Share:
Notifications
Clear all

அதிகாயன் 1

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் :1

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

கிழக்கில் உதித்த செய்யோன் தன் ஒளிக்கற்றைகளால் ஒளியை உக்கிரமாக கக்கிக் கொண்டிருக்கும் வேளையில் அதை விட உக்கிர உணர்வோடு ஒருவன் இருந்தான்.. அவன் பெயர் விதேஷ் ராவணன் பெயருக்கு ஏற்ற குணத்தை கொண்டவன்... பெயருக்கு ஏற்ற தோற்றத்தை உடையவன் பெயருக்கு ஏற்ற வலிமையான தோற்றத்தை கொண்டவன்.. மிகவும் உக்கிர குணத்தை கொண்டதனால் என்னவோ வன்மை என்ற வார்த்தை கூட அவன் அகராதியில் கூட நெருங்காத ராவணன் அவன்..

இனிமை என்றால் என்ன என கேட்கும் குணமோ அவனுடையது.. எப்போதும் தோட்டாக்களின் சத்தத்தை கேட்டதால் தானோ என்னவோ அவன் அப்படி இருக்கிறான் சுருக்கமாக கூறினால் அவன் நிழல் உலக தாதா தன்னை எப்போதும் பிறருக்கு அறிமுகப்படுத்தி கொள்ளாமல் காரியம் சாதிக்கும் ரகம் அதற்கு ஈடாக பணம் பொருள் என அனைத்தையும் உண்டாக்கி அவனுக்காக ஒரு கோட்டையே உருவாக்கி வைத்திருக்கிறான்... அதுவும் யாருக்கும் தெரியாது..

அவனை பற்றி எங்கேயும் எதிலேயும் செய்திகள் வெளிவந்தது இல்லை..ஆனால் இந்த உலகத்தில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக இருக்கிறான் தனது 10 வயதில் எப்படி எதிராளியை குறி வைத்து சத்தமே இல்லாமல் கொல்வது என பயின்றவனின் கைகளில் உயிர் இழந்த நபர்கள் ஆயிரக்கணக்கானோர் கோபமே உறைவிடமாக இருக்கும் அவனது கண்கள் எப்போதும் கூராக எதிரிகள் அடுத்தது என்ன என சிந்திக்கும் முன்னே அவர்களை முடித்து கட்டி இருப்பான்..தன்னை யாரென்றே அடையாளம் காட்டிக் கொள்ளாமல் எவன் ஒருவன் இந்த உலகத்தை தன் மீது பயப்படுத்தி திசை திருப்பி வைத்திருக்கிறானோ அவனே இந்த விதேஷ் ராவணன்.. அவனை பற்றி வெகு சிலருக்கே அவனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி தெரியும். அவர்களும் அவனுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் ஆட்கள் மற்றவர்கள் யாரேனும் அவனை பற்றி அறிய முயன்றால் அவர்கள் உயிர் அவர்களின் உடலில் தங்காது..

எப்போதும் அந்த உக்கிரத்தின் பலனாய் அவன் தேகமெங்கும் வியர்த்து வழிய தனது உடலை துடைக்க கூட மனமின்றி சூரியனுக்கு சவால் விடும் தொனியில் திரை சீலைகளை விலக்கியபடி சூரியனை வெறித்துக் கொண்டிருந்தான்..

உக்கிரம் தன் மனதில் கொட்டி கிடக்கும் வன்மத்தை எப்படி கொட்டுவது என்று யோசிப்பதால் தானோ என்னவோ அவனது வியர்வை வழியும் தேகத்தை துடைக்காமல் இருக்கிறானோ என்னவோ இல்லை காலை முதல் அவன் செய்த கடின உடற்பயிற்சியால் வழிந்த வியர்வை துளியை துடைக்கும் எண்ணமின்றி இருக்கிறானோ என்னவோ ஏதோ ஒன்று அவனை தாக்கி கொண்டிருந்தது..

அது காலையிலேயே அவனது வீட்டுக்கு வந்த தினசரி நாளிதழை படித்ததால் தானோ???

தொழிலதிபர் தணிகாசலம் மற்றும் அவரது ஆரூயிர் நண்பரும் அவருடைய பாட்னருமான சதாசிவத்தின் மகள் சாதனா வெட்ஸ் ராகவ் திருமணம் விஜயா மஹாலில் நாளை நடக்க இருக்கிறது அனைவரும் வாரீர் மணமக்களை வாழ்த்த வாரீர் என்ற செய்தி அவனை உறுத்திக் கொண்டே இருந்தது உறுத்த என்ன இருக்கிறது முடித்தே விட வேண்டியது தானே என அவனின் உள்மனம் கூக்குரல் இட...

'என்ன திண்ணக்கம் இருந்தால் நான் இங்கே உழன்று கொண்டு இருக்கும் போது இந்த திருமணம் நடைபெறும்???அப்படி நடத்த தான் நான் விட்டு விடுவேனா என்னை யாரென்று அடையாளம் காட்ட கூடிய தருணம் வந்து விட்டது' என அவன் அவனிடமே கூறி கொள்ள தன் போனை எடுத்து யாருக்கோ அழைத்தான் மறுமுனையில் வந்த பதிலில் அவனது முகத்தில் படிந்து இருந்த குழப்பரேகை அவிழ்ந்தது..

