனோ, " கேட்கலை " என கூறியவன், போனில் ஆழ்ந்து போக சதாசிவமோ அவன் என்ன செய்தாலும் பரவாயில்லை என நினைத்து வேகமாக தன் இன்ஹெலரை தேட அது கிடைக்கவே இல்லை பொதுவாக மனைவி வைக்கும் இடத்திலும் மேற்கொண்டு சில இடங்களிலும் அவர் தேட அவருக்கு கிடைக்காமல் போக அவர் ஓடி அலைவதைப் பார்த்து, " என்ன சதாசிவம் தேடுற நீ தேடுற பொருள் அது எங்கே தேடினாலும் கிடைக்காது இந்த வீட்டுல அது இல்லை" என்று கூறியவன் போனில் ஆழ்ந்து போக,
சாதனா அவனிடம், "கர்ணா எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் கர்ணா அம்மா அந்த புகையில இருந்தா செத்துடுவாங்க கர்ணா தயவுசெய்து கதவை திற கர்ணா "என்று கெஞ்ச, அவன் கேட்டானில்லை..
"என்னை என்ன வேணாலும் செய்துக்கோ கர்ணா அவங்களை விட்டுவிடு கர்ணா ப்ளீஸ்" என்று அவள் கெஞ்ச அவனோ மீண்டும் கேட்டானில்லை எங்கு தேடியும் கிடைக்காமல் போக மனைவி கதறும் சத்தத்தை கேட்க முடியாமல் கதவை திறக்க போக அதுவும் அவரால் முடியவில்லை ஏனெனில் அவர் கண் முன்னே ஒருவன் கதவை பூட்டி விட்டு செல்ல அவரோ, "தயவுசெய்து கதவை திறங்களேன் ப்ளீஸ்" என்று கெஞ்ச,
"என்னங்க முடியலங்க சாதனா காப்பாத்து மா முடியல.. தம்பி கர்ணா நான் செய்தது தப்பு தான் கர்ணா ப்ளீஸ் கதவை திற" என்று அவர் கதற அது எதுவுமே அவனது செவியில் நுழையாமல் இருக்க அதுவரை பொறுமையாக இருந்தவளின் முகம் நொடி பொழுதில் மாறியது..
அத்தனை நேரம் அழுது புரண்ட அந்த மென்மையான முகம் மாறி ஒரு வித ஆக்ரோஷமான முகம் வர பொங்கி எழுந்த சாதனா அவனது சட்டையை பிடித்தாள்..
"டேய், உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா டா என்ன டா பழி வாங்க வந்து இருக்கியா மரியாதையா கதவை திற இல்ல நடக்கிறதே வேற" என்க...
அப்போது தான் அவள் முகத்தை கண்டவனின் முகத்தில் நக்கல் வழிய, "அப்படி என்ன பண்ணுவ??" என்று வினவ...
"உன்னை மறுபடியும் கொல்ல கூட தயங்க மாட்டேன் என்ன பார்க்கிற இதோ இதே கையால தான் உன்னை கொன்னேன் அதே போல கொல்லவும் தயங்க மாட்டேன்" என்று கூறியவள் நொடி பொழுதும் யோசிக்காமல் தான் அணிந்து இருந்த சேலையை அவிழ்த்து அவனது கழுத்தில் மாட்ட, அவனோ விடுவானா தன் கழுத்தில் அவளது முந்தானையில் விழுந்த அடுத்த நொடி அவள் கழுத்தில் அதை அணிவித்து அவளது கழுத்தை இறுக்க அவளோ மூச்சுக்காக பாடுபட, அவனோ அவளை மேலும் கீழுமாக பார்த்தான் பெத்த அப்பன் முன் நிற்க கூடாத கோலத்தில் அவள் நின்றுக் கொண்டிருந்தாலும் அவளுக்கு வருத்தம் இல்லை அது தான் அவளது இயல்பான குணமாக இருக்க...
சதாசிவமோ இதை கண்டு என்னமோ மகள் பாவம் என்பது போல, "விடு டா படுபாவி பயலே" என்று கத்த அவனது ஒரு காலால் அவனை தடுக்க வரும் அவரை மீண்டும் எட்டி உதைத்தான் கர்ணா..
அவரோ அவன் உதைத்ததில் அவர் தலை சுவற்றில் மோத அவளது கழுத்தை மேலும் இறுக்கியவன், " என்ன டி, முகத்த பாவமா வைச்சு அழுது கரைஞ்சா உன்னை நம்பிடுவேன்னு நினைப்பா உன்னை நம்ப நான் ஒன்னும் நீ சொல்ற கர்ணா இல்ல டி நீ எப்படி நடிச்சிட்டு இருக்கியோ அதே போல தான் டி நான் நடிச்சிட்டு இருக்கேன் உன்னோட இந்த குணத்தை பார்க்க தான் டி " என்று ஆக்ரோஷமாக கூற அவள் விழிகள் இது என்ன புது கதை என்பது போல அவனிடம் போராடும் அந்த சூழ்நிலையில் கூட அவள் அதிர...
அவள் முழிப்பதை பார்த்து, "நான் ராவணன் ....விதேஷ் ராவண்...புரியுதா" என்க...
அவளோ அவன் கூற வருவது புரியாமல் முழிக்க , "என்ன முழிக்கிற ஒரு பொம்பள உனக்கே இத்தனை ஆட்டம் ஆட தெரியும்னா எனக்கு ஆட தெரியாதா டி உன் குடும்பத்தை கொல்ல எனக்கு மூணே மூணு தோட்டா தான் தேவைப்படும் இவ்ளோ நாளா இந்த டிராமா எல்லாம் போடணும்னு அவசியமே இல்லை டி ஆனால் உங்களை எல்லாம் ஒரு சின்ன தோட்டால ஒரு சின்ன வலியில் கொல்ல மனசு வரல டி" என்று கூறியே அவள் கழுத்தை இறுக்கியவன் வெளியே வர இருந்த அவளது கரு விழியை பார்த்துக் கொண்டே,
"உன்னோட இந்த உண்மையான முகத்துக்காக தான் டி காத்திருந்தேன் அது வந்துடுச்சு" என்றவன் மேலும் அழுத்த அவளோ மூச்சுக்காக பாடுபட , "உன்னை இப்படியே அழுத்தி கொல்ல எனக்கு ரொம்ப நேரம் ஆகாது இந்த மாதிரி இருக்கிறன்னு சிம்பதி எல்லாம் கிடையாது. ஏன்னா இப்படி உன்னை ஆக்கினதே நான் தான் அப்படி இருந்தும் உன்னை ஏன் விட்டு வைச்சு இருக்கேன்னா உனக்கு சாகற முன்ன நரகம் எப்படி இருக்குன்னு காட்ட வேண்டாமா ஆனாலும் ஒரு பொம்பளை இவ்ளோ தூரம் பண்ணி இருக்க அப்படிங்கும் போது நீ எப்படிப்பட்ட ஆளாக இருப்ப உன்னை அவ்ளோ சீக்கிரம் சும்மா சாக விட மாட்டேன் டி" என்று கூறியவன் அவளை விட...
அவளோ, " அப்போ நீ யாரு டா யார் எங்கே இருந்து வந்து இருக்க??" என்று இருமி கொண்டே வினவினாள்..
ஏனெனில் கர்ணா இப்படிப்பட்டவன் இல்லையே ஆனால் கர்ணாவை போல இவன் எப்படி என அவள் முழிக்க அவனோ அந்த வீடே அதிரும்படி சிரித்தவன், "என்ன முழிக்கிற என்ன டா இவன் இப்படி வந்து நிற்கிறானா ஒரு அப்பாவிய கொல்லும் போது தெரியலையா டி உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா உன் அம்மா இறந்தா அது வலி அடுத்தவன் செத்தா விதியா?? என்ன பார்க்கிற?? கர்ணனும் நான் தான் ராவணனும் நான் தான் உங்க எல்லோர்க்கும் எமனும் நான் தான்" என்றவன் வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு இருக்கிறாள் என்று கூற பாராமல் அவளை ஓங்கி அடிக்க அவள் சுற்றி கொண்டு அங்கு கிடந்த சோபாவில் விழுந்தாள்.. அவன் அடித்த அடியில் பழைய நினைவுகள் எல்லாம் அவளுக்கு நினைவு வந்து போனது... அவளுக்கு மட்டுமில்லை பாதி மயக்கத்தில் கிடந்த சதாசிவமும் யார் இவன் யார் இந்த அதிகாயன் என புரியாமல் திணறினார்..
மூன்று பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் திணறிக் கொண்டிருந்தனர் இந்த குடும்பத்தை மட்டுமல்ல தணிகாசலத்தையும் அவரது குடும்பத்தையும் தான் ஆட்டுவிக்க இவன் வந்து இருக்கிறான் இந்த அதிகாயனான ராவணன்...