சதாசிவம் இல்லம் அந்த மிக பிரம்மாண்ட வீட்டில் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வீட்டின் தோட்டத்தில் மிக அழகாக இடப்பட்ட இருக்கைகளில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிரமுகர்கள் சூழ்ந்து இருக்க அவர்கள் அனைவரும் காண்பதற்கு ஏதுவாக சிறு மேடையிட்டு அதன் நடுவில் அமர்ந்து இருந்தாள் சாதனா..

சாதனா இயற்கையே கொஞ்சும் பேரழகியின் முகத்தை பார்க்க பார்க்க ராகவிற்கு தெவிட்டவில்லை காதலியை கரம் பிடிப்பது வரம் இல்லையா..?

இரு குடும்பமும் ஒரு குடும்பம் போலத்தான்..அதிலும் இவர்கள் இருவரும் பிறப்பதற்கு முன்பு இருந்தே அவர்கள் தந்தைமார்கள் இருவரும் நண்பர்கள் தான் அப்படியே வாழையடி வாழையாக நண்பர்கள் என்ற போர்வையில் வாழும் ஒரே குடும்பத்தினர்..

அதனால் ராகவ் மற்றும் சாதனா இருவரும் ஒரே போல வளர்ந்தார்கள், படித்தார்கள், நண்பர்களாக இருந்தார்கள், இப்போது காதலர்களாக இருந்தனர் இருக்கிறன்றனர். விடிந்தால் அவர்களின் இத்தனை நாள் தவத்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்து விடும்...

ராகவ் சாதனா இருவரும் அவர்களின் தந்தைமார்களின் தொழிலை பார்த்து வருகின்றனர்.. இரு பெரியவர்களும் தொழிலை கவனித்துக் கொண்டாலும் அவர்களை விட இவர்கள் இருவரும் தான் சிறப்பாக நடத்தி வர இருவரையும் இணைத்து விட்டால் அவர்களின் சொத்துக்கள் வெளியே எங்கேயும் போய் விடாதே என்ற எண்ணம் இரு பெரியவர்களுக்கும் உண்டு..

அவர்களின் பண பெருமையை காட்டவென்றே அதுவும் இருவரின் ஒற்றை பிள்ளைகளுக்கு தடபுடலாக திருமண வைபோகம் நடத்தி பார்க்க பெரியவர்கள் இருக்க அதன் ஒரு பகுதியாக தான் இன்று நலங்கு வைக்கப்பட்டு கொண்டிருக்க அவளை இமை மூடாமல் ரசித்துக் கொண்டிருந்தான் ராகவ்... அவளும் தன் தோழிகளுடன் பேசிக் கொண்டே அவனை பார்த்து குறும்பாக கண் சிமிட்ட அதை கண்டவன் மீண்டும் அவள் மீது விழுந்தான்..

'சாதனா, ஓ! அப்படி பார்க்காதே சாதனா செத்துட்டு இருக்கேன். நீ எப்போ என் பக்கத்தில என்னோட மனைவியா வருவன்னு எதிர் பார்த்திட்டு இருக்கேன்' என்று அவன் மனதில் எண்ணினாலும் உடனே அவளது கைபேசிக்கு எதிர் பக்கம் இருந்து அழைத்து விட்டான்..

"என்ன?? சது கல்யாணத்துக்கு முன்னாடி தான் என்னை கவனிக்காமல் இருந்த அப்படின்னா இப்போவுமா சத்தியமா உன்னை இப்படி ஒரு சூழலில் பார்த்தும் நான் எப்படி உயிரோடு இருக்கேன்னு தெரியல டி " என்று காதலில் உருகி கரைய...

அவளோ அவன் கூறியதில் வெட்கப்பட்டு கரைய, "இன்னும் 24 மணி நேரம் இருக்கு நான் உன்கிட்ட வர" என்று அவள் கூற அதை கேட்டவனோ பெரிதாக மூச்சை இழுத்து விட்டு, "அதுக்கு முன்னாடி என்னோட காதலியாக ஒரு கடைசி முத்தம் உன்கிட்ட இருந்து எனக்கு வந்தே ஆகணும் சது " என்று கூற...

"ராகவ், நாளைக்கு நான் உன் மனைவி தான் டா மொத்தமா எடுத்துக்கோ நான் எதுவுமே கேட்க மாட்டேன் இத்தனை நாள் காத்திருந்த உனக்கு இன்னிக்கு ஒரு நாள் காத்திருக்க முடியாதா??" என்று சாதனா குறைப்பட அவனோ அதை கேட்கும் நிலையில் இல்லை...

"சது, இனி நான் எதுவும் கேட்க மாட்டேன் நீ சொல்ற எதுவுமே என் காதில் விழாது நம்ம கல்யாணம் நாளைக்கு காலையில் ஐந்து மணிக்கு தான் இப்போ மணி 9 இந்த விழா முடிய எப்படி இருந்தாலும் 12 மணி ஆகிடும் நீயும் நானும் 12 மணிக்கு மேல இங்கே இருந்து கிளம்புறோம் நைட் டிரைவ்வுக்கு இங்கே இருந்தா ஒரு கிக் இருக்காது" என்று கூற...

"ராகவ் ஒரு கிஸ்ஸுக்கு நீ பண்ற அலும்பு இருக்கு பார்த்தியா முடியல டா " என்று கூறி அவள் சிரிக்க...

"எஸ் அலும்பு தான் பிகாஸ் நான் இன்னிக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கேன் அதான்" என்க அவனின் குணம் அறிந்த அவளோ சம்மதமாக தலையாட்ட பெரியவர்கள் கண்ணில் மண்ணை தூவி இளையவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர் நடக்க இருக்கும் விபரீதத்தை பற்றி அறியாமல்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top